Saturday, 7 January 2012

பாழ்பட்டுப் போகும் யாழ் மருத்துவம் (சில நெருடும் உண்மைகள்)         இந்த உலகத்தில் எந்த மனிதனும் கடவுளை நேரே கண்டதற்கான ஆதாரங்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதில்லை. இருந்தாலும் அதிகளவானோர் தமக்கு உயிர் கொடுக்கும் கண்கண்ட தெய்வங்களாக வைத்தியர்களையே மதிக்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் வைத்தியர்களோ மக்களை தம் பணம் கொழிக்கும் மரங்களாகவே நினைக்கிறார்கள்.
            அவர்களது தொழில் பக்தி தொலைக்கப்பட்டதாகவே என்னால் உணர முடிகிறது. கடந்த வருடம் மருத்துவமாதான தர்சிகாவின் கொலை வழக்கு அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த நீதி எங்கே ஒழித்தோடிவிட்டது என எவராலும் இனி தேடமுடியாது. அந்த குற்றவாளியான வைத்தியருக்கு பிணை எடுத்துக் கொடுத்ததே ஒரு தமிழ் வழக்கறிஞர் தான் என்பதை பலர் அறிவீர்களோ தெரியாது.
          அதன் பின் சிறிது காலத்தின் பின் ஒரு பத்திரிகையில் செய்தி ஒன்று பிரசுரமானது “அருந்ததியுடன் இருந்த வைத்தியர்கள்” என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது. அதன் உள் அர்த்தம் கடமை நேரத்தில் சில வைத்தியர்கள் மக்கள் காணக்கூடிய அறையில் இருந்து அருந்ததி திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். உண்மையில் அங்கிருந்தவருக்கு கடமை நேரமா? ஓய்வு நேரமா? என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அதற்கு அடுத்ததாக அவர்கள் செய்த வேலை தான் மிகவும் நகைப்பிற்குரியதாகும். அதாவது அதற்கு விளக்கம் கொடுத்து துண்டுப்பிரசுரம் ஒன்றை அச்சடித்து அனைவருக்கும் வைத்தியர்கள் தங்கள் கையாலேயே விநியோகித்தார்கள்.
          கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 வைத்தியர்கள் கடமைக்கு கையொப்பம் இட்டுவிட்டு தமது தனியார் வைத்திய நிறுவனத்துக்குச் சென்று கையும் களவுமாகப் பிடிபட்டதை பலர் அறிந்திருப்பீர்கள். அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் பெயரை மையப்படுத்தி இயங்கும் இணையத்தளம் ஒன்று யாழ் வைத்தியசாலை சம்பந்தமான செய்திகளை அடிக்கடி வெளியிடுவது பலரும் அறிந்திருப்பீர்கள். இவையனைத்தும் அங்குள்ள ஒரு வைத்தியர் மூலம் தான் செல்கிறது என்பது பலரது சந்தேகமாகும். காரணம் அத்தகவல்களின் உறுதிப்பாடும் தரவுகளுமாகும்.
              உங்கள் சத்தியப்பிரமாணங்கள் எங்கே போய்விட்டது. ஏன் இந்த பிழைப்பு பிழைக்க வேண்டிய தேவை தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவில்லை.
                 எனது தந்தையார் ஒரு உயர் குருதியமுக்க நோயாளியாவார். இவரது மாதாந்த மருத்துவ அமர்வுகளை மந்திகை (பருத்தித்துறை) வைத்தியசாலையில் தான் மேற்கொள்வார். கடைசியாக அவர் சென்ற நான்கு தடவைகளும் அவருக்கு குருதி அமுக்கம் சோதிக்கப்படவில்லை. ஒரு உயர்குருதி அமுக்க நோயாளியின் அமுக்கம் கட்டுப்படுத்தப்படாவிடில் மூளையில் உள்ள சிறிய குழாய்கள் வெடிப்பதன் மூலம் பாரிசவாதம் ஏற்படும் என்பது ஒரு பாரதூரமான விளைவாகும்.அந்த வைத்தியர் அதே மாத்திரைகளை மீளக் கொடுத்துள்ளார். அவரது கையொப்பத்துடன் (repeat all drug) என்பதைத் தான் எழுதியுள்ளார். ஆனால் நான் வீட்டில் வந்ததும் சோதித்தால் 160/110 என்ற முறையில் தான் பாதரச அளவு காட்டுகிறது. அந்தளவு தொழிலில் பற்று இல்லாமல் அலுப்புத் தட்டினால் ஓய்வு பெற்று வீட்டில் போய் இருக்கலாமே.
               அதை விட முக்கியம் இனிமேல் குறிப்பிடப் போவது தான். இது தான் நான் இப்பதிவை எழுதுவதற்கு முக்கிய காரணமாகும். கடந்த (03.01.2012) அன்று எனது மைத்துனி ஒருவர் யாழ் வைத்தியசாலையில் மரணமாகியிருந்தார். 51 வயதை உடைய இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாதுடன், சலரோகத்தாலும் பாதிக்கபட்டிருந்தார். அதன் பிற்பாடு அவரது காலில் ஒரு மாறாத காயம் ஏற்பட்டிருந்ததால் மந்திகை வைத்தியசாலையில் அவருக்கு கால் கழட்ட முடிவெடுக்கப்பட்டது (amputation) இருந்தாலும் வைத்தியர்களின் 40 நாட்களின் மிகப் பெரும் போராட்டத்தால் கால் காயம் ஓரளவு குணமாக்கப்பட்டு அதற்கு தோல் பிரதியிடலும் (skin graft) ம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு 5 நாளின் பின் வலிப்பு ஏற்பட்டு (fits) மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று மறுநாள் மீண்டும் வலிப்பு ஏற்பட்டு மரணமானார்.
       வைத்தியர்களின் பதில் என்ன வென்றால் அவரது இதயத்தில் துவாரம் இருந்ததால் தான் மரணமானாராம். அதற்கு அவர்களிடம் அவருக்கு அப்படி எதுவும் இருக்கவில்லையே எனக் கேட்ட போது அது பிறப்பிலேயே இருந்திருக்கலாம் ஆனால் கவனிக்கப்படத் தவற விடப்பட்டிருக்கலாம் என கூறினார்கள். அத்துடன் அவரது கை நடுக்கத்தால் மின் வரையியில் (ecg) ல் தெரியாமல் விட்டிருக்கலாமாம். இது எந்தளவுக்கு சாத்தியம் மின் வரையி என்பது அவர் தன் கையால் வரைவதில்லையே 15 வருடத்திற்கு மேலாக தீவிர மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருந்ததுடன் கடைசிக்காலத்தில் icu வில் இருந்தார். அது மட்டுமல்ல இதுவரை ஒரு நாள் கூட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதில்லை என்பதை அறிவிர்களா?

