திங்கள், 18 அக்டோபர், 2010

பாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)

பிற்பகல் 11:12 - By ம.தி.சுதா 45

          இப்பொது புதுப் புதுப் பாடகர்களின் வருகையானது இசையுலகில் பல வித்தியாசங்களை எற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்த சிலரின் முதல் பாடல்களை தருகிறேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள்.
முதலில் எனக்கு பெரிதும் பிடித்த  அந்த இருவரிலும் இருந்து தொடங்குகிறேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்தவர்கள் தான். முதலில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை சொல்ல நினைத்தாலும் அவரது முதல் பாடலில் பல சர்ச்சைகள் இருப்பதால் பின்னர் சொல்கிறேன்
கே.ஜே. ஜேசுதாஸ்
கர்நாடக இசையால் எம்மைக் கட்டிப் போட்ட ஒரு மென் குரலக்கு சொந்தக்காரர். தமிழ் நாட்டை விட கேரள உலகில் போற்றிப் புகழப்படும் ஒரு இசை மேதையான இவர் இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவரது தமிழ் உச்சரிப்பில் சிலர் குறை கூறினாலும். இசை உச்சரிப்பில் யாரும் எதுவும் சொல்ல முடியாது.
இவரது முதல் பாடல் நீயும் பொம்மை நானும் பொம்மை
படம் – பொம்மை
அந்தப் பாடலில் ஒரு சில வரி இதோ
விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
விஜய் ஜேசுதாஸ்
அடுத்ததாக இவர் மகனையும் பார்த்து விட்டுப் போவோமா... விஜயின் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற “றுக்க றுக்க றுஸ்தியாஎன்ற பாடல் தான் இவரது முதல் பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஹரிகரன்
வழக்கறிஞரான இவரை தமிழுக்க கொண்டு வந்தவர் இசைப்புயலாகும். எந்தப் பாடல் ஆனாலும் பாடலில் முழு பாவமும் இருக்கக் கூடியதாய் படிக்கும் ஒரு வல்லமை பெற்ற கலைஞர். இவருக்கும் ஆரம்ப காலத்தில் உச்சரிப்புப் பிரச்சனை இருந்த்து உண்மை தான். ஒரு பொய்யவது சொல் கண்ணேபாடலில் பாலுக்கும் கல்லுக்கும்என்று தான் படித்திருப்பார் அனால் தசாவதாரத்தில் கல்லை மட்டும் கண்டால்பாடலை எப்படி அருமையாகப் படித்திருந்தார்.
இவரது முதல் பாடல் தமிழா தமிழாஎன்று அரம்பிக்கம் பாடலாகும்
படம் – றோஜா
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சித்திரா
பல தேசியவிருதுக்கு சொந்தக்காரரான இவரது முதல் பாடல் இளைய ராஜாவின் இசையில் படித்த பூஜைக்கேத்த பூவிது....பாடலாகும்
படம்: நீ தானா அந்த குயில்
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சுஜாதா
இவர் முதல் பாடிய பாடல் கவிக்குயில் என்னும் படத்தில் காதல் ஓவியம் கண்டேன்... ஆனால் அந்த பாடல் அந்த படத்தில் இடம்பெறவில்லை...அடுத்த பாடலான காலை பனியில் தான் அவர் முதல் முதல் பாடி வெளியாகிய பாடலாக மாறியுள்ளது.
படம்: காயத்திரி
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
மாணிக்கவிநாயகம்
இவரது முதல் பாடல் விக்ரமிற்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்த படங்களில் ஒன்றான அத்துடன் அஜித் நடிக்காமல் தவற விட்ட படமுமான தில் திரைப்படத்தில் வித்தியாசகர் இசையில் படித்த்தாகும்

