புதன், 3 நவம்பர், 2010

கிரிக்கேட்டில் கிப்சும்.. சிலாகிக்கப்படும் புத்தகமும்..

பிற்பகல் 5:08 - By ம.தி.சுதா 33

             ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணியின் தூண் போல் நின்றவர்களில் ஒருவர் தான் இந்த கெர்சல் கிப்ஸ் (hersels gibbs) ஆவார். இவர்  கேறிகிருஸ்டனுடன் களம் புகுந்தால் மைதானமே ஒரு அல்லோகல்லோலப்படும். அவுஸ்திரேலியாவுக்கு தென்னாபிரிக்கா பதிலடி கொடுத்த போட்டியை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். கிளேன் மெக்ராத் ஒய்வால் சந்தோசப்பட்டவர்களில் இவரும் ஒருவர் தான் காரணம் பல தடவை  காலால் மறைத்த குற்றத்திற்காய் இவர் களம் விலகியிருக்கிறார்.
         
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அது தான் அவரை விமர்சிப்பதற்க காரணமாக இருந்தது. அவரின் துடுப்பிற்கு எப்போதும் அடிமையாக இருந்த எனக்கு அவரை எப்போதோ எனக்கு பிடிக்காமல் விட்டவிட்டது (வேறென்ன லஞ்சம் வாங்கிய பிரச்சனை தான் கீழே கறிப்பிட்டள்ளென்). அப்புத்தகத்தில்  சில தென்னாபிரிக்கா வீரர்களை கடுமையாகச் சாடியிருந்தார். முக்கியமாக ஸ்மித், கலிஸ், பொளசர், ஏபிடி வில்லியர்ஸ் போன்றோரைத் தான் அவர் குறிப்பிட்டிருந்தர்.
கிப்ஸ் ன் கோரத் தாண்டவம் ஒன்று (ஒரே பந்தப்பரிமாற்றத்தில் ஆறுக்கு ஆறு)

         
அவர்களின் ஆதிக்கம் அணியில் மேலோங்கி இருப்பதுடன் அணியை தம் முழுக் கட்டப்பாட்டில் வைத்திருக்கிறார்களாம். அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளடனான சுற்றலாவின் போது வீரர்கள் கட்டப்பாடின்றித் திரிந்ததாகவும் கூறுகிறார்.

        இது எந்தளவிற்கு உண்மை என்று அவர் உணர்ந்து தான் எழுதினாரோ தெரியவில்லை. சிலவேளை உண்மையாகவும் இருக்கலாம் ஆனால் அவர் குறிப்பிட்டுள்ள சில எடுத்துக்காட்டுகள் தான் இவர் ஏதோ ஒரு விடயத்தை சாதிப்பதற்காகத் தான் கூறுகிறார் என்பதை புலப்படுத்தகிறது.

        கென்சி குறோஞ்சி இருக்கும் போது இருந்த அணிக்கட்டுமானம் பொலக்கால் கூட தக்க வைக்க முடியவில்லை என்றும் அதன் பின் வந்தவரில் ஸ்மித் அணியை பிளவுபடுத்தப் போகிறார் என்றும் குறிப்பிட்டள்ளார். இது எந்தளவுக்கு உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியும். கென்சி குறோஞ்சி சம்மந்தமாக அவர் சொல்வது உண்மை தான் அதற்காக பொலக்கை எப்படிக் குற்றம் சொல்ல முடியும். இந்த அணி ஒரு ராசியற்ற அணி என்பது உலகிற்கே தெரியும். இவர் குறிப்பிடும் வீரர்கள் தனிப்பட்ட ரீதியில் எப்படியோ தெரியாது அனால் சர்வதேச ரீதியில் மிக கட்டுப்பாடான வீரர்களாவர்.

        இவர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. சிலவேளை இப்படியிருக்கலாம் இவர்கள் கிப்ஸை விட வர்த்தக ரீதியான போட்டியில் பிரகாசிப்பவர்கள். அந்த எரிச்சலாக இருக்கலாம். அல்லது சில தருணங்களில் இவரின் அணி மீள் வருகைக்கு இவர்கள் தடையாக இருந்திருக்கலாம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