       hole in the heart என்பது தொற்று நோயல்லவே மரணத்தின் சில மணி முன்னர் வருவதற்கு.
    என்ன இருந்தாலும் நான் சட்ட நடவடிக்கைக்கு முன் நிற்கவில்லை காரணம் அவ் வைத்தியர்களும் உண்மையில் போராடினார்கள்.
  என் கணிப்பின் படி அவருக்கு கிருமித் தொற்றால் செப்டிக் (septic) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
   எது எப்படி இருப்பினும் கடவுள்கள் கூட தப்புச் செய்வதுண்டு. இம்முறை பக்தர்கள் நாங்கள் மன்னிக்கிறோம் என்றும் கடவுளாக இருக்க முயற்சியுங்கள்.
       இங்கு குறிப்பிட்டுள்ள தவறுகள் கடமை நேரம் பாராது இப்பணியை சிரமேற்கொண்டு இரவு பகலாக உழைக்கும் அழப்பரிய அர்ப்பணிப்புவாதிகள் மனதை பாதித்தால் என்னை மன்னிக்கவும்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

28 comments:

Yoga.S. said...

வணக்கம் ம.தி.சுதா!இப்போதெல்லாம் வைத்தியர்கள் தாங்கள் செலவிட்ட பணத்தை எவ்வாறு மீளப்பெறுவது என்று தான் சிந்திக்கிறார்களே தவிர, நோயாளிகளின் நிலை குறித்து அல்ல.இதனை விடவும் யாழ்.மருத்துவமனைக்கு போராடி வசதிகளைப் பெறும்,வைத்தியர்கள் "தங்கள்"பிரத்தியேக மருத்துவ மனைகளுக்கே நோயாளர்களை வற்புறுத்தி அழைப்பதாகவும் செய்திகள் வருகின்றன.அரசிடம் மட்டுமல்ல,அரச ஊழியர்களிடமும் மனிதாபிமானம் கிலோ விலையாகிவிட்டது.எல்லாம் "அவன்"செயல்!!!!