பாடல்: கண்ணுக்குள்ளே கெளுத்தி
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஸ்ரேயா கோசல்
இவரது முதல் பாடல் அல்பம் திரைப்படத்தில் இடம் பெற்ற “செல்லமே செல்லம் என்றாயடிஎன்ற பாடலாகும். இவருடன் ஹரிகரன் படித்திருந்தார். இசையமைத்த்து கார்த்திக் ராஜாவாகும்.
வரிகள்:நா. முத்துக்குமார்
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சித்திரா சிவராமன்
இவர் மலையாளத்தில் சித்திரா ஐயர் என அழைக்கப்படுவார்.
அவரின் முதல் பாடல் கமலின் நடிப்பிலும் கே.எஸ்.ரவிக்கமார் இயக்கத்திலும் உருவான தென்னாலியில் திரைப்படத்தில் உள்ள "அத்தினி சித்தினி" என்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ரஞ்சித்
இவரது முதல் பாடல் ஆசை அசையாய் திரைப்படத்தில் மணிசர்மாவின் இசையில் இடம்பெற்ற ஏய் பெண்ணெ திரும்பிப் பாருஎன்ற மனதுக்கினிமையான ஒரு மென்மையான பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
பறவை முனியம்மா
அந்தக் கணிர் குரல் அதுவும் படத்தின் முக்கிய காட்சி இதற்கு சம்மதித்த டைரக்டரின் துணிவை பாராட்டியே தீர வேண்டும். தூள் திரைப்படத்தில் வித்தியாசாகரின் இசையில் படித்த மதுரை வீரன் தானேஎன்பது தான் இவரின் முதல் பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
உன்னி கிருஸ்ணன்
ரகுமானால் அறிமுகமான இன்னமொரு கர்நாடக இசை மேதை தான் இவராகும். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னவளே அடி என்னவளேபாடல் தான் இவரது முதல் பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஹரிஷ் ராகவேந்திரா
இவரது மென்மையான குரலானது எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு வசீகரக் குரலாகும். இவர் பாடகர் மட்டுமல்ல ஒரு நடிகருமாவார். இவரை வைத்து அருண்பாண்டியன் “விகடன்என்ற திரைப்படத்தை எடுத்தார். இவரது முதல் பாடல் வித்தியாசாகரின் இசையில் அரசியல் திரைப்படத்தில் இடம் பெற்றது. வாசுகி வாசுகிஎன்ற பாடலை உமா ரமணனுடன் படித்திருந்தார்.
(இந்த ஆக்கத்திற்கான தேடலுக்குக் காரணமானவரும் இவர் தான். நண்பி ஒருவருடன் எற்பட்ட கருத்தாடல் தான் இதற்கு காரணமாகும்.)
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
வசுந்தரா தாஸ்
பாடகியும்,  நடிகையுமான இவரை இசைப்புயல் தான் முதல்வன் படத்தில் அறிமுகப்படுத்தினார். இவரது முதல் பாடல் “சக்கலக்கா பேபிஎன்பதாகும்
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
தேவன்
இவரை இசைப்புயல் தான் காதலர் தினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அத்திரைப்படத்தில் ரம்பா தோன்றிய அந்தக் காட்சிக்கு குணாலுக்காக “ஓ மாரியா.. ஓ மாரியாஎன்ற பாடலைப் படித்திருந்தார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சசிரேகா
இசை ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் முதல் பாடல் காயத்ரி படத்தில் இடம் பெற்ற வாழ்வே மாயமா..?என்ற பாடலாகும். வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அரணாச்சலம் ஆகும்.
அந்தப் பாடலில் ஒரு சில வரி இதோ
“நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
உன்னி மேனன்
இவரது முதல் பாடல் இசைஞானியின் இசையில் பாடப்பட்டது. இப்பாடலை சசிரேகவுடன் சேர்ந்து பாடினார்.. இப்பாடல் பொன் மானே சோகம் ஏனோ...என்பதாகும்
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
புஸ்பவனம் குப்புசாமி

