பதிவின் நோக்கம்- இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல. இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது.
இன்று அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு விடயம் தான் ராஜீவ் கொலையாளிகளின் கருணைமனு நிராகரிப்பு சம்பந்தமானதாகும்.
கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டுக்குத் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்று. அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித் தான்.
ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.
எத்தனை கொலைகள் ?
எத்தனை கற்பழிப்புக்கள் ?
எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ?
எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்?
செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை.
சரி தலைப்பிற்கு வருவோம். இதே கொலையாளிகளுக்கு மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் கருணை மனுவை ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் போது தானே சொன்னார். இப்போ பிரதீபா பட்டேல் நிராகரித்ததும் பெரிதாக கதைப்பவர்கள் ஏன் அதை மறந்தீர்கள். அப்படி ஒரு கோமகன் சொல்லை அவமதித்தவர்கள் (முக்கியமாக கங்கிரஸ்) தான் இந்த ஜனநாயக தேசத்தின் குடிமக்களா ?
பிரியங்கா ஏதோ பாசத்தில் நளினியை பார்க்கப் போனதாக பல ஊடகங்கள் பீற்றிக் கொண்டது. அது தானா உண்மை. தனது புத்தகத்துக்கு கொஞ்ச பக்கம் நிரப்பவும். தமிழ் நாட்டில் கொஞ்ச நல்ல அபிப்பிராயம் பெறவுமேயாகும். எங்கள் சாபம் உங்கள் வம்சத்தை என்றுமே வாழ விடாது.
அமெரிக்காவில் இருந்தே சிகிச்சைக்காக இந்தியா தேடி பலர் ஓடிவர தன் தேசத்து மருத்துவர் மிது நம்பிக்கையில்லாமல் அந்நிய நாட்டுக்கு ஓடுகிறார் ஒரு தேசத்தின் ஆளுங்கட்சிக்குத் தகுதியான சீமாட்டி.
யாரோ செய்த கொலைக்கு யாரையோ கொன்று வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் ஒரு கொலைகார ரத்த வெறிபிடித்த குடும்பம் தான் இந்தக் குடும்பம். வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் அதிகம் உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம். ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும். இந்த ஈவிரக்கமற்ற குடும்ப அரசியலில் இருந்து எப்போ அரசாங்கம் விடுபடுகிறதோ அன்று தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் எற்றுக் கொள்வேன். இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் என்ற நம்பிக்கையில் மனதில் பல ஆதங்கம் இருந்தாலும் அடக்கிக் கொண்டு இப்பதிவை சுருக்கமாகவே முடிக்கிறேன்.
குறிப்பு- இப்பதிவை யார் வேண்டு மென்றாலும் எடுங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். என்னை திட்ட விரும்புவோர் ஆசை தீரத் திட்டுங்கள். என் மன ஆதங்கத்தை நான் திட்டித் தீர்த்தது போல உங்கள் ஆதங்கத்தை என் மீது கொட்டுங்கள். பாதிக்கப்பட்ட எம் மண்மிதோ அல்லது மக்கள் மிதோ திட்ட வேண்டாம்
மிக முக்கிய குறிப்பு- பேரறிவாளனுக்கு மட்டும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களே அவர் மட்டும் உயிரல்ல மற்றவர்களதும் உயிர் தான் அநாதைகள் போல குரல் கொடுக்க யாருமே இன்றி தாவிக்கும் அவர்களையும் கணக்கிலெடுங்கள்.
அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே
அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே
38 கருத்துகள்:
பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி..!
நியாயமான பதிவு ....
////ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.
எத்தனை கொலைகள் ?
எத்தனை கற்பழிப்புக்கள் ?
எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ?
எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்?
செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை./// என்றுமே எம் உயிர்கள் விலங்குகளை விட கீழ் தரமாக போய்விட்டதே(
///இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம். ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும்.// இதுவே மிகைப்படுத்தப்பட்ட தண்டனை...
http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-perarivalan?utm_medium=email&utm_source=share_petition
எம் எதிர்ப்பை தெரிவிக்க ஒரு வழி....
