சனி, 27 நவம்பர், 2010

கடவுள்களை தொலைத்து விட்டோம்.

பிற்பகல் 8:25 - By ம.தி.சுதா 96

நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்


நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை


இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.


இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே.*********************************


ஊரறிந்த ஒரு நாளில்
ஒரு தீபமேற்ற வழியில்லை
தெருவில் சிலர்
உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன்
பார்த்து நிற்கிறார்கள்.


நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன்


“அம்மா பெரியறை விளக்கை
நானே வைக்கிறேன்”


யாரோ என்றோ கண்டதாய்
சொன்ன கடவுளுக்கு
என்றும் தீபம் வைக்கிறோம்
 நேரில் கண்ட கடவுளர்க்காய்
ஒரு நாள் வைத்தாலென்ன...????


அம்மா வாயடைத்து நிற்கிறாள்.About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

96 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

அற்புதமான கவிதை!

nis சொன்னது…

:((((

வினோ சொன்னது…

:(

roshaniee சொன்னது…

''யாரோ என்றோ கண்டதாய்
சொன்ன கடவுளுக்கு
என்றும் தீபம் வைக்கிறோம்
நேரில் கண்ட கடவுளர்க்காய்
ஒரு நாள் வைத்தாலென்ன...????''
என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை
நாங்களும் வயடைத்துத் தான் நிற்கின்றோம்

இளங்கோ சொன்னது…

நல்லா இருக்குங்க நண்பரே.
//இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
அது உன்னை மட்டும் விழுங்கலியே.// இந்த வரிகள் அருமை.

Unknown சொன்னது…

:-(

ராஜகோபால் சொன்னது…

கவிதை நல்லாருக்கு நண்பா

உங்களை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்...

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/11/blog-post_27.html

arasan சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு..

சாமக்கோடங்கி சொன்னது…

//
குறிப்பு - தயவுசெய்து கருத்துக்களை நான் இருக்கும் இடம் அறிந்து பிரசவியுங்கள். //

இது பிடிக்கல..

நீங்க எங்க இருந்தா என்ன.. உங்கள் கருத்தைத் தடுக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை நண்பா.. தொடருங்கள்...

உங்கள் கவிதையின் ஆழம் என்னை பாதித்தது...
நன்றி..

Unknown சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் அருமை

வாழ்த்துக்கள்.

http://thagavalthulikal.blogspot.com/

எப்பூடி.. சொன்னது…

மனது கனக்கிறது நண்பா, வார்த்தைகளில் அவளவுதான் சொல்ல முடியும்.

KANA VARO சொன்னது…

சுடு சோறு புகழ் கவிஞர் மதி சுதாவுக்கு வாழ்த்துக்கள்.,

கவிதை சூப்பர் சார்.செம கோபம் போல கடவுள் மேல

ARV Loshan சொன்னது…

ம்ம். அனைவரதும் உணர்வுகள்..
பெருமூச்சு சூடாக வருகிறது..

Jana சொன்னது…

அதே..அதே..

Unknown சொன்னது…

//நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்//

இருந்தாலும், இறந்தாலும்
வீர வணக்கங்கள்..

கவி அழகன் சொன்னது…

நெஞ்சை தொட்ட கவிதை

Unknown சொன்னது…

தாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...

Ramesh சொன்னது…

மெளனித்து அஞ்சலிக்கிறேன் கவிதையுடன்
நாலாவது பந்தியை வெறுக்கிறேன்

Unknown சொன்னது…

அருமையான கவிதை.

என் தாயகமே "எனக்கு தா அகமே"

நன்றி

சகோதரா...
கவிதை படித்ததும் மனது வலித்தது.

//இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
அது உன்னை மட்டும் விழுங்கலியே.//
இந்த வரிகளுக்கு என்ன சொல்வது... மௌனமே வார்த்தைகளாய்..!

ம.தி.சுதா சொன்னது…

எஸ்.கே said...

/////அற்புதமான கவிதை////

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

எஸ்.கே said...

/////அற்புதமான கவிதை////

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

வினோ said...

வருகைக்கும் ரசித்தலுக்கும் மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

roshaniee said...

ஃஃஃஃஃஎன்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை
நாங்களும் வயடைத்துத் தான் நிற்கின்றோம்ஃஃஃஃஃ

நன்றி சகோதரி...

ம.தி.சுதா சொன்னது…

இளங்கோ said...

