ஞாயிறு, 3 ஜூலை, 2011

மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

முற்பகல் 9:33 - By ம.தி.சுதா 36

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி ?
                    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஏதோ ஒரு பாவமாவது அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம். நாம் வாழும் காலம் மிக மிக சொற்பமானதே அந்தக் குறுகிய காலத்தில் எம்மால் முடிந்த சிறு உதவியாவது செய்தால் ஒரு மனத் திருப்தியிருக்குமல்லவா
                        இது ஒரு சுயலாபமற்ற திட்டம் சம்பந்தமானது . நாம்
இணையத்தில் செலவழிக்கும் பல்லாயிரக் கணக்கான மணித்துளியில் ஒரு சிறு பகுதியை இதற்காக செலவிட்டால் என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை உறவுகளே. நீங்கள் அனைவரும் வன்னிப் போர் பற்றியும் அதன் கொடுரமான மனித அவலங்கள் பற்றியும் தாராளமாக அறிந்திருப்பீர்கள். அதன் வடுக்களாக இன்று பல அங்கவீனர்கள் எஞ்சி நிற்கிறார்கள். சில புலம் பெயர் அமைப்புக்கள் சுயலாபத்தை நோக்காகக் கொண்டு அவர்களை காரணம் காட்டி பணம் சம்பாதிக்கிறது. அதுமட்டுமல்ல போர் வெறி கொண்ட மக்களை உசிப்பேத்தி தம் பிழைப்பை ஓட்டுகிறார்கள்.
                                   உங்களில் பலருக்கு அவர்கள் மீதான அதீத உணர்வின் பலனாக உதவி செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அந்த பணம் போய் சேரும் இடத்தை உறுதிப்படுத்தத் தெரியாததால் பலர் தயங்கி நிற்பீர்கள். இப்படியான நிலையில் தான் எனது நெருங்கிய நண்பரான ஜிவனுடன் சேர்ந்து இத்திட்டம் சம்பந்தமாக முன்னெடுக்க முடிவெடடுகப்பட்டது. ஏற்கனவே இதன் மூலம் 2 பேர் பயன் பெற்று விட்டார்கள்.
இவர்கள் முக(வரி)களை உற்றுப் பாருங்கள்.
திட்டம் இது தான்.
                           வன்னியில் பாதிக்கப்பட் இயங்க முடியாமல் இருப்பவர்களை அடையாளம் காண வேண்டும் அது சிரமமல்ல பலர் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதார நிலமை , அவர்களுக்கான பிரச்சனை என்பவற்றை அறிய வேண்டும், அவற்றை அவர்களது படம், தொடர்பாடல் முகவரியுடன் வெளிக் கொணர வேண்டும். அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் அவர்களுடன் நேரடியாகத் (தொலைபேசி அல்லது இங்குள்ள உங்களது உறவினராககவும் இருக்கலாம்) தொடர்பு கொண்டு அவர்களுக்கு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி ஏனும் செய்யலாம் காரணம் ஆற்றில் தத்தளிப்பபவனுக்கு ஓரு சிறிய மரத் துண்டு கூட பெரிய உதவி தானே.
              உண்மையில் மனமுன்டானால் இடமுண்டு காரணம் ஒரு நாளைக்கு 10 சிகரெட் பிடிக்கும் ஒருவருக்கு ஒன்றை இழப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அது போல் வாரத்தில் இதற்காக ஒரு நேர உணவை துறந்தால் கூட தப்பில்லை காரணம் வாரம் முழுதும் பட்டினியாய் கிடக்கும் ஒரு குடும்பத்திற்கு நாம் இதைக் கூட செய்யாமல் விடலாமா ?
           இப்போது கூட பலர் போருக் கென்று சொல்லி பல சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதலில் எது முக்கியம் என யாராவது சிந்திக்கிறார்களா ? இவர்கள் எல்லாம் என்ன பட்டினி கிடந்து செத்த பின்னர் உங்களுக்கு தனி நாடு கிடைத்து உலக அரங்கின் சுடுகாட்டு மையமாக மாற்றப் போகறீர்களா ? 
           இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை காரணம் அவர்கள் உயிரோடு வதைப்படும் ஜீவன்கள் அவர்களை வைத்துக் கூட பலர் பணம் சம்பாதிக்கக் காத்திருக்கிறார்கள். தங்களின் ஆதரவையடுத்து அவர்களது தனிப்பட்ட படங்கள் தொடர்பு முகவரிகள் அவர்களின் இன்றைய நிலைகள் என்பவற்றை காட்சிப்படுத்துகிறேன்.