இவரின் முதல் பாடல் தேசிய கீதம் படத்தில் இடம்பெற்ற அப்பன் வீட்டு சொத்தை போலஎன்ற பாடலாகும் இவரையும் இசைஞானி தான் அறிமகப்படுத்தினார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
பூரணி
இவரின் முதல் பாடல் “தேவன் திருச்சபை மலர்களேஎன்பதாகும் இப்பாடல்
“அவர் எனக்கே சொந்தம்”  படத்தில் இடம் பெற்றிருந்தது.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
அஜீஸ்
இவரது முதல் பாடல் “கோவாபடத்தில் இடம்பெற்ற “இதுவரை இல்லாத..என்ற பாடலாகும். இவர் தான் 2009 ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் முதல் இடம் பெற்றவர்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
அருண்மொழி
இவரது முதல் பாடல் கமல்ஹாசனின் “சூரசம்காரம்படத்தில் இடம் பெற்ற
“நான் என்பதும்.....என்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
இசைஞானி இளையராஜா
இவரது முதல் பாடல் “சோளம் விதைக்கையிலேஎன்ற அரம்பிக்கும் பரதிராஜாவின் உயிர் சித்திரமான “16 வயதினிலேபடத்தில் இடம்பெற்ற பாடலாகும்.
அந்தப் பாடலில் ஒரு சில வரி இதோ

'மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்பிடிக்க
நாளும் ஒண்ணு பாத்துவந்தேன் நல்ல நேரம் கேட்டுவந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்லகாலம் பொறந்ததடி '
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
வினயா
இவரது முதல் பாடல் "சப்போஸ் உன்னை காதலித்து" என்ற பாடலாகும். பாடலுக்கான இசை விஜய் அன்ரனி வழங்கியிருந்தார். இப்படம் விஜய் கௌரவ வேடம் ஏற்ற சுக்கிரன் படத்தில் இடம் பெற்றது.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
மின்மினி
இவரது முதல் பாடல் றோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசைஎன்ற பாடலாகும். ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படமான இப்படத்தின் இப் பாடல் காட்சிக்க மதுபாலா நடித்திருந்தார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
மதுசிறி
இவரும் ரகுமானின் அரிய கண்டுபிடிப்புத் தான். அனால் அவரே தான் செய்த தவறுக்காக  வருத்தப்பட்டிருப்பார். ஆயுத எழுத்தில் “சண்டைக் கோழிஎன்று மாதவனுக்கும் மீரஜஸ்மினுக்கும் பாடியவர் தான் இந்தத் தமிழ் விளுங்கும் பாடகியாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
பம்பாய் ஜெயசிறி
இவரது முதற்பாடல் தம்பதிகள் படத்தில் இடம்பெற்றது. வாடா கண்ணாஎன்ற பாடலாகும். இதற்கான இசையை எம்.எஸ்.வி வழங்கியிருந்தார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
அண்ட்ரியா
கலாபக் காதலன் படத்தில் இடம்பெற்ற “உருகுதேஎன்ற பாடலுடன் அறிமுகமான இவர் பல்திறண் உடையவர். 10 வயதில் பாட வந்தார். ஒரு பிஜானொ கலைஞர், நடிகை, பாடல் ஆசிரியர், உதவி டைரக்ரர், மொடல் என சொல்லிக் கொண்டே போகலாம். இவரின் ஆயிரத்தில் ஒருவன் நடிப்பே இதற்குச் சான்றாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஏ.ஆர்.ரகுமான்
பொம்பாய் படத்தில் இடம் பெற்ற அந்த அரபிக் கடலோரம்என்ற பாடல் தான் இவரது முதல் பாடல்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சுனந்தா
கேரளத்தின் இன்னுமொரு குயில் தான் இந்தச் சுனந்தாவாகும். இவரையும் இசைஞானிதான் அறிமுகப்படுத்தினார். புதுமைப் பெண் படத்தில் ஜெயச்சந்திரனுடன் காதல் மயக்கம்“ என்ற பாடலைப் பாடியிருந்தார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
நரேஸ் ஐயர்
இவரை அறிமுகம் செய்தவர் இசைப்புயலாகும். எஸ்ஜெ சூர்யாவின் “அன்பே ஆருயிரேபடத்தில் மதுசிறியுடன் பாடிய மயிலிறகேபாடல் தான் இவரது முதல் பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சின்மயி
இவரையும் அறிமுகம் செய்தவர் இசைப்புயலாகும். மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நெஞ்சில் ஜில்ஜில்ஜில்....பாடலுடன் அறிமுகமானார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஜெசி கிப்ட்
இசையமைப்பாளரான இவர் தீநகர் படத்தில் இடம் பெற்ற நீயே என்....என்று ஆரம்பிக்கும் பாடலுடன் அறிமுகமானார்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
முகேஸ்
இவரையும் அறிமுகம் செய்தவர் இசைப்புயலாகும். பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் “தீக்குருவியாய்....என்பது தான் இவரது முதல் பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
அனுராதா ஸ்ரீராம்
இவரது முதல் பாடல் இந்திராவில் இடம் பெற்ற “அச்சம் அச்சம் இல்லை..என்ற பாடலாகும்.
அந்தப் பாடலில் ஒரு சில வரி இதோ
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
ஜி.வி.பிரகாஸ்
இவரது முதல் பாடல் ஜென்ரில்மென் படத்தில் இடம் பெற்ற “சிக்கு புக்கு ரயிலுஎன்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
எஸ்.பி பாலசுப்ரமணியம்
சாந்தி நிலையம் படத்தில் இடம் பெற்ற “இயற்கை என்னும் இளைய கன்னி..என்ற பாடலுடன் தான் அறிமகமானார். அனால் “ஆயிரம் நிலவே வா...பாடல் தான் எனச் சொல்லிக் கொள்கிறார்கள்.
அந்தப் பாடலில் ஒரு சில வரி இதோ
'தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளனீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னையள்ளித் தந்ததாலோ'
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊

சுவர்ணலதா
1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்கு தலை வணங்கு என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
நடிகர் ரஜனிகாந்
இவரது முதல் பாடல் ஜானகியுடன் மன்னன் படத்திற்காக இசைஞானியின் இசையில் படித்த “அடிக்கது குளிர..என்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
நடிகை ஜெயலலிதா
இவரது முதல் பாடல் அடிமைப் பெண் படத்தில் கேவீ. மகாதேவன் இசையில் படித்த “அம்மா என்றால் அன்பு..என்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
சிவாஜி கணேசன்
இவரது முதல் பாடல் பாவை விளக்கு படத்தில் இடம் பெற்ற “வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி..என்ற பாடலாகும்.
◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊முதல் பாடல்◊~~Ж§Ж~~◊
நடிகர் கார்த்திக்
இவரது முதல் பாடல் அமரன் படத்தில் இடம் பெற்ற “வெத்தல போட்ட ஷோக்குல...என்ற பாடலாகும்.
இங்குள்ள தவறை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் அனுமதியுண்டு ஆனால் அனானியாக வேண்டாமே........ (நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை)
அடுத்த பாகமும் இருக்கிறது.... (பலரின் படம் கிடைக்காத படியால் மிகுதியை அடுத்தபதிவில் இடுகிறேன்).
இந்தப் பதிவில் 40 பேரின் முதல் பாடல் இடம்பெற்றுள்ளது....
பிடித்திருந்தால் ஒரு வாக்குப் போட்டுப் போகவும்......

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

45 கருத்துகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா சொன்னது…

கலக்கல் தல ...

எப்பூடி.. சொன்னது…

நல்ல தொகுப்பு,

எஸ்.பி.பி யின் முதல்ப்பாடல் 'ஆயிரம் நிலவே வா' தான், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது கே.வி.மகாதேவந்தான். கே.வி.மகாதேவனது இசையில் தெலுங்கு பாடலை எஸ்.பி.பி பாடும்போது "யார் இந்த பையன்? நல்லா பாடுறானே! இவனை நம்ம படத்திலயும் பாடவைக்கலாமே" என்று கூறிய எம்.ஜி.ஆர் தனது அடிமை பெண் படத்திலே சந்தர்ப்பம் கொடுத்தார், அதுதான் 'ஆயிரம் நிலவே வா'. ஆனால் படம் முதலில் வெளியில் வந்தது சாந்தி நிலையம், அதனால்தான் அதிலுள்ள 'இயற்கை என்னும்' பாடல் முதல்ப்பாடலாக சொல்லப்படுகிறது. எது எப்பிடியோ இரண்டு பாடல்களுமே தூள்.

