சனி, 13 நவம்பர், 2010

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???

பிற்பகல் 9:23 - By ம.தி.சுதா 62

          இந்தப் பரந்த உலகத்தினில் எமக்குத் தெரியாமல் எத்தனை விசயம் பரந்து கிடக்கிறது. எப்போதோ ஒரு நாள் ஒரு நண்பன் கேட்டான் வாழைப்பழத்தில் கதிர்வீச்சு (radiation) இருக்குதாமே உனக்குத் தெரியுமா தெரிந்தால் எழுதேன்என்றான். ஆனால் எனக்கும் அவன் நிலமை தான் இப்படிக் கேட்ட விசயமே தவிர பெரிதாய் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் எப்படி எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன் (விஞ்ஞானியே பரிசோதனை முடித்து விட்டீரா..?? முடிவை காட்டென்றால் நான் என்ன செய்ய). ஆனால் கொஞ்சமாய் தெரிந்ததை சொல்லுறேனுங்க.......
         பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒரு கிலோகிராம் வாழைப்பழத்தில் 3520 பிகோகியுறிஸ் (3520 picocuries per kg) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கிறது. இது பாலில் ஒரு லிற்றருக்கு 20 பிகோகியுறிஸ்  (20 picocuries/liter) என்ற அளவில் இருக்கிறது.
அவரை
       வாழைப்பழத்தை விட அவரை, சூரியகாந்தி விதை, சோளம் போன்றவற்றிலும் காணப்படுகிறது. முக்கியமாக பிறேசில் கச்சானில் 12,000 picocuries per kg என்ற அளவில் இருக்கிறது.
brazil nuts
          என்னடா இவன் இப்படி வெருட்டிவிட்டுப் போகிறானே இதை இனி சாப்பிடக் கூடாதா என நினைக்காதிங்க இதை விட பன்மடங்கு கதிர்வீச்சுக் கூடிய சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நகரத்தை அக்கிரமித்திருக்கும் தொலைத்தொடர்பு கோபுரங்களே பலமடங்கு கதிரை வெளிவிடக் கூடியது. அவற்றுடன் ஒப்பிடும் போது இவை எல்லாம் சாதாரணம் தான்.
              சரி தானே என்று நான் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டால் முண்டியடித்துக் கொண்டு வந்தடுவாங்கப்பா அதால தான் கீழே ஒரு காணொளி கொடத்திருக்கிறென் அதிலே பார்த்தால் இதன் ஆதாரம் தெரியும். இதில் நடக்கும் சம்பவத்திற்கு இரண்டு பொருட்களிடையேயும் இருக்கும் கதிர்விச்சு காரணமாக இருக்கலாம்.
              இது வரை நாளும் வன்னிக் கண்டுபிடிப்புக்களை எழுதிக் கொண்டிருந்தவன் நீண்ட நாளாக ஒரு கண்டுபிடிப்புமே எழுதவில்லை. அத்துடன் அறிவியலை அதிகமாக விரும்பும் நான் பல காலமாக அறிவியல் பதிவு ஒன்றுமே எழுதவில்லை என்றொரு குறையும் இருக்கிறது சரி இதை பதிவாக்குவோம் என நினைத்தேன் போடுகிறேன். இது சம்பந்தமான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
 

              எங்க ஊர் கோயிலில் நாலு முள வேட்டியுடன் ஒய்யாரமாய் போன என்னை அம்புட்டு பொம்புளையளுக்கு நடுவில வழுக்கிவிழ வைத்த வாழைப்பத்திற்கு (இல்லை தோலுக்கு) ஆப்பு வைத்த எனக்கு ஒரு வாக்கு வைக்க முடியுமா..???

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

62 கருத்துகள்:

ஜெரின் சொன்னது…

உங்களுடைய பதிவை படித்த பின்பு தான் வாழை பழத்தில் இவ்வளவு சமாச்சாரம் இருப்பது தெரிய வருகிறது....

மீண்டும் கலக்குங்க!!!

வாழ்த்துக்கள்...

Admin சொன்னது…

ஆச்சரியமதான் விடயந்தான்!!!!!!!!! யாராவது திரும்ப வாழைப்பழத்தில இருந்து கரண்ட் எடுக்க கிளம்ப போறானுவள் ;))))

கவி அழகன் சொன்னது…

என்கயடாப்பா இந்த தகவல்களை தேடி பிடிக்கிறாய் தேடலுக்கு வாழ்த்துக்கள்

nis சொன்னது…

//எங்க ஊர் கோயிலில் நாலு முள வேட்டியுடன் ஒய்யாரமாய் போன என்னை அம்புட்டு பொம்புளையளுக்கு நடுவில வழுக்கிவிழ வைத்த வாழைப்பத்திற்கு (இல்லை தோலுக்கு) ஆப்பு வைத்த எனக்கு//hahaha


வாழைப்பழத்தில் கதிர்வீச்சு இருக்கிறதா
என்ன சுதா புதுசா பீதியை கிழப்புறீங்க.
சாப்பிடாட்டி stomach problem ஆகிவிடுமே ;;))

Jana சொன்னது…

கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமடிக்கு பின்னர். வாழைப்பழம் பற்றி ஒரு சீரியசான விடயம்...வாழைப்பழத்தை நினைக்க வைத்துள்ளது.