         சரி அது அவர்கள் பிரச்சனை என்றால் இந்த மனிதன் ஒரு ஒழுங்கானவரா என்றால் இல்லை என்றே சொல்வேன். கிப்ஸ் ம்ள வரப்போகிறார் எனச் சொன்ன போது எனக்குள் ஒரு சின்ன சந்தோசம் இருந்தது என்ன தெரியுமா அப்போது தான் நான் கலர் ரிவியில் போட்டி பார்வையிட ஆரம்பித்த காலம் (அது வரை எனக்கு கறுப்ப வெள்ளை போட்டிகள் தான்) ஆனால் ஒரு பெரிய ஆதங்கம் இந்த இடம் கென்சி குரோஞ்சிக்கு கிடைத்திருக்கலாமே என்பது தான். அவர் தப்பிழைத்தவர் தான் ஆனால் இவர் போல் கேவலம் கெட்டவிதமாகச் செய்யவில்லை. தப்புச் செய்தாலும் தப்பில்லாமல் செய்யணும் என்று சொல்வார்கள். இவர் அப்படியா..? இல்லையே இந்திய அணிக்கெதிரான போட்டியில் 25 ஓட்டத்திற்கு மேல் பெறமாட்டேன் என்று தான் ஒப்பந்தம் பேசிவிட்டு ஒரு போட்டியில் மட்டுமே காப்பாற்றினார்.

கீழே உள்ளதைப் பாருங்கள்

1 st (KOCHI) india win by 3 wkts

(111) runs  (127) balls  (11) 4’s,  (2) 6’s

2 nd (JAMSEDPUR) india win by 6 wkts

(27) runs  (28) balls  (4) 4’s,

3 rd (FARIDABATH)  south Africa win by 2 wkts

 (19) runs  (29) balls  (2) 4’s,

4 th (VADORA) india win by 4 wkts

(37) runs  (31) balls (5) 4’s

5 st (NAGPUR) south Africa win by 10 runs

(74) runs  (53) balls (13) 4’s, (1) 6’s

         பாவம் மனுசன் இரண்டு போட்டியில் தானே பெரியளவில் செய்தார் என்றால் அதை விட கொடுமை தெரியுமா. ஒப்பந்தம் செய்து விட்டு முதல் போட்டியிலெயெ சதத்தை அடித்தால் எப்படி இருக்கம்.

         சில வெளை இவர் கென்சி குரோஞ்சியை புகழ இன்னமொருகாரணமிருக்கலாம் அவர் திறமையின் உச்சத்தை முழுவதும் காட்டிய காலப்பகுதி அவரது தலமைக் காலம் தான். என்ன இருந்தாலும் தன் அணியை அல்லது வீரர்களை விமர்சிப்பது தன் நாட்டையே அவமதிப்பதற்குச் சமனாகும். அதே புத்தகத்தை ஒரு பாகிஸ்தானியர் எழுதியிருந்தால் அரசாங்கமே சுட்டு விட்டு ஒரு தீவிரவாதக் கும்பலின் பெயரைக் குறிப்பிட்டிருக்கம்.

          மொத்தத்தில் இவர் சுயசரிதை அவருக்கே ஒரு அபசரிதையாகப் போகிறது. நான் யாருக்குமே அப்பு வைக்கல அதால நீங்கள் ஒரு வாக்கு வைத்துப் போகலாமல்லவா..!!!

(கிப்ஸ் ரசிகர்கள் யாராவது பார்த்தால் மன்னித்துக் கொள்ளவும்)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

33 கருத்துகள்:

roshaniee சொன்னது…

பகிர்விற்கு நன்றி

Unknown சொன்னது…

அருமையான அலசல் பதிவு
நன்றி

நேரமிருந்தால் வருகை தரவும்

http://vikkiulagam.blogspot.com/

Ravi kumar Karunanithi சொன்னது…

aen ivaruku indha velai.... olunga avaroda work'a parka vendiyadhu dhana....

பெயரில்லா சொன்னது…

சரி அது அவர்கள் பிரச்சனை என்றால் இந்த மனிதன் ஒரு ஒழுங்கானவரா என்றால் இல்லை என்றே சொல்வேன்.//
அவ்ளோ பெரிய டகால்டியா இந்தாளு

பெயரில்லா சொன்னது…

ரொம்ப தூரமெல்லாம் போய் தப்பு கண்டு பிடிக்கிறியே மக்கா

பெயரில்லா சொன்னது…

ரொம்ப தூரமெல்லாம் போய் தப்பு கண்டு பிடிக்கிறியே மக்கா

எப்பூடி.. சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த தென்னாபிரிக்கவீரர் ஸ்மித்தான், ஆனால் ஸ்மித்தும் டீ வில்லியசும்தான் இன்றைய தென்னாபிரிக்காவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அதற்க்கு கிப்ஸ் கூறிய காரணங்கள் உண்மையானவையே. இதனால்தால் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித்தின் தலைமைத்துவம் மைதானத்த்துக்குள் இருப்பதுபோல அணித்தெரிவிலோ, புற நடத்தைகளிலோ சிறப்பாக இருப்பதில்லை. குளூஸ்னர், பவுச்சர், கலிஸ், கிப்ஸ் என பலரும் ஸ்மித்தால் பாதிக்கப்படதால் இழப்பு அவர்களைவிட தென்னாபிரிக்காவிற்குத்தான்.