Chitra சொன்னது…

அடுத்த பாகமும் இருக்கிறது.... (பலரின் படம் கிடைக்காத படியால் மிகுதியை அடுத்தபதிவில் இடுகிறேன்).
இந்தப் பதிவில் 40 பேரின் முதல் பாடல் இடம்பெற்றுள்ளது....

.....அருமையான தொகுப்புங்க.... பாராட்டுக்கள்!

பகிர்வுக்கு நன்றிங்க....

அம்பிகா சொன்னது…

நல்ல தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி
\\எஸ்.பி.பி யின் முதல்ப்பாடல் 'ஆயிரம் நிலவே வா' தான், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது கே.வி.மகாதேவந்தான். கே.வி.மகாதேவனது இசையில் தெலுங்கு பாடலை எஸ்.பி.பி பாடும்போது "யார் இந்த பையன்? நல்லா பாடுறானே! இவனை நம்ம படத்திலயும் பாடவைக்கலாமே" என்று கூறிய எம்.ஜி.ஆர் தனது அடிமை பெண் படத்திலே சந்தர்ப்பம் கொடுத்தார், அதுதான் 'ஆயிரம் நிலவே வா'. ஆனால் படம் முதலில் வெளியில் வந்தது சாந்தி நிலையம், அதனால்தான் அதிலுள்ள 'இயற்கை என்னும்' பாடல் முதல்ப்பாடலாக சொல்லப்படுகிறது. எது எப்பிடியோ இரண்டு பாடல்களுமே தூள்.\\
உண்மைதான்.

Riyas சொன்னது…

அப்பாடா என்ன பெரிய லிஸ்ட்.. சூப்பர்

நல்ல தொகுப்பு!!!

அன்பரசன் சொன்னது…

பிரமாதம்ங்க...
ஒரே பதிவுல இவ்வளவு தகவல்களா!!!!!
சூப்பர்.

Unknown சொன்னது…

அருமையான தொகுப்பு.

எஸ்.பி.பி யை இளைய தலைமுறை பாடகர்களோடு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, அவரும் அதற்கு தகுதியானவர்தான் :)

பெயரில்லா சொன்னது…

ஏ.ஆர் ரகுமான் முதல் முதலாக பாடியது ரோஜா படத்தில்,சின்ன சின்ன ஆசை பாடலின்
ஊடே வரும் "ஏலேலோ
எலே ஏலேலோ"எனும்
ஹம்மிங் தான் என்று நான் நினைக்கிறேன்.

மாணவன் சொன்னது…

அருமை நண்பா,
சூப்பராக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்
உங்களின் உழைப்பு பாராட்டதக்கது
”இங்குள்ள தவறை சுட்டிக்காட்ட எல்லோருக்கும் அனுமதியுண்டு ஆனால் அனானியாக வேண்டாமே........ (நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை)”
டச்சிங் நண்பா...
உங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

எஸ்.கே சொன்னது…

சூப்பர் சகோதரா! சூப்பர்! ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்க இதை சேகரிக்க! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

இளங்கோ சொன்னது…

கலக்கல் தொகுப்பு.

Ramesh Karthikeyan சொன்னது…

Good post and goooooood effort

நல்ல தேடல்

ஒரு சிறிய திருத்தம் மின்மினி பாடிய முதல் பாடல் ”சின்ன சின்ன ஆசை” அல்ல என நினைக்கிறேன்.. கொஞ்சம் தேடி பார்க்கவும்

தமிழ் உதயம் சொன்னது…

மின்மினி இசைஞானியால் அறிமுகப்படுத்தபட்டவர். ரோஜா படத்திற்கு முன்பே அவர் நிறைய பாடல்கள் பாடி உள்ளார்.

பெயரில்லா சொன்னது…

Good information. BTB, For Chitra's first song, music s not by Ilayaraja its by his brother Gangai Amaran.

