செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

பிற்பகல் 3:32 - By ம.தி.சுதா 25

                           
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
சற்றே பிந்திய பதிவு தான் ஆனால் அந்தக் கணங்களின் சந்தோசம் கழியாத இவ்வேளையில் அதை பகிர்வதில் சந்தோசமே.
உண்மையில் இது ஒரு குறும்படம் என்ற வரையறைக்குள் பலரால் உள்ளடக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் எதோ இப்படியும் செய்து பார்க்கலாம் என்ற ஒரு எண்ணமே இத்தனைக்கும் காரணமாகும். ஏதேச்சையாக மதுரனும் நானும் ஒரு புகைப்படத்துறை சார்ந்த கடையில் சந்திக்கும் போது எடுக்கப்பட்ட திடீர் முடிவால் கடை முதலாளியான குகரூபனின் கைப்பேசியில் கையில் இருந்த ஒரு கதையை வைத்து எந்த வித முன்னாயத்தமும் இன்றி ஒரு மணித்தியாலத்தில் எடுத்த முடித்த ஒரு விளையாட்டுத்தனமான படைப்புத் தான் இந்த ராக்கெட் ராஜாவாகும்.
உண்மையில் ஒரு மணித்தியாலத்தில் எடுத்து முடிக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் இதை எடிட் பண்ண மதுரன் செலவிட்ட நேரம் பல மணித்தியாலங்களாகும். ஏனெனில் அந்தக் கடையுடன் என் வேலை முடிந்து விட்டது. ஆனால் அதற்கான இசைக் கோர்ப்பிலிருந்து அனைத்து வேலைகளையும் அவன் தான் செய்தான்.
அதே போல படத்தை ஒளிப்பதிவு செய்த MULTI VERSION GRAPHIC குகரூபனை கைப்பேசி படாதபாடு படுத்திவிட்டது.
அத்துடன் ஜங்கிள் தனுசனும் காட்சி அமைப்பில் பெரிதும் உதவியாக இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நல்ல நல்ல குறும்படங்கள் குழு ஒற்றுமையின்மையால் தடைப்பட்டுப் போனாலும் ஏதாவுது ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தாலேயே இதைச் செய்து முடித்துள்ளோம்.

வெளியீடு
இது வரை தமிழ் இணையத்தில் இடம்பெறாத ஒரு முயற்சியாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் நாற்றுக் குழுமத்தில் வெளியிடத் தீர்மானித்தோம். ஆனால் எதிர் பார்த்ததை விட நண்பர்களின் ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. வேலை நாளாக இருந்தாலும் இந்த விழாவுக்காக நேரம் ஒதுக்கி அரும்பாடு பட்ட அம்பலத்தார் ஐயா, கலை விழி, ஐடியாமணி, நிருபன், காட்டான், இம்ரான், வருண், கந்தசாமி போன்றோருக்கு பல நூறு நன்றிகள் சொல்லக் கடைமைப்பட்டிருக்கிறேன்.
நிகழ்ச்சியை கலைவிழி தொகுத்து வழங்கியதுடன் அறிமுக உரையையும் வழங்கியிருந்தார்.
ஜனா அண்ணா அவர்கள் மங்கள விளக்கை ஏற்றி தமிழ்மொழி வாழ்த்தையும் வழங்கிச்சிறப்பித்திருந்தார்.
அதன் பின்னர் திரு பொன்னர் அம்பலத்தார் ஐயா அவர்கள் வரவேற்புரையை வழங்கியதுடன் குறும்படத்தையும் வெளியிட்டு வைத்தார்.
படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கலாம்.
அதன் பின்னரான விமர்சனத்தை வருண் வழங்கியிருந்தார்.


