சனி, 23 அக்டோபர், 2010

நான் அறிந்த நடிகர் விக்ரம்...

முற்பகல் 8:25 - By ம.தி.சுதா 29

தமிழ் சினிமா நடிகர் பலர் நாம் போரடித்தான் முன்னுக்கு வந்தோம் என்றாலும் உண்மையாக போரடியவர்கள் ஒரு சிலர் தான் அதில் ஒருவர்தான் நடிகர் விக்ரம். எனது அபிமான நட்சத்திரம்.
பரமக்குடியில் 1966 சித்திரை மாதம் 17 ம் திகதி பிறந்தவர் தான் ஜோன் கெனடி வினோத்ராஜ் என்ற நடிகர் விக்ரம். அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் கெனடி என்பவரதும் நடிகரான வினோத் ராஜ் என்பவரதும் நினைவாக அவரது இயற் பெயர் இப்படி இடப்பட்டது பின்னர் அவரை சியான் என்றும் அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
இவரது திறமைப்பட்டியலும் சற்று நீண்டது. நடிகர், பின்னணி பாடகர், பின்னணி குரல் வழங்குனர் என பல்துறை வல்லுனர் ஆவார்.
அண்மையில் வெளி வந்த கந்தசாமி திரைப்படம் இவர் பாடல் திறமைக்கு சரியான எடுத்துக்காட்டாகும். அத்துடன் மின்சாரக்கனவு திரைப்படத்தில் பிரபு தேவாவிற்கு குரல் வழங்கியவரும் இவர்தான். மீனாவுடன் சேர்ந்து ஒரு இசை அல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
1990 ம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இதில் ஏதோ குழறுபடி இருக்கிறது. ஏனென்றால் இவரின் முதல் படம் தந்து விட்டேன் என்னை என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள். இவரது முதலாவது வெற்றிப்படம் 9 ஆண்டுகளின் பின் “சேது“ மூலம் கிடைத்தது. இத்திரைப்படத்தை இயக்குனர் பாலா எடுத்து விட்டு 6 மாதங்களாக யாரும் வாங்க ஆளில்லாமல் தவித்தார். அப்படத்திற்கு விக்ரம் இற்கு பேசப்பட்ட சம்பளம் வெறும் 5 லட்சம் தானாம். யாரும் கவனிக்காத அந்தப்படம் தான் 3 பிலிம்பேர் விருதுகளை பெற்றுக் கொண்டது.
இவர் தாயார் பெயர் ராஜேஷ்வரி (ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர்) மனைவி பெயர் சைலஜா (உளவியலாளர்) இவர்கள் திருமணம் 1992 ல் நடைபெற்றது. ஒரு மகள் (அக்சிதா), மகன் (துருவ்). ஜெமினி திரைப்பட வெற்றியின் வின் ஒரு பெட்டியில் இவரைக் கேட்டார்கள் “உங்கள் மகனையும் நடிகனாக்குவீர்கள் தானே“ என்றதற்கு “நிச்சயமாக இல்லை நான்பட்ட துன்பங்கள் போதும் அவனை ஒரு விமான ஓட்டியாக்க வேண்டும்“ என்றார். இவரது தந்தையாரும் ஒரு நடிகராவார் “கில்லி” திரைப்படத்தில் ஓருகாட்சியில் நடித்திருக்கிறார்.

