வெள்ளி, 15 நவம்பர், 2013

இணைய தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு வந்துள்ள பிரச்சனையும் தீர்வும்

முற்பகல் 11:44 - By ம.தி.சுதா 4

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
நீண்ட நாட்களின் பின்னர் தொழில் நுட்பப் பதிவு ஒன்றுடன் சந்திக்கின்றேன்.
நேற்று முழுவதும் என்னால் இணைத்தில் தமிழில் தட்டச்சிட முடியாத குழப்பம் ஏற்பட்டது.
இணையத்தில் தமிழில் தட்டச்சிட இலகுவான மென்பொருளாக நாம் பயன்படுத்துவது nhm writter ஆகும். இதில் இணையத்தில் தட்டச்சு செய்து விட்டு ஒத்தி ஒட்டும் (copy paste) விளையாட்டெல்லாம் செய்யத் தேவையில்லை எங்கு தட்டச்சிடவேண்டுமோ அங்கேயே தட்டச்சிடலாம். இதுபற்றியும் இதை நிறுவுவது பற்றியும் 2 1/2 வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே செல்லுங்கள்.

இப்போது தோன்றியுள்ள பிரச்சனை என்னவென்றால் avg anti virus பாவிப்பவர்களுக்கு அதன் புதிய தரவேற்றம் ஆனது சிக்கலைக் கொடுத்துள்ளது.  nhm writter ல் உள்ள கோப்பு ஒன்றை trojen virus என அடையாளம் காட்டி அதை இயங்க விடாமல் தடுக்கிறது.

ஆனால் அதற்கும் தீர்வு இருக்கிறதா என குழம்பிப் போய் பார்த்தால் அவர்கள் தளத்தில் புதிய தரவேற்றத்தின் மூலம் எமது பிரச்சனைக்கு தீர்வு தந்திருக்கிறார்கள். ஆகவே கீழே உள்ள தொடுப்பில் உள்ள உரலுக்கு சென்று தரவிறக்கி அதை நிறுவிப் பயன்படுத்துங்கள்.

http://software.nhm.in/products/writer

மீண்டும் உங்கள் விரல்கள் தமிழோடு மொழி பேசட்டும்

நன்றிச் செதுக்கலுடன்

அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

4 கருத்துகள்:

ADMIN சொன்னது…

நானும் சில நாட்களாக இப்பிரச்னையை சந்தித்தேன்...இப்பொழுது விளக்கம் பெற்றுக்கொண்டேன். தகவல் பகிர்வினிற்கு மிக்க நன்றி திரு. ம.தி. சுதா அவர்களே...!

விளக்கத்திற்கு நன்றி தோழரே...

Tamilmovieszone சொன்னது…

naan than anti virus pavikkirathe illaye

எனக்குப் பிரச்சினை ஏதுமில்லை.

இருப்பினும், பகிர்வுக்கு நன்றி.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top