ஃஃஃஃநல்லா இருக்குங்க நண்பரே.
//இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
அது உன்னை மட்டும் விழுங்கலியே.// இந்த வரிகள் அருமைஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...

வருகைக்கும் ரசித்தலுக்கும் மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ராஜகோபால் said...

ஃஃஃஃஃகவிதை நல்லாருக்கு நண்பாஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்... விரைவில் வருகிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

அரசன் said...

ஃஃஃஃஃரொம்ப நல்லா இருக்கு.ஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

வெறும்பய said...

வருகைக்கும் ரசித்தலுக்கும் மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

சாமக்கோடங்கி said...

ஃஃஃஃஃஃஃ//
குறிப்பு - தயவுசெய்து கருத்துக்களை நான் இருக்கும் இடம் அறிந்து பிரசவியுங்கள். //

இது பிடிக்கல..

நீங்க எங்க இருந்தா என்ன.. உங்கள் கருத்தைத் தடுக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை நண்பா.. தொடருங்கள்...

உங்கள் கவிதையின் ஆழம் என்னை பாதித்தது...
நன்றி..ஃஃஃஃஃ

நாங்களும் சிலதை மறக்கத் தான் நினைக்கிறோம் சகோதரா ஆனால் ஆள் மனதில் சில அழுத்தங்கள் அழுத்திக் கொண்டே இருக்கிறது..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...

ஃஃஃஃஃஒவ்வொரு வரிகளும் அருமை

வாழ்த்துக்கள்.ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...

ஃஃஃஃஃஃஃமனது கனக்கிறது நண்பா, வார்த்தைகளில் அவளவுதான் சொல்ல முடியும்ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

KANA VARO said...

ஃஃஃஃஃஃசுடு சோறு புகழ் கவிஞர் மதி சுதாவுக்கு வாழ்த்துக்கள்.ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...

ஃஃஃஃஃஃஃகவிதை சூப்பர் சார்.செம கோபம் போல கடவுள் மேலஃஃஃஃ

சகோதரா என்னத்தை சொல்வதென்று தெரியவில்லை.... கடவுள் போருக்கு போகையில் வெற்றியுடன் திரும்புவார் என எல்லாருக்கும் தெரியும் ஆனால் இந்த கடவுள்கள்..

ம.தி.சுதா சொன்னது…

LOSHAN said...

ஃஃஃஃஃஃம்ம். அனைவரதும் உணர்வுகள்..
பெருமூச்சு சூடாக வருகிறது.ஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...

ஃஃஃஃஃஃ//நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்//

இருந்தாலும், இறந்தாலும்
வீர வணக்கங்கள்.ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...

ஃஃஃஃநெஞ்சை தொட்ட கவிதைஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் said...

ஃஃஃஃஃதாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்..ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

றமேஸ்-Ramesh said...

ஃஃஃஃமெளனித்து அஞ்சலிக்கிறேன் கவிதையுடன்
நாலாவது பந்தியை வெறுக்கிறேன்ஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்...
ஏன் சகோதரம் ஒருவர் அதையே அடிக்கோடிட்டிருக்கிறார் ஒருவர் அதை வெறுக்கிறார் மர்மமாயிருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ம.தி.சுதா சொன்னது…

விக்கி உலகம் said...

ஃஃஃஃஃஅருமையான கவிதை.

என் தாயகமே "எனக்கு தா அகமே"

நன்றிஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்....

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...

ஃஃஃஃஃஃசகோதரா...
கவிதை படித்ததும் மனது வலித்தது.

//இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
அது உன்னை மட்டும் விழுங்கலியே.//
இந்த வரிகளுக்கு என்ன சொல்வது... மௌனமே வார்த்தைகளாய்..!ஃஃஃஃஃஃ

மிக்க நன்றி சகோதரம்....

வைகை சொன்னது…

கடவுள் என்றும் மரிப்பதில்லை!!! அடுத்த அவதாரத்தின் ஆரம்பமே!!!

துமிழ் சொன்னது…

சாமக்கோடங்கி said...

ஃஃஃஃஃஃஃ//
குறிப்பு - தயவுசெய்து கருத்துக்களை நான் இருக்கும் இடம் அறிந்து பிரசவியுங்கள். //

இது பிடிக்கல..

நீங்க எங்க இருந்தா என்ன.. உங்கள் கருத்தைத் தடுக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை நண்பா.. தொடருங்கள்...