அதன் பின்னர் இறுதி நிகழ்வாக இம்ரான் அவர்கள் நன்றியுரையை வழங்கியதுடன் மிகவும் குறுகிய நேரத்திலேயே சிறப்பாக நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் வருகையாளர்களின் விமர்சனமும் பதியப் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டோரை உபசரிப்பதில் சிரத்தை எடுத்துக் கொண்ட சகோதரி சித்தாராவிற்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விமர்சனங்களை நான் விரும்பியது போல நேரடியகவே நிறைகளையும் குறைகளையும் தெரிவித்த துஸ்யந்தன், கந்தசாமி, மருதமூரான், ஹலிவுட் ரசிகன், ஜனா அண்ணா, நிருபன், ஐடியா மணி, காட்டாண்ணா, அமல்ராஜ், அறிவிப்பாளர் முகுந்தண்ணா, ஜீ , கிருத்திகன், முகுந்தன், சுஜா அக்கா மற்றும் எவரையேனும் தவற விடப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் இந்த இடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே போல அடுத்த படமாக உள்ளூர்த் திருட்டுக்களை மையப்படுத்தி அருமையான ஒரு கதைக்களத்துடனும் விளம்பரத் துறையிலும் நாடகத்துறையிலும் தேர்ச்சி பெற்ற ஹரிகரனின் இயக்கத்தில் எடுக்கும் திட்டம் இருக்கிறது. சரியான பண வசதியும் குழுவும் அமைந்ததும் ஒரு சிறப்பான குறும்படமாக உருவாக்கவுள்ளொம். இதற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா


இதோ அக்குறும்படம்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

25 கருத்துகள்:

சூப்பரப்பு ... இம்முறை போனமுறை கவனத்தில் கொள்ளாமல் விட்டவற்றை கணக்கில் எடுத்து, ஒன்றுக்கு இரண்டு முறை ஃபைனல் ரிசல்டை டெஸ்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுங்கோ. வெற்றி நிச்சயம்.

எப்படியும் கதைக்கரு சூப்பராத் தான் இருக்கும். வெயிட்டிங்.

ஆத்மா சொன்னது…

நண்பா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.......சைட் கேப்ல நம்மளையும் கடிச்சிட்டீங்க.....வாழ்த்துக்கள் தொடரும் படம் வெற்றிபெற.......

ஆத்மா சொன்னது…

உண்மையில் அது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்..........

Gobinath சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Gobinath சொன்னது…

Actor ஆகிட்டிங்க அண்ணாச்சி. காமெடி சரவெடி.

Unknown சொன்னது…

படம் பார்தேன்!பாராட்டுக்கள்!
வளர்க !வாழ்க!

புலவர் சா இராமாநுசம்

Unknown சொன்னது…

படம் பார்தேன்!பாராட்டுக்கள்!
வளர்க !வாழ்க!

புலவர் சா இராமாநுசம்

உண்மையிலேயே ஒரு வித்யாசமான முயற்சிதான் பாராட்டுக்கள்.

அம்பலத்தார் சொன்னது…

உங்கள் கலைப்பணி மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் மதி,

அம்பலத்தார் சொன்னது…

ஆமா ராக்கெட்டை எப்போ ஏவுவதாக உத்தேசம் மீண்டும் அடுத்த அமாவாசையிலா?

Yoga.S. சொன்னது…

வணக்கம் ம.தி.சுதா!இண்டைக்கு அமாவாசையோ இல்லையோ எனக்குத் தெரியாது.ஆனா இந்தக் குறும்படத்தின்ரை "லைட்டிங்" ஆர் செய்தது எண்டு எனக்குத் தெரிய வேணும்,சொல்லிப் போட்டன்,ஆ!!!!!!நல்லாயிருந்திச்சு,பாட்டும் படமும்,அம்பலத்தார் ஒழுங்கை புடிச்சதும்,ஹி!ஹி!ஹி!!!!!!

Unknown சொன்னது…

குறைந்த வளங்களைக்கொண்டு நிறைவாகச் செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

மேலும் தொடருங்கள்.........

