Tuesday, 13 December 2011

இந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்

    கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழன் என்று ஒரு சொல் சொன்னால் ஈழம் என்ற ஒரு தேசம் தான் அனைவர் கண்ணிலும் வரும். அந்தளவுக்கு அந்தச் சொல்லுக்கே வலுச் சேர்த்தவர்கள் ஈழத்தமிழர்களே.
   இது என்றைக்குமே அழிக்க முடியாத வரலாறாகும். அந்தச் சொல்லுக்கு வலுச் சேர்க்க முழுத் தமிழர்களும் பங்கெடுத்தாலும் அதன் வடுக்களை முற்று முழுதாகத் தாங்கி நிற்பவர்கள் வன்னித் தமிழர்களே (வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும்). அவர்களது மீள் கட்டுமானத்திற்காக பல புலம் பெயர்ந்த தமிழர்கள் உழைக்கிறார்கள்.
   சுவிற்சர்லாந்தில் உள்ள என் உறவினர் ஒருவர் எம் மக்களுக்கு உதவுவதற்காக சிறிய தூரம் பஸ்சில் செல்ல வேண்டியிருந்தால் அதை நடந்து கடந்து விட்டு அந்தப் பணத்தை இங்கு அனுப்புவதாகக் கூறும் போது என் மெய் சிலிர்த்தது.ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் எம்மை வைத்து பணம் சேகரித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதும் மன வருத்தமே.
  இந்தத் தமிழ் நாட்டு பிரபலங்கள் இருக்கிறார்களே அவர்களில் பெரும்பாலனவர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? ஈழத்து ஏக்கத்தில் எம்மீது அப்பழுக்கற்ற பாசம் கொண்டிருக்கும் தமிழக மக்களை தம் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக மாற்றி விட்டார்கள்.இப்போது புதிய சந்தைப்படுத்தால் முறை என்னவென்றால் தம் படங்களில் எப்படியாவது ஈழத்தைப் புகுத்துவதாகும்.
7 ம் அறிவில் அந்த வசனத்தைப் புகுத்தும் போதே எனக்குக் கடுப்பேறியது. கடுப்பேறியதற்குரிய காரணம் அந்த வசனத்தில் வந்த ஒரு பகுதியான “அடிக்கணும் திருப்பி அடிக்கணும்” எல்லாரும் இதைத் தானே சொல்கிறீர்கள். அடிப்பதென்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ரம்போ படமல்ல கல்லெறிந்து ஹெலி (உலங்கு வானூர்தி) விழுத்துவதற்கு. எவ்வளவு காலம் தான் எங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தியே குளிர் காய்வீர்கள். அந்த வரிகளுக்காகவே புலம் பெயர் தேசத்தில் படம் பார்க்காதவனையும் உதயநிதி பார்க்க வைத்து விட்டார். அதற்காக நான் இட்ட முகநூல் கருத்து இது தான்.

7ம் அறிவு விளம்பரம் - அடிக்கணும் திருப்பி அடிக்கணும் ஒருத்தனை 9 பேர் தாக்கினது வீரமில்ல துரோகம்... அடுத்து உதய நிதியின் பெயர் ஒட்டல்.. எப்படி இருக்கிறது விளம்பரம்.. பணத்துக்காக எதுவும் செய்வாங்களாம் நாங்க அதைத் தூக்கி வச்சு வீர வசனம் பேசி சாகணுமாம்.. திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? அந்த நேரம் ஒருவர் முதல்வர், மற்றவர் மேயராம் இப்ப வந்துட்டாங்க பணம் உழைக்க... தயவு செய்து மற்றவங்க உணர்வை வித்துப் பிழைக்காமல் உங்க உழைப்பை விற்று பிழையுங்கள்.

