செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்

பிற்பகல் 2:10 - By ம.தி.சுதா 22

               இது ஒரு பழமை வாதமல்ல. பழையவர் காரணத்துடன் தான் சொல்கிறார்கள் என்பதற்கான விளக்கமாகும்.

              பழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும்என்பது எல்லோருக்கும்தெரியும்.

              சரி நெற்றிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போமா? எமது கண்ணில் பெறப்படும் ஒளி சமிஞ்யை நரம்பின் மூலம் (OPTIC NERVES)  மூளைக்கு அனுப்பப்படும். படத்தில் காட்டியுள்ளது போல் வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும் இந்த நரம்புகள் சந்திக்கும் இடம் தான் முக்கியமான இடமாகும் இதை ஆங்கிலத்தில் (OPTIC CHAISMA)  என்று அழைப்பார்கள். இது சரியாக நெற்றிப் பொட்டுக்கு நேரே தான் இருக்கிறது.

              எம்மூர் சந்திகளில் யாராவது விடுகாலிகள் நின்றால் குமருகள் போக  முடியாதது போல் தான் இந்த சந்தியில் ஏதாவது தடங்கல் வந்தால் பார்வை அம்பெல் தான். குறிப்பாக சொல்வதானால் இதற்கு மேல் தான் கபச்சுரப்பி இருக்கிறது. இதில் ஒரு சிறு வீக்கம் வந்தாலும் கண் பார்வையில் வித்தியாசம் தெரியும்.

               நெற்றிப் பாட்டு என்பது ஒரு முக்கியமான இடம். ஒரு கராத்தே வீரரை கேட்டுப்பாருங்கள் ஒருவருக்கு நெற்றிப் பொட்டில் ஏற்படும் தாக்கத்தால் எவ்வளவு நிலை குலைவு ஏற்படும்.

              சரி நான் கதை விடுவது போல இருந்தால் இதைப்பாருங்க... பாடசாலையில் அசிரியர் தான் கற்பித்த பாடத்தில் ஒரு கேள்வியை ஒரு மாணவியிடம் கேட்டார் அதற்கு அவள் நெளிந்தாள். ஒரு முறை நெற்றியில் கையால் அடித்துக் கொண்டாள். இவரும் வந்த ஆத்திரத்தில் அவளைத்திட்டி விட்டார். அட்டா என்ன அதிசயம் அவள் விடை சொல்லி விட்டாள். உடனே ஆசிரியர் அவளை பாராட்டி “பாத்தியா பேசினவுடன் தான் விடை வருகிறது என்றார்.ஆனால் உண்மை அதுவல்ல அவள் நெற்றியில் தட்டி மூளையை உசார்ப்படுத்திவிட்டாள். அதனால் நீண்ட கால ஞாபக சக்தியில் இருந்த (LONG TERM MEMORY) விசயம் வெளிவந்து விட்டது அவ்வளவு தான்.

                 அப்ப இப்ப சொல்லுங்க பொட்டை நெற்றியில் வைக்கணுமா? கூடாதா?

                அதெல்லாம் சரிங்க இப்ப பொட்டை பையன்கள் தானெ வைக்க வேண்டி வரப்போகுது. பொண்ணுங்க தானே குமர்ப் பொடியளை விடுகிறார்கள் இல்லை. நான் தில்லாலங்கடி படத்தை சொல்லுறேனுங்க.

உங்களுக்க இது பிடித்திருந்தால் இது பலரை சென்றடைய இன்டலியில் ஒரு வாக்கு போட்டு விடுங்க.... முடிந்தால் மற்றவற்றிலும் இடலாம்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

22 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பொட்டை பையன்கள்////
சேர்த்து சொல்லும் போது மீனிங் மாறுது தோழி...ஹா..ஹா..

ம.தி.சுதா சொன்னது…

@ padaipali said...
வருகைக்கு நன்றி சகோதரா... நானும் இப்பத் தான் கவனித்தேன் பரவாயில்லை இருக்கட்டும்...

Nalla irukku.

But Repeat Padaipali.

ம.தி.சுதா சொன்னது…

@ சே.குமார் said...
வருகைக்கு நன்றி சகோதரா... உண்மையில் நான் ஒரு குமர் பொடியனுங்கோ.... தவறாக எல்லாரும் நினைக்கிறாங்க... சிலர் வதனப் புத்தகத்தில் டாவடித்து என் கற்பை சோதிக்கிறானுகள்...