Yoga.S. said...

போராடி வசதிகளைப் "பெற்றும்" என்று வரவேண்டும்.

உங்கள் இழப்பிற்கு வருத்தப்படுகிறேன்.
'heart murmur' பிறக்கும் பொழுது இருப்பது சகஜம் தான் என்றாலும் பெரும்பாலும் ஐந்து அல்லது ஆறு வயதில் அடைபட்டு விடும். அப்படி இல்லையெனில் இயந்திரங்களின் மின்னலை குறுக்கீட்டில் இது போன்ற அசம்பாவிதங்கள் நேரும். எனினும், இதையெல்லாம் முன் கூட்டியே கவனிக்க வேண்டியது மருத்துவர்கள் மருத்துவத் தொழிலாளர்கள் கடமை. இங்கே கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அரசாங்க மருத்துவர்கள் தங்களுக்கென சொந்தமான தனியார் மருத்துவ நிலையங்களை அமைத்து அதன் மூலம் மக்களின் பணங்களை பிடுங்குகிறார்கள் ; இதனால் அவர்கள் அரச மருத்த்துவ மனைகளில் சரிவர செயலாற்றுவதில்லை ;

எப்பொழுதும் பக்தர்களாக...

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் ஹாஸ்பிடல் கட்டக்கூடாது என சட்டம் வர வேண்டும், அவங்க மனசு டைவர்ட் ஆகுதே

வணக்கம் மச்சி,

நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

மருத்துவத் துறையில் இருக்கும் ஒரு சிலர் தாம் கடவுளர்கள் என்பதனை மறந்து விடுகிறார்கள் என நினைக்கிறேன்.

சிலர் மிருகங்கள் போல நடப்பதையும் கண்டிருக்கிறேன்.

பதிவில் சில சம்பவங்கள் மனதைத் தொடும் விடயங்களாக இருக்கிறது. மருத்துவர்களிடம் இப் பதிவு சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்,

எந்த இணையத்தளம் மச்சி ஆஸ்பத்திரியினுள் புலனாய்வாளரை வைத்து செய்தி சேகரிக்குது? ஹி...ஹி..

மதி.சுதா உங்கள் இழப்பின் துயரை நான் புரிந்து கொள்கிறேன். எந்த உயிர் இழப்பும் கவலை அளிப்பதே.
மருத்துவத்துறை பண நோக்குடன் செயற்படுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
உலகில் அனைத்தும் பணம் பொருள் வசதி என்ற அடிப்படையில் செயற்படும்போது
மருத்துவர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது.
எமக்கு நெருக்கமான ஒருவரின் உயிர் இழப்பின்போது பலரும்
மருத்துவத்துறையினரையே பழி கூறுவது வழக்காமாகிவிட்டது.
மருத்துவர்களை கடவுளுடன் இணைத்துப் பார்க்கும் வழக்கம் எமது பாரம்பரியம்.
இது புரிந்து கொள்ளக் கூடியதே. இருந்தபோதும் அவர்கள்
கடவுள்களோ கடவுளுக்கு இணயைானவர்களோ அல்ல என்பதே உண்மை.
அவர்களும் ஆசாபாசம்இ களைப்புஇ தெரியாமல் தவறிழைத்தல் போன்ற பலவற்றைச் செய்யக் கூடும்.
இருந்தபோதும் கவலையுடன் மக்கள் வருவதால் அவர்கள் துயரை புரிந்து ஆறுதல் அளிக்க வேண்டிய கடமை இருப்பதை
மருத்துவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டியது அவசியமே.

இதெல்லாம் கேக்கிறப்போ தான் ஹாஸ்பிட்டல் பக்கம் போகவே பயமாயிருக்கு.

சிலர் முழுவைத்தியனாக மாறுவதற்காக செய்யும் செயல்கள் இவை. ஆயிரம் பேரைக் கொன்றால் தான் அரை வைத்தியனாமே.???

// எது எப்படி இருப்பினும் கடவுள்கள் கூட தப்புச் செய்வதுண்டு. இம்முறை பக்தர்கள் நாங்கள் மன்னிக்கிறோம் என்றும் கடவுளாக இருக்க முயற்சியுங்கள். //

மிகவும் நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

Admin said...

