வியாழன், 22 மே, 2014

அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி? உதாரணம்

பிற்பகல் 1:19 - By ம.தி.சுதா 5

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு -  இங்கு குறிப்பிடப்படும் படமானது கதைக்காக பார்ப்பவருக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்காது. ஆனால் ஒரு கதையை எப்படி காட்டினால் நல்லது என்பதற்கு உதாரணமானது.

மிக நீண்ட காலமாக கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை பார்ப்பதோடில்லாமல் அப்படியே தரவிறக்கி வைத்திருக்கும் பழக்கம் எனக்குள் இருக்கிறது.
ஆனால் அந்நிகழ்ச்சி குறும்படங்களுக்கான சரியான வழிகாட்டி என்று சொல்ல முடியாவிடினும் அதில் வரும் நடுவர்களிடம் இருந்து பல விடயங்களை பொறுக்கக் கூடிய மாதிரி இருக்கும்.
கடந்த ஞாயிறன்று (18.5.2014) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படம் ஒன்றில் இருந்து பல விடயங்களை என்னால் பொறுக்க முடிந்தது. சரி வாருங்கள் “சினம்“ என்ற அக்குறும்படத்துக்குள் செல்வோம்.

படத்தின் முதல் காட்சியை கடக்கும் போதே தங்கையை கொன்றவனை அண்ணன் பழி வாங்கும் இராமாயண காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கதை என யாருமே இலகுவாகச் சொல்லி விடலாம்.
ஆனால் இயக்குனரின் திறமை எங்கே வெளிப்படுகிறது என்றால் காட்சிகள் ஆக்கப்பட்டிருந்த ஒழுங்கும் அவை காட்டப்பட்ட விதங்களுமே.
வழங்கப்பட்ட genure ஆனது action ஆக இருந்ததால் சென்ரிமென்ருக்குள் அக்சனை புகுத்த வேண்டும் என்பதை விட அக்சனுக்குள் சென்ரிமென்டை புகுத்த வேண்டிய தேவையை இயக்குனர் நல்ல திரிலோடு தொடங்கும் ஆரம்பக் காட்சியுடன் ஆரம்பிக்கிறார்.

ஆனால் இரண்டாவது அக்சன் காட்சியிலேயே தங்கை இறந்து விட்டாள் என்பதை ஒரு சுவரொட்டி மூலம் 3 அல்லது 4 செக்கனுக்குள் காட்டி விடுகிறார். படம் பார்ப்பவர் நீண்ட நேரம் கண் மூடித் திறப்பவர் என்றால் அந்த முக்கிய திருப்பு முனை இடத்தை தவற விட்டு விடுவார்.

அது மட்டுமல்லாமல் பாத்திரத் தெரிவுகள் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த ஒரு சில கணங்களுக்கு மட்டும் வந்து போகும் தாயார் கூட நடிப்பால் மனதில் நிற்கிறார்.
ஆனால் படத்தில் இருந்த ஜதார்த்த மீறலாக நான் பார்த்த விடயம் இவ்வளவு பலசாலியாக அண்ணன் காட்டப்படுகிறான். அதே போல தங்கை சாத்தி விட்டுச் சென்ற கதவானது மிகச் சாதாரணமான கதவு. அதை ஏன் அவனால் உடைக்க முடியாமல் போனது.
இதற்கு மேல் படம் பற்றிப் பேசினால் அதன் சுவாரசியம் இழக்கப்பட்டு விடும் என்பதால் படத்தையே தருகிறேன் பாருங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

5 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

விரைவில் பார்க்கின்றேன் சகோ பகிர்வுக்கு நன்றி!

Unknown சொன்னது…

வணக்கம்,இயக்குனர்+நடிகர் அவர்களே!நலமா?///நல்லதோர் பகிர்வு.கலைஞர் தொலைக் காட்சி.......இங்கே காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்.......ஹி!ஹி!!ஹீ!!!பார்க்கிறேன்.பின்னர் சொல்கிறேன்.

சுG சொன்னது…

காட்சிகள் சிறப்பாக நகர்ந்து செல்வது அருமை.

ம.தி.சுதா சொன்னது…

@தனிமரம்

மிக்க நன்றி அண்ணா

@Subramaniam Yogarasa
நன்றி ஐயா யூரியுப்பில் அவர்கள் சனலை பின் தொடர்ந்தால் இலவசமாக அந்த அன்றே பார்க்கலாம்

@சி.சுஜித்தா
மிக்க நன்றி

ஊமைக்கனவுகள் சொன்னது…

ஆர்வம் தூண்டும் பதிவு!
தொடர்கிறேன்.
நன்றி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top