தங்களிடம் வேண்டப்படுவது
               இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அழிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
             இது சம்பந்தமான தங்களின் கருத்தைப் பெறவே இந்தப் பதிவு மிக முக்கியமாக இது நான் தங்களிடம் கேட்கும் ஆலோசனை மட்டும் தான் கருத்திடுபவர் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ஆனால் தங்களால் முடிந்த சிறு உதவியாக இந்த தகவலை புலம் பெயர்ந்துள் எம் சொந்தங்கள் அனைத்திற்கும் பகிர உதவுங்கள். உங்கள் ருவிட்டர், மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) போன்றவற்றில் பகிர்ந்து இத்தகவல் பலரை சேர உதவி செய்யலாம்.
             இது சம்பந்தமான முழு ஆலோசனைகளையும் எதிர் பார்க்கிறேன் அது நல்லதொ கெட்டதோ பரவாயில்லை வெளிப்படையாகச் சொல்லுங்கள் நான் எற்றுக் கொள்வேன். வெகுவிரைவில் அவர்களின் அறிமுகத்துடன் சந்திக்கிறேன்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


குறிப்பு -  மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) ல் பகிர்வதானால் இந்த ஆக்கத்தின் கீழே அதற்கான தனிப் பொத்தான் அழிக்கப்பட்டுள்ளது அதை சொடுக்கி சில செக்கன் காத்திருந்து conform என்பதை கொடுக்கவும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

36 கருத்துகள்:

Mathuran சொன்னது…

ஐ சுடுசோறு....

Mathuran சொன்னது…

பாஸ் இப்ப ரைம் இல்ல.. சுடுசோறோட கிளம்பிறேன்.. மிச்சத்துக்கு அப்புறமா வாறன்

சுதா பதிவு எப்பவும் நோ சாதா

பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வு.

கவி அழகன் சொன்னது…

நல்ல முயற்ச்சி சுதா பலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உதவி செய்கிறார்கள் பலருக்கு ஆசை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

நல்ல முயற்சி...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நல்லது சகோதரரே நல்ல திட்டம்
இதுவரை கோவிலைச்சாட்டி சிலபேர்
கொள்ளை அடித்து கோவில்களின்
பெயரைக் கெடுத்தனர்.அதேபோன்று
நமது தாயக உறவுகளின் நிலமையைச்சொல்லி சிலபேர் அடித்த கொள்ளையினால் கொடுப்பவர் மனமும் இறுகிக்கிடக்கும்
இந்தநிலையில் நீங்கள் எடுக்கும்
இந்த முயற்சியாவது சரிவர வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Mohamed Faaique சொன்னது…

நல்ல முயற்சி.. ஆரம்பத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.. எதிர்ர்ப்புகளை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.. எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

http://faaique.blogspot.com/2011/07/blog-post.html

vidivelli சொன்னது…

nalla pathivu
valththukkal
ellorum onruseara veandum.....

செங்கோவி சொன்னது…

வலைப்பூவை மிக நல்ல விசயத்திற்குப் பயன்படுத்தும் உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு தலை வணங்குகின்றேன். நண்பர்களும் தங்கள் தளங்களில் இந்தப் பதிவு பற்றிய விவரங்களை வெளியிடலாம்.

நல்ல பகிர்வு. முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Mathuran சொன்னது…

உண்மையிலேயே ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி சுதா அண்ணா... வீணான தேவைகளுக்கு பணத்தை செலவழிக்காமல் இப்படி ஏதாவது செய்தால் பட்டினியால் வாடும் எம் உறவுகளுக்கு உதவியதாக அமையும்

சுதா SJ சொன்னது…

நல்ல பதிவு பாஸ்
வாழ்த்துக்கள்

Adriean சொன்னது…

சிறந்த திட்டம். எனக்கு தெரிந்தவர்களுக்கு தெரியபடுத்துகிறேன்.பணம் பறிப்பதையே நோக்கமாக கொண்ட கோஷ்டியினால் தமிழீழ போர் என்று உசுப்பேற்றபட்டு பணம் கொடுத்து ஏமாந்த விரக்த்தி நிலையே பலருடையது. ஆக்கபூர்வமான விடயங்களை விட போர், அழிவுகளின் மீது புலம்பெயர்ந்து பாதுகாப்பாக வாழும் எம்மவர்களுக்கு ஆர்வம் அதிகம்.