Bruno சொன்னது…

//போல் வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும்//

இதில் ஒரு பிழை உள்ளது

பார்வையின் வலது பக்கத்தில் இருப்பவைகளை (right visual field) இடது மூளையும், இடது பக்கத்தில் இருப்பவைகளை (left visual field) வலது மூளையும் பெற்றுக்கொள்ளும்

உங்கள் படத்தில் சரியாக உள்ளது

Bruno சொன்னது…

மற்றப்படி பொட்டினால் மறைக்க வேண்டியது pituitary சுரப்பியா அல்லது pineal சுரப்பியா என்று மாறுபட்ட கருத்து உள்ளது

ம.தி.சுதா சொன்னது…

@ புருனோ Bruno said...
வருகைக்கு நன்றி சகோதரா.... நீங்கள் சொல்வது சரி தான்... நான் visual path way ஐ பற்றி மேலோட்டமாகவே தொட்டிருக்கிறேன்... occipital lobe ன் visual rigen பற்றி சொல்ல வெளிக்கிட்டால் அது இன்னுமொரு பெரிய பதிவாகிவடும் என்று தான் மேலோட்டமாக விட்டுவிட்டேன் மற்றும்படி ஒன்றுமில்லை... சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி...
pineal and pitutery சிக்கலான விடயம் தான் அது ஒரு தெளிவில்லாத பிரச்சனை அதை பற்றி சொல்ல வெளிக்கிட்டால் பல முரண்பாடுகள் உருவாகும் என நினைக்கிறேன் சகோதரா...

Chitra சொன்னது…

போச்சு ....... விஞ்ஞானம் பத்தி பேசி, எனது லாங் டைம் மெமரி - ஷார்ட் டைம் மெமரி எல்லாத்தையும் தூங்க வச்சிட்டீங்களே! ம்ம்ம்ம்......

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
அக்கா வருகைக்கு மிக்க நன்றி.... நீங்க இப்ப எனது நீண்டகால ஞாபக சக்தியை கிளறீட்டிங்கள்... அடுத்த வார பதிவு ஞாபக சக்தி தான்...

Jana சொன்னது…

அடுத்தமுறை சந்திக்கும்போது வாரும் வைத்துவிடுகின்றேன் ஒரு பொட்டு.

ம.தி.சுதா சொன்னது…

@ Jana said...
நன்றி அண்ணா ஆனால் கையால் தானே வைப்பீர்கள்...

வாழ்த்துக்கள் .........

ம.தி.சுதா சொன்னது…

@ Loganathan said...
வருகைக்கு நன்றி சகோதரா...

பெயரில்லா சொன்னது…

3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

anuthinan சொன்னது…

ம் ம் கொஞ்சம் வாசிக்கும் எண்ணை சிந்திக்க வைத்து இருக்கீங்க!!!

ம.தி.சுதா சொன்னது…

@ Anuthinan S said...
நன்றி அனு...

Unknown சொன்னது…

வேலைப்பளு காரணமாக இப் பதிவை படிக்க தாமதமாகி விட்டது
மொத்தத்தில் பதிவோடு கருத்துக்களும் கலந்து சரியான விளக்கம் ஒன்றை படித்த திருப்தி எனக்கு இப்பதிவில்!

வாழ்த்துக்கள்

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
///..மொத்தத்தில் பதிவோடு கருத்துக்களும் கலந்து சரியான விளக்கம் ஒன்றை படித்த திருப்தி எனக்கு...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா..

சாமக்கோடங்கி சொன்னது…

பயனுள்ள தகவல்...

ம.தி.சுதா சொன்னது…

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா..

http://machamuni.blogspot.com/ சொன்னது…

எனது வலைப்பூவின் பின் தொடர்பவர்களில் ஒருவருடைய வலைத் தொடர்பாளரைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.மதியோடையில் நனைந்தேன்.
தங்கள் பதிவின் கருத்தை ஒட்டிய என் கருத்தோடு கூடிய பதிவின் முகவரி இதோ. http://machamuni.blogspot.com/search/label/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பார்த்து கருத்தை சொல்லவும்
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Unknown சொன்னது…

பொட்டு வைக்காதது தான் இப்ப பேஷன். இப்படி பயமுறுத்தினாலாவது பொண்ணுங்க பொட்டு வச்சால் சரிதான்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top