இவர் பெற்ற விருதுகள்.
Tamil Nadu State Film Special Jury Award for Best Actor for Sethu (1999)
Filmfare Award for Best Actor for Kaasi (2001)
ITFA Best Actor Award for Gemini (2003)
Filmfare Award for Best Actor for Pithamagan (2003)
Tamil Nadu State Film Award for Best Actor for Pithamagan (2003)
National Film Award for Best Actor for Pithamagan (2004)
Filmfare Award for Best Actor for Anniyan (2005)
Asianet Film Awards Special Honour Jury Award for Anniyan (2005)
முன் மொழியப்பட்டவை
Vijay Award for Favourite Hero for Bheema (2008)
Vijay Award for Favourite Hero for Kanthaswamy (2009)
திரைப்பட பட்டியல்
1990
என் காதல் கண்மணி (தமிழ்)
1991
தந்து விட்டேன் என்னை (தமிழ்)
1992
காவல் கீதம் (தமிழ்)
மீரா (தமிழ்)
1993
சிறுநவ்வுலா வரமிஷ்தாவா (மலையாளம்)
மாபி(f)யா (மலையாளம்)
1994
சைன்யம் (மலையாளம்)
பங்காரு குடும்பம் (தெலுங்கு)
புதிய மன்னர்கள் (தமிழ்)
1995
ஸ்ரிட் (மலையாளம்)
அதாள மாயக்கா (தெலுங்கு)
1996
மயூர நிரிடம் (மலையாளம்)
அக்கா பங்குன்னவா (தெலுங்கு)
இந்திரப்பிரஸ்தம் (மலையாளம்)
ராஜ புத்தகம் (மலையாளம்)
1997
இது ஒரு சிநேக கத (மலையாளம்)
உல்லாசம் (தமிழ்)
குறல்ல ராஜ்யம் (தெலுங்கு)
1998
கண்களின் வார்த்தைகள் (தமிழ்)
1999
கவுஸ்புல் (தமிழ்)
சேது (தமிழ்)
2000
ரெட் இந்தியன் (மலையாளம்)
2001
இந்திரம் (மலையாளம்)
9 நெலுலு (தெலுங்கு)
யூத் (தெலுங்கு)
விண்ணுக்கும் மண்ணுக்கும் (தமிழ்)
தில் (தமிழ்)
2002
காசி (தமிழ்)
ஜெமினி (தமிழ்)
சாமுராய் (தமிழ்)
கிங் (தமிழ்)
2003
தூள் (தமிழ்)
காதல் சடுகுடு (தமிழ்)
சாமி (தமிழ்)
பிதாமகன் (தமிழ்)
2004
அருள் (தமிழ்)
2005
அந்நியன் (தமிழ்)
மஜா (தமிழ்)
2008
பீமா (தமிழ்)
2009
கந்தசாமி (தமிழ்)
2010
ராவணன் (தமிழ்)
ராவன் (கிந்தி)

மேலதிக தகவல்களுக்கு

பிடித்திருக்கா ஒரு வாக்குப் போட்டுப் போகவும்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

29 கருத்துகள்:

புதிய மனிதா. சொன்னது…

தகவல் அருமை ....

nis சொன்னது…

எனக்கு பிடித்த தன்னடக்கமுள்ள Hero . Future Super Star. திரைப் படங்கள், விருதுகள் பட்டியலிற்கு நன்றி சுதா.66 ம் ஆண்டில் பிறந்தவரா? ஆச்சரியமாக உள்ளது.

எப்பூடி.. சொன்னது…

ரஜினிக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச் ஹீரோ. 2005 இக்கு பிறகு இன்னமும் கடைசி 5 வருடத்தில் ஒரு ஹிட்டும் வராதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இருந்தாலும் தன்னோட பாதையை மாற்றாமல் இருக்கும் விக்ரமுக்கு பாராட்டுக்கள். நிச்சயம் விக்ரம் மீண்டும் உச்சத்தை தொடுவார், இன்னுமொரு 2003 விக்ரமுக்காக காத்திருக்கும். .

எஸ்.கே சொன்னது…

நிறைய விவரங்கள்! அருமை! நன்றி! வாழ்த்துக்கள்!

karthikkumar சொன்னது…

தகவல்கள் அருமை நண்பா விக்ரமின் வெற்றிக்கு அவரின் திறமை முழுமுதற் காரணமாகும்

பெயரில்லா சொன்னது…

அருமை மதி.சுதா !

நண்பரே, சிறு திருத்தம்:

//யாரும் கவனிக்காத அந்தப்படம் தான் 3 பிலிம்பேர் விருதுகளையும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொண்டது.///

"சேது" படத்திற்காக நடிகர் விக்ரம் தேசிய விருதை பெறவில்லை நண்பரே! பிதாமகன் திரைப்படமே பெற்று தந்தது.