இன்றைய தென்னாபிரிக்க அணி அன்றைய அணிபோல டொமிநேட்பண்ணி ஆடும் நிலையில் இல்லை. அன்றைய நாள் நன்றாக இருந்தால் சிறப்பாக ஆடும் நிலையில்தான் உள்ளது. இதற்க்கு ஸ்மித்தின் சிலபல முடிவுகள்தான் காரணம்.

மோகன்ஜி சொன்னது…

பொறுமையா அலசி இருக்கீங்க ! ஏனோ வர வர கிரிக்கெட் ரொம்ப அலுத்து போச்சு! பாரப்பதில்லை இப்போதெல்லாம்

ARV Loshan சொன்னது…

என்னால் நீங்கள் சொன்ன முழுமையான விடயங்களையும் ஏற்க முடியவில்லை.

கிப்ஸ் சொல்வதில் பல உண்மைகள் இருக்கலாம்,
ஸ்மித் பல மூத்த வீரர்களைத் தள்ளி வைத்தார் என்பதும் டீ வில்லியர்சுக்கு அதிக அதிகாரம் கொடுத்ததும் பல சிரேஷ்ட வீரர்களை ஒதுக்கியதும் கண்கூடு.

ந்டினியின் ஒதுக்கலுக்கும் பின் ஓய்வுக்கும் இந்த கிளிக் தான் காரணமா தெரியாது...

என்னமோ நடக்கட்டும்..

எல்லாம் பின் வெளியாகும்.

ம.தி.சுதா சொன்னது…

roshaniee said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி்...
!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
விக்கி உலகம் said...
நன்றி சகோதரா... நிச்சயம் வருகிறேன்....
!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
Dhosai said...
நன்றி சகோதரம்.... என்னமோ தெரியல பண்ணறாங்கள் ... நடக்கட்டும்..

!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
வெறும்பய said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃஃஃஃஃசரி அது அவர்கள் பிரச்சனை என்றால் இந்த மனிதன் ஒரு ஒழுங்கானவரா என்றால் இல்லை என்றே சொல்வேன்.//
அவ்ளோ பெரிய டகால்டியா இந்தாளு ஃஃஃஃஃ
ஆமாங்க தப்பச் செய்தாலும் தப்பில்லாமல் செய்யணும்...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃஃஃஃஃரொம்ப தூரமெல்லாம் போய் தப்பு கண்டு பிடிக்கிறியே மக்கா ...ஃஃஃஃ
இவர்கள் எல்லாம் என் அபிமானமானவர்கள்... அந்த உரிமையில் தான் இப்புபுபுபுடீடீடீடீ
!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
மோகன்ஜி said...
ஃஃஃஃஃபொறுமையா அலசி இருக்கீங்க ! ஏனோ வர வர கிரிக்கெட் ரொம்ப அலுத்து போச்சு! பாரப்பதில்லை இப்போதெல்லாம் ஃஃஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
நம்மளுக்கு அது தானே உயிர்...
!!!!...!!!!....!!!!...!!!!....!!!!...!!!!
அன்பரசன் said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

எப்பூடி.. said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
கிப்ஸ் உடைய அந்த அவுஸ்திரேலியாவுக்க எதிரான போட்டியை திரும்பத் திரும்ப அலுக்கும் வரை பார்த்திருக்கிறேன்... ஏன் அவர் பொலக் போன்ற மற்றைய வீரர்களை வம்புக்கிழுக்கிறார் என்பது தான் எனக்குப் புரியவில்லை...

sinmajan சொன்னது…

எனக்கு தென்னாபிரிக்க அணியின் பரிதாபம் மீதான அனுதாபம் இன்றும் இருக்கிறது .. மற்றும்படி கிப்ஸ் கூறுவது முழுவதுமே பொய்யாக இருக்காது போலத் தான் தோன்றுகிறது ,,

ம.தி.சுதா சொன்னது…

LOSHAN said...
அண்ணா தங்களின் தொடர் வருகைக்க மிக்க நன்றி...
ஸ்மித் பற்றி நீங்கள் சொல்வது சரிதான்... இவர் மற்றவர்களையும் வம்புக்கிழுப்பது தான் எனக்கான நெருடல்... அத்துடன் லஞ்சம் வாங்கியது குற்றமே தான் ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் இன்னும் குற்றமானதல்லவா..???

கிப்ஸ் ஒரு தேர்ந்த ஆட்டக்காரர்தான்... ஆட்டம் தராத புகழை விமரிசனம் தரும் என நினைத்தாரோ என்னவோ???