சுதா SJ சொன்னது…

வாழ்த்துக்கள் சுதாண்ணா...

அன்று எனக்கு புள் வேலை.. அதான் என்னால் முழுவதுமாக கலந்து கொள்ள முடியவில்லை :( இன்னொரு தரம் இப்படியான நிகழ்வு வைக்கும் போது சண்டையில் வையுங்கள்... எல்லோராலும் பங்கு பெற முடியும்....

சுதா SJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுதா SJ சொன்னது…

சுதாண்ணா இப்போது கூட அந்த குறும்படம் தொலைபேசியில் எடுத்ததா என்று என்னால் நம்ப முடியவில்லை..... அவ்ளோ தெளிவா இருக்கு......உங்களின் அடுத்த படைப்புக்காய் இப்பவே ஆவலுடன் காத்திருக்கிறேன்.....

சுதா SJ சொன்னது…

இப்போ எல்லாம்... மதி சுதா என்பதற்கு பதிலாய் அமாவாசை சுதா என்றுதான் இங்கே ஊருக்க பேசிக்கிறாங்க.... ஹா ஹா lol

சுதா SJ சொன்னது…

உண்மையில் முடிவு செம சிரிப்பு :)))))

Unknown சொன்னது…

ராக்கெட்ட சீக்கிரமாவே ஏவிருங்க

எங்களால காத்துகிட்டு இருக்க முடியாது

சசிகலா சொன்னது…

தொடர வாழ்த்துக்கள்

கலைவிழி சொன்னது…

சுதாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.....

எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருந்தது கறும்படம்.
இந்த நிகழ்ச்சி மறக்க முடியாத ஒரு அனுபவமாக மாறிவிட்டது.

சுவாரசியமான தருணம். இத்தருணத்தை அமைத்துத் தந்த அனைவருக்கும் நன்றிகள்...

முடிந்தவரை இந்த உலகத்தில் பயணிக்க பாக்கிறேன்.. வழியமைத்துத் தந்த நண்பருக்கா,,, நட்பின் துணையோடு

Yoga.S. சொன்னது…

இருட்டான ஆள வச்சு,இருட்டிலேயே படமும் எடுத்து,இருட்டிலேயே எல்லாரையும் தள்ளி விட்டுட்டான்யா!!சூப்பரு!!!!!ஹி!ஹி!ஹி!!!/////Vairai Sathish said...

ராக்கெட்ட சீக்கிரமாவே ஏவிருங்க

எங்களால காத்துகிட்டு இருக்க முடியாது./////இதில வேற ராக்கெட்ட சீக்கிரம் விடுங்க,பாக்கணும்னு அலப்பற வேற!வர்றேன் மவனே இண்டைக்கு சங்கு தான்!

நாய் நக்ஸ் சொன்னது…

வாழ்த்துக்கள்....
கலக்குங்க...

Prem சொன்னது…

அண்ணன் நீண்ட கால இடைவேளையின் பின்னர் பதிவுலகில் என் அனுபவப் பகிர்வோடு கால் பதித்தேன்!

அதன் தொடர்ச்சியில் உங்கள் பதிவையும் குறும் படத்தையும் பார்த்து மகிழ்ந்தேன்...

அருமையான பதிவு மற்றும் நகைச்சுவை கலந்த குறும்படம் :) வாழ்த்துக்கள் அண்ணன்...

வைகறை மேகங்கள்,
பிறேம்
http://prem-n-arangam.blogspot.com/

Unknown சொன்னது…

மாப்ள...அமாவாசை விசயத்தை விட ராக்கெட் ராஜா பாட்டு தான் ஹைலைட் போல...நல்ல முயற்சி...இன்னும் பல எடுங்கள் இன்னும் சிரத்தையுடன்..பகிர்வுக்கு நன்றி!

இதை ஏன் நீங்கள் சர்வதேச குறும்பட விழாவிற்கு அனுப்பக்கூடாது?!

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top