புதன், 14 ஜூலை, 2010

திருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு

முற்பகல் 11:17 - By ம.தி.சுதா 9இது இலங்கை விசயமானாலும் இவர்கள் கையாளும் நுட்பத்தை எல்லாரும் அறியவேண்டும் 
இக்கட்டுரையை நான் ஆராய்ந்து எழுதக்காரணம் எனக்கு நடந்த சம்பவம். எனக்கொரு காகித வெட்டி (paper cutter) தேவைப்பட்டது அதை திருநெல்வெலியில் 55 ரூபாய்க்கு வாங்கினேன். அது அழகான உருக்காலான (steel) கத்தியாகும். வாங்கி வருகையில் அருகில் நின்ற கொழும்பு சுற்றுலா வாசியொருவர் ”மேக்க மில கீ(h)யத” என்றார். நானும்
55 ரூபாய்க்கு வாங்கினேன் என்று கூறினேன். ”அம்மட்ட உடு” என்று தலையில் கைவைத்தவர். அதே போன்றதொன்றை தான் கொழும்பில் 150 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறினார்.


எனக்கு அதிசயமாகப் போய் விட்டது. பல மைல் தொலைவில் உள்ள இடத்தை விட இறக்குமதியாகும் இடத்தில் 95 ரூபாய் அதிகமாக இருந்தது. ஆராய்ந்த பார்த்தால் இது தான் விசயம்.

இவர்கள் பயன்படுத்தும் நுட்பம் mega target எனப்படுகிறது. இதை வாய் மொழியில் under cut பண்ணுவது என்றும் அழைப்பர். நான் ஒரு சிறிய வியாபாரியாக இருந்தால் 10,000 ரூபா பொருள் ஒன்றை 10% கழிவுடன் 9,000 ரூபாயிற்கு கொள்வனவு செய்து விற்பேன். இப்படி கொள்வளவு செய்யும் பல சில்லறை வியாபாரிகளை முன் ஒப்புதலுடன் சேர்த்து ஒரு பெரிய முதலாளி அதே பொருளை 1 கோடியிற்கு கொள்வனவு செய்தால் 20% கழிவு கிடைக்கும் (அண்ணளவாக) அவர் கொள்வனவு செய்து அடுத்த ஓரிரு நாளில் விநியோகித்து. ஒரு வாரத்தில் முழுப்பணத்தையும் சேகரித்து விடுவார். இதில் அவருக்கு பெரிய இலாபம் இருப்பதால் அவர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கே விநியோகிப்பார். சிறு வியாபாரிகளும் வேளைக்கே பணத்தை சேகரிப்பதற்காக தமக்கு கட்டுப்படியான இலாபம் வைத்து விற்றுத் தீர்க்கிறார்கள். இதனால் தான் சந்தையில் பொருட்கள் மிக மலிவாகக் கிடைக்கிறது.

இதில் பெரிய முதலாளிக்கு பெரியளவில் வருமானம் வருமா? என்று கேள்வி கேட்டால் அதையும் combany (நிறுவனமே) கொடுக்கிறது. அதாவது பெரிய முதலாளி 2 மாதத்தில் பணத்தை அவர்கள் கணக்கில் இட்டால் சரி. அதனால் அவர் சிறு வியாபாரிகளிடம் ஓரிரு வாரத்தில் சேகரிக்கும் பணத்தை வங்கியில் நடைமுறைக்கணக்கு தவிர்ந்த வேறு ஏதாவது கணக்கில் இட்டு 2 வது மாதக்கடைசியில் அதை தன் நடைமுறைக்கணக்குக்கு மாற்றுவார். அதில்வரும் வட்டிப்பணமே அவரது இதர செலவுகளுக்கு போதுமானதாகும்.

இதைவிட வருட இறுதியில் பெரிய முதலாளிக்கு குடும்பமாக வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வசதியை combany (நிறுவனமே) ஏற்படுத்திக் கொடுக்கும். இவை தான் அடியேனின் சிறு மூளைக்கு எட்டியது. மேலும் விடயம் தெரிந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

(எனக்கு அடிப்படைத்தகவல்கள் தந்துதவிய சகோதரர் ஜீவனுக்கு மிக்க நன்றி)

குறிப்பு – சின்ன சின்ன பாரட்டுக்களும் விமர்சனங்களும் தான் புதிய முயற்சிகளைத் தோற்றுவிக்கும்.

 வர்த்தகம்


About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

9 கருத்துகள்:

எப்பூடி.. சொன்னது…

திருநெல்வேலிதான் யாழ் நகரத்திலேயே அண்டர்கட்டில் பொருட்களை அதிகமாக விற்கும் இடம், யாழ் நகர வியாபாரிகளே திருநெல்வேலி வியாபாரிகளின் அண்டர்கட்டால் ஆடிப்போயிருக்கிறார்கள். அங்கர் கூட கம்பனி விற்கும் விலையைவிட குறைவான விலையில் திருநெல்வேலியில் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல சில வியாபாரிகள் அண்டர்கட்டால் இல்லாமலும் போயுள்ளனர், சமீபத்தில் கூட ஒருவர் நிலைமை மோசமாகபோனத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இப்போது அவர் ஓரளவு ஓகே.

எப்பூடி.. சொன்னது…

உங்களது Word verification ஐ இல்லாமல் செய்தால் கமன்ட் போடுவது சுலபம்.

புகைப் போக்கி சொன்னது…

enakkum oru saman vankanum pejer ithil sollelathu. mailil poddullen vilaijai sollavum

vijayan சொன்னது…

very good sutha

நல்ல பதிவு.company என்று இருக்கவேண்டும் combany கவனம்.

Karthick Chidambaram சொன்னது…

இது இந்தியாவின் திருநெல்வேலியோ என்று நினைத்து வந்தேங்க ....:))
நல்ல பதிவு.

ம.தி.சுதா சொன்னது…

@ சி.பி.எஸ், நம்ம ஊரில் கூட இக்கட்டுரையை யாரும் நம்பல. பரவாயில்லை. இதை ஒரு திட்டமாகவாவது ஏற்பான என்றால் அதுவும் இல்லை.
@ கார்த்திக், மேலே எப்பூடி சொன்னதை பார்த்திர்கள் தானே. கடலுக்கு வாருங்க இருவரும் பண்ட மாற்றிடுவோம்.
@ எப்பூடி, சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

ராம்ஜி_யாஹூ சொன்னது…

இலங்கையில் உள்ள திருநெல்வேலி யா ஓகே ஓகே.

இந்த ஊர் பெயர்காரணம் தெரிந்தால் பகிரவும்

ம.தி.சுதா சொன்னது…

நிச்சயம் ராம்ஜி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top