    ராஜப்பாட்டை படத்தில் யுகபாரதி ஒரு வசனம் எழுதியிருந்தார். அதுவும் காதல் பாடலில், அதை ஓரளவு நான் பொறுத்துக் கொண்டேன் காரணம் அந்தச் சொல்லை மறக்கப்படமூடியாத இசையுடன் கூடிய பாடல் வரிகளுக்குள் புகுத்தி விட்டாரே என பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதைக் கூட பலரால் ஏற்றுக் கொள்ள முடியாவில்லை. அதற்கு யுகபாரதி தனது வலைத்தளத்தில் என்ன கூறியிருக்கிறார தெரியுமா?
பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் காதல் வந்ததே பாடலில் கவிஞர்.வைரமுத்து இலங்கையில் நடக்கின்ற போரை நிறுத்து காதல் வந்ததே என்று எழுதியதைப் போலத்தான் இதுவும்.தனி நாடு என்னும் இலக்குக்காக முள்வேலியும் முடிவில்லா போரையும் தொடர வேண்டிய இச்சூழலில் பாடலின் அர்த்தத்தில் பிழை ஏற்படுத்தி தமிழ் உணர்வுகளின் இதயத்தை காயப்படுத்த வேண்டாமே.இப்பாடலை உச்சிமோர்ந்து வரவேற்கும் தோழர்களிடம் இப்பாடலுக்கான மெய்யான பொருளை கேட்டுத் தெளிவு பெறுங்கள்.கருத்துக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறப்படும் கருத்துக்கள் களங்கமுடையன என்பதை யாவரும் அறிவோம்
அப்படியானால் நீங்களும் போரை விரும்புகிறீர்களா யுகபாரதி. போர் என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா? குருதி எப்படி ஒரு வெடுக்கு நாற்றம் வீசும் என்று மணந்திருக்கிறீர்களா?
   
     இதே போலத் தான் கவிஞர் தாமரையும் ஒரு கவியில் தலைவன் வரவேண்டும் மீண்டும் ஈழம் மலர வேண்டுமென்று ஒரு முறை கவி புனைந்திருந்தார். அதற்கு நான் கருத்திட்டிருந்தேன் அவர் வந்தால் உங்கள் கணவரை போருக்கு அனுப்பவிர்களா ? என்று கருத்திட்டேன். எதையும் சொல்லில் சொல்லி விட்டுப் போகலாம் அதை அனுபவிக்கும் போது தான் தெரியும்.
  அதற்காக கவிஞர்கள் போருக்கெதிராக கவி புனையவில்லை என்று நான் கூற வரவில்லை. “ஈழத்தில் போர் ஓய வேண்டும்“ “சந்திரிக்காவும் பிரபாகரனும் சம்மந்தியாகணும்“ என்றெல்லாம் பொதுமைப்பாடான வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது.
   மேற்குறிப்பிட்டுள்ள கவிஞர்களே நான் உங்கள் கவி வரிகளை அதிகமாய் நேசிக்கிறேன்.ஆனால் போர் என்ற அந்தக் கொடிய அரக்கனை நான் என்றுமே வழி மொழியப் போவதில்லை. இது பற்றிக் கதைத்ததற்காக தந்தையுடனேயே கருத்து முரண்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் கதைக்காமல் இருந்திருக்கிறேன்.உங்கள் எழுத்துக்கள் என்றும் பலம் வாய்ந்தவை அதை போருக்கெதிராக மட்டுமே பிரயோகியுங்கள் இன்னும் உங்கள் கவி வலுப்படும்.
     என் சக தமிழ் உறவுகளுக்கும் ஒரு அன்பான வேண்டு கோள் இப்படியான வசனங்களைத் தூக்கிப் பிடித்து நீங்களும் பரப்புரையில் ஈடுபட்டு அவர்களை பணக்காரர்கள் ஆக்க முனையாதிர்கள். இது ஒவ்வொருவரதும் உணர்வு அது விலைமதிப்பற்றது அதை மற்றவன் பாழாக்க அனுமதிக்கக் கூடாது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

57 comments:

// திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? //

நெத்தியடி கேள்வி மதி. தமிழ் உணர்வை யார் உசுப்ப வேண்டும் என்று மனசாட்சி வேண்டும். அவர்களின் இந்த யுக்தி தோல்வி அடைந்தது. படமும் சேர்ந்துதான்.