Unknown சொன்னது…

அருமயான ஆப்பு பதிவு சூப்பர்
வாக்கும் போட்டாச்சு

Unknown சொன்னது…

புதுசா இருக்கு! வாழ்த்துக்கள்! :)

எப்பூடி.. சொன்னது…

புதிய தகவல், முயற்ச்சித்து பார்க்க வேண்டியதுதான்; பகிவிர்க்கு நன்றி.

புதுமையான தகவல்... ஆச்சரியப்பட்டேன்.

//எங்க ஊர் கோயிலில் நாலு முள வேட்டியுடன் ஒய்யாரமாய் போன என்னை அம்புட்டு பொம்புளையளுக்கு நடுவில வழுக்கிவிழ வைத்த வாழைப்பத்திற்கு (இல்லை தோலுக்கு) ஆப்பு வைத்த எனக்கு ஒரு வாக்கு வைக்க முடியுமா..???//

இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஓட்டுப் போட்டாச்சு.

Amudhavan சொன்னது…

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்..இதுபோல் இன்னமும் நிறைய எழுதுங்கள்.

ஷஹன்ஷா சொன்னது…

ஒரு வாழைகுள்ளே இவ்வளவு விசயமா?...
சொல்லிடிங்களே இனி வாழை விலை எகிறும்.....!

அன்பரசன் சொன்னது…

ஆச்சரியமான விசயம்

இளங்கோ சொன்னது…

புதிய தகவல்... நன்றி.

ஹேமா சொன்னது…

அதிசயமாயிருக்கு சுதா !

விஷாலி சொன்னது…

உங்கள் தளத்தில் உள்ள உங்க கருவில் வளராத அறிவில் வளர்ந்த பதிவுகளுக்கு என்னுடைய வாக்கை அளித்துவிட்டேன் நண்பரே.

நன்றி

ஹரிஸ் Harish சொன்னது…

புதிய தகவல்...தொடருங்கள்..

டிலீப் சொன்னது…

அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்

vimalanperali சொன்னது…

நல்ல தகவலாக இருக்கிறது நண்பரே.

உங்கள் தளத்தில் என்னையும் நனைய விட்டதற்கு நன்றி சகோதரா...

மு.லிங்கம் சொன்னது…

என்ன தம்பி சுதா! எல்லாம் போய் இப்போ வாழைப் பழத்திலை கை வைச்சிட்டீங்க..உங்க ஆராட்சிக்கு உதுதான் கிடைச்சுதா?
சத்தியமா சொல்றன் நான் வாழைப்பழம் சாப்பிடுவதில்லை, அதிலை வெறுப்பும் அதிகம். காரனம் மட்டும் கேட்காதீங்க.. பதிவை பார்த்திட்டு சில சகோதரிகள் கோபமாகவும் இருக்கிறாங்க...வேண்ணாமப்பா வம்பு...

நல்ல தகவல்

Jiyath சொன்னது…

வித்தியாசமான சிந்தனை

karthikkumar சொன்னது…

தாமத்திற்கு மன்னிக்கவும் தோழா நல்ல தகவல் செல் போனில்தான் இத்தகைய கதிர்வீச்சு இருக்கும் என்று நினைத்தேன் வாழை பழத்திலுமா?

ம.தி.சுதா சொன்னது…

ஜெரின் said...
/////உங்களுடைய பதிவை படித்த பின்பு தான் வாழை பழத்தில் இவ்வளவு சமாச்சாரம் இருப்பது தெரிய வருகிறது..../////
அப்படியா சகோதரா மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

சர்ஹூன் said...
ஃஃஃஃஃஃஆச்சரியமதான் விடயந்தான்!!!!!!!!! யாராவது திரும்ப வாழைப்பழத்தில இருந்து கரண்ட் எடுக்க கிளம்ப போறானுவள் ;))))ஃஃஃஃஃ
கட்டாயம் முயற்சித்தால் எதுவும் முடியும்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
ஃஃஃஃஃஃஎன்கயடாப்பா இந்த தகவல்களை தேடி பிடிக்கிறாய் தேடலுக்கு வாழ்த்துக்கள்ஃஃஃஃ
நன்றி அண்ணா..
எல்லாம் தேடல் தான்....

