புதன், 10 நவம்பர், 2010

குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்...iii

பிற்பகல் 7:41 - By ம.தி.சுதா 40

          மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.
                 நடிகர் பிரபு கூட இடைப்பட்ட ஒரு காலப்பகுதியில் கட்டாயம் ஒரு பாடலாவது குதிரையில் வரும்படி வைத்திருப்பார். அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் அவர் வரும் காட்சி மிகவும் கம்பீரமாக இருக்கும். கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல.
                 இவற்றை விட அதன் வலு தான் மிக முக்கியமானது. இயந்திர வலுவைக் கூட குதிரை வலு என்று தான் அழைப்பர். ஒரு குதிரை வலு என்பது 246 வாற்று ஆகும். இதன் கால் அமைப்பால் இதனால் நின்றபடி தான் நித்திரை கொள்ள முடிகிறது.
இனி வாருங்கள் தலைப்பிற்கு வருவோம்.
                    நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
இந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்...
அந்த மன்னர் இயற்கை மரணமெய்து விட்டார் என்பதைக் குறிக்கும்.

இப்போது காரணம் புரிந்திருக்குமே...

இப்படி பல சிலைகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதன் வரலாறு அறிந்திருப்பீர்கள் அப்படியானதை என்னுடன் பகிருங்கள்.
அத்துடன் இந்த ஆக்கம் பிடித்திருந்தால் ஒரு வாக்கும் தந்து போக வேண்டுகிறேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

40 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

என்கயடாப்பா இந்த தகவல்களை தேடி பிடிக்கிறாய் தேடலுக்கு வாழ்த்துக்கள்

எஸ்.கே சொன்னது…

புதிய வித்தியாசமான தகவல்கள்! நன்றி!

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நல்ல பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி...

நான் இத் தகவலை ஏற்கனவே அறிந்துள்ளேன். ஏதோ எனக்குப் பிடித்த மிருகம் குதிரை!
வலுவும் கம்பீரமும் மிக்கது அரபுக் குதிரைகளே! உலக நாடுகள் யாவுமே அரபுக் குதிரையை வாங்கியுள்ளன.
பாண்டிய மன்னர் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரும் அரபு தேசம் குதிரை வாங்கச் சென்று
குங்கிலியம் வாங்கி வந்ததாக அவர் வரலாறு கூறுகிறது.
ஈழத்தில் நெடுந்தீவில் டச்சுக்காரர் கொண்டுவந்த குதிரையின் எச்சமும்; மன்னாரில் அரபியர்கள் தங்கள்
பாவனைக்குக் கொண்டுவந்த சொச்சமுமே; மிச்சம் எனக் கேள்விப்பட்டேன். அவற்றை என் ஆசிரியர் ஒருவர் கோவேறு கழுதை என்பார். இங்கு வந்து குதிரைகளைப் பார்த்தபின் அது உண்மைபோல் தான் உள்ளது.

தினேஷ்குமார் சொன்னது…

வியக்க வைக்கும் தகவல் நண்பரே

வருவீரோ என் பக்கம்
http://marumlogam.blogspot.com

எப்பூடி.. சொன்னது…

பலருக்கும் தெரிந்திராத தகவல்கள், பகிர்விற்கு நன்றி.

எல்லாம் சரி; நான்கு கால்களையும் தூக்கிக்கொண்டு நிற்கும் குதிரைகள் சிலைகள் எங்குமே இல்லையா ? :-)

ஷஹன்ஷா சொன்னது…

அருமையான பதிவு....குதிரைக்குள்ளும் இத்தனை விசயம் இருக்கா....????

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

அன்பரசன் சொன்னது…

வித்தியாசமான தகவல்..

வித்தியாசமான தகவல்கள்.

நல்ல தகவல்!!! நான் நினைத்து பார்த்ததுண்டு!!

Ramesh சொன்னது…

நல்லா இருக்குடா. நல்ல தகவல் தெரிந்துகொண்டோம். இடுகைக்கு பாராட்டுக்கள். தேடலில் சிக்கி எங்களுக்கும் தந்ததற்கு நன்றி.

Unknown சொன்னது…

சங்கிலியனைப் பற்றி அறிந்திரிந்தேன் ஆனால் இப்போதுதான் படத்தைப் பார்த்தேன்

பதிவுக்கு நன்றி

Jana சொன்னது…

அறிந்த தகவல்கள்தான் என்றாலும் மீண்டும்
நினைவு படுத்த ஏதுவாக இருந்தது. தேடல்கள் தொடரட்டும் சுதா.

