ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்......

பிற்பகல் 10:12 - By ம.தி.சுதா 6


Hon. Maithripala Sirisena
Minister of Health
          இது இலங்கைக் குடி மக்களுக்காக சுகாதார அமைச்சு கொண்டு வந்திருக்கும் புதிய சட்ட அமுலாக்கலாகும்.
           போதைவஸ்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்தவச் செலவை ஏற்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதார சேவைகள் அமைச்சர் எனது மூன்று பாலா தெரிவித்துள்ளார். அடடா குழம்பீட்டிங்களா நான் தமிழில் மொழி பெயர்த்த விட்டேன். அவர் பெயர் மைதிரிபாலா. இந்தச் சட்டம் போதை எதிர்ப்பிற்கு சார்பானதென்றால் எல்லோருக்கும் சந்தோசம் தான் ஆனால் இதனால் பாதிக்கப்படப் போவது குடிமக்களல்ல ஏழைக் குடியானவர்களே.
Hon. Mahinda Amaraweera
Deputy Minister of Health
Dr. T. R. C. Ruberu Secretary
Ministry of Health
Dr. U.A. Mendis
Director General of Health Services
              ஒரு முறை ஆழமாகச் சிந்தியுங்கள். குடிப்பாவனையால் பாதிக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலை செல்கின்றாரென்றால் பெரும்பாலும் அவர் ஏழைக் குடியாளர் தான் ஏனெனில் அவர்கள் பாவிப்பது தான் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் மதுபானமாகும். நடுத்தர வர்க்க மக்கள் கூட பெரும்பாலும் எப்பவாவது ஒரு முறை தான் (மாதக்கடைசியில்) அடிமட்ட மதுபானத்தை நாடுகிறார்கள். இப்படி சட்டரீதியற்ற மதுவை பாவிக்கும் பாவனையாளர் நிச்சயம் குடும்ப பொறுப்பற்றவராகாத் தானே இருப்பார். அவர் வைத்தியசாலையில் இறப்பாராயின் அதற்கான பணத்தை குடும்பத்தார் தான் கட்ட வேண்டும்.
              இந்தச்சட்டம் அரச வருமானத்திற்காக வைக்கப்படவில்லை என்றாலும் இது பலருக்கு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
(முக்கியமான ஒன்று பணம் மட்டும் தான் லஞ்சமில்லை)
1)      போலி மரணச்சான்றிதழுக்காக வைத்தியரை நாட வேண்டும்.
2)      விசாரணை செய்யும் காவல் துறை சார்ந்தவரை நாட வேண்டும்.
3)      சவச்சாலைக் காவல்காரன் உடலை வேளைக்கு எடுக்க வேண்டும் என்பன் அவனையும் நாட வேண்டும்
இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்
முடிவு......
அரசு நல்லதுக்காக ஒரு சட்டத்தை கொண்டு வந்து பல தீய செயலுக்கு வழிவகுக்கப் போகிறது.
எனது பழைய இடுகைகளில் மது பானம் தொடர்பாக நான் எழுதியவை பார்க்க கீழே உள்ள தலைப்பை சொடுக்கவும்.

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு. http://mathisutha.blogspot.com/2010/08/blog-post.html 

சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_08.htmlமது வகைகள் உலகிலேயே அழிக்கப்பட வேண்டிய ஒன்று ஆகும்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

6 கருத்துகள்:

Riyas சொன்னது…

GOOD POST...

ம.தி.சுதா சொன்னது…

@ Riyas said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி றியாஸ்...

கவி அழகன் சொன்னது…

தம்பி நல்ல சமுக ரீதியான சிந்தனை பிரயோசனமான பதிவு

ம.தி.சுதா சொன்னது…

@ யாதவன் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.. நீங்க கவிதையில் சொல்வதைவிடவா நான் எழுத்தில் சொல்லப் பொகிறென்.

அன்பு நண்பன் சொன்னது…

நண்பா நீங்கள் குறித்த பெயர் ஒன்றினை வினோதமான முறையில் எழதிய விதம் அருமை, நல்ல விடயம் தான் பகிர்ந்துள்ளீர்கள், குடும்பப்பிரச்சினைக்கு பெரும்பாலும் முக்கிய காரணம் மதுப்பழக்கமே,,,

ம.தி.சுதா சொன்னது…

@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...
சகோதரா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top