ம.தி.சுதா சொன்னது…

nis said...
ஃஃஃஃஃஃவாழைப்பழத்தில் கதிர்வீச்சு இருக்கிறதா
என்ன சுதா புதுசா பீதியை கிழப்புறீங்க.
சாப்பிடாட்டி stomach problem ஆகிவிடுமே ;;))ஃஃஃஃஃ
நல்லத கெட்டது ரெண்டும் கலந்தது தான் உலகம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமல்லவா...
நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Jana said...
ஃஃஃஃஃஃகவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமடிக்கு பின்னர். வாழைப்பழம் பற்றி ஒரு சீரியசான விடயம்...வாழைப்பழத்தை நினைக்க வைத்துள்ளது.ஃஃஃஃ
இதற்காகத் தான் வழையடி வாழை என்று சொன்னாங்களோ...
நன்றி அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஅருமயான ஆப்பு பதிவு சூப்பர்
வாக்கும் போட்டாச்சுஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

ஜீ... said...
ஃஃஃஃஃஃபுதுசா இருக்கு! வாழ்த்துக்கள்! :)ஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
ஃஃஃஃஃபுதிய தகவல், முயற்ச்சித்து பார்க்க வேண்டியதுதான்; பகிவிர்க்கு நன்றி.ஃஃஃஃஃ
கட்டாயம் செய்யுங்க முடிந்தவுடன் வாழைப்பழத்தை இங்க அனுப்பங்க...
மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
ஃஃஃஃஃஃபுதுமையான தகவல்... ஆச்சரியப்பட்டேன்.
//எங்க ஊர் கோயிலில் நாலு முள வேட்டியுடன் ஒய்யாரமாய் போன என்னை அம்புட்டு பொம்புளையளுக்கு நடுவில வழுக்கிவிழ வைத்த வாழைப்பத்திற்கு (இல்லை தோலுக்கு) ஆப்பு வைத்த எனக்கு ஒரு வாக்கு வைக்க முடியுமா..???//

இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஓட்டுப் போட்டாச்சு.ஃஃஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

Amudhavan said...
ஃஃஃஃஃஃநல்ல பதிவு. வாழ்த்துக்கள்..இதுபோல் இன்னமும் நிறைய எழுதுங்கள்.ஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்...
கட்டாயம் முயற்சிக்கிறேன்..

ம.தி.சுதா சொன்னது…

ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...
ஃஃஃஃஃஒரு வாழைகுள்ளே இவ்வளவு விசயமா?...
சொல்லிடிங்களே இனி வாழை விலை எகிறும்.....!ஃஃஃஃ
தம்பி சோளத்திற்கும் தான்...
வருகைக்கு மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

அன்பரசன் said...
ஃஃஃஃஆச்சரியமான விசயம்ஃஃஃஃ
ஆமாம் சகோதரம் வருகைக்கு மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

இளங்கோ said...
ஃஃஃஃஃபுதிய தகவல்... நன்றி.ஃஃஃஃ
ஆமாம் சகோதரம் வருகைக்கு மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

ஹேமா said...
ஃஃஃஃஃஅதிசயமாயிருக்கு சுதா !ஃஃஃஃஃ
ஆமாம் அக்கா இப்படி எத்தனை எமக்குத் தெரியாமல் இருக்கிறதோ... வருகைக்கு மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

மனசாட்சியே நண்பன் said...
ஃஃஃஃஃஃஉங்கள் தளத்தில் உள்ள உங்க கருவில் வளராத அறிவில் வளர்ந்த பதிவுகளுக்கு என்னுடைய வாக்கை அளித்துவிட்டேன் நண்பரே.

நன்றிஃஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

ஹரிஸ் said...
ஃஃஃஃஃபுதிய தகவல்...தொடருங்கள்.ஃஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

டிலீப் said...
ஃஃஃஃஃஅருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்ஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

விமலன் said...
ஃஃஃஃஃநல்ல தகவலாக இருக்கிறது நண்பரேஃஃஃஃ
மிக்க நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

சே.குமார் said...
ஃஃஃஃஃஃஉங்கள் தளத்தில் என்னையும் நனைய விட்டதற்கு நன்றி சகோதரா...ஃஃஃஃ
என்நன்றி கொன்றார்க்கும்.. குறள் தெரியும் தானே சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

mainthan said...
ஃஃஃஃஃஃஎன்ன தம்பி சுதா! எல்லாம் போய் இப்போ வாழைப் பழத்திலை கை வைச்சிட்டீங்க..உங்க ஆராட்சிக்கு உதுதான் கிடைச்சுதா?
சத்தியமா சொல்றன் நான் வாழைப்பழம் சாப்பிடுவதில்லை, அதிலை வெறுப்பும் அதிகம். காரனம் மட்டும் கேட்காதீங்க.. பதிவை பார்த்திட்டு சில சகோதரிகள் கோபமாகவும் இருக்கிறாங்க...வேண்ணாமப்பா வம்பு...ஃஃஃஃஃஃ
யாரண்ணா அது... உண்மைகள் சில வேளை அப்படித் தான்...
வருகைக்கம் கருத்திற்கும் நன்றி அண்ணா..

