செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ரசிகரை ஏமாளியாக்கும் சினிமாத்துறையின் புதிய விளம்பரங்கள்

பிற்பகல் 10:22 - By ம.தி.சுதா 12


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
வாருங்கள் ஆக்கத்திற்குள்
எந்த ஒரு தொழில்துறைக்கும் விளம்பரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கு பணம் செலவு செய்வதில் எந்த நிறுவனமம் பின் நிற்கக் கூடாது. ஆனால் சில நிறுவனங்கள் தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளும்.
அந்தவகையில் சினிமாத்துறையில் தற்போதைய பாணி ஒன்று முளைத்திருக்கிறது. இது நடிகர் விஜய் இன் துப்பாக்கியில் தான் பரவலாக ஆரம்பித்திருந்தாலும் அதன் வழக்கின் போக்கும் அப்பிரச்சனையை ஓரளவு நம்ப வைத்திருக்கிறது. கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் முன்னர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தது முருகதாஸ் அப்பெயரை வைத்துத் தொலைக்க 7 தடவை அவ் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னர் இது விஸ்வரூபம் எடுத்துச் செல்கிறது. நேற்று முன்தினம் சிம்புவின் வாலு படத் தலைப்பிற்கு சர்ச்சை உருவானது. இன்று சசிக்குமாரின் “சுந்தரபாண்டியன்” படத்தின் தலைப்பிற்கு சர்ச்சை தோன்றியுள்ளது.
இன்று முகநூலில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன் அதாவது இந்த “காதல்” என்ற தலைப்பில் முதல் முதல் படம் எடுத்தவர் எங்கே போய்விட்டார். அவர் இருந்திருந்தால் இன்று எத்தனை படங்கள் நீதிமன்றப்படிகளில் ஏறி நிற்க வேண்டி வந்திருக்கும்.
தலைப்பில் தவறான விளம்பர வழிமுறை எனக் கூறப்பட்டிருந்தாலும் இத் தவறுக்கு தலைப்புகளை பதிவிடும் சங்கமே பெரிதும் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக ஒரு கடையுடையதோ அல்லது நிறுவனத்துடையதோ பெயரை பதிவு செய்ய வேண்டுமானால் பதிவுத் திணைக்களத்தின் இணையத்திலேயே அதனை பரிசோதித்துக் கொண்டு பெயரை தெரிவு செய்யலாம்.
ஆனால் இவர்களிடம் அப்படி இணைய வசதி இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் ஒருவர் புதுப்பட அறிவிப்பை விட்டால் அதன் தலைப்பை பகிரங்க அறிவித்தலில் விட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இத்தலைப்பிற்கு யாராவது ஆட்சேபனை தெரிவிக்காவிடில் அதன் பின்னர் கூறப்படும் எந்த மாற்றுக் கருத்தும் செல்லுபடியாகது என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே இந்தளவு தலைப்புப் பிரச்சனை என்றால் இன்னும் எத்தனை தலைப்புக்களுக்கு இப்படி பிரச்சனை வரப் போகிறது என எந்த ரசிகனாலும் விளங்கிக் கொள்ள முடியாமல் போவதுடன். வரப் போகும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ரசிகர்களைக் கொண்டே இலவச விளம்பரத்தை மேற்கொள்ள பல பட நிறுவனங்களுக்கு ஏதுவாக அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

வன்னியின் இயற்கை எழிலை தொகுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்திற்கச் செல்வதற்கான தொடுப்பு கீழேமுகநூல் பக்கத்திற்கான தொடுப்பு

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

12 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

இதுவும் ஒரு விளம்பரம் தான் பாஸ்§

Yaathoramani.blogspot.com சொன்னது…

நீங்கள் சொல்லிச் செல்வது சரி
அதற்கு ரசிகர்களும் ஒருவகையில்
காரணமாகி விடுகிறோமா
இதுபோன்ற அபத்தங்களை
கண்டுகொள்ளாமல் விடுவதே
சரியாய் இருக்குமோ எனத் தோன்றுகிறது

இதுவும் ஒரு விளம்பர யுக்தி போல இருக்கு

Yoga.S. சொன்னது…

வந்த கருத்துகளைப் பார்த்தால்.................கருத்திடுதலே விளம்பரம் என்று சொல்லி விடுவார்களோ?

ம.தி.சுதா சொன்னது…

@தனிமரம்

நன்றி நேசண்ணா...

அப்பெடியென்றால் இதை எப்படிச் சொல்லலாம் என ஒரு ஐடியா தாருங்கோ பார்ப்போம்....

ம.தி.சுதா சொன்னது…

Ramani..

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

ரசிகர்கள் கொஞ்ச நாளில் தெளிந்து விடுவார்கள்

ம.தி.சுதா சொன்னது…

Lakshmi....

ஆமாம் அம்மா

மிக்க நன்றி

ம.தி.சுதா சொன்னது…

Yoga.S...

நன்றி ஐயா....

தப்பை சொன்னாலும் தப்போ தெரியவில்லை...ஹ.ஹ..ஹ.

சுதா SJ சொன்னது…

எல்லாம் ஒரு விளம்பரம்தான் பாஸ் :))
யாருக்குத்தான் இலவச வ்லம்பரத்தில் ஆசையில்லை :))

அப்புறம் அந்த வன்னி போட்டோஸ் கலக்கல்... ரெம்ப பார்த்து எஞ்சாய் பண்ணுறேன் தேங்க்ஸ் பாஸ்

Unknown சொன்னது…

* வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
* தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும் தமிழ்மணம் இணையதளத்தை புறக்கணித்து விட்டு தமிழ் 10, இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

http://www.tamilnaththam.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

@ துஷ்யந்தன்

நன்றி துசி.... இலவச விளம்பரம் என்றால் நானும் குறஞ்சவனில்லை...

Unknown சொன்னது…

Nice Post

நமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள் Vote போட்டு விட்டு அதை Comment மூலம் தெரிவித்தால், நாமும் அவர்களுடைய தளத்துக்கு சென்று நமது Vote ஐயும் பதிவு செய்ய வேண்டும். Deal ஆ No Deal ஆ ..........
<a href="http://palathum10m.blogspot.com/> This is My Site </> நானும் இந்த பதிவுக்கு Vote போட்டு விட்டேன்.

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top