Friday, 15 March 2013

பாலாவின் மறுபக்கங்கள் பற்றி ஒரு ஆதார அலசல்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
       இயற்கையில் பல வகையான உணவுப் பொருட்களுக்குரிய மூலப் பொருட்கள் படைக்கப்பட்டிருந்தாலும்அத்தனையிலும் தேவையானதை தேர்ந்தெடுப்பதுடன் மட்டுமல்லாமல் தேவையான விகிதத்தில் கலந்து சுவையான உணவைக் கொடுப்பவனே சிறந்த சமையல்காரனாவான். அதே போலவே எவ்வகையான நடிகனாக இருந்தாலென்ன தகுந்த கதை தேவையான கதைக்களம் முக்கியமான இசை என அத்தனையிலும் சரியானதைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பவனே சிறந்த இயக்குனராக முத்திரை குத்தப்படுகிறான்.

       அந்த வகையில் தனக்கென்றொரு தனி முத்திரையுடன் திகழ்ந்த இயக்குனர் பாலா மேல் இன்று பெரும் போர்க் கொடி ஒன்று தூக்கப்பட்டிருக்கிறது.
பாலா என்பது யார்?
      போட்டிகள் நிறைந்த இந்தத் திரையுலகத்தில் கலைப் பிச்சையோடு காசுப்பிச்சையும் வாங்கி முன்னுக்கு வந்த ஒரு கடின உழைப்பாளி என்பது மட்டுமல்லாமல் அசாத்திய திறமைசாலியும் கூட. இரண்டு சாமியார், ஒரு கோயில் அல்லது மடம், கொஞ்ச மரம் இவையனைத்தும் இருந்தால் பாலாவுக்கு போதும் என்ற ஒரு திருப்தியாளன்.
அவர் நடிகர்களை காட்டுமிராண்டிகள் போல நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு முன்னர் பழைய சம்பவம் ஒன்றை நோக்குவோம்.
     பாலாவுக்கு இறுதியாக பெரும் வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்றான பிதாமகனில் நடந்த ஒரு சம்பவமாகும். அதே நேரத்தில் நடிகர் விக்ரம் மிக உச்சத்தில் இருந்த காலப்பகுதியாகும். இச்சம்பவம் பற்றி விக்ரமும் நடிகை சங்கீதாவும் கலந்து கொண்ட சண்ரீவி நிகழ்ச்சியில் இருவராலும் வெளிக் கொணரப்பட்டதாகும்.
பிதாமகன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒன்றில் விக்ரமுக்கு நடிகை சங்கீதா விளக்குமாறால் அடிக்கும் காட்சி ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. ஒரு சீனியர் நடிகரை எப்படி அடிப்பது என பாலாவிடம் மறுத்தே கூறிவிட்டார். அதன் பின்னர் மேக்கப் முடித்து வந்த விக்ரமின் வற்புறுத்தலால் அக்காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அக்காட்சிகளைப் பார்த்த பாலாவுக்கு திருப்தி ஏற்படவில்லை. மறு நாள் மீண்டும் படமாக்க நினைத்த போது விக்ரமின் கன்ன ஓரங்கள் வீங்கியிருந்தது. அதனால் மறு நாளே அக்காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள்.

சரி வாருங்கள் காணொளி பற்றி பேசுவோம்
1. இங்கு எத்தனை பேரால் அவர் உண்மையான பிரம்பால் தன் அடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
உ+ம்- முதல் கட்டத்தில் ஆதர்வாவிற்கு முதுகில் விழும் அடியை உற்றுப் பாருங்கள் அடிக் கம்பால் தான் அடிக்கிறார். உண்மையான பிரம்பால் கூட அப்படி அடித்தால் நோகாது.
2. 7 ம் அறிவில் ஒரு நாயிற்கு ஊசி போடும் காட்சியை காட்டுவதற்கே அப்பெரிய பிரச்சனை வந்த இடத்தில் இப்படி காட்டுமராண்டித்தனமாக தாக்கப்படும் காட்சியை வெளியிட பாலா என்ன முட்டாளா?

உட்சேர்க்கை- இன்றைய தினம் பாலா பிரச்சனை சம்மந்தமாக அறிக்கை வெளியிட்டுள்ள சிம்புவின் கூற்றுப்படி.. அதில் காட்டப்பட்டுள்ள பிரம்பானது திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் செயற்கைப் பிரம்பென்றும் அது தெரிந்தும் திரையுலகத்தினர் இதை ஒரு பிரச்சனையாக ஒத்து ஊதுகின்றனரே என தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சரி பாலா அடித்தது உண்மையென்று வைத்துக் கொள்வோம்.....
1.அவர் அடித்தது உண்மையாகவே இருக்கட்டும் அப்படியானால் அதில் நடித்த யாருமே அப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தாத நிலையில் ஏன் இப்படி ஒரு விமர்சனம்.
2. வர்த்தக ரீதியான படங்களை அதிகம் விரும்பும் நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன்னர் பாலா படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் என்ன காரணம்?
3. பாலா படத்தில் கண்ட விஷாலை (அவன் இவன்) வேறெங்காவது கண்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் ஒரு பிரபல நடிகனால் ஒரு சண்டைக்காட்சிக் கலைஞனாவது உதைவாங்குகிறான் அல்லது நெறிவு முறிவுக்குள்ளாகிறான் அப்போது உங்கள் மனிதாபிமானம் எங்கே போகிறது. மொத்தத்தில் அது அவர்கள் தொழில் விரும்பினால் செய்யலாம் விரும்பாவிடில் விலகலாம்.