படத்தின் பெயர் ராஜபாட்டை. ராஜப்பேட்டையல்ல நண்பா.

அருமையான பதிவு சகோதரரே
தொடருங்கள் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

முதலில் உங்கள் இந்தப்பதிவுக்கு ஒரு சலூட்

K.s.s.Rajh said...

////இது என்றைக்குமே அழிக்க முடியாத வரலாறாகும். அந்தச் சொல்லுக்கு வலுச் சேர்க்க முழுத் தமிழர்களும் பங்கெடுத்தாலும் அதன் வடுக்களை முற்று முழுதாகத் தாங்கி நிற்பவர்கள் வன்னித் தமிழர்களே (வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும்)////

பாஸ் இதில் வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும் என்று அடைப்புக்குள் போட்டு இருகீங்க எனக்கு புரியலை வசிக்காதோரும் உள்ளடங்கும் என்று வரனும்மா? இல்லை வதித்தோரும் என்று வரனும்மா அப்படி வந்தால் நீங்கள் சொல்லவரும் கருத்து என்ன?

K.s.s.Rajh said...

////அப்படியானால் நீங்களும் போரை விரும்புகிறீர்களா யுகபாரதி. போர் என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா? குருதி எப்படி ஒரு வெடுக்கு நாற்றம் வீசும் என்று மணந்திருக்கிறீர்களா?////

சரியான ஆதங்கம்

Yoga.S. said...

வணக்கம்,மதி!கேள்விகள் நியாயமானவை தான்.யார் இதையெல்லாம் எண்ணிப்பார்க்கப் போகிறார்கள்?உங்கள் கருத்தே என் கருத்தும்!போருக்கு எதிராக கருத்திட்டால் வரவேற்பேன்.குளிர் காய்வோர் இருக்கும் வரை..................................?!

Yoga.S. said...

ராஜ்!உங்கள் தளம் என்னால் கடந்த இரு நாட்களாகப் பார்க்க முடியவில்லை,ஏன்????

உங்கள் உணர்வுகள் புரிகிறது நண்பா...!!

Yoga.S. said...

இப்போது தெரிகிறது,நன்றி ராஜ்!

எல்லாரும் சிந்திக்க வேண்டிய தருணம்......

! சிவகுமார் !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரம்..

திருத்திக் கொண்டு விட்டேன்..

SURYAJEEVA said...

நம் மக்கள் சினிமா மோகத்தில் ஆழ்ந்து இருக்கும் வரை எதுவும் மாறப் போவதில்லை

MANO நாஞ்சில் மனோ

புரிந்துணர்வுக்கு நன்றி அண்ணா...

----------

ஹைதர் அலி

நன்றி சகோ அடுத்து வரும் நாட்களின் இன்னும் தொடரும்..

K.s.s.Rajh said...

ஃஃஃஃபாஸ் இதில் வன்னியில் வசித்தோரும் உள்ளடங்கும் என்று அடைப்புக்குள் போட்டு இருகீங்க எனக்கு புரியலை வசிக்காதோரும் உள்ளடங்கும் என்று வரனும்மா?ஃஃஃஃ

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

வன்னிவாசிகள் என்று தனியே குறிப்பிட்டிருந்தால் இடம்பெயர்ந்து அங்கு சென்று வாழ்ந்தோரை தவறவிட்டதாக் கருதக் கூடுமல்லவா.. அதனால் தான்..

Yoga.S.FR...

நன்றி மாஸ்டர்...

யார் போருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும் அவர் எனக்கு எதிரி தான் (அந்த இடத்தில் மட்டுமே)

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

நெற்றிக்கண்

முதலில் தமிழ்மணம் நட்சத்திரதிற்கு வாழ்த்துகள்.

