Friday, 16 December 2011

வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு

      சில அதிசயங்கள் ரகசியமாகவே நடந்தேறிவிடுகிறது. நடந்தேறிவிட்ட ரகசியங்கள் கூட சிலவேளைகளில் மட்டும் தான் எம் காதுகளுக்கு எட்டுகிறது.
யாரிந்தப் பதிவர் என்பதே இந்த வருட ஆரம்பத்தில் தான் எனக்குக் கிடைத்தது.


      எமது முதல் அறிமுகம் ஒரு சர்ச்சையில் நாம் சிக்கும் போது எழுதிய பெரும் மடல் ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்தது. அத்தொடர்பிற்கு எமது கவிக்கிழவனாக இருந்த யாதவண்ணா தான் காரணமாக இருந்தார். 
    அன்றொரு நாள் ஒரு மெயில் வந்திருந்தது “தம்பி விரைவில் வெளிநாடு ஒன்றிலிருந்து ஊர் வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்“ என்று இருந்தது. அத்துடன் தானும் வன்னியின் இறுதிப் போர் வரை அங்கே இருந்த ஒரு நபர் எனவும் குறிப்பிட்டிருந்தார். யாரிவர் என நுழைந்து பார்த்தால் அவரும் ஒரு பதிவர் தான் என்றிருந்தது.
அவர் பதிவை பார்த்ததும் நானே ஒரு கணம் குழம்பிவிட்டேன் காரணம் அது 2008 ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவாகும்.
     பதிவுகளைப் பார்த்தால் ஒரு ரிதத்தில் இடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுத்தது. யார் இவர். ஏன் இப்படி ஒரு பித்தலாட்டம் ஆடுகிறார். ஏற்கனவே புலம்பெயர் தேசத்தில் இருந்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஒரு கூட்டம் ஒரு சில நாளுக்கு முன் தான் என் மீது கடுப்பாகி தொலைபேசி ஒன்றில் வாழ்த்து மாரி பொழிந்திருந்தார்கள்.
    நண்பரிடம் கேட்ட போது அவர் சொன்னார். சந்திக்க அவசரப்படாதே வந்தவர் நிற்பார் தானே. அத்துடன் ஒரு பொது இடத்தில் சந்தி காரணம் ஏதாவது கதை கொடுத்து வாங்கிவிட்டு அதை அங்கே போய் நின்று வடிவாகத் திசை திருப்பிப் போடலாம் என்றார்.
    ஆரம்பத்தில் எனக்கும் அவர் சொல்வது சரியெனவேபட்டது அதனால் பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லை. அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு மடல் வந்தது “தம்பி அங்கிருந்து வரும் போது தங்களைப் பார்க்கலாம் என்ற ஒரு ஆசையோடு தான் வந்தேன். அந்த காரமான மனிதன் எப்படி இருப்பான் என் ஆயிரம் ஆசையோ தான் வந்தேன் பரவாயில்லை நான் விரைவில் நாடு திரும்பிவிடுவேன்“ என்று இருந்தது.
       அம்மடலைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ செய்தது. காலை எழுத்ததும் முதல் வேலையாக என் தொலைபேசி அழைப்பையெடுத்தேன். “அக்கா எங்கே நிற்கிறீர்கள் உங்களை பார்க்க வேணும் போல இருக்கிறது” என்றேன். தான் கொக்குவிலில் ஒரு வீட்டில் நிற்பதாகச் சொன்னார். உடனேயே கிளம்பிப் போனேன்.
         வாசலில் போய் நின்று தொலைபேசி அழைப்பெடுத்துச் சொன்னேன். எதிரே ஒரு உருவம் “வாங்க தம்பி இப்பத் தான் அக்காவை பார்க்கணும் என்று தோணிச்சோ” என்றார். நான் கூனிக் குறுகிப் போனேன். அவரிடம் விடயத்தை சொல்ல மனம் ஒப்பவில்லை. அதனால் ஏதோ ஒரு பொய் சொன்னேன்.
எத்தனையோ நாள் பழகிய ஒருவர் போல கதைத்தார். தான் எப்படி வெளிநாடு போனதாக சொன்னார். அவர் கடவுள் பத்தியை பார்த்து வியந்து போனேன். ஒரு பெண்ணாக இவ்வளவு எதிர்ப்பையும் கடந்தார் என்பது இப்போதும் என்னால் நம்ப முடியாத அதிசயம்.
      எனது எழுத்து இவ்வளவு அந்நியோன்யத்தை ஏற்படுத்தியதா என என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. மீண்டும் கிளம்பும் முன் சந்திக்க வேண்டும் என இருவரும் திட்டமிட்டுக் கொண்டாலும். எனது வன்னிப்பயணமும் அவரது வெளியூர் பயணமும் மீண்டும் சந்திக்க விடாமல் தடுத்து விட்டது.
      ஆனால் அவர் தந்து விட்டுப் போன அவர் குரலில் அமைந்த பாடல் இறுவட்டுத் தான் எனக்கு வந்த ஒரு இக்கட்டான தனிமைக் காலத்தில் என்னை ஒரு தாயாக அரவணைத்தது. அப்பாடல் இது தான்.