கவி அழகன் சொன்னது…

எனக்கு பிடிச்சிருக்கு


என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் சொன்னது…

மட்டைப்பந்து வீரர்கள் எல்லா நாட்டிலுமே விமர்ச்சனத்துக்கு உள்ளானவர்களே.

வீரர்களில் யார் சுயசரிதை எழுதினாலும் குறைந்தது ஒரு பன்னிரெண்டு சக வீரர்களையாவது குற்றம் சொல்லவேண்டும் இல்லையென்றால் யார் படிப்பார்.

Philosophy Prabhakaran சொன்னது…

அருமையான ஆய்வுக்கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறீர்கள்...

a சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

nis சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே
சுதா

Unknown சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

Nice

டிலீப் சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா

ம.தி.சுதா சொன்னது…

சிவா said...
ஃஃஃஃஃஃகிப்ஸ் ஒரு தேர்ந்த ஆட்டக்காரர்தான்... ஆட்டம் தராத புகழை விமரிசனம் தரும் என நினைத்தாரோ என்னவோ???ஃஃஃஃஃஃ
இருக்கலாம் சகோதரா.. கருத்திற்கு மிக்க நன்றி...

ம.தி.சுதா சொன்னது…

யாதவன் said...
ஃஃஃஃஃஃஃஎனக்கு பிடிச்சிருக்கு
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.ஃஃஃஃஃஃஃ
நன்றி அண்ணா தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
..............

ராஜவம்சம் said...
ஃஃஃஃஃஃமட்டைப்பந்து வீரர்கள் எல்லா நாட்டிலுமே விமர்ச்சனத்துக்கு உள்ளானவர்களே.

வீரர்களில் யார் சுயசரிதை எழுதினாலும் குறைந்தது ஒரு பன்னிரெண்டு சக வீரர்களையாவது குற்றம் சொல்லவேண்டும் இல்லையென்றால் யார் படிப்பார்.ஃஃஃஃஃஃஃஃ
சகோதரா.. கருத்திற்கு மிக்க நன்றி... தாங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

ம.தி.சுதா சொன்னது…

philosophy prabhakaran said...
ஃஃஃஃஃஅருமையான ஆய்வுக்கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறீர்கள்...ஃஃஃஃஃஃ
கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரம்.

.............

வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஃஃஃஃஃஃஃஃஃஃஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்ஃஃஃஃஃஃ
தங்களுக்கும் என் பிந்திய வாழ்த்துக்கள் சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

nis said...
ஃஃஃஃஃஃஃஃஃதீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே
சுதாஃஃஃஃ
தங்களுக்கும் என் பிந்திய வாழ்த்துக்கள் சகோதரம்.

..................

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஃதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்ஃஃஃஃஃஃ

தங்களுக்கும் என் பிந்திய வாழ்த்துக்கள் சகோதரம்.

ம.தி.சுதா சொன்னது…

சசிகுமார் said...
மிக்க நன்றி சகோதரம்....

................

டிலீப் said...
ஃஃஃஃஃஃதீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பாஃஃஃஃஃ
தங்களுக்கும் என் பிந்திய வாழ்த்துக்கள் சகோதரம்.

Jiyath சொன்னது…

அருமையான Six Six அடித்தீர்கள்

sinmajan சொன்னது…

என்ன பாஷ்..!! என் கருத்திற்குப் பதில் கூற மறந்திட்டீங்களே..!! ;)

ம.தி.சுதா சொன்னது…

@ sinmajan said...
மன்னிக்கணும்... மன்னிக்கணும்... மன்னிக்கணும்... சகோதரம் நான் தங்களுக்கு பதில் அளித்து விட்டேன் என்று கவனிக்காமல் இருந்து விட்டேன்.. இப்போது நேரம் கிடைப்பது கொஞ்சம் அரிதாக இரக்கிறது மன்னிப்பீர்கள் என நினைக்கிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

@ sinmajan said...
ஃஃஃஃஎனக்கு தென்னாபிரிக்க அணியின் பரிதாபம் மீதான அனுதாபம் இன்றும் இருக்கிறது .. மற்றும்படி கிப்ஸ் கூறுவது முழுவதுமே பொய்யாக இருக்காது போலத் தான் தோன்றுகிறது ,,ஃஃஃஃ
ஆமாம் சகொதரா நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றில்லை.. ஆனால் அவர் பொலக்கை கூட வம்புக்கிழுப்பது தான் அவர் மீதான காழ்ப்புக்குக் காரணமாக இருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…

Jiyath ahamed said...
ஃஃஃஃஅருமையான Six Six அடித்தீர்கள்ஃஃஃஃ
நன்றி சகோதரா.. கவனமாகப் படியுங்கள்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top