முன்பே இதற்கு பின்னோட்டம் போட இடம் தேடினால் Comment Box காணும். பின்பு விட்டுவிட்டேன். இப்போது மீண்டும் பின்னோட்டம் இடுகிறேன்.

பின்னோட்டம் Comment (Font) சைஸ் சின்னதாக இருக்கிறது. கொஞ்சம் பெரிதுப் படுத்தவும்.

சினிமாகாரர்களுக்கு ஈழம் என்பது, எருதின் புண் போன்று..... காக்கைகளுக்கு அந்த வலி தெரியாது....?

//உங்கள் எழுத்துக்கள் என்றும் பலம் வாய்ந்தவை அதை போருக்கெதிராக மட்டுமே பிரயோகியுங்கள் இன்னும் உங்கள் கவி வலுப்படும்.//

தங்கள் கருத்துக்களை வரிக்குவரி ஏற்கிறேன். போதும் போர்,
வேண்டாம் போர்.எவருடனுமே!!!

வாழ்த்துகள்.

நட்சத்திரத்திற்கும் இந்த பதிவுக்கும் சேர்த்து.

ஒசை said...

சத்தியமான பதிவு. எழுதுவது சுலபம். வாழுவது கடினம்.

நெத்தியடி........

suryajeeva said...
நம் மக்கள் சினிமா மோகத்தில் ஆழ்ந்து இருக்கும் வரை எதுவும் மாறப் போவதில்லை...

----------

சகோ அதை கலையாகப் பார்த்தால் தப்பில்லையே எங்கள் ஆட்கள் கோயில் போலல்லவா பார்க்கிறாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சகோதரம்...

கவி அழகன் said...

நன்றி நன்றி... அட நான் குடிச்ச நுங்கில கூட 2 கண் தானே வருது

-தோழன் மபா, தமிழன் வீதி said...

மன்னிக்கணும் சகோ அது தான் டெம்ளெட்டோட வந்ததால் அப்படியே விட்டு விட்டேன்..

நன்றி சகோ..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நன்றி சகோ என்னோடு கரம் கோர்க்க இத்தனை கைகள் உள்ளது மிகவும் சந்தோசமாயிருக்கிறது..

ஒசை. said...

நன்றி சகோதரம்...

தமிழ்கிழம் said...

நன்றி சகோதரம்...

முதலில் தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்,
அட்டகாசமான பதிவு பாஸ், நானும் கொஞ்ச நாட்களாகவே இவற்றால் கடுப்பாகித்தான் இருக்கிறேன்.

ARV Loshan said...

சரியாக சொன்னீர்கள் மதிசுதா..

நானும் இந்த ஏழாம் அறிவு பற்றிக் கொந்தளித்திருந்தேன்.
இப்போது ராஜபாட்டை பாடல் வரி பற்றியும் குமுறிப் பதிவிட்டிருந்தேன்.

சில இந்திய நண்பர்களின் உதவியுடன் அந்தப் பட இசையமைப்பாளரிடம் முறையிட்டேன். அவர் பொறுப்பாக முடிந்தால் திருத்துகிறேன் என்று சொன்னார்.
ஆனால் பாடலாசிரியர் சொன்னதைத் தான் வாசித்தீர்களே.

இந்த வேதனைகளை விற்கும் வியாபாரத்தையும் ஒன்று சேர்ந்து எதிர்ப்போம்.

எங்கள் சோகங்களுக்கு இரங்காவிட்டாலும் பரவாயில்லை; அதை வைத்துப் பணம் சம்பாதிக்கும் இழி செயலை எதிர்ப்போம்.

தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் சகோ..

எல்லாவற்றையும் வியாபாரமாக்கியவர்கள் உணர்வையும் வியாபாரமாக்குகிறார்கள்.

கனவுலகில் சஞ்சரிக்கும்
திரையுலகு நம் மனதில் நல விதைகளை
விதைக்க வேண்டும் ...
மாறாக செய்வினைகளை விதைத்தால்
மனம் கெடுவது சாத்தியமே..