இவ்வளவு பேசும் நாம் எந்தளவு காட்டுமிராண்டிகள் என்பதற்கு ஒரு உதாரணம்.
எம்மில் எத்தனை பேர் பிரசவ விடுதிப்பக்கம் சென்றிருப்போமோ தெரியாது. ஆனால் ஒவ்வொரு பிரசவத்தின் போதும் ஒரு பெண் பெறும் வலியானது சராசரி வலிகளுடன் ஒப்பிட முடியாததாகும். அதிலும் முதல் குழந்தையின் பேறின் போது சிலவேளை கத்தியால் பெண்ணுறுப்பை கீறுவதுண்டு. இத்தனை வலிகளையும் தாங்கிய ஒரு பெண் அடுத்த குழந்தைக்கு தயாராகும் போது சந்தோசமாக இணைவதில்லையா? காரணம் அவ் வலியின் பின் அவள் பெற்ற பரிசானது மிகவும் பெறுமதியானதாகும். அப்படியானதொரு உணர்வையே அவர் இயக்கத்தில் நடிக்கும் பாத்திரவாதிகள் உணர்ந்து இயங்கும் வேளையில் விமர்சனவாதிகளுக்கு ஏன் இந்த வீண் வேலை...

அது ஒருபக்கமிருக்க.. இந்த விமர்சனவாதிகளில் எத்தனை பேர் ஒரு பெண்ணின் இத்தனை செயற்பாட்டிற்கு காரணமாக இருக்கிறீர்கள். பாலா செய்தது காட்டுமிராண்டித் தனம் என்றால் நீங்கள் செய்வது அதை விட எத்தனையோ மடங்கு பாரிய காட்டுமிராண்டித்தனமாகும்.

சிறுவயதில் சில பெற்றோர்கள் நன்றாக அடித்து கற்பிக்கும் வாத்தியார்களை தேடிப் பிடித்து சேர்த்து விடுவதில்லையா? அப்படியானால் அப் பெற்றோர்கள் காட்டுமிராண்டிகளா?
 ராணுவப்பயிற்சிக் கூடங்களில் கொடுக்கப்படும் பயிற்சிகளும் தண்டனைகளும் இதை விடக் காட்டுமிராண்டிததனமானவை. உதாரணத்துக்கு இலங்கை ரணுவ வீரனொருவனுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல் 8 மணித்தியால கடமை  8 மணித்தியால வேலை  8 மணித்தியால உறக்கம்.. உணவு, உடல் கடன் எல்லாம் இந்தற்குள் தான் அடக்கப்படும். இது பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும். அப்படியானால் யாராவது ஒருவர் இதற்கெதிராக கிளம்புங்களேன்.

ஆக மொத்தத்தில் பாலா அடித்ததற்கான சான்று உண்மை என்பதை ஒரே ஒரு காணொளியை மட்டும் வைத்து உறுதிப்படுத்த முடியாது. அப்படி உறுதிப்படுத்தப்பட்டாலும் அவர் தொழில் முறை சார்ந்த விடயமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
இந்தப் பதிவு பிடித்திருந்தால் உஙகள் நண்பர்களிடமும் பகிருங்கள்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

8 comments:

நலமா...?

வித்தியாசமான அலசல்...

காணொளி ஒரு விளம்பர யுக்தி... அவர்க்கும் சொல்லிக் கொடுத்தவர் யாரோ...? வாழ்க பணம்...

This comment has been removed by the author.

பரதேசி படம் குறிப்பிட்டளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிற நிலையில்..... இந்தப்பதிவை வாசிக்க கிடைத்தது. மிகவும் யதார்த்தமேயற்ற முரண்கள் நிரம்பியிருக்கிற பதிவு இது.

அடிப்படையில் பிள்ளைப்பேற்றையும்- படமொன்றின் உருவாக்கத்தையும் ஒப்பிடுகின்ற வாதம் குறைந்த பட்ச அடிப்படையே இல்லாதது. புணர்தலின் இன்பம்- பிரசவத்தின் வலி என்பது விலங்கின் தோற்றத்திலிருந்து வருவது. அதை மாற்றவே முடியாது.

