திங்கள், 20 பிப்ரவரி, 2012

உயிர்களோடு விளையாடும் யாழின் உணவுத் தரமும் தரக்கட்டுப்பாடும் (காணொளி இணைப்பு)

முற்பகல் 10:55 - By ம.தி.சுதா 16

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
பதிவிற்குள் செல்ல முன் ஒரு சில விநாடிகள்...
இப்பதிவில் வரும் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் நியமானதே. எனது சொந்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்டுள்ள இப்பதிவிற்கு முன் இது சார்ந்த நிறுவன முகாமையாளரை தொடர்பு கொண்டு அவரது நியாயப்பாட்டை கேட்ட பின்னரே மக்கள் நலன் கருதி இக் கேள்விகளைத் தொடுத்துள்ளேன்.
இந்தக் குளிர் களி நிறுவன முகாமையாளர் எனது உறவினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உணவுகள் என்பது பல்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்டாலும் அவற்றுக்கான காலவதித் திகதி என்பன பல விடயஙகளில் தங்கியிருக்கும். அதிலும் உலர் உணவுகளின் காலவதி அளவே மிகவும் அதிகமானதாக இருக்கும். ஆனால் ஈரம் சார்ந்த உணவுகளுக்கு குறிப்பிட்ட சில எல்லைகளுடனேயே கால அளவு வழங்கப்படும்.
இங்கு நான் சம்பவத்தை விபரித்த பின்னர் சர்ச்சைகுரிய சில விடயங்களுக்குள் தங்களை அழைத்துச் செல்கிறேன். நேற்று காலை எமது ஊர் கடையில் ஒரு ஐஸ் சொக் (குளிர்களி) வாங்கினேன். அதை உடைக்கும் போதே உமிழ் நீர் போல இழுபட்டு வந்ததுடன் கரைந்து விட்டது. அத்துடன் சுவையோ மிகவும் தரங்கெட்டுப் போய் இருந்தது. நேற்றையா தினம் வடமராட்சிக்கான மின்சாரத் தடை நாள் என்பதால் குளிர்சாதனப் பெட்டியின் இயக்கமின்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்று அப்படியே விட்டு விட்டு அதன் உறையைப் பார்த்தேன். அதில் உற்பத்தித் திகதி 13.11.2011 என்றும் காலவதித் திகதி 19.04.2013 என்றும் இடப்பட்டிருந்தது. ஒரு சாதாரண பிஸ்கட்டுக்கே 9 மாதங்கள் தான் கால எல்லை வழங்கப்படும் நிலையில் இது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் வழங்கப்பட்டிருக்கிறதே இது எப்படிச் சாத்தியம் என்பதற்காக இன்றும் ஒன்றை வாங்கியதுடன் அதன் நிலமையை காணொளி மூலம் தங்களுடன் பகிர்ந்திருககிறேன்.


(இங்கே திகதியை உற்று நோக்கினால் இன்னும் ஒரு விடயம் உங்களை உறுத்தும். காரணம் ஏதோ ஒரு மட்டம் தட்டிய நாட்கணக்கில் தான் கால அளவு வழங்கப்படும் ஆனால் இங்கே உற்பத்திக்கும் காலவதிக்கும் இடையேயான நாட்கணக்கைப் பாருங்கள்)

என் கேள்விகள்...

இதற்கான உரிமையாளரிடம் தொடர்பு கொண்ட போது இப்படியான கால அளவில் தான் தாங்கள் உற்பத்தி செய்வதாகவும் இதற்கு கடை உரிமையாளரின் குளிர் சாதனப் பெட்டியே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடையின் மூலம் எனது கேள்வி சுகாதார உத்தியோகத்தர்களிடம் திருப்பப்படுகிறது.
எந்தெத்தக் காரணங்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு அனுமதியை அவருக்கு அளித்திருப்பீர்கள். அதன் உள்ளீட்டுப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறதா?
குளிர்சாதனப் பெட்டியில் இருக்கையில் பக்டீரியா தாக்கம் இன்மையால் பழுதாக சந்தர்ப்பங்கள் குறைவு என நீங்கள் காரணம் பயின்றாலும் ஒரு சாதாரண பொருளுக்கான வாழ்தகவு என்று ஒன்றிருக்கிறது. அதற்கு பயன்படும் பால்மாவுக்கோ அல்லது கொக்கோவுக்கோ ஒன்றரை வருடங்கள் பழுதாகாமல் இருப்பதற்கான வாழ்தகவு இருக்குமா?
எல்லோருக்கும் பொதுவான பொதுக் கேள்வி ஒன்று ஈழப் போராட்டம் உச்சம் பெற்றதன் பிற்பாடு யாழ்குடா நாட்டின் எப்பகுதிக்கும் தொடர்ச்சியான மின்சாரம் வழங்கப்பட்டதில்லை (நகரப்பகுதி உள்ளடக்கவில்லை) இன்றும் கூட பல பிரதேசங்களுக்கு ஒன்று விட்ட ஒரு நாள் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படியிருக்கையில் குளிர்சாதனத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு உணவுப் பொருக்கு இந்தளவு பெரும் காலப்பகுதியை அளிக்கலாமா?
சில மாதங்களுக்கு முன்னர் தென்பகுதியில் ஒரு சாதாரண உணவு நஞ்சாக்கலால் (food poisoning) பல மாணவர்கள் உயிர் போகும் தறுவாய்குத் தள்ளப்பட்டதை பலர் அறிவீர்கள். சிறுவர்களை இலக்கு வைத்து தயாரிக்கப்படும் இப்படியான உணவுப் பொருட்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
(விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டுள்ள இவ்விடயம் பலரை சென்றடைய வேண்டும் என விரும்பினால் தங்கள் சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்)
(இப்பதிவை சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டுவருவதற்காக இதை பயன்படுத்த விரும்புவோருக்கு எனது பெயர் அடிக் கோடிடலுடன் பயன்படுத்த முழு அனுமதியிளிக்கிறேன்.)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

