வியாழன், 11 ஆகஸ்ட், 2011

என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

பிற்பகல் 10:15 - By ம.தி.சுதா 37

உறவுகளே... சேமம் எப்படி ?

அண்மைய நாட்களில் என்னைக் கடுப்பேற்றிய மூன்று செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
       1. எங்காவது ஒரு பதிவரின் கருத்தைக் கண்டுவிட்டு அவரது தளத்தைப் பார்க்கும் ஆசையில் அவர் புறொபைலுக்கு ஒடியிருப்பீர்கள் அங்கே பார்த்தால் அவர்களது தளங்கள் குவிந்திருக்கும் அதில் எது அவர் வழமையாக எழுதும் தளம் எனத் தெரியாமல் திக்கித் திணறி வந்திருப்பீர்கள்(வந்திருக்கிறேன்)
தீர்வு- dashboard >>>>> Edit User Profile >>>>> Select Blogs to Display
என்பதை தெரிந்தெடுங்கள்.

 2. பதிவுலகத்தை நம்பித் தான் இன்று பல இணையத்தளங்கள் வருமானத்தைத் தேடிக் கொள்கின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படியான சிலருக்காக பதிவுத் திருட்டைத் தடுப்பதற்காக வலது சொடுக்கியை வலைத்தளத்தினுள் இயங்காதவாறு நிறுத்தியிருப்பார்கள். ஆனால் தமது பதிவுகளில் தாராளமாக தொடுப்பகளை இட்டிருப்பார்கள். அத்தொடுப்பக்குச் செல்வதானால் அதன் மேல் வலது சொடுக்கை சொடுக்கி new tap ல் செல்லமுடியாது எனவே சொடுக்கியவுடன் வேறொரு தளம் அழைத்துச் செல்லப்படுவோம் திருப்பி இங்கு வரவேண்டுமென்றல் back பண்ணித் தான் வரவேண்டும். எப்படிக் கடுப்பேறும் யோசித்துப் பாருங்கள்.
தீர்வு- சகோதரன் பலே பிரபு தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் சென்று பாருங்கள்..

      3. பெரும்பாலான பதிவர்கள் கருத்துப்பெட்டியை new windows ல் திறக்கக் கூடிய மாதிரி வைத்திருப்பார்கள். ஆனால் சிலரோ பதிவின் கீழ் வரும்படியாக வைத்திருப்பார்கள். ஆனால் வலைத்தளமோ மிக அதிகமான டிசைனிங்குகளால் நிறைந்திருக்கும். ஒரு கருத்திட்டால் அது publish ஆகும் வரை காத்திருக்க வேண்டும் அவர்களது page சுற்றி வரும் போது தான் அடுத்த வில்லங்கம் வந்து நிற்கும் word verification கொடுத்து திருப்பி publish பண்ண வேண்டும். ஒரு கருத்திட எவ்வளவு நேரம் பிடிக்கும் பாருங்கள். ஒரு உண்மையை அறியுங்கள் இதனால் தங்களுக்கு பெரியளவில் page viewers அதிகரிக்காது காரணம் 20 பேர் கருத்திட்டால் 40 பார்வையாளர்கள் தான். 10 பதிவில் 400 தான் அதிகரிக்கும். கடைசியில் நீங்கள் setting ஐ மாற்றினால் கூட தங்களின் கருத்துப் பெட்டி நசல் பிடித்தது என நினைத்து கருத்துப் பெட்டிப்பக்கம் திரும்பியே பார்க்க மாட்டா்கள்.
தீர்வு- dashboard >>>>> Settings >>>>> Comment Form Placement >>>>> Pop-up window  என்பதை கொடுத்து விடுங்கள்.

    கீழுள்ள படத்தில் உள்ள விடயம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். கிடைத்த வரவேற்பு மெய் சிலிர்க்க வைத்தது. பதிவர்களான சுதர்சன் , யாதவன் போன்றோர் அறிமுகப்பதிவிலேயே ஓடி வந்து என் முயற்சிக்குத் தட்டிக் கொடுத்து ஆலோசனை தந்திருந்தனர். இந்தப் பதிவையே பகிரங்கப்படுத்த உதவிய மாய உலகத்திற்கும் உடனேயே இத்தட்டிகையை தளத்திலிட்டுதவிய மதுரன், நிருபன் போன்றோருக்கும். டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பரிமாறிய அனைத்து நண்பர்களுக்கும்.
      மிக முக்கியமாக உதவ முன் வந்த பதிவர்களான டி.சாய் மற்றும் நீச்சல்காரன் இருவருக்கும் மிக்க மிக்க நன்றிகள். உதவி பெற்றவர் யாரவது கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அத்தனை அருளும் இதற்காய் உழைக்கும் அனைவருக்குமே சாரும்.

தொடர்புக்கு- mathisutha56@gmail.com
எழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.
About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

37 கருத்துகள்:

Mathuran சொன்னது…

சுடுசோறு எனக்குத்தான்

Mathuran சொன்னது…

இதெல்லாம் எனக்கும் கடுப்பேத்தும் விடயங்கள் தான் சுதா அண்ணா

கோகுல் சொன்னது…

ஆமா!கடுப்பேத்தாறாங்க மை லார்ட்

சகோ வணக்கம்,
மிகச் சரியா சொன்னிங்க...

