Monday, 12 December 2011

நாடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்


  திரைத்துறையின் தாக்கத்தால் நாடக மேடைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தாலும் நாடகங்களுக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைந்ததில்லை.
     ஒருவருடைய நடிப்புத் திறனை சரியாக வெளிப்படுத்தவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் நாடக மேடைகளே சிறந்த களமாக இருக்கிறது.
   ஆனால் நாடக மேடைகளில் காட்சிக்குப் புறம்பான பல நகைச்சுவைகள் இடம்பெறுகின்றன. அவை காலாகாலத்திற்கும் அழியாத நகைச்சுவையாகவே இருக்கின்றது
   அதில் 2 நகைச்சுவைகள் பல தசாப்த்தத்திற்கு முன்னர் இடம்பெற்றாலும் இன்றும் அதை கூறி விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு.
முதலாவது நகைச்சுவை
   ஒரு அரச நாடகத்தில் தோன்றும் நாயகனுக்கு மேடை ஏறுவதானால் கள்ளுக் கொடுக்க வேண்டும் இல்லாவிடில் அரசனாக நடிக்கும் அந்த நாயகன் கடுப்பாகி விடுவான் நடிக்கவே மாட்டான்.
   ஒரு முறை நாடக தினத்தில் கள்ளுக் கிடைக்கவில்லை. வலுக்கட்டாயமாக அந் நாயகன் மேடை ஏற்றப்பட்டான்.
   அதில் ஒரு காட்சியில் அந்நிய நாட்டிலிருந்து அம் மன்னனுக்கு எச்சரிக்கை ஓலை அனுப்பப்டுகிறது. அதை காவலன் வந்து சொல்கிறான்
காவலன் - அரசே அந்நிய நாட்டில் இருந்து தங்களுக்கு ஓலை ஒன்று வந்திருக்கிறது. (அந்நிய மன்னனின் மடல்)
அரசன்  - கொண்டு போய் பொன்னம்மாக்கான்ர கோடிக்கை பறியடா.
(கோடி என்பது வீட்டின் கொல்லைப்|புறமாகும்)
மறு நாள் காவலன் - அரசே அந்நிய நாட்டுப்படைகள் நம் நாட்டின் மீது படையெடுத்துள்ளன.
அரசன் - எல்லாரும் போய் வேலை (ஈட்டி என்றும் சொல்லலாம்) டுங்கோடா
......... பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்.

இரண்டாவது நகைச்சுவை
   ஒரு ஊரில் சிங்கன் என்ற றவுடி இருந்தான். அவனுக்கு எதிர்மறையான பாத்திரமே வழங்கப்பட்டிருந்தது.
அந் நாடகத்தின் இறுதிக் காட்சியின் உச்சக்கட்டத்தில் நாயகன் அந்த வில்லனை (சிங்கனை) கொல்கிறன்.
  கொன்று விட்டு தனது வெற்றியைக் கொண்டாடுகிறான், எக்காளமிட்டுச் சிரிக்கிறான், கொக்கரிக்கிறான், கத்தினான் இப்படி ஏராளம் செய்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் ஆரவாரம் செய்தார்கள். அவர்களுக்குகள் ஒருவன் 'சிங்கன் செத்தான்டா' என்றான்.
    இது சிங்கன் காதுக்கு வீழ்ந்தது தான் தாமதம் துள்ளி எழுந்து நின்ற சிங்கன் 'மயிரச் செத்தான்டா சிங்கன்' என்றான்
   அந்நாடகத்தின் உச்சக்கட்டக் காட்சியின் நிலை எப்படி இருந்திருக்|கும்.

  இப்படி பல நகைச்சுவைகள் இருக்கிறது. நாடகத்துறை மழுங்கடிக்கப்பட்டாலும் எத்தனை காலாகாலத்திற்கும் இப்படியான நகைச்சுவைகள் சாகாவரம் பெற்றவையாகவே இருக்கும்.


குறிப்பு - இது எனது தமிழ்மண வார நட்சத்திரத்துக்கான முதல் பதிவாகும். விரைவில் ஒரு அதிரடிப் பதிவை எதிர் பாருங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

55 comments:

Unknown said...

மாப்ள அழகா சொல்லி இருக்கீங்க...நொடிந்து வரும் கலை புத்துயிர் பெறவேண்டும்!

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.

நாடகம் நேருக்கு நேரா பார்த்து ரசிக்கும் ஒரு அனுபவம் இல்லியா. பார்க்கும் ரசிகர்களும் அதில் பங்கு பெற்றுவிடுவார்கள் போல இருக்கு.

அண்ணா வாழ்த்துக்கள்....

Yoga.S. said...

வணக்கம்! நகைச்சுவை பிரமாதம்!ஆனாலும்,எங்கள் தொப்புள் கோடி உறவுகளுக்கு எங்க பேச்சு மொழி அதிகம் புரியாது!அதனால் அரும்பதவுரை விளக்கம் இடுதல் அவசியம்!ஓலை என்பது அரசர்கள் தூதர்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள பயன்படுவது.ஈழத் தமிழர் பேச்சு வழக்கில் ஓலை என்பது தென்னை மர இலை(தென்னோலை) என்று பொருள்படும்!