16 கருத்துகள்:

suharman சொன்னது…

Nice thing. Thank you. Have to share with others.

நாய் நக்ஸ் சொன்னது…

good...nalla vishayam...
intha pathivu anaivaraium senru
adaiyanum...

Yoga.S. சொன்னது…

வணக்கம் ம.தி.சுதா!விழிப்பூட்டும் ஓர் அருமையான பதிவு/பகிர்வு.ஆண்டின் பத்து மாதங்கள் அதிக வெப்ப நிலையுடைய ஓர் நாட்டில் இது கொஞ்சம் அதிகம் தான்!பொதுவாகவே மேற்கு நாடுகளில் தடையற்ற மின்சாரம் மற்றும் நான்கு முதல் ஆறு வாரங்கள் வெயில் காலமாக இருக்கும்!அந்த நாடுகளிலேயே அதிக பட்சம் இரண்டு ஆண்டுகளுக்கே இது போன்ற குளிர்சாதனப் பெட்டியில் (-இருபது டிகிரி) வைக்கும் பொருட்களுக்கு உபயோக திகதி நிர்ணயிக்கப்படும்.எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத மின்சாரப் பாவனை உள்ள நாட்டில்.....!?எண்பதுகளிலும் மின்சாரம் தடைப்பட்டது தான்.இயந்திரங்களை வைத்து ஒப்பேற்றுவோம்! இப்போது,எரிபொருள் விலை ஏற்றம்,இயந்திரங்களின் விலை.ஒவ்வொருவரும் மற்றவரைக் கைகாட்டிவிடும் கைங்கரியம் தானே அரங்கேறுகிறது,அரசு இயலில் இருந்து அரிசி இயல் வரை?????

கூடல் பாலா சொன்னது…

மிகக் கொடுமையாக இருக்கிறதே ....

தனிமரம் சொன்னது…

என்ன சொல்வது சுதா மின்சாரத் தட்டுப்பாட்டினால் சிலதரமற்ற பொருட்கள் பாவனையாளர்களை பரிதவிக்க விடுகின்றது. மக்கள் தான் இப்படியான பொருட்களின் நிலையை புறக்கணிக்கனும்.

rajamelaiyur சொன்னது…

நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ..

அம்பலத்தார் சொன்னது…

மதி, நல்ல விழிப்புணர்வு பதிவு.

அம்பலத்தார் சொன்னது…

யாழிலுள்ள உணவகங்களின் மிகவும் மோசமான அசுத்த நிலைமையினையும் ஒருதடவை வெளிக்கொண்டுவாங்கோ.

சசிகலா சொன்னது…

பல பிரதேசங்களுக்கு ஒன்று விட்ட ஒரு நாள் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்படியிருக்கையில் குளிர்சாதனத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு உணவுப் பொருக்கு இந்தளவு பெரும் காலப்பகுதியை அளிக்கலாமா? நியாயமான கேள்வி உணருவார்களா..?

சுதா SJ சொன்னது…

மிக நல்ல விழிப்புணர்வு பதிவு சுதா பாஸ். வெளிநாடுகளில் இப்படியான விடயங்களில் மிக கண்டிப்பாக இருப்பார்கள். உப்படிப்பட்ட பிரச்சனைகளால் பிரான்ஸ் அரசாங்கத்தால் பல கம்பெனிகள் மூடிய வரலாறும் உண்டு.... நம் நாட்டில் நல்ல விழிப்புணர்வு இல்லை என்பது சோகம் :(

பெயரில்லா சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு...இன்னும் நம் நாடுகள் முன்னேறவே இல்லை போல...

Gobinath சொன்னது…

கண்டிப்பாக மக்கள் அதுபற்றி அறிய வேண்டும். அண்மைக்காலமாகவே உங்கள் பதிவுகளின் போக்கில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மதி, நல்ல விழிப்புணர்வு பதிவு.

Vetha. Elangathilakam.

காட்டான் சொன்னது…

அருமையான பதிவு தம்பி.அம்பலத்தார் சொல்வதைபோல உணவகங்களின் நிலை பற்றியும் ஒரு விளிப்புணர்வு பதிவு போடலாமே?..!!!

Unknown சொன்னது…

ஒரு நாள் மின்சாரம் தடைபடும் போது ஐஸ் உரிகுனதுமே அது கெட்டு விடும்.

Unknown சொன்னது…

-18 deg to C -20 deg Cஅக இருக்கும் போதே பொருள் கெடாமல் இருக்கும்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top