ஆனால், காட்டுமிரண்டிகளாக இருந்த மனிதன் நவீன உலகில் பலவரையறைகளுடன்- மனிதவிழுமியங்கள் கோட்பாடுகளுடன் வாழுகிறான். அப்படிப்பட்ட நிலையில் அந்த நெறிகளுக்குள் கட்டுபட்டு பாலாவின் பரதேசி மேக்கின் வீடியோ இருக்கவில்லை. அது, அப்பட்டமான மனிதஉரிமைகளை மீறுகின்ற காட்டுமிரண்டித்தனத்தின் சான்று.

எம்மிடையே ஒரு பிரச்சினையிருக்கிறது. ஒருவர் ஜாம்பவானாக முத்திரை குத்தப்பட்டுவிட்டால், அவர் தொடர்ந்தும் படைக்கின்ற எல்லாமுமே அதியுச்ச படைப்புக்கள் என்று நினைக்கின்ற மனநிலை. உண்மையில் அப்படியில்லை. எனக்கு பாலாவின் “நந்தா“வே பிடித்த படம். “அவன்- இவன்“ என்பது நான் பார்த்த மோசமான சினிமாக்களில் ஒன்றாகக் கொள்வேன். எனக்கு அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. நாளை “பரதேசி“யைப் பார்த்து பிடித்திருந்தால் பாராட்டுவேன். அதிலும் பிரச்சினையில்லை.

ஆனால், படமொன்றின் உருவாக்கத்தில் இவ்வளவு கொடூரங்கள்? ஏன். பொய்யான பிரம்பு என்று வைத்துக் கொள்வோம். ஆனாலும், உதைப்பதை என்ன கணக்கில் சேர்ப்பது. அதுவும் ஆட்களுக்கு படாமல் உதைத்தார் என்று கொள்ளலாம். ஆனால், அவையெல்லாமும் எனக்கு உண்மையொன்று தோன்றுகிற வீடியோவை ஏன் வெளியிட வேண்டும். அந்த வீடியோ என்ன செய்தியைக் கூறுகிறது, தொழில்தர்மம் அதனோடு சேர்ந்துவிட்ட உரிமைகளை இயக்குனர் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பதையா...? அப்படியான இயக்குனரின் படைப்பு தேயிலைத்தோட்ட மக்கள் பட்ட துன்பங்களைப் பகிர்கிறது என்றால், பரதேசி உருவாக்கம் அதற்கொப்பான மனித உரிமைமீறல்களைப் பதியவில்லையா..?

அதுபோக, புணர்தலையும்- பிள்ளைப்பேறையும் பரதேசி உருவாக்கத்துடன் ஒப்பிட்டதை ஜீரணிக்க முடியவில்லை. இது பயங்கரமான சிந்தனை. இது யோசனை வறட்சி என்று கூட சொல்லலாம். எங்களுக்கு கிடைக்கின்ற இடத்தில் எதையும் எழுதலாம், எதிர்க்கலாம், வரவேற்கலாம். ஆனால், அதற்கு குறைந்தபட்ச நியாய சிந்தனையோட்டம் அவசியம். எதிர்காலத்திலாவது புரிந்துகொண்டு எழுதுங்கள்.

@திண்டுக்கல் தனபாலன்

பாலாவின் மௌனம் தான் இதற்கு ஆதாரம் சகோ

@புருசோத்தமன்
வணக்கம்....

தாங்கள் எழுத்துத்துறையில் அனுபவமும் ஆளுமையும் உள்ளவர் என்பது தெரியும் ஆனால் இங்கே எதற்கு எதை எச்சந்தர்ப்பத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா என்பதை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்

பாலா கண்டிப்புக்காக அடிக்கிறாரா அல்லது காட்சியை விளங்கப்படுத்துகிறாரா என நீங்கள் முதலில் தெளிவடையுங்கள் புருஸ்

எல்லாம் முரணான கருத்துக்கள் என்று விட்டு பிரசவத்தை மட்டுமே கூறியுள்ளீர்களே மற்றவை எவை என்பதையும் விளக்கலாமே புருஸ்

Yoga.S. said...

வணக்கம்,சுதா!///நடிப்பு என்றால் அந்தக் கதா பாத்திரமாகவே மாறி விட,இப்போதிருக்கும் நடிகர்கள்?!ஒன்றும் வி.சி கணேசன்(சிவாஜி கணேசன்)அல்ல.இயக்குனர்கள் நடிகர்களைக் கண்டிக்காமல் வேலை வாங்குவது சாத்தியமே இல்லை.மேலும்,இந்தக் காணொளி குறித்து எந்த ஒரு இயக்குனரோ/நடிகரோ கருத்து எதுவும் கூறவுமில்லை என்பது கவனிக்க வேண்டியது!மூன்று நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,ஒரு நண்பர் முகநூலில் பகிர்ந்திருந்தார்,சோபிக்கவில்லை.அப்போது முன்னணியில் இருந்த நடிகைகளே........................எத்தனை இயக்குனர்களிடம் 'வாங்கி' யிருக்கிறார்கள் தெரியுமா?

வித்தியாசமான அலசல்...
காணொளி விளம்பர யுத்திதானே ஒழிய ஒரிஜினல் இல்லை...

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top