Yoga.S. said...

காவலன் - அரசே அந்நிய நாட்டுப்படைகள் நம் நாட்டின் மீது படையெடுத்துள்ளன.
அரசன் - எல்லாரும் போய் வேலை எடுங்கோடா./////அதாவது "வேல்" என்ற ஆயுதத்தை எடுங்கள் என்று அரசர் சொல்கிறார்!

அன்பு தனிந்ததால்தான், ஜனங்களுக்கு சிரிப்பும் மழுங்கிவிட்டது போலும் இல்லையா...!!!

@ விக்கியுலகம் said...

நன்றி விக்கி அண்ணா.. அதன் புகழ் என்றுமே மழுங்கது..

@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நன்றி சகோ

@ ஆகுலன் said...

நன்றிடா தம்பி..

@ Lakshmi said...

நன்றி அம்மா.. அதில் கிடைக்கும் இன்பமே என்றும் தனி இன்பம் தான்..

@ Yoga.S.FR said...

தங்கள் பாசத்துடன் கூடிய அறிவுரைக்கு நன்றி மாஸ்டர் கட்டாயம் கவனத்திலெடுக்கிறேன்..

என்ன அறிவுரையானாலும் சொல்லுங்கள் அது தான் என் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்..

@ MANO நாஞ்சில் மனோ said...

நன்றி அண்ணா.. எம்மை வருத்திச் சிரிக்க வைப்பதில் தனி நகைச்சுவையல்லவா..

Yoga.S. said...

என்னமோ மணத்தில் நட்சத்திரம் என்று குறிப்பிட்டீர்கள்.வாழ்த்துக்கள்!(தலைப்பில் "நாடக" என்பதற்குக் காலைக் காணோம்!கவனியுங்கள்!)

நட்சத்திர வாழ்த்துக்கள்

Admin said...

மேடை நாடகத்தை நினைவூட்டியமைக்கு நன்றி..

நல்ல நகைச்சுவையும் நாடகத்தின் தாற்பரியத்தையும் உணர்ந்து நல்ல பதிவை தந்து இருக்கும் சுதாவுக்கு நட்சத்திர வார வாழ்த்துக்கள் தொடர்ந்து காத்திரமான பதிவையும் தாருங்கள்.

ஈழத்து நாடக மேடை .சின்னத்திரையாலும் ,போதிய ஊக்கிவிப்பு இன்மையாலும் நம் வடமோடி ,தென்மோடி நாடகங்களும் ,அவைக்காற்றுக் கழகத்தின் படைப்புகளும் ,பல அண்ணாவிமாரின் கலைப்புறக்கனிப்பாலும் ,இன்று நம் நாடகக் கலை இழந்து போய்க்கொண்டிருக்கின்றது !வித்யாதரன்,கைலாசபதி,சிவத்தம்பி, என் பல ஆசான்களின் வழிகாட்டல் இப்போது இல்லை .மெளனகுருவின் வழிகாட்டலையும் பலர் வரவேற்றக வேண்டிய தருனம். மீண்டும் நாடகமேடை புத்துயிர் பெறவேண்டும் .ஈழத்தில் நலிவடைந்த நாடகக் கலைஞர்களையும். நீங்கள் இனம் காட்டி ஒரு பதிவை இந்தவாரத்தில் ஈடவேண்டும் அன்புச் சகோதரா!

நாடகங்களை நேரடியாகப் பார்த்து ரசிப்பது ஒரு இனிய அனுபவம்தான். அதிலும் இவைபோன்ற சுவையான நிகழ்வுகள் என்றுமே மறக்க இயலாதவை. வாழ்த்துக்கள் மதிசுதா.

மிகசிறந்த படைப்பு பாராட்டுகள் நமது பழைமையான கலைகள் வளர வேண்டும் பாராட்டுகள்....

மதி,

நல்ல நகைச்சுவை பகிர்வு.

வாழ்த்துக்கள்.

வணக்கம் மச்சி!
இரண்டு நகைச்சுவைகளும் ஏலவே கேட்டது தான்.
ஆனால் உங்கள் மொழி நடையில் சிறப்பாக இருக்கிறது!

மயிரைச் செத்தான் சிங்கன்...
எனக்குப் படிப்பிச்ச வாத்தியார் ஒராள் அடிக்கடி சொல்லிக் காமெடி பண்ணும் நாடக வசனம் அது!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


தமிழ் மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

அடுத்த பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்!

K.s.s.Rajh said...

அருமை
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மணம் நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்

இது பற்றி நான் இட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/11/blog-post_05.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

shanmugavel said...