நையாண்டி நைனா சொன்னது…

Nice Infos and collections

மோகன்ஜி சொன்னது…

விக்ரமை தமிழ்த் திரையுலகம் இன்னும்
நன்றாக உபயோகப்படுத்த வேண்டும்..
பல தகவல்கள் தந்திருக்கிறீர்கள்

பெயரில்லா சொன்னது…

////1999
கவுஸ்புல் (தமிழ்)////
சார் நீங்க யாழ்ப்பாணமா ?
ஏன் உங்களுக்கு ஹ வருவதில்லை எழுதும்போதும் ?
ஹ வேறு க வேறு

ம.தி.சுதா சொன்னது…

கருத்துத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... இங்க நேரம் செலவழிப்பதை விட தங்கள் தளத்திற்கு வந்து போவது எவ்வளவோ மேலல்லவா திறந்து வைத்திருங்கள் ஒடி வருகிறேன் ....

ம.தி.சுதா சொன்னது…

@ thozhilnutpam said...
சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

@ நண்பேன்டா....நண்பேன்டா.
ஃஃஃஃஃஃசார் நீங்க யாழ்ப்பாணமா ?
ஏன் உங்களுக்கு ஹ வருவதில்லை எழுதும்போதும் ?
ஹ வேறு க வேறுஃஃஃஃஃ
ஆமாம் ஏன் கேட்கிறீர்கள்.... தவறு தான் இனிக்கவனத்திலெடுக்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

ஏற்றுகொண்டமைக்கு நன்றி .....

Philosophy Prabhakaran சொன்னது…

தகவலுக்கு நன்றி... விக்ரமுக்கு வயது மிகவும் அதிகமாக இருக்குமென்று நினைத்தேன்... 44 தான் என்ற தகவலை இந்தப் பதிவின் மூலமாகவே தெரிந்துக்கொண்டேன்...

pinniittiingka.பின்னிட்டீங்க பாஸ்

லே அவுட்டும் சூப்பர்

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஓருவர்... நல்ல பகிர்வு..

sinmajan சொன்னது…

சம்பந்தப் பட்ட விபரங்களைத் திரட்டி வழங்கும் உங்கள் பாணி அருமை..

ம.தி.சுதா சொன்னது…

@ நண்பேன்டா....நண்பேன்டா. said...
@ அன்பரசன் said...
@ philosophy prabhakaran said...
@ சி.பி.செந்தில்குமார் said...
@ வெறும்பய said...
@ sinmajan said...
கருத்துத் தெரிவித்த, வாக்கிட்ட மற்றும் பார்வையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... இங்க நேரம் செலவழிப்பதை விட தங்கள் தளத்திற்கு வந்து போவது எவ்வளவோ மேலல்லவா திறந்து வைத்திருங்கள் ஒடி வருகிறேன் ...

a சொன்னது…

விடா முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.......... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்....

VISA சொன்னது…

தகவல் அருமை ....

ஷஹன்ஷா சொன்னது…

முயற்சிக்கு என்றும் வெற்றி நிச்சயம்.....

கவி அழகன் சொன்னது…

அருமை அருமை

mathu0777 சொன்னது…

அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சுதா.விக்ரம் போன்றே எந்த ஒரு சினிமா பின்னனியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பில் சிகரம் தொட்டவர் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார்.......தன்னம்பிக்கையின் வரைவிலக்கணம் என்று கூட இவரை சொல்லலாம்.மிகவும் வெளிப்படையான மனிதர்...அஜித் பற்றி ஒரு பதிவு எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும் சுதா..........

mathu0777 சொன்னது…

அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சுதா.விக்ரம் போன்றே எந்த ஒரு சினிமா பின்னனியும் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பில் சிகரம் தொட்டவர் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார்.......தன்னம்பிக்கையின் வரைவிலக்கணம் என்று கூட இவரை சொல்லலாம்.மிகவும் வெளிப்படையான மனிதர்...அஜித் பற்றி ஒரு பதிவு எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும் சுதா..........

erodethangadurai சொன்னது…

நல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

தமிழ்தாசன் சொன்னது…

விளம்பரம் விரும்பாத ஒரே நடிகர்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top