        அவர்யாரென இனியும் சொல்லாமல் போவது தப்பல்லவா அவர் பெயர் பூங்கோதை. அவரும் ஒரு கலைக் குடும்பத்தின் வாரிசு. அவர்கள் குடும்பம் இந்தத் யுத்தத்தின் வடுக்களை தாங்கிய ஒரு உணர்வாளர் குடும்பம் தான். அவர் தந்தையோ நான் கண்டு வியந்த ஒரு எழுத்தாளர் ஏனென்று கேட்கிறீர்களா? வன்னியில் பெரும்பாலனவர் பேருக்கும் பதவிக்குமாக குழைந்து வாழ்கையில் ஒரு தவறை தவறென நூல் ஆக எழுதிய பெரும் துணிவாளன். அதை எழுதியதற்காகவே அந்த மாபெரும் ஒப்பற்ற கலைஞனை ஒரு நாயிலும் கேவலமாக சிலர் நடத்தியது நான் முன்பே அறிவேன். உடல் நோய் வாய்ப்பட்ட நிலையில் ஒரு பொறுப்பாளரை சந்திக்கச் சென்ற வேளை அவரை வெளி வாங்கில் வேண்டுமென்றே 2,3 மணித்தியாலம் காக்க வைத்திருந்த சம்பவமும் இருக்கிறது. ஆனால் அவர் எனக்காக ஒரு அக்காவை பெற்று வைத்திருப்பது எனக்கு அப்போது தெரியாமல் போய்விட்டது.
      அவர் அங்கே போய் எழுதிய என்னைச் சந்தித்ததைப் பற்றி ஒரு கவியாகவே எழுதியிருந்தார். உண்மையில் அதில் சில வரிகளை வாசிக்கையில் நானே என்னை நினைத்து வாய் விட்டுச் சிரித்தேன். இதோ அப்பதிவு...