எழிலருவி சொன்னது…

//எனவே சொடுக்கியவுடன் வேறொரு தளம் அழைத்துச் செல்லப்படுவோம்

ctrl key உடன் சொடுக்கினீர்களானால் பிரச்சனை தீர்ந்தது.

Chitra சொன்னது…

Good tips for the bloggers. Thank you.

மாய உலகம் சொன்னது…

தலைப்பு தான் மிரள வைக்கிறது..ஆனால் உள்ளே பதிவர்களின் நிறை குறைகளை அலசி அவர்களின் குறைகளை நீக்குவதற்கு வழி சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் சகோ

ஆகுலன் சொன்னது…

நீங்கள் சொன்ன எல்லாவர்ரயும் சரி செய்கிறேன்.....................

உங்களது முயற்சிக்கு உதவியவர்களுக்கு எல்லோர் சார்பிலும் நன்றி..

பெயரில்லா சொன்னது…

என்னமோ எதோ எண்டு வந்தன் ஹிஹிஹி ---

மிகச் சரியா சொன்னிங்க...

பெயரில்லா சொன்னது…

ம்ம் அந்த மூன்றும் கடுப்பேத்தும் விடயங்கள் தான். அதுவும் இனைய இணைப்பு வேகம் குறைந்தவர்களுக்கு இறுதி இரண்டு விடயங்களும் எரிச்சலை தான் கொடுக்கும்.

செங்கோவி சொன்னது…

சுதா, வேலைப்பளு காரணமாக நேற்று பின்னூட்ட முடியவில்லை..முதலில் உங்கள் நல்ல முயற்சிக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்..

நானும் இன்று எனது பதிவில் இந்த நல்ல விஷயத்தை பகிர்கின்றேன்..

சுதா SJ சொன்னது…

நானும் பல வலைப்பக்கம் போய் கடுப்பான சம்பவங்கள் நிறைய உண்டு
சம்மந்தப்பட்டவர்கள் திருத்திக்கொள்ள உதவும் பதிவு பாஸ்

தகவலுக்கு நன்றி சுதா

காட்டான் சொன்னது…

தகவல்களுக்கு நன்றி மாப்பிள.. முந்திய பதிவுக்கு ஒரு ஈமெயில் போட்டேன் பார்த்தீர்களா..

உணவு உலகம் சொன்னது…

நல்ல விஷயத்தை மிக நயமாக சொல்லி, அதற்கு தீர்வும் சொல்லியிருக்கீங்க. நன்று.

உணவு உலகம் சொன்னது…

தமிழ்மணம் ஏழு.

Unknown சொன்னது…

ம் இதுபோல அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது
நன்றி தங்கள் தகவலுக்கு
வாழ்க உங்கள் தொண்டு
என்னக்கு முகப்பு புத்தகம் இல்லை
இருந்தாலும் எனது வாழ்த்துக்கள்

குட்

ஆமினா சொன்னது…

தலைப்பை பார்த்து மிரண்டு ஓடிவந்தேன் :)

முதல் விஷயம் என்னை மிகவும் கடுப்பேற்றும் விஷயம் :(

arasan சொன்னது…

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்க சகோ

பெயரில்லா சொன்னது…

நானும் டென்சனாகியிருக்கேன்

சசிகுமார் சொன்னது…

உண்மை தான்

settaikkaran சொன்னது…

பிளாகரைக் குறித்து முழுமையாக அறியாத எனக்கு இந்த தகவல்கள் பலனுள்ளதாய் இருக்கின்றன. நன்றி!

உண்மைதான் சகோ...

பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

வலிப்போக்கன் சொன்னது…

என்வழி,தனிவழி.எனக்கு தெரிந்ததையே
பின்தொடருவேன்.வவ்வாள் தொன்னுாறு பொச்சுக்கு ஆசைப்பட்டது மாதிரி ஆகிடக்கூடாதல்லவா?

நன்றி. பாப் - அப் விண்டோவுக்கு மாறிவிட்டோம். உதவிக்கு வாழ்த்துக்கள்.

Prabu Krishna சொன்னது…

என்னுடைய பதிவு உங்கள் கடுப்பை குறைத்ததில் மகிழ்ச்சி... இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி.

கூடல் பாலா சொன்னது…

இப்ப யாருக்கு டோஸ் விழப்போகுதுன்னு வந்தா டிப்ஸ் கொடுத்து அசத்திட்டீங்க ...

இவையெல்லாமே கடுப்பேத்து விடயங்கள்தான் சகோ.

பிரணவன் சொன்னது…

நல்ல தகவல். . .நன்றி. . .

Muruganandan M.K. சொன்னது…

பலருக்கும் பயன்படக் கூடிய விடயங்கள்.

சகோ வணக்கம்,
பயனுள்ள பகிர்வுக்கு
பாராட்டுக்கள்.

கார்த்தி சொன்னது…

ஆம் இது பதிவர்கள் கவனிக்க வேண்டிய 3முக்கிய விடயங்கள்!!!

ஸ்ரீதர் சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!எனது வலைத்தளத்துக்கு ஒரு முறை வந்து போங்கள்.பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்!

பாண்டியன் சொன்னது…

super info sir.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top