உங்கள் கருத்தை பகிர்ந்திருக்கிங்க... அது இங்குள்ள பெரியவர்களுக்கு போய் சேரனுமே??
//இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார்//
நச்சுன்னு சொன்னீங்க மதி.
நியாயமான பதிவு.....
தங்கள் மீது ஸலாம் எனும் சாந்தி நிலவட்டுமாக சகோ.மதியோடை சுதா.
ஈழத்தமிழர்களின் ஆதங்கம் தமிழகம் தாண்டி எவருக்கும் புரியாது & புரியாது என்பதே நிதர்சனம்..!
அப்புறம்...
இரு முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள் சகோ.மதி சுதா.
முதல் விஷயம்...
எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் 'பவர்ஃபுள்'. ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள்.
இன்னொரு விஷயம்...
தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... "பவர்லெஸ்" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் கலாமை திரும்ப ஜனாதிபதியா வருவதை சோனியாவோ, கலைஞரோ விரும்பலையே!
>>>>>முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
முதல் விஷயம்...
எமது இந்திய அரசியலை பொறுத்தமட்டில் இங்கே பிரதமர்தான் 'பவர்ஃபுள்'. ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்ப் என்றே பொதுவாக அழைப்பார்கள்.
இன்னொரு விஷயம்...
தற்போதைய இந்திய பிரதமர்... ஜனாதிபதியை விட... "பவர்லெஸ்" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்<<<<<
Ha ha ha! SUPER!!! :-)
ஆதங்க படுவதை தவிர
என்ன சொல்வது தெரியவில்லை
தவறு செய்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் தண்டிக்க படுவார்கள் சுதா
//சுருதிரவி..... said...
பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கத்துணை போனவர்களுக்கு இந்த மூன்று உயிர்கள் சுண்டைக்காய் மதி..!//
உண்மைதான்... உயிரின் வலி அறியாதவர்கள் இவர்கள்
உலகமே மதித்த ஒரு மேதகு ஜனாதிபதியை அவரது நாட்டவர்கள் மதிக்காமல் போனது வேதனையே
good one
/* ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது. */
இதுதான் கேள்வி! இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்.
அண்ணா எனக்கொரு பெரிய சந்தேகம். அப்துல் கலாமும் இவர்களின் கருணை மனுவை உத்தியோகபூர்வமாக ஏற்கவில்லைதானே? நான் சொல்வது பிழையெனின் எதாவது ஆதாரம் தரமுடியுமா?
பகிர்வுக்கு நன்றி
பலவிடயங்களை அலசி உள்ளீர்கள்.அருமை
உங்கள் ஆதங்கம் நியாயமானதே
நியாயமான கேள்வி தம்பி
ஆதங்கப் பகிர்வு.
பகிர்வுக்கு நன்றி
நியாயமான பதிவு. . .
//இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார்//
அங்கு போயும் அறிவிப்பார்கள். "கொலைஞர் கோனியா கூட்டணி தொடரும்."
நாங்கள் நினைப்பதை போல் இந்தியாவில் ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது பாராளுமன்றத்தில் இது எனது அரசு என்று சொல்வதை தவிர..
அத்துடன் அப்துல் கலாம் ஜனாதி பதவியில் இருந்த போது தான் சார்ந்த இனத்திற்கோ சமூகத்திற்கோ எதுவும் செய்ததில்லை..!! எனக்கு தெரிந்த வரை..