ம.தி.சுதா சொன்னது…

@ புதிய மனிதா.. said...
/////கலக்கல் தல ...////
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...
@ எப்பூடி.. said...
////எஸ்.பி.பி யின் முதல்ப்பாடல் 'ஆயிரம் நிலவே வா' தான், அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது கே.வி.மகாதேவந்தான். கே.வி.மகாதேவனது இசையில் தெலுங்கு பாடலை எஸ்.பி.பி பாடும்போது "யார் இந்த பையன்? நல்லா பாடுறானே! இவனை நம்ம படத்திலயும் பாடவைக்கலாமே" என்று கூறிய எம்.ஜி.ஆர் தனது அடிமை பெண் படத்திலே சந்தர்ப்பம் கொடுத்தார், அதுதான் 'ஆயிரம் நிலவே வா'. ஆனால் படம் முதலில் வெளியில் வந்தது சாந்தி நிலையம், அதனால்தான் அதிலுள்ள 'இயற்கை என்னும்' பாடல் முதல்ப்பாடலாக சொல்லப்படுகிறது. எது எப்பிடியோ இரண்டு பாடல்களுமே தூள்.////
நன்றி சகோதரம்... இவர் பாட வந்த கதை தெரியும் என நினைக்கிறேன் அதை ஒரு பதிவாக இடுவதற்கு முயற்சிக்கிறேன்.. தங்கள் தகவல் மிகவும் உதவியாக இருந்தது.
@ Chitra said...
/////அடுத்த பாகமும் இருக்கிறது.... (பலரின் படம் கிடைக்காத படியால் மிகுதியை அடுத்தபதிவில் இடுகிறேன்).
இந்தப் பதிவில் 40 பேரின் முதல் பாடல் இடம்பெற்றுள்ளது....
.....அருமையான தொகுப்புங்க.... பாராட்டுக்கள்!/////
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அக்கா...

@ ஆரூரன் விசுவநாதன் said...
////பகிர்வுக்கு நன்றிங்க....////
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

@ அம்பிகா said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...
@ அன்பரசன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...
@ பரிதி நிலவன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...
@ மாணவன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...
@ எஸ்.கே said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

@ Anonymous said...
ஃஃஃஃஃஏ.ஆர் ரகுமான் முதல் முதலாக பாடியது ரோஜா படத்தில்,சின்ன சின்ன ஆசை பாடலின்
ஊடே வரும் "ஏலேலோ
எலே ஏலேலோ"எனும்
ஹம்மிங் தான் என்று நான் நினைக்கிறேன்.ஃஃஃஃ
ஃஃஃஃஃGood information. BTB, For Chitra's first song, music s not by Ilayaraja its by his brother Gangai Amaran.ஃஃஃஃஃ
தகவலுக்க மிக்க நன்றி சகோதரம்... தாங்கள் பெயரைச் சொல்லியிருந்தால் இன்னும் தகவல் பெற உதவியாக இருந்திருக்கும்

ம.தி.சுதா சொன்னது…

@ இளங்கோ said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...

@ Ramesh Karthikeyan said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்...

ம.தி.சுதா சொன்னது…

@ யோ வொய்ஸ் (யோகா) said...
ஃஃஃஃஃநல்ல தேடல்
ஒரு சிறிய திருத்தம் மின்மினி பாடிய முதல் பாடல் ”சின்ன சின்ன ஆசை” அல்ல என நினைக்கிறேன்.. கொஞ்சம் தேடி பார்க்கவும்ஃஃஃஃ
தகவலுக்க மிக்க நன்றி சகோதரம்...
கட்டாயம் தேடிப் பார்க்கிறேன்...

ம.தி.சுதா சொன்னது…

@ தமிழ் உதயம் said...
ஃஃஃஃமின்மினி இசைஞானியால் அறிமுகப்படுத்தபட்டவர். ரோஜா படத்திற்கு முன்பே அவர் நிறைய பாடல்கள் பாடி உள்ளார்.ஃஃஃஃ
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்... சகோதரன் யோவும் சொல்லியுள்ளார் கட்டாயம் என் தேடல் தொடரும்....

KANA VARO சொன்னது…

ஜாசி கிப்ட் இன் 'தீநகர்' படத்துக்கு முன்னர் '4 ஸ்டுடென்ட்' வந்ததாக எண்ணுகிறேன். எதற்கும் பார்த்துவிடவும்.