Bruno சொன்னது…

நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்

தொடரவும்

வளரவும் வாழ்த்துக்கள்

roshaniee சொன்னது…

பகிர்வுக்கு நன்றி .மான்னர்கள் வைத்திருக்கும் குதிரைகளில் வகைகளும் உண்டு .முடியுமானால் அதையும் பகிருங்கள்

டிலீப் சொன்னது…

ம்....ம்... நன்னா தான் இருக்கு பகிர்வு....

நண்பா எனக்கொரு சந்தேகம் குதிரை நாலு காலையும் தூக்கிட்டு பறக்க மாதிரி படங்கள் பார்த்து இருக்குறன் அதுக்கு என்ன அர்த்தம்

வாழ்த்துக்கள் நண்பா தேடல் தொடரடும்

Unknown சொன்னது…

தேடலுக்கும் ,இதை பதிவிட வேண்டும் என சிந்தித்த விதத்திற்கும் பாராட்டுக்கள்

Unknown சொன்னது…

கனவில் குதிரையில் போவது போல வந்தால்..

ஹேமா சொன்னது…

சுதா...உண்மையில் இதுவரை எனக்குத் தெரியாத தகவல்கள்.நன்றி !

Philosophy Prabhakaran சொன்னது…

ஆ... அருமையான தகவல்கள்... இனி குதிரை வீரர்களின் சிலைகளை பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் சொன்ன விஷயங்களை நோட் பண்றேன்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
////என்கயடாப்பா இந்த தகவல்களை தேடி பிடிக்கிறாய் தேடலுக்கு வாழ்த்துக்கள்////

தேடல் உள்ள உயிருக்கத் தானே அண்ணா அடிக்கடி பசியெடுக்கும்.. அப்போது மாட்டுப்பட்டது தான்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா..
................

எஸ்.கே said...
ஃஃஃஃஃஃபுதிய வித்தியாசமான தகவல்கள்! நன்றி!ஃஃஃஃஃஃ
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் வருகைக்கும் தந்த தகவலுக்கும் மிக்க நன்றி சகோதரம்.

................

dineshkumar said...
ஃஃஃஃஃஃவியக்க வைக்கும் தகவல் நண்பரேஃஃஃஃ
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
ஃஃஃஃஃஃஃஃபலருக்கும் தெரிந்திராத தகவல்கள், பகிர்விற்கு நன்றி.
எல்லாம் சரி; நான்கு கால்களையும் தூக்கிக்கொண்டு நிற்கும் குதிரைகள் சிலைகள் எங்குமே இல்லையா ? :-)ஃஃஃஃஃஃஃஃ

ஆமாங்க பார்த்திருக்கென் விஜய் படித்தாரே அரபுக்கதிரை போல என்று அதில் பார்த்த ஞாபகம்.
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.

................

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃஃஃஃஅருமையான பதிவு....குதிரைக்குள்ளும் இத்தனை விசயம் இருக்கா....????ஃஃஃஃஃ
ஆமாம் தம்பி.... வருகைக்கும் நன்றி

ம.தி.சுதா சொன்னது…

Chitra said...
ஃஃஃஃஃஃபகிர்வுக்கு நன்றி.ஃஃஃஃஃஃ
மிக்க நன்றி அக்கா.....

.............

அன்பரசன் said...
ஃஃஃஃஃஃவித்தியாசமான தகவல்..ஃஃஃஃஃ
நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
ஃஃஃஃஃஃவித்தியாசமான தகவல்..ஃஃஃஃஃ
நன்றி சகோதரம்.

...............

சிவா said...
ஃஃஃஃஃநல்ல தகவல்!!! நான் நினைத்து பார்த்ததுண்டு!!ஃஃஃஃஃஃ
ஆமாம் ஆரம்பத்தில் நானும் இதை ஒரு வித்தியாசத்திற்காகத் தான் என்று நினைத்ததுண்டு.....
நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

றமேஸ்-Ramesh said...
ஃஃஃஃஃஃநல்லா இருக்குடா. நல்ல தகவல் தெரிந்துகொண்டோம். இடுகைக்கு பாராட்டுக்கள். தேடலில் சிக்கி எங்களுக்கும் தந்ததற்கு நன்றி.ஃஃஃஃஃ
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.... பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.