ம.தி.சுதா சொன்னது…

பயணமும் எண்ணங்களும் said...
ஃஃஃஃஃநல்ல தகவல்ஃஃஃஃஃ
வருகைக்கம் கருத்திற்கும் நன்றி சகோதரம்..

ம.தி.சுதா சொன்னது…

Jiyath ahamed said...
ஃஃஃஃஃவித்தியாசமான சிந்தனைஃஃஃஃ
நன்றி தம்பி.. அதெல்லாம் சரி புளோக் வாசிக்கிறதை குறைச்சிட்டு படியுங்க அப்பறமா இதைப் படிக்கலாம்...

ம.தி.சுதா சொன்னது…

karthikkumar said...
ஃஃஃஃஃஃதாமத்திற்கு மன்னிக்கவும் தோழா நல்ல தகவல் செல் போனில்தான் இத்தகைய கதிர்வீச்சு இருக்கும் என்று நினைத்தேன் வாழை பழத்திலுமா?ஃஃஃஃ
இதற்கெல்லாம் ஒரு மன்னிப்பா.. நான் எத்தனை பேரிடம் கேட்க வேண்டி வரப்போகிறது.... இந்த வாரம் நேரமே கிடைக்கல..
நன்றி சகோதரம்...

sinmajan சொன்னது…

வாழைப்பழத்திற்கு ஆப்படிக்கும் உங்கள் முயற்சியை மிக மென்மையாகக் கண்டிக்கிறேன்.. ;)

முற்றிலும் தெரியாத தகவல்..

பகிர்வுக்கு நன்றிங்க.. :-))

அந்த வீடியோ பார்த்தேன்.. அவ்ளோ கதிர் வீச்சா? ஹ்ம்ம்

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நல்ல சாப்பட்டு தகவல்...வாழ்த்துகள்

ஆர்வா சொன்னது…

என்னங்க இது ஆச்சர்யமா இருக்கு.. உங்களுக்கு கிட்னி ரொம்ப ஜாஸ்திங்கோ

தம்பி புதிய தகவல் அறிந்துள்ளேன் உங்களிடம் ..வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

எங்க நண்பா பல நாளா காணோம் ??
நிறய வாசகர்கள் உங்கள் வாசலில் காத்துக்கிடக்கின்றார்கள்.

ஜிஎஸ்ஆர் சொன்னது…

புதுமையான தகவல் இது போல் இன்னும் சிறப்பான தகவல்களை எங்களுக்கு வழங்குங்கள் உங்களுக்கும் இருக்கும் அறிவியலை என்னைப்போன்ற சாதரணா மக்களுக்கும் புரிந்துகொள்ளும் வகையில் நிறைய எழுதுங்கள்

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

NaSo சொன்னது…

வாழை பழத்தில் கதிர் வீச்சு இருப்பதை கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால் அது இவ்வளவு இருக்குமென்று இப்போது தான் தெரிந்து கொண்டேன். அரிய தகவலுக்கு நன்றி நண்பா.

vanathy சொன்னது…

வாழைப்பழத்தில் இவ்வளவு இருக்கோ??

மணிபாரதி சொன்னது…

Submit your blog/site here www.ellameytamil.com

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

நண்பரே உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.பார்க்க....ரஜினி நடிப்பில் எனக்கு பிடித்த 10 படங்கள்

வாழைப்பளத்திலும் இப்படி செய்யலாமா?

புதிய தகவல்..

Suresh சொன்னது…

ஆம்லேட் போட முடியுமா...

இந்த பதிவில் தொடங்கி எல்லாமே பொய் பதிவா இருக்கே...
டுபாகூர்.பிளாக்ஸ்பாட்.காம்
பெயரை மாத்துங்க....

Kiruthigan சொன்னது…

aahaa
அருமையான பதிவு பதிவரே...
முடியுமானவன் முடிக்கிறான் முடியாதவன் முக்குகிறான்...
ஆம்லட் போடுவதும் ஆகாயத்தில் பறப்பதும் அவரவர் ஆசைகளென்றாலும் அவையே அவர்களின் மனநிலையை சொல்லும்.
ஆதாரத்துடன் தகவல்கள் அருமை

Unknown சொன்னது…

அறிந்திராத தகவலை அறியப்படுத்தியமைக்கு சுதாவுக்கு பாராட்டுக்கள்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top