ஜீ.. தாத்தா அது மட்டுமா செய்தார்.. அவருடைய ஆட்சியில்தான் கர்நாடகாவில் அணைகட்ட விட்டு தமிழ் நாட்டு விவசாயிகளின் வயித்தில் அடித்தார்.. கச்ச தீவை விட்டுக்கொடுக்க விட்டார்..பாலாறு,முல்லை பெரியாறு போன்ற தமிழ் நாட்டு உரிமைகளை விட்டு கொடுத்தார்.. ஒரு தமிழனை பிரதமர் ஆவதை தடுத்தார்.. இன்னொருவரை ஜனாதிபதி ஆவதை தடுத்தார்... கடைசியில ஈழத்தமிழனுக்கும் ஆப்படிச்சார்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
தெளிவாக பிரச்சனையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
பேரறிவாளன் என்றல்ல அவரைச்சார்ந்த லட்சக்கணக்கான உள்ளங்களுக்கு குரல் எழுப்ப தயராகத்தான் இருக்கிறார்கள். இத்தனை காலமாக சிறையிலேயே கழித்துவிட்டபின்னும் இந்த கான்கிரஸ் கொடுங்கோலர்களுக்கு இரக்கம் வரவில்லையே என்ற கோபம் எல்லோருக்கும் இருக்கிறது உணர்வுள்ள தமிழர்களுக்கு இப்பவும் அந்த வேகம் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறீர்கள். காலம் பதில் சொல்லு நிச்சையமாக,
எம்முள் எழும் கொதிப்பினை ஒப்பிடுகையில் இப்பதிவில் உள்ள வார்த்தைகள் மிகவும் மெல்லினமாகத் தான் உள்ளன. இந்தியாவிலுள்ள தமிழன் என்பவன் யார்? வட இந்தியாவின் வால் தூக்கியா? இந்திய தேசியம் பேசியே தேசிய இறையாண்மை எனும் போர்வையில் தன் இன மக்களை (தமிழகத்திகலாகட்டும், இலங்கையிலுள்ளவர்களாகட்டும்) அழிவதற்கு துணை போவது அல்லது கண்டும் காணாமல் இருப்பது தான் நெறியா? மனித நேயத்தினை மறந்து தனிப்பட்ட சுயநலத்திற்காக இனப் பேரழிவிற்கு துணைபோகும் ஆண்ட / ஆளுகின்ற அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாகட்டும்.. வரலாற்றில் இவர்கள் வரும் தலைமுறையினரால் காறி உமிழப்படுவார்கள்.
very gud and important post.thanks
அப்துல் கலாமா? யார் அவர் இந்தியா 2020ல் வல்லரசாகும் எனக் கனாக் காணூம் முன்னாள் ஜனாதிபதியா? ஈழத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் தானே இவர். இந்தியாவில் இத்தாலிக்காரிக்கு அடிமையான காங்கிரஸ் மத்தியில் இவரின் பேச்சு எங்கே எடுபடும்(அப்படிப் பேசி இருந்தாலும்) கருணாநிதி என்ற குடும்பஸ்தரினால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாமல் போனது இவரின் துரதிஷ்டம் அல்ல தமிழர்களின் அதிர்ஷ்டமே. இல்லையென்றால் இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார்.
எப்போது தமிழர்கள் , ஒரு இந்தியன் ..தான் இந்தியன் என்பதை விட தமிழன் என்று கூறுகிறார்களோ அப்போது நல்ல நாள் ..
//மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும் போது வாயை மூடிக்கொண்டிருந்தவர் //
வந்தியத்தேவன் அருமை :)
\\இப்பவும் இவர் வல்லரசு நல்லரசு என சும்மா உரையாற்றிக்கொண்டிருப்பார்./// super :)
நான் ரஜனி காப்பாற்றுவார் என்று நினைத்தேன் :) அவர் தானே பாட்டில் என் உடல் பொருள் ஆவியும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறைன்னு பாடினார் ..LOL
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
(உங்களுக்கு சொல்வது பொருத்தமில்லை என்று நினைக்க வேண்டாம் சகோ)
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
எங்க பிரதமர எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கோங்க. அந்த ஆளுக்கு குடிமகனா இருக்கறதுக்கு எங்களுக்கே வெக்கமா இருக்கு.
Your aim to kill Rajiv gandhi. then why you kill so many ordinary man along with him. You can do the crime at your nation itself. so the death sentence is right one. These people keep quit when hange auto sanker since he is chennailiteis. whether he is not a tamilian. <1>
கருத்துரையிடுக