Thursday, 31 May 2012

எழுத்து விதைப்பாளரின் மறு பக்கங்களும் என் பிரிவு மடலும்

மனிதனென்பவன் எப்போதுமே மனிதக் கணிப்பிற்குள் அடக்கமுடியாத ஒரு வித்தியாசமான ஜந்துவாகும்.எந்தவொரு மனிதனாலும் தன்னையே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கையில் மற்ற மனிதனைப் புரிவதென்பது மிகவும் சிரமமான காரியமாகும்.


ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ விதமான மனிதனைச் சந்திக்கிறான். ஆனால் அத்தனை பேரையும் ஒவ்வொரு போதி மரமாகவே கடந்து போகிறான்.

ஒவ்வொரு வாசகனும் ஒன்றைத் தெளிவாகப் புரிய வேண்டும். எழுதுபவனுக்கும் அவன் குணத்திற்கும் எப்போதும் பெரும் வித்தியாசம் இருக்கும். உண்மையில் மிளாகாயத் தூளைப் பற்றி எழுதுபவன் உறைப்பாய்த் தான் இருப்பான் என்பதும் மருந்துகளை எழுதும் வைத்தியன் கை கசக்கும் என்பதும் தப்பான அபிப்பிராயமாகும்.
இங்கு நான் சுயபுராணம் பாடப் போகிறேன் என்று நினைத்தால் நான் பொறுப்பாளியல்ல ஏனென்றால் நான் என்னைப் புரிய முனைகையில் பெற்ற பெறு பேறைத் தான் சொல்கிறேன்.
எனது 27 வருடகாலப் பூர்த்தியில் கடந்த 2 வருடம் தான் இணையத்தில் இருக்கிறேன். ஆனால் அந்த 25 வருடத்தில் என்னோடு கருத்து முரண்பட்டவர், கைகலப்பில் ஈடுபட்டவர் எனப் பலர் இருந்தாலும் என்னோடு கதைக்காமல் இருந்தவர்களோ அல்லது எதிரியாகப் பார்த்தவர்களோ இல்லை. ஆனால் இணையம் என்பது என்னை அப்படி எதிர் கொள்ளவில்லை காரணம் இங்கு என்னைப் பார்த்தவர்களை விட என் எழுத்தை மட்டும் பார்த்தவர்களே அதிகம். எனக்கு நகைச்சுவை எழுத வராது அதனால் நான் எழுதவில்லை. ஆனால் நெருங்கியவருக்கு மட்டும் தான் தெரியும் நான் எப்படிப்பட்டவன் என்று.


(இது தான் நான்)


உதாரணத்திற்கு சிறகுகள் தள மதுரனும் நானும் பொது இடத்தில் மோதாத விடயம் என்பது மிக மிகக் குறைவு. ஆனால் அடிபடும் பொழுதுகளில் கூட மறுபுரத்தில் வேறு விடயத்தை கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்போம். அதே போல் பின்னேரம் அவன் வீடு போனால் நானும் அந்த வீட்டில் ஒருவன் தான்.

கடந்த ஐபில் இறுதி நாள் அன்று என் நெருங்கிய உறுவுக்காரனுடன் சின்ன மோதல் (எழுத்துக்கள் மட்டும்) ஆனால் மறு நாள் நேரே கண்ட போது men in black ல் வந்த smith வந்து மறக்க வைத்தது போலவே இருந்தது. ஏனென்றால் அவர்கள் என்னை வேறாகவும் எழுத்துக்களை வேறாகவும் பார்க்கத் தெரிந்தவர்கள்.

இதைப் பாருங்கள் கடந்த சில மாத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வசிக்கும் இன்னுமொரு நெருங்கிய உறவுக்காரர் மிகவும் நகைச்சுவையாகப் பழகுபவர் (இணையத்தில மட்டும்). 3 நாளாக ஸ்கைப்பில் தகவல் போட்டும் பதில் இல்லை. நகைச்சுவைக்காக அவர் பெயரை மாற்றிப் போட்டேன் பதில் இல்லை. விடிய எழும்பி பார்த்தால் முகநுால், ஸ்கைப் என அனைத்து தொடர்பிலும் இருந்து நான் விலக்கப்பட்டிருந்தேன். அது தான் எமக்கிடையிலான இறுதித் தொடர்பாக இருந்தது.