மருத்துவர்களுக்கு மனிதாபிமானம் மிக முக்கியம்..அது எல்லா மருத்துவரிடமும் இருப்பதில்லை என்று நினைக்கும்போது வருத்தமாய்த்தான் இருக்கிறது..
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)

உண்மைதான் அண்ணா. பெரும்பாலான வைத்தியர்கள்(ஒரு சிலரை தவிர) இன்று வைத்தியத்தை பணம் கொட்டும் தொழிலாகத்தான் பார்க்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை கடவுள்களாக பார்க்கிறோமே தவிர அவர்கள் கடவுள்களாக நடந்து கொள்வதில்லை.

K R Rajeevan said...

சுதா, மருத்துவர்களின் அலட்சியங்களை, நீங்களும் ஒரு மருத்துவர் என்கிற பொறுப்புணர்வோடு, அழகாக எழுதியுள்ளீர்கள்!

நல்ல பதி்வு!

என்னத்த சொல்ல டாக்குத்தர் செய்ற வேலையை

மதி உன்மையிலேயே காலத்திற்கேற்ற பதிவு, 2வாரங்களுக்கு முன்பு வட மாகாண ஆளூனரின் ஒன்றுகூடல் நடைபெற்றது,அதற்க்கு கிளிநொச்சி,வவுனியா,மன்னார் சுகாதாரண திணைக்கள அதிகாரிகள் வந்திருந்தார்கள்,அவர்கள் அதிக நேரம் கதைத்துக்கொண்டிருந்தது,அந்த பறக்கும் படை நடவடிக்கை பற்றீயும், அந்த இணையத்தள பதிவு பற்றியும் தான், அனைவரும் கொஞ்சம் பீதியில் இருந்தார்கள் எனலாம்.வருடம்தோறூம் எமது யாழ் பல்கலையில் இருந்து 20 மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறியும் இன்றூ வடக்கு மாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது..

மதி உன்மையிலேயே காலத்திற்கேற்ற பதிவு, 2வாரங்களுக்கு முன்பு வட மாகாண ஆளூனரின் ஒன்றுகூடல் நடைபெற்றது,அதற்க்கு கிளிநொச்சி,வவுனியா,மன்னார் சுகாதாரண திணைக்கள அதிகாரிகள் வந்திருந்தார்கள்,அவர்கள் அதிக நேரம் கதைத்துக்கொண்டிருந்தது,அந்த பறக்கும் படை நடவடிக்கை பற்றீயும், அந்த இணையத்தள பதிவு பற்றியும் தான், அனைவரும் கொஞ்சம் பீதியில் இருந்தார்கள் எனலாம்.வருடம்தோறூம் எமது யாழ் பல்கலையில் இருந்து 20 மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேறியும் இன்றூ வடக்கு மாகாணத்தில் வைத்தியர் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது..

Thava said...

தங்களது வரிகள் என்னை வெகுவாக சிந்திக்கவைக்கின்றன..இங்கு (மலேசியாவில்) இருந்துக்கொண்டு நீங்கள் சொன்ன பல தகவல்கள் தெரியாமல் போனதை எண்ணி வருத்தமடைகிறேன்//

நல்ல பதிவு..மிக்க நன்றி.தொடரட்டும் தங்கள் பணி.

balavasakan said...

முதலில் யாழ்ப்பாணத்தில் பாழ்படாது இருக்கும் துறை எது என்று உங்களால் கூறமுடியுமா...ஏன் இலங்கையில்எந்த துறை ஒழுங்காக உள்ளது என்று கூறமுடியுமா...?
இலவசமாக கிடைக்கும் எதையும் நூறுவீதம் சரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது உங்கள் தப்பு..அதைவிட யாழ்ப்பணத்தில் கிடைக்கும் இலவச மருத்துவசேவையின் தரம் பற்றி அறிய கொஞ்சம் யாழ்ப்பணத்திற்கு வெளியேயோ அல்லது இந்தியாவில் யாரும் இருந்தால் கேட்டுபாருங்கள்.

யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் தரமான மருத்துவசேவையின் நூறில் ஒன்று கூட சாதாரணமக்களுக்கு வேறு எங்கும் கிடைப்பதில்லை...நான் இப்போது வேலைசெயது கொண்டிருக்கும் மலையக பிரதேசத்தில் கூடவும் தான்..

