வெள்ளி, 23 ஜூலை, 2010

AIRTEL வளர்ச்சியும் ஆட்டம் காணும் அரச சேவைகளும்

முற்பகல் 10:52 - By ம.தி.சுதா 2


மிகப் பெரிய முதலீட்டுடன்  எயாரெல் நிறுவனமானது இலங்கையில் கால் பதித்துள்ளது. என்ன சகுணமோ தெரியவில்லை கால் வைத்ததிலிருந்து பலத்த சவால்களை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது. குறிப்பாக கடந்த சிலநாட்களுக்கு முன் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சு அறிவித்திருந்த புதிய சட்டமாகும். “வெளிச் செல்லும் அழைப்புக்கான குறைந்த கட்டணம் 2.00 ரூபாய்” என அறிவித்தது. (அரச வரியுடன் 2ரூபாய் 66சதம்).

அதற்கான காரணம் கடந்த வருடம் தொலைத் தொடர்பு சேவைகள் வ(ழ)(ழு)ங்குனர். 2300 கோடிரூபாய் நட்டமடைந்ததாக தெரிவித்தனர். இதை முற்று முழுதாக யாராலும் நம்ப முடியாது. சில வேளை மொபிட்டல் போன்ற வலையமைப்பிற்கு நடந்திருக்கலாம். ஏனெனில் அவர்களிடம் பல சிறப்பான சலுகைகளை வாடிக்கையாளருக்கு வழங்க முடிந்த போதும் அதன் விபரம் வாடிக்கையாளரை சென்றடைவதில்லை. நுனிப்புல் மேயும் மாடுகள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கோபுரங்களை அமைத்துள்ளார்கள். (நகர்ப் பகுதி தவிர்ந்த இடங்களில்).
தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சுக்கு எதிராக எயாரெல் நிறுவனமானது வழக்கு தொடர்ந்துள்ளது. அதன் முடிவு இன்னும் வெளியாகாதுள்ளது. மிகக்குறுகிய காலத்தில் பல கோபுரங்களை அமைத்து வரும் எயாரெல் இம்முடிவில் குழம்பியதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் யாராவது சலுகை வழங்குபவர்களிடம் தான் மக்கள் அதிகம் விரும்பிப் போவார்கள்.
அரசின் இக்கட்டணம் நடைமுறைக்கு வந்தால் அதிகம் பாதிக்கப்பட போவது முற் கொடுப்பனவு (prepaid) வாடிக்கையாளர்கள் தான்.
கடந்த வாரம் பின்லாந்து நாட்டில் இணைய இணைப்புக்களை (broad band) இலவசமாக்கியுள்ளார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மிகக் குறைந்த கட்டணமே தொலைத் தொடர்பிற்கு அறவிடப்படுகின்றது.
மொத்தத்தில் இன்னும் சிறிது காலத்தில் சிம்பாபேயை விட மோசமாக நம் நாடு மாறக்கூடும்.
உங்கள் சின்ன சின்ன பாராட்டுக்களும் விமர்சனங்களும் தான் எமை வளர்க்கும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல உபயோகமான தகவல்.

ம.தி.சுதா சொன்னது…

@ lanka பாராட்டுக்கு மிக்க நன்றி

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top