அன்று அவர் அந்த எழுத்துக்களை எழுத்தாக மட்டும் பார்த்திருக்கலாம் ஆனால் நான் எடுத்துக் கொண்ட முடிவு இது தான் “அவருக்கு என் மேல் இருந்த ஏதோ ஒரு கோபமோ அல்லது வெறுப்புக்கோ எனது அந்த எழுத்து ஓரு ஏதுவாக அமைந்து விட்டது. நானும் அவரின் எடுகோளையே பின்பற்ற வேண்டியதாகிவிட்டது”

இவை மூன்றும் சிறு உதாரணங்கள் மட்டுமே. இப்பதிவை எழுதுவதற்கும் சில நண்பர்களின் அனுபவங்களே காரணமாகிவிட்டது. காரணம் பலரும் ஒரு எழுத்தை ஒரு விடயத்துடனேயே நோக்குகிறார்கள். எனது சகோதரர் ஒருவர் தாய்க்கு எழுதிய கவிதையை காதலிக்கு எழுதியது எனக் கூட வாதிட்டவர் இருக்கிறார்கள். ஒரு சகோதரி மிகவும் அருமையாகக் கவிதை எழுதுவர் ஆனால் அவர் இளவயது மிக்கவர். அதனால் அவரை காதலிக்கிறாள் என்று கூறிக் கூறியே எழுதவிடாமல் செய்து விட்டார்கள். இப்போது அவள் புனை பெயரில் உறவினர் அறியாத இடத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாள்.

இப்படி தவறான நோக்கங்களால் பலர் இந்த இணைய எழுத்துலகிற்கு வரவே பயப்படுகிறார்கள். சில காலத்திற்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது பதிவர் சீபி. செந்தில் குமாருடன் பேசும் போது (கைப்பேசியில்) கூறினார். “முன்னர் எனக்கு கருத்திடுவதற்கே பயமாம் இப்படி காரசாரமாக திட்டி எழுதும் ஒருவர் நாம் எழுதும் கருத்தை வைத்து எம்மையும் திட்டி விடுவாரோ என்று பயப்பட்டதுண்டாம். இப்படி பேசி பழகிய பின்னர் தான் தெரிந்ததாம் இவரும் ஒரு காமடியன் தான் என்பது.”

எல்லோரிடமும் நான் கேட்பது இதைத் தான் எப்போதும் ஒருவனை அவனது எழுத்துக்களை மட்டும் வைத்து முத்திரை குத்தாதீர்கள். அவர்களது மற்ற பக்கங்களையும் நோக்குங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

குறிப்பு - அன்பு உறவுகளே மருத்துவ ஓய்வொன்றுக்காகவும், வேறு சில தனிப்பட்ட சில கல்விசார் காரணங்களுக்காகவும் இந்த இணைய உலகை விட்டு சில மாதங்கள் நான் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலையால் தங்களை தற்காலிகமாகப் பிரிந்து செல்கிறேன். மீண்டும் சில மாதங்களின் பின்னர் எல்லோரையும் சந்திக்க வருகிறேன்.
எனது இடத்தை யாரிடமாவது கையளித்துப் போவோம் என்பதற்காகத் தான் முதலில் ஒருவரைக் களமிறக்கினேன். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார. அதன் பின் ஒரு எழுத்துத் துறைசார்ந்த ஒருவரை இறக்கினேன் அவரும் அப்பப்போ நினைவு வருகையில் எழுதிவருகிறார். ஆனால் இறிதியாக நான் கண்டெடுத்து இறக்கிய ஒருவரில் பெரும் நம்பிக்கையுடன் கையளித்துச் செல்கிறேன். ஆனால் அவருக்கு எந்த அறிமுகம் நான் செய்யவில்லை. ஆனால் இணையம் பற்றியும், பதிவர்கள் பற்றியும் அறிவுறுத்தல் மட்டுமே கொடுத்தேன் தானே போராடி முன்னுக்கு வரட்டும் அப்போது தான் அதன் பெறுமதி தெரியும்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

16 comments:

எல்லோரிடமும் நான் கேட்பது இதைத் தான் எப்போதும் ஒருவனை அவனது எழுத்துக்களை மட்டும் வைத்து முத்திரை குத்தாதீர்கள். அவர்களது மற்ற பக்கங்களையும் நோக்குங்கள்// மனிதனின் எல்லா பக்கங்களையும் நம்மால் பார்க்க முடியாதே .
Tha.ma 4

என்ன தான் நெருங்கிய நன்பராக இருங்தாலும் நீங்கள் எழுதிய பொழுது அவர் இருந்த மனநிலையையும் சற்று பார்க்கவேண்டும் நன்பா. அவர் உங்களை நீக்கிவிட்டார் என்று நீங்கள் அப்படியே விட்டால் உங்களுக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் அல்லவா.