முதலில் வைத்தியர்களை கடவுளகாளாக பார்ப்பதை தவிருங்கள் அவர்களும் வெறும் ஆசாபாசமுள்ள மனிதர்களதான் கடவுளே தப்பு செய்யும் உலகில் வாழ்யது கொண்டு ஒரு சில மனிதர்கள் தப்பு செயகிறார்கள எனபதற்காக அவர்கள் சார்ந்த துறையையே பாழ்பட்டு போனது எனபது எந்த வகையில் சரியாகப்படுகிறது...

உங்களுக்கு எப்போதும் தப்பு செயபவர்கள்தான கண்ணில் படுவார்கள் ... உணமையான மனிதாபமானத்துடன் சேவைசெயபவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.. ஒரு சிலரது செயற்பாடுகளை மட்டும் வைத்துகொண்டு ஒட்டுமொத்த யாழ்மருத்துவத்துறையே பாழ்பட்டு போனது எனபது அந்த நல்ல மனிதர்களையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது... இதுதான் ஒரு யாழ் குடிமகனாக அப்படி உணமையாக சேவைசெய்யும் மருத்துவர்கள் பற்றி நீங்கள் வெளிநில் சொல்லும் கருத்து இல்லையா...

balavasakan said...
This comment has been removed by the author.

@ Yoga.S.FR

நன்றி ஐயா... இன்னும் சொல்ல முடியாதவையும் இருக்கிறது ஐயா..

@ Balasooriyan Vasakan

இவ்வளவு கருத்திடும் நீங்கள் பதிவில் சுட்டப்பட்டுள்ள விடயங்களில் ஏதாவது ஒன்றுக்காவது விளக்கம் தரலாமே...

@ அப்பாதுரை....

நன்றி ஐயா... ஆனால் அதைக் கிளறுவதால் எதுவுமே வரப் போவதில்லை...

----------------

Mahan.Thamesh

நன்றி தமேஸ்... அவர்கள் (சிலர்) தனியர் நிலையததிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கு கொடுப்பதில்லை என்பதை மறுக்க முடியாது

------------
சசிகுமார்...

ஃஃஃஃஎப்பொழுதும் பக்தர்களாக...ஃஃஃ
மணியடிப்போமா?

------------
சி.பி.செந்தில்குமார் ....
தற்காலத்தில் தனியார் மருத்துவமனையும் தேவை தான் ஆனால் கடமை நேரத்தை சரிவர் செய்தாலே போதுமே..

balavasakan said...

ம்..ம்.. இது ஒன்றும் புதில்லவே பதிவர்கள் எதை வேணுமானாலும் எழுதலாம் பிறகு ஹிட்ஸ் வேணிமானால் யாழ்ப்பாணத்தை அல்லது ஈழத்தை இழுத்து விடலாம் ..... ஈழம் இப்ப மலிஞ்சு போட்டுது யாரும் வராங்கள் இல்லையா....

நிரூபன்....

ஃஃஃஃஃமருத்துவர்களிடம் இப் பதிவு சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்,ஃஃஃஃ

சேர்ந்துவிட்டது ஆனால் விளக்கம் கிடைக்கவில்லை..

ஃஃஃஃஎந்த இணையத்தளம் மச்சி ஆஸ்பத்திரியினுள் புலனாய்வாளரை வைத்து செய்தி சேகரிக்குது? ஃஃஃ

ஊருக்கே தெரிந்ததை நான் சொல்லியா தெரியணும்...

Muruganandan M.K.

ஐயா தங்களின் புரிதலுடன் கூடிய விளக்கத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது நன்றி...

உங்கள் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மதி. டாக்டர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கு வேலைப்பழு இருப்பதுவும் ஓரளவு உண்மைதான். அதேநேரத்தில் அவர்களது முதல்நோக்கம் பணம்பண்ணுவதே என மாறிவருவதுவும் உண்மைதான்.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

உங்கள் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...நல்லதோர் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க...

வாழ்த்துக்கள்...

எனக்கு ஒரு குடும்ப மருத்துவர் இருக்கிறார்.. மருந்து தரவேண்டாம் அவரை பார்த்து கதைத்தாலே பாதி வருத்தம் போயிடும். ம் சில கருப்பாடுகளால் மருத்துவ துறைக்கே அவமானம்..!!

//இந்த உலகத்தில் எந்த மனிதனும் கடவுளை நேரே கண்டதற்கான ஆதாரங்கள் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதில்லை.//

அப்பிடி இல்லையே.நான் கூட கடவுளைக் கண்டு பேசிக் கூட இருக்கிறேனே...

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top