இந்தக் கடுகுதான் இத்தனை காரமா?அழகிய மொழிநடை..... அத்தனையும் தனிநடை
காரமான விடயங்கள்... காத்திரமான கருத்துக்கள்
அன்புடன் தம்பி..... இப்படித் தொடங்கியது தான் அந்த உறவு
எத்தனை பெரிய விடயத்தையும் இத்தனை
இலகுவாய் இனிக்கத் தருகிறானே...
சிற்பத்தை இரசித்த எனக்கு அந்த சிற்பியைக் காண ஆசை
எப்படியிருப்பான்... எழுத்தின் படியே கொஞ்சம்
எடுப்பாக.. கடுப்பாக... எப்படியோ.. அவனைக் காணவேண்டும்
அந்த எழுத்துக்காக... அதன் வலிமைக்காக....
மீண்டும் எழுதினேன்... அன்புடன் தம்பி...
ஊருக்கு வருகிறேன்... உன்னைக் காணலாமா....
பதிலில்லை... பரிதவித்துப் போனேன்...
பதிலைக் காணோமே... பயந்தாங்கொள்ளியோ...
பலவாறு எண்ணம் ஓட கொஞ்சம் கவலை...
எதிர்பாராத ஒரு நாளில் என் தொலைபேசியில் அவன்...
எங்கே நிற்கிறீர்கள்... இதோ வந்து கொண்டிருக்கிறேன்..
அடுத்த சில மணிகளிலே... வீட்டு வாசலிலே...மோட்டார் சைக்கிளிலே...
அடேயப்பா... இந்தக் கடுகா... அத்தனை காரம்.....
கடுகு உருவத்தில் மட்டும் தான்....
இந்தக் குழந்தைச் சிhpப்பு அதன் எழுத்துகளில்
இம்மியளவுகூட இல்லையே...
ஆனால் அந்தக் காத்திரமான கருத்துக்கள்
அவன் பேச்சிலும் கூட....
யாழ்மண்ணில் ஒளிர்கின்ற பிரமாண்ட மின்குமிழ்...
நிச்சயமாய் அவன் எதிர்காலம் நின்று ஜொலிக்கும்...
சமூகத்தை நேசிக்கும் அவன் சரித்திரத்தில் நிமிர்வான்...
தனக்குத் தொpந்ததை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும்
தாராள மனம் படைத்தவன்.....
அட.... யாரது என்று யோசிக்கிறீர்களா...
வேற யாரு... நம்ம சுதா... மதிசுதா தானுங்கோ....
அவன் பெயருக்கு முன்னால் அந்த மதி...
அவனுக்குப் பொருத்தமானதே...
வாழ்க நீ.... வளர்க உன் திறன்...
நீள்க உன் சேவை.... நிறைவோடு வாழ்க...
(யாராவது பொறாமைப்படாதீங்க.... எனக்கு காய்ச்சல் வந்திடும்!!!)

அவரது வலைத்தளத் தொடுப்பு - பூங்கோதை படைப்புகள்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

28 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ளே!

rajamelaiyur said...

கவிதை ...கவிதை ...

Admin said...

பதிவை படித்தேன்..அல்லேலூயா பாடலையும் கேட்டேன்..இறுதியாக கவிதையும் வாசித்தேன்..நன்று..

என் வலையில்
'தனிமை தரிசனம்'

நல்ல பகிர்வு!

அனுபவப் பகிர்வு சுவாரசியமாக உள்ளது

அருமையான உறவுகள், அருமையான சந்திப்புகள் வாழ்த்துக்கள்...!!!

வாழ்த்துக்களுடன் நன்றிகளும்

இப்படி நல்ல உறவுகளையும் எழுத்துத் தேடித்தருகின்றது என்பதும் உண்மைதான் நல்ல நட்பினைச் சொல்லிக் கொடுக்கும் பதிவு தம்பி சுதா!

மதி,

பதிவுலகம் பல நல்ல உறவுகளையும் கொடுக்கிறது.

சகோதரி பூங்கோதை உங்களுக்காக எழுதிய கவிதையைப் படித்தேன்.

உங்களுக்கு இன்னேரம் காய்ச்சல் வந்திருக்கனுமே!

Admin said...

என் எழுத்துகள் தங்களுக்கு பிடித்ததில் மன மகிழ்கிறேன்.மற்ற பதிவர்கள், தங்கள் தள வாசகர்கள் என பார்க்கும் வண்ணம் தங்கள் தளத்தில் இடம் ஒதுக்கி என்னை முன்னிலைப்படுத்தி பதிவுலகுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என எதிர் பார்க்கவில்லை..என் எழுத்தின் மீதும் என் மீதும் காட்டிய அன்பிற்கு நன்றி தோழர்..

கோவி said...

நல்ல எழுத்து நல்ல உறவுகளை தரும்.. கவிதையை வாசித்தேன்.. மிக இயல்பாய் ..

ஆஆ.. மதிசுதா நானும் வியந்துதான் போனேன்....

உங்களைப் பற்றி கதைபோல ஒரு அழகான கவிதை.

பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது, அதேநேரம் இப்ப நல்ல உறவுகளும் கிடைக்கத்தான் செய்கிறது வலையுலகில்.

ஆனால், தப்பான சிலரால்... ஆரோடும் பழகப் பயந்து, நல்ல உள்ளங்களையும் தவிர்த்து விடுகிறோம் என்பதுதான் உண்மை.. வலைஉலகில்.