Athisaya said...

அருமையான அவசியமான கருத்துப்பதிவு அண்ணா.பதிவுலகுஎன்பது இதமான சொந்தங்களை கொண்டது.ஒருவகையில் பார்த்தால் மனித உணர்வுப்போராட்டங்களுக்கு சிறந்ததொரு வடிகால்.எந்த ஒரு எழுத்தாளனும் தன் நிலையில் வைத்து சக எழுத்தாளனையும் நோக்கும்' பக்குவப்பட்ட நிலைக்கு முதிர வேண்டும்.உணர்வோட்டங்களை ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டும்.கடைசி புண்படுத்தல் புறக்கணித்தல் ஆகியவற்றையாவது விலக்க முயல வேண்டும்.காலம் கண்டிப்பாக கனியும்.

சுதா அண்ணா மீண்டும் சந்திப்போம் பதிவுலகில்.தங்கள் தற்காலிக பிரிதலுக்கான தேவைப்பாடுகளை சிறப்பாக பூர்த்தி செய்து சிறப்பான பலன் பெற இந்த சிறிய தங்காவின் வாழ்த்துக்கள்.சந்திப்போம்.நம்பிக்கையோடு புறப்படுங்கள் அண்ணா...:)

இப்படித்தான் சிலர் எழுத்தை வைத்து சிலரின் முகம் என்று இடைபோடுவது சுதா!
எல்லாக்காரியங்களும் சிறப்பாக அமைய நானும் பிரார்த்திக்கின்றேன்! மீண்டும் நேரம் வரும் போது நேசமுடன் சந்திப்போம் !

உங்க பணிகளை சிறப்பாக செய்து முடித்து மறுபடியும் பதிவுகள் போட வாருங்க. வெயிட்டிங்க்.

Angel said...

சில தனிப்பட்ட சில கல்விசார் காரணங்களுக்காகவும் இந்த இணைய உலகை விட்டு சில மாதங்கள் நான் ஒதுங்கியிருக்க வேண்டிய நிலையால்//

கல்வி மிக மிக முக்கியம் சுதா .உங்க பணிகள் முடிந்தபின் மறுபடியும் வாங்க .take care.

Anonymous said...

செல்லுமிடமெல்லாம் வெற்றி கிட்டட்டும்..விரைவில் திரும்பி வருக...வாழ்த்துக்கள்...

Gobinath said...

விரைவாக திரும்பிவாருங்கள். காத்திருக்கிறேன்.

Yoga.S. said...

வணக்கம்,சுதா!மீண்டு வருக,சந்திக்கலாம்.

சந்திப்போம் அண்ணர்..

tharshi said...

தங்களின் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...திரும்பிவரும் வரையில் காத்திருப்போம் மதிஓடைக்கரையில்...

சீக்கிரம் நலம்பெற்று வாருங்கள்

பாலா said...

ஒருவரின் எழுத்துக்களை வைத்து அவரை ஒதுக்குவது தவறான செயலாகும்.

//உண்மையில் மிளாகாயத் தூளைப் பற்றி எழுதுபவன் உறைப்பாய்த் தான் இருப்பான் என்பதும் மருந்துகளை எழுதும் வைத்தியன் கை கசக்கும் என்பதும் தப்பான அபிப்பிராயமாகும்.//

உண்மைதான் அண்ணா.நல்லோர்க்கு காலமில்லை.என்றோ ஓர் நாள் அவர்களும் உன்னைப் புரிவார்கள்.காத்திருக்கலாம்.

நான்கூட உன்னை பலமுறை காயப்படுத்தியிருக்கேன்.என்னையும் மன்னிச்சிடுடா.

வாழ்வின் தடைகளைத் தூசியெனத் தட்டியெறிந்து சாதனைகளை வென்று வெற்றியுடன் சீக்கிரம் திரும்பி வா அண்ணா.என்றும் உனக்காக காத்திருக்கிறாள் உன் அன்புத் தங்கை.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top