அருமையான தொகுப்பு.

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் நண்பரே!

roshaniee சொன்னது…

படமும் தொகுப்பும் அருமை

அருமையான தொகுப்புங்க.... பாராட்டுக்கள்!

ILA (a) இளா சொன்னது…

அருமையான தொகுப்பு!. கொஞ்சம் எழுத்துப்பிழை தெரியுது(ஐயோ அதைச் சொல்ல கூடாதாம்ல). தொடருங்க..

ராஜவம்சம் சொன்னது…

கலக்கல்.

பாடல் பதிவு செய்யும் இடத்தில் பனி புரிந்தீர்களோ!

ஹலோ தொகுப்பெல்லாம் சூப்பர் தான்... ஆனா படிச்சு, கொஞ்சம் டயர்ட் ஆய்ட்டேன்...
ஒரு கப் காபி ப்ளீஸ்... :-)))

ராஜகோபால் சொன்னது…

good work keep it up...

பெயரில்லா சொன்னது…

சித்ராவின் முதல் பாடல் "அன்பே...அன்பே...நீயே எந்தன் ஆதாரம்.." இசை எம். எஸ்.வி

thamizhparavai சொன்னது…

நல்ல பகிர்வு... இசை விரும்பிகளுக்கு...
மின்மினியின் முதல் பாடல் ராகதேவன் இசையில் ‘மீரா’ படத்தில் ‘லவ்வுன்னா லவ்வு’...
இவரது இன்னொரு பாடல் ‘ஆத்தங்கரை ஈரக்காத்து’ படம்;’அரண்மனைக்கிளி’
இன்னொரு பாடல் ‘மெதுவா தந்தியடிச்சானே’ படம் ‘தாலாட்டு’...
‘சின்மயி’ கூட ராஜா அறிமுகம் என நினைக்கிறேன்.வெளிவராத ‘காதல்சாதி’ படத்தில் பாடியுள்ளார்...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான தொகுப்பு....congrats

Unknown சொன்னது…

அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் நண்பன்

ப.கந்தசாமி சொன்னது…

இவ்வளவு தகவல்களைத் திரட்டியதற்கு பாராட்டுகள்.

ம.தி.சுதா சொன்னது…

கருத்துத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி... இங்க நேரம் செலவழிப்பதை விட தங்கள் தளத்திற்கு வந்து போவது எவ்வளவோ மேலல்லவா திறந்து வைத்திருங்கள் ஒடி வருகிறேன் ....

அடேங்கப்பா,தகவல் சுரங்கமே நீவிர் வாழி

1990 ம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இதில் ஏதோ குழறுபடி இருக்கிறது

அதில் ஒரு குளறுபடியும் இல்லை,முதன் முதலில் நடித்த படம் என் காதல் கண்மணி தான் ,நானால் முதலில் ரிலீஸ் ஆனது தந்து வ்ட்டேன் என்னை

கலையன்பன் சொன்னது…

கடும் உழைப்பு!
அரிய தொகுப்பு!!
சுவையான பங்களிப்பு!!!

ஜோதிஜி சொன்னது…

விசா பக்கம் மூலம் உள்ளே வந்தேன். ரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க.

மொழிபெயர்ப்பு மூலம் தமிழை தட்டச்சு செய்றீங்கன்னு நினைக்கிறேன். தவறுகளை சோதித்து விட்டு வலையில் ஏற்றுங்கள்.

நல்வாழ்த்துகள்.

சமுத்ரா சொன்னது…

good information! :)

Unknown சொன்னது…

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70423&st=40&gopid=630457&#entry630457

எஸ்.பி.பியின் முதல் பாடல் தமிழில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல்தான். அதன் பிறகு சில பாடல்கள பாடியபின்தான் அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் பாடவைத்தார், இது கனடாவில் எம் எஸ் வி அவர்களின் இசைநிகழ்ச்சியில் எஸ்.பி.பியே சொன்னார்.

பல தகவல்கள் ஒரே இடத்தில். அருமையான தொகுப்பு....

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top