நெகிழ்வான சந்திப்பு.

பதிவர் அறிமுக முயற்சிக்கு சபாஷ்!

vanathy said...

சுதா, அழகான கவிதை. அக்காவின் நட்பு தொடர வாழ்த்துக்கள். தொடங்கியவிதம் ஏதோ மர்ம நாவல் போல இருந்தது. முடிவு அழகு.

Unknown said...

'வன்னியின் முதல் பதிவருடனான விபரீத சந்திப்பை' இரசித்தேன், சந்திக்க சந்தற்பம் வாய்க்காமல் போய் விடுமோ என நினைத்தேன், இறுதியில் சந்தித்து விட்டீர்கள்.

பத்தியின் வசனநடையில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கின்றேன்.

'இந்த கடுகுதான் இத்தனை காரமா?' கவிதையைப் வாசித்த கணத்தில் கடுகைப் பார்க்க வேண்டுமென எனக்கும் தோன்றியதில் வியப்பில்லை.

பூங்கோதையில் படைப்புகள் அனைத்தையும் அறியக் கிடைக்கவில்லை, இருந்தும் வலைப்பூவில் சிலவற்றை தரிசித்தேன்.

//இன்று நாரோடு சேர்ந்ததாலே பூவும் நாறுதையா..
நமக்குள்ளே பிளவு பண்ணி எம்
நாயகரின் தியாகத்தை தூசிக்கிறார்கள்..
இதற்கும் பெயர் துரோகம் தான்..//

//ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
அநாதைகளாய் எம் குழந்தைகள் அலைய வேண்டாம்
அவர் கனவுகளைச் சுமந்து
அறிவுப் போர் தொடுப்போம்…//

பூங்கோதையின் இவ்வரிகள் காத்திரமான வைரவரிகள்.

Anonymous said...

அக்காவின் கவி வரிகள் மிக நன்றாக உள்ளது ...

Yoga.S. said...

வணக்கம்,மதி!என்னவோ எழுச்சிப் பாடலாக இருக்குமென்று கேட்டுப் பார்ப்போமென்று.....................................!அட,"அந்தக் கோஷ்டி!"

ஹேமா said...

அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி மதி !

பகிர்வுக்கு நன்றி

அவங்களின் கவி வரிகள் ரெம்ப அழகா இருக்கு... சுதாண்ணா உங்க மேலே பொறாமையா இருக்கு.... அவ்வவ்

Unknown said...

பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது, அதேநேரம் இப்ப நல்ல உறவுகளும் கிடைக்கத்தான் செய்கிறது வலையுலகில்.

ஆனால், தப்பான சிலரால்... ஆரோடும் பழகப் பயந்து, நல்ல உள்ளங்களையும் தவிர்த்து விடுகிறோம் என்பதுதான் உண்மை.. வலைஉலகில்.
//

unmai..உண்மை

மதி சுதாவுக்கு வாழ்த்துக்கள்

அருமையாக அறிமுகம் செய்துள்ளீகள்
பாடல் முழுவதையும் கேட்டு ரசித்தேன் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9

Unknown said...

உண்மையிலேயே மதிசுதா அந்த கவிக்கு உரியவர்தான்....

அருமையான பதிவு அண்ணா.. உணர்வுகள் எப்பொழுதும் நமக்கு பிடித்தமான சிலருடன் தானாகவே சென்று ஒட்டிவிடும்.. அதுபோலதான் உங்கள் உணர்வுகளும்.

Unknown said...

நல்ல பதிவு! அருமையான
உண்மையான, பல செய்திகளை
அறிய முடிந்தது
நன்றி சுதா!

புலவர் சா இராமாநுசம்

ஆய்...பூங்கோதை அக்காவை சுதா சந்திச்ச பதிவா..

அக்காவிற்கு என் மேல சின்னக் கோவம்! என்னைச் சந்திக்க விருப்பம் என்று சொன்னவா. நான் கொஞ்சம் பயந்திட்டன்! அதால சந்திக்க வர முடியலை அக்கா! அடுத்த முறை உங்களைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன்.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top