உங்கள் கருத்துக்கள் ஏற்புடையது..
எதிர்வாதம் இங்கே சாத்தியமில்லை.

ஈழம் என்ன தொட்டு நக்கும் ஊறுகாயா என்றோர் பதிவில் என் மன ஆதங்கங்களைக் கொட்டியிருந்தேன் மச்சி!
போர் பற்றியோ, அல்லது போரின் வலி பற்றியோ அறியாதோர்கள் மீண்டும் உசுப்பேற்றுவது வேதனையளிக்கிறது!

மீண்டும் ஓர் பிள்ளை பிறந்து காடெல்லாம் அலைந்து ஆண்ட பரம்பரையின் கொடியினை ஆகாயத்தில் பற்க்க வைப்பானாம்?
ஹே..ஹே...இப்படி ஓர் புலம் பெயர் நாட்டுக் கவிக் குயில் கூவுகிறது!

முடியலை மச்சி!

நாம என்ன செய்வது?

ஆண்ட பரம்பரையின் கொடியைப் பற்க்க வைக்க முன்னாடி இன்று அந்தரித்துப் போய், அவலப்பட்டு இருக்கும் முன்னாள் போராளிகளையும், போராள் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாமே?

லோசன் அண்ணா கூறியது போல, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எம்மை வைத்துப் பிழைப்பு நடத்துவோரை எதிர்க்க வேண்டும்! இப்போது ஈழம் எனும் வார்த்தைப் பிரயோகத்தினை சினிமாவில் காட்டினாலே வியாபாரம் பிச்சுக்கிட்டு ஓடும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது! இவர்களின் இழி செயலுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் மச்சி!

நோ கமெண்ட்ஸ்... அடுத்த பதிவில் சந்திப்போம் பாஸ்

தங்கள் பதிவு பாராட்டுக்குரியது ......

....ஈழப்போர் தொட்டுக் கொள்ளும் ஊறுகாயா ?

Unknown said...

புலிக்கொடி - சோழர்களின் கொடி!
தஞ்சாவூர் சோழர்களின் முக்கிய நகரம்.
அப்படிப்பட்ட தஞ்சாவூரில் சில ஆண்டுகளுக்குமுன் வறட்சி காரணமாக நெற்செய்கை பாதிப்புக்குள்ளாகி, வறுமை காரணமாக விவசாயிகள் எலிக்கறி புசித்ததாக இந்தியப் பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தன. அதைத்தான் அந்தப் பாடல் வரிகள் சொன்னது!
அதற்கும் ஈழத்துக்கம் சம்பந்தமில்லை!

காயம்பட்டு கிடக்கும் ஒருவரை பார்த்து கண்ணீர் வடித்து நடிப்பவனிடமும், யாராவது உதவுங்களேன் என்று கூச்சல் போடுபவனும் மனித நேயம் என்ற சொல்லுக்கு தகுதியற்றவர்கள்.

நீரோடை-மகேஷ்

Unknown said...

திரு உதயநிதி அவர்களே அந்த 9 பேரில் உங்க தாத்தாக்கும் அப்பனுக்கும் பெரும் பங்கிருக்கிறதை மறந்திட்டிங்களா? அந்த நேரம் ஒருவர் முதல்வர், மற்றவர் மேயராம் இப்ப வந்துட்டாங்க பணம் உழைக்க... தயவு செய்து மற்றவங்க உணர்வை வித்துப் பிழைக்காமல் உங்க உழைப்பை விற்று பிழையுங்கள்.//


ஆயிரம் ஆயிரம் ஈழத்தமிழர்களில் மனதில் எழுந்த கேள்வியை ஆணித்தனமா கூறியிருக்கின்றீர்கள் தம்பி.
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

Unknown said...

நீங்கள் சில விஷயங்களை சொல்லும்போது ஏற்றுக்கொள்கிறேன்!