..............

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஃசங்கிலியனைப் பற்றி அறிந்திரிந்தேன் ஆனால் இப்போதுதான் படத்தைப் பார்த்தேன்

பதிவுக்கு நன்றிஃஃஃஃஃஃ
அப்படியா... நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
ஃஃஃஃஃஃஃஅறிந்த தகவல்கள்தான் என்றாலும் மீண்டும்
நினைவு படுத்த ஏதுவாக இருந்தது. தேடல்கள் தொடரட்டும் சுதா.ஃஃஃஃஃஃ
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா

..................

புருனோ Bruno said...
ஃஃஃஃஃஃஃஃநன்றாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்

தொடரவும்

வளரவும் வாழ்த்துக்கள்ஃஃஃஃஃஃஃஃஃ

தங்களைப் போன்றவர் ஊக்கம் தான் இத்தனைக்கும் காரணம் மிக்க நன்றி....

ம.தி.சுதா சொன்னது…

roshaniee said...
ஃஃஃஃஃஃஃஃபகிர்வுக்கு நன்றி .மான்னர்கள் வைத்திருக்கும் குதிரைகளில் வகைகளும் உண்டு .முடியுமானால் அதையும் பகிருங்கள்ஃஃஃஃஃஃஃஃ
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி முயற்சிக்கிறேன்.

...................

டிலீப் said...
ஃஃஃஃஃஃஃஃம்....ம்... நன்னா தான் இருக்கு பகிர்வு....

நண்பா எனக்கொரு சந்தேகம் குதிரை நாலு காலையும் தூக்கிட்டு பறக்க மாதிரி படங்கள் பார்த்து இருக்குறன் அதுக்கு என்ன அர்த்தம்

வாழ்த்துக்கள் நண்பா தேடல் தொடரடும்ஃஃஃஃஃஃஃ

வருகைக்க நன்றி சகோதரா... சில வேளை காதல் வந்து வைரமுத்து பாடல் படித்திருக்குமோ...

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...
ஃஃஃஃஃஃஃஃஃஃதேடலுக்கும் ,இதை பதிவிட வேண்டும் என சிந்தித்த விதத்திற்கும் பாராட்டுக்கள்
கனவில் குதிரையில் போவது போல வந்தால்..ஃஃஃஃஃஃஃஃஃஃ
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.
சிலவேளை நின்றபடி நித்திரை கொண்டிருப்பார்களோ...(சும்மா நகைச்சுவைக்கு)

...................

ஹேமா said...
ஃஃஃஃஃஃஃஃசுதா...உண்மையில் இதுவரை எனக்குத் தெரியாத தகவல்கள்.நன்றி !ஃஃஃஃஃஃஃஃஃஃ
அப்படியா...
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
ஃஃஃஃஃஃஃஆ... அருமையான தகவல்கள்... இனி குதிரை வீரர்களின் சிலைகளை பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் சொன்ன விஷயங்களை நோட் பண்றேன்...ஃஃஃஃஃஃஃஃஃ
பாரட்டுக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்.
கட்டாயம் வரலாறுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.. சில வேளை எங்காவது உதைக்கலாம்....

தகவல் சுரஃங்கமே வாழ்க

அடடா.. குதிரை சிலைகள் நிற்கும் அமைப்பில் கூட இவ்ளோ அர்த்தங்களா...?

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி :-))

புதிய வித்தியாசமான தகவல்கள்! நன்றி!

VISA சொன்னது…

nalla thagaval

Unknown சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த விலங்கு...

Jiyath சொன்னது…

இவ்வளவு அர்த்தமா? ரொம்ப அருமையாக கூறினீர்கள்

Sivatharisan சொன்னது…

குதிரை சிலைகளில் இவ்வளவு பெரிய தகவல் உள்ளதை தங்கள் பதிவு முலம் அறிந்தேன் வியந்தேன்!
வாழ்த்துக்கள் நண்பா தேடல் தொடரட்டும்

sinmajan சொன்னது…

சங்கிலியன் சிலைக்குப் பின்னால் இப்படியோர் குறியீடும் உள்ளதோ..!!

Unknown சொன்னது…

மன்னருடன் இருந்தால் குதிரைக்கு கூட நூறு அர்த்தம் கிடைக்கும் போல....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top