நிச்சயமாக எங்களால் இயன்ற உதவியை செய்வோம் அண்ணா.உங்க முயற்சி வெற்றி பெற என்னோட வாழ்த்துக்கள்.

காலத்தே செய்யப்படுகின்ற உதவி மகத்தானது.என்னால் முடிந்த அளவு பரப்புரை செய்கிறேன்.வாழ்த்துக்கள்.

தனிமரம் சொன்னது…

nalla vedayam nanba valltthukkal

ஆகுலன் சொன்னது…

அண்ணா என்னால் இப்பொழுது உதவ முடியாது ஆனால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும்......

rajamelaiyur சொன்னது…

நல்ல முயற்சி

வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

Unknown சொன்னது…

மாப்ள உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்...இயன்றதை கண்டிப்பாக செய்வோம்!

நிரூபன் சொன்னது…

காலத்திற்கேற்ற ஓர் காத்திரமான முயற்சி மச்சி,

வாழ்த்துக்கள் சகோ.

நிரூபன் சொன்னது…

இன்றைய கால கட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி யாராவது சிந்திக்கிறார்களா? இல்லைத் தானே, பாதிக்கப்பட்ட மக்கள் பெயரால் வாரிச் சுருட்டித் தமது சந்ததிக்குச் சொத்துச் சேர்ப்பதில் தான் ஒரு சில தீய சக்திகள் குறியாக இருக்கின்றன,

மக்கள் வாழ்க்கையினை மேம்படுத்துவதை விடுத்து, இப்போது மக்கள் வாழ்க்கை பற்றிச் சிந்திக்க வேண்டிய தருணம் இல்லை, போர்க் குற்றம் தான் அவசியம் எனப் புதுப் பாடம் கற்பிக்கின்றார்கள் ஒரு கூட்டத்தினர்,

எது எப்படியோ,
இம் முயற்சிக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும், வாழ்த்துக்கள் மச்சி,

சசிகுமார் சொன்னது…

நல்ல முயற்சி

Unknown சொன்னது…

நிட்ச்சய்ம் என்னால் முடிந்தை உதவுவேன்.
தகவலை எனது மெயிலுக்கு அனுப்பு வையுங்கள் தம்பி பார்ப்போம் .

நேரமில்லை வருகிறேன் மீண்டும்.

Admin சொன்னது…

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
இன்னும் சற்று விளக்கமிருந்தால்
நலன் தரும் என்று கருதுகிறேன்

புலவர் சா இராமாநுசம்

பெயரில்லா சொன்னது…

நல்ல முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.நானும் முயற்சி பண்ணுறேன்.என் நண்பர்களுக்கும் சொல்லுகின்றேன்.
இறை ஆசி கிடைக்கட்டும்.

Unknown சொன்னது…

நல்ல முயற்சி சுதா! வெற்றியடைய வாழ்த்துக்கள்!

உணவு உலகம் சொன்னது…

வலைத்தளம் வழி உதவிகள் செய்திடும் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

உணவு உலகம் சொன்னது…

வலைத்தளம் வழி உதவிகள் செய்திடும் முயற்சிக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

நீச்சல்காரன் சொன்னது…

இன்றுதான் ரீடரில் பத்திவை பார்த்தேன். நல்ல முயற்சி
ஆலோசனை சொல்லும் அளவிற்கு அனுபவமில்லை இருப்பினும். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

...αηαη∂.... சொன்னது…

சிறந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்த்க்கள்...

சுதர்ஷன் சொன்னது…

நிச்சயம் உதவி செய்யலாம் ..இப்படி எந்த அரசியல் ,லாப நோக்கற்ற தொண்டை தான் தேடிக்கொண்டிருந்தேன் ..பணி தொடர வாழ்த்துகள் ...

பி கு :- முன்னர் வந்து பின்னூட்டி இருக்கும் சிலர் என்ன பதிவு என்றே வாசிக்காமல் பின்னூட்டம் செலுத்தி இருப்பது மிக வருத்தம்

காட்டான் சொன்னது…

நல்ல பதிவு இஞ்ச நான் இப்படி உதவிசெய்து அது அவர்களை அடையவில்லை என்று அறிந்ததும் மனம் வருந்தினேன்..இப்படியான செயல்பாடுகள் கட்டாயம் அவர்களைத்தான் சென்றடைகிறதென உறுதிபடுத்தல் அவசியமென நான் நினைக்கிறேன்  கருத்தில் தவறு இருந்தால் அறியத்தாருங்கள்..

Unknown சொன்னது…

சிறந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்... ��

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top