Admin said...

அருமையாகச் சொன்னீர்கள் ..இது ஏற்றுக்கொள்ள வேண்டுயதுதான்.

தர்ஷன் said...

நன்றி சகோ... பலருக்கும் கடுப்பாகத் தான் இருக்கிறது...

LOSHAN said...

நன்றி அண்ணா எனக்கு முதல் இதைப் பதிவிட்டது நீங்கள் தானே...

தமிழ் உதயம் said...

சகோ இது வெளிப்படையாக நடப்பது மறைமுகமாக என்னென்னத்தை வியாபாராமாக்கிறாங்களோ யாருக்குத் தெரியும்...

மகேந்திரன் said...

நன்றி சகோ...

யாருமே இப்படி எதிர் வாதத்திற்கு வராமல் போனால் எப்படி உண்மைகளைக் கக்கி டவுசரை உருவுவது...

நிரூபன் said...

மச்சி உன்பதிவு வாசித்தேன்...

எல்லோரும் புடுங்கணும் கிழிக்கணும் எண்டுறாங்களே தவிர ஒண்டையும் செய்யிறாங்களில்லையே..

துஷ்யந்தன் said...

ஃஃஃஃநோ கமெண்ட்ஸ்... அடுத்த பதிவில் சந்திப்போம் பாஸ்ஃஃஃ

வாங்க அப்பு வாங்க விளங்குது...

நிலாமதி said...

அக்கா அது தான் தெரியவில்லை..

நன்றி அக்கா...

ஜீ... said...

ஜீ நீங்கள் சொல்லும் கருத்தையும் சம்பவத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் படத்தின் கதையையும் அதன் காட்சியமைப்பையும் பாடல் பொருந்தும் இடத்தையும் என்னால் ஒருமிக்க முடியவில்லையே...

Wonderful collections said...

அது உங்களுக்கு விளங்குது அவங்களுக்கு விளங்கணுமே சகோ...

மகாதேவன்-V.K said...

நன்றி அண்ணா உண்மையில் இது கடுப்பில் இட்ட பதிவு தான்...

மதுமதி said...

நன்றி சகோ அனைவருக்கும் உறைக்க வைக்கணும்...

நானும் உங்கள் பக்கமே சுதா.. நாமனைவரும் இணைந்தால் அந்த பச்சோந்தி சினிமா காரர்களின் சுயரூபத்தை கிழிக்கலாம். கிழிப்போமா அல்லது வழமை போல் அவனுங்களுக்கு காவடி தூக்க போவோமா?

காசுக்காக எதையும் எழுதும் இவர்கள் விபச்சாரிகளைவிட கேவலமானவர்களே...

Anonymous said...

Agree!!! Tamilnadu politics and cinema need our currency only.

போர் என்றால் எப்படி இருக்குமென்று தெரியுமா? குருதி எப்படி ஒரு வெடுக்கு நாற்றம் வீசும் என்று மணந்திருக்கிறீர்களா?
நியாயமான கேள்வி அண்ணா. மீண்டுமொருமுறை அந்த வேதனை மிகுந்த காலம் எம்மக்களுக்கு வேண்டாம்.

Unknown said...

இந்திய தமிழ் சினிமாக்காரர்கள் காசுக்காக என்னவும் செய்வார்கள்.... எதையும் விற்பார்கள்.
சிந்திக்க வைத்த பதிவு!!

ஒரு இலங்கைத் தமிழரின் பார்வையில் இருந்து இதுவரை இவ்விசயத்தில் சிந்தித்ததுயில்லை. உங்கள் கருத்து நியாயமானதே. சினிமா என்றில்லை பரவலானவர்களிடம் இருக்கும் ஒரு குணம். குறுகியப் பார்வை, குறுகியப் பற்று, அடிக்கு அடி குணம். சினிமா பெரிய ஊடகமாகயிருப்பதால் அதைத் தவிர்க்கலாம்.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top