உங்கள் கவிதையின் ஆழம் என்னை பாதித்தது...
நன்றி..ஃஃஃஃஃ

நாங்களும் சிலதை மறக்கத் தான் நினைக்கிறோம் சகோதரா ஆனால் ஆள் மனதில் சில அழுத்தங்கள் அழுத்திக் கொண்டே இருக்கிறது.//

தமிழன் இவ்வளவு வெகுளியா இருக்கான்?

கவிதை சூப்பர்

ஷஹன்ஷா சொன்னது…

///யாரோ என்றோ கண்டதாய்
சொன்ன கடவுளுக்கு
என்றும் தீபம் வைக்கிறோம்
நேரில் கண்ட கடவுளர்க்காய்
ஒரு நாள் வைத்தாலென்ன...????////
mmmmm.....மௌனமாய் சில நிமிடங்கள்......ஆதங்கம் ஆதிக்கம் பெறும்.....

அண்ணா வணக்கதலத்தில் மணி ஓசை எழுப்ப தடை..பற்றி சொல்லலயே...மறந்துடீங்களா...??

தினேஷ்குமார் சொன்னது…

யாரோ என்றோ கண்டதாய்
சொன்ன கடவுளுக்கு
என்றும் தீபம் வைக்கிறோம்
நேரில் கண்ட கடவுளர்க்காய்
ஒரு நாள் வைத்தாலென்ன...????

நெஞ்சம் கணக்கத்தான் செய்கிறது உம்நிலை எமக்கு நண்பா பணிவுடன் கேட்டுக்கொண்டதால் ........

வீர வணக்கத்துடன் விடியல் தேடுகிறேன்

ஹேமா சொன்னது…

காலத்தையே வெல்வோம்.
காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம். தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் !

அன்பரசன் சொன்னது…

அருமை..

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல அருமையான கவிதை...வாழ்த்துகள் மதி

Harini Resh சொன்னது…

வார்த்தைகளால் "அருமை" என் கூறி செல்ல முடியாத கவி வரிகள் உண்மையில் வாயடைத்துப் போயிருக்கிறது

ச.சரவணன், சொன்னது…

நல்ல கவிதை..

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

தமிழ்மணத்தில் இந்த வாரம் உங்களுக்கு -வது இடம். வாழ்த்துக்கள்.

karthikkumar சொன்னது…

நல்லா இருக்கு பங்கு ஏற்கனவே படிச்சிட்டேன். பின்னூட்டம் போட முடியவில்லை.

VISA சொன்னது…

கவிதை

வலிகளாய் வரிகள்.

கவிதை சிந்திக்கத் தூண்டும் வகையில் சிறப்பாக உள்ளது நண்பரே . பகிர்வுக்கு நன்றி

மாணவன் சொன்னது…

//நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை//

அருமை...

வீரத் தமிழருக்கு(தலைவருக்கு) வீர வணக்கங்கள்...

வாழ்க நீ எம்மான்...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

balavasakan சொன்னது…

ம்.ம்.. இதயத்தின் கனம் வார்த்தைகளில் ஒலிக்கிறது,, என்ன செய்வது !!

பெயரில்லா சொன்னது…

இதுவரை வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்த நான் இப்போது பதிவராகவும் இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன். நடைபயில இல்லை இல்லை தவழ ஆரம்பித்திருக்கும் இந்த குழந்தையையும் வாக்களித்து பின்னூட்டமிட்டு கை தூக்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

Jiyath சொன்னது…

ரொம்ப புதுசாவும் இருக்கு! புதுமையும் தருது.

டாப் கவிதை,நின்னுட்டீங்க என் மனசுல,கொன்னுட்டீங்க படைப்புல

மிக,மிக அர்மையான கவிதை, ரசித்து அழகாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

suvanappiriyan சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் அருமை

வாழ்த்துக்கள்.

நிலாமதி சொன்னது…

உண்மைதான் அந்த நேரில் கண்ட கடவுளுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைக்கலாம்..மீண்டும் ஒளியாக பிரகாசிக்க வேண்டுமென்று .

உணவு உலகம் சொன்னது…

உள்ளத்து உணர்வுகள்.

Unknown சொன்னது…

நல் மனிதனாக நானும் அறிவேன், ஆயினும் கடவுளை விட அவன் மேலானவன்.கவிதை நன்று.

மாலதி சொன்னது…

சிறப்பான நறுக்கு வீரர்கள் மரித்துப் போவதிலை விளைவிக்கப் படுகிறார்கள் உங்களின் பூடகமான இந்த ஆக்காம் உண்மையில் பாராட்டுகளுக்கு உரியன நன்றி .

மனதின் வேதனை புரிகிறது சகோ .கவிதை என்பதும் சில சமையம் கடவுள் ஆகுதே!... துயர்கள் போக்குவதால் .நீங்கள் ஏற்ற நினைத்த ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில்
எரிகிறதே கவலை இனியும் வேண்டாம் சகோ .காலம் வரும் வரும்போது இந்தக் கண்ணீரும் தீரும் .நன்றி சகோ பகிர்வுக்கு .

ஹேமா சொன்னது…

மனதோடு வாழும் தெய்வங்கள்.வணங்குவோம் !

பி.அமல்ராஜ் சொன்னது…

ம்ம்ம்... எதுவும் சொல்ல முடியவில்லை அண்ணா... கவிதை “அந்த” துயரை நன்றாக பகிர்கிறது அண்ணா..

கீதமஞ்சரி சொன்னது…

மனங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மாபெரும் மனித தெய்வங்களுக்கு மகத்தான அஞ்சலி.

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்

வலிப்போக்கன் சொன்னது…

இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.---கேட்டது கிடைக்காதனால் சமூகச் சொல்லை .எனக்கொரு சந்தேகம் வந்திருச்சுங்க!

சுதா SJ சொன்னது…

வலிபொதிந்த கவிதை.... வேறு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை... மற்ற பதிவொன்றில் சந்திப்போம் அண்ணா...

Unknown சொன்னது…

மனிதர்களுக்குத்தான் மரணங்கள்
மகா..ஆத்மாக்களுக்கல்ல...
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
இறக்கவில்லை சகோதரா...
என்னில்...உன்னில்
வாழுகிறார் தீபமாக...

ஆகுலன் சொன்னது…

மனதில் நிற்கும் வரிகள்.....

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
புதைந்து போன மௌனங்கள் இங்கே வார்த்தை வடிவில்!

என்ன சொல்ல?

கண்ணீர் தானே இப்போது மிச்சம்!

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை!

அம்பலத்தார் சொன்னது…

வணக்கம் மதி, சோகத்தில் பெரிய சோகம் அதனை வெளிக்காட்டமுடியாது மனதினில் வைத்து அடக்கிக்கொள்வது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எப்படிச்சொல்லுவது புரியாமல் தவிக்கிறோம்.

அம்பலத்தார் சொன்னது…

எம்மை நாமே புரிந்துகொள்வதற்குள் காலம் கடந்துவிடுமோ என்றும் பயமாக இருக்கிறது.

எஸ் சக்திவேல் சொன்னது…

ரொம்ப நொந்துதான் போயுள்ளோம்.

விச்சு சொன்னது…

வெளியே சொல்ல முடியாத சில அர்த்தம் பொதிந்த மனக்குமுறல்களை நயம்படச் சொல்லியுள்ளீர்கள்.

//யாரோ என்றோ கண்டதாய்
சொன்ன கடவுளுக்கு
என்றும் தீபம் வைக்கிறோம்
நேரில் கண்ட கடவுளர்க்காய்
ஒரு நாள் வைத்தாலென்ன...????//
mm.

சத்ரியன் சொன்னது…

மதி,

’ஒளி’மிகு கவிதை.

உணர்வுகளைப் பகிர்ந்துக்கொள்ள கூட எல்லைகளை கவனத்தில் கொள்ள வேண்டிய நிலை.

நிலை மாறும்.

"இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே."
அருமையான வரிகள் நண்பரே!
நம்ம தளத்தில்:

"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

sakthi சொன்னது…

அருமை நண்பரே
நட்புடன்
கோவை சக்தி

vimalanperali சொன்னது…

நல்லபதிவு .வாழ்த்துக்கள்.

Gobinath சொன்னது…

எம் கடவுள்கள் இன்றும் எம்முள்ளே வாழ்கிறார்கள். அருமையான படைப்பு அண்ணா.

ReeR சொன்னது…

நல்ல பதிவு & தேடல் ...

நன்றி.

www.padugai.com

Thanks

Sivamjothi சொன்னது…


வணக்கம்

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

Unknown சொன்னது…

என்ன செய்ய?மூடர் கூட்டத்துக்கு சொல்லிப் புரியாது!சொல்ல வேண்டிய முறையைக் கற்றுக் கொடுத்தவர் வருவார்,வழி மேல் விழி வைத்து...........

Unknown சொன்னது…

ஒரு விளக்கு எதற்கு, ஒரே கவிதையில் ஆயிரம் விளக்கு எரிகிறதே...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top