//நாடகத்துறை மழுங்கடிக்கப்பட்டாலும் எத்தனை காலாகாலத்திற்கும் இப்படியான நகைச்சுவைகள் சாகாவரம் பெற்றவையாகவே இருக்கும்.//

ஆமாம்,நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

@ T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சகோதரம்...

@ மதுமதி said...

ரசீத்தீர்களா நன்றி சகோ..

@ தனிமரம் said...

நன்றி சகோ.. ஒரே ஒரு மன்னிப்பு தரணும் ஒரே வேலை அண்ணா... இது கொஞ்சமாவது முன்னாயத்தப்படுத்திய பதிவுகளே.. விரைவில் தங்கள் ஆசையை நிறைவேற்றுவேன்..

@ கீதா said...

நன்றி சகோதரி...

@ மாலதி said...

நன்றி சகோதரி...

@ நிரூபன் said...

நிரு இன்றும் கூட பாடசாலைகளில் இந் நகைச்சுவை அதிகமாகப் புழங்குகிறது..

@ சத்ரியன் said...

நன்றி சகோதரம்...

@ K.s.s.Rajh said...

நன்றி சகோதரம்...

@ Muruganandan M.K. said...

நன்றி ஐயா

@ shanmugavel said...

நன்றி சகோதரம்...

dondu(#11168674346665545885) said...

பார்த்து விட்டேன் ஐயா செம காமடி தான்...

Amudhavan said...

முழு வாரத்திற்கும் தங்களின் நட்சத்திரப்பதிவுகளைப் படிக்க விருப்பமாக இருக்கிறோம். பிளந்து கட்டுங்கள் சுதா. வாழ்த்துக்கள்.

நட்சத்திர வாழ்த்துக்கள்!

நல்லதோர் நகைச்சுவைப்பகிர்வு .ஆனால் மழுங்கடிக்கப்பட்டு வரும் நாடகக்கலை கொஞ்சம் வருத்தமளிக்கிறது!

மண்வாசனை கமழும் பதிவு

நட்சத்திர பதிவருக்கு என் வாழ்த்துக்கள் (ஒரு நாள் லேட்டயிடுச்சு சாரி. ஹி ஹி)

அண்ணே தமிழ்மண நட்ச்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள் :)

ஹேமா said...

ஆரம்பமே சிரிக்கவச்சபடி ஜொலிக்கிறீங்க சுதா.வாழ்த்துகள் !

தமிழ்மண நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

ஆரம்பத்திலேயே நாடகக் கலையை எடுத்துக் கையாண்டது
மனதுக்கு மகிழ்ச்சி. எத்தனை எத்தனை ஆர்வலர்களை ஜாபவான்களை
உருவாக்கிய கருவறை அது..
இன்றோ நலிந்து நசுங்கி போயிருப்பதை காண்கையில்
மனது அழுகிறது.
எழுத்துக்களால் நம்மால் முடிந்த அளவு ஆதரிப்போம்.
வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

நாடகம் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நம்மூர் தமிழ்ச்சங்கத்துலே 3 நாடகங்கள் நான் இயக்கி இருக்கேன். நடிப்பும்கூட!

முதல் படம் துளசிதளத்தில் சுட்டதுதானே??????

http://thulasidhalam.blogspot.com/2010/10/blog-post_13.html

Amudhavan said...

முழு வாரத்திற்கும் தங்களின் நட்சத்திரப்பதிவுகளைப் படிக்க விருப்பமாக இருக்கிறோம். பிளந்து கட்டுங்கள் சுதா. வாழ்த்துக்கள்.

-------------------

நன்றி ஐயா... நிச்சயம் காரசாரமான பதிவு தான் வரும் நன்றி நன்றி..

கோகுல் said...

நல்லதோர் நகைச்சுவைப்பகிர்வு .ஆனால் மழுங்கடிக்கப்பட்டு வரும் நாடகக்கலை கொஞ்சம் வருத்தமளிக்கிறது!

--------------

ஆமாம் சகோ வன்னியில் கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும் மீள அது தாழ்ந்தே போகிறது..

சி.பி.செந்தில்குமார் said...

நட்சத்திர பதிவருக்கு என் வாழ்த்துக்கள் (ஒரு நாள் லேட்டயிடுச்சு சாரி. ஹி ஹி)

------------------

நன்றி சீபி.. அப்படியென்றால் தங்களிடம் நான் எத்தனை மன்னிப்புக் கேட்க வேண்டும்...

துஷ்யந்தன் said...

நன்றி மச்சி...

----------------

ஹேமா said...

நன்றி அக்காச்சி..

மகேந்திரன் said...

ஆரம்பத்திலேயே நாடகக் கலையை எடுத்துக் கையாண்டது
மனதுக்கு மகிழ்ச்சி.

----------------

நன்றி சகோ அது தானே எமது பாரம்பரிய சொத்துக்களில் ஒன்று...

துளசி கோபால் said...

நன்றி சகோ.. வாழ்த்துக்கள்..

அப்படியா இனித் தான் பார்க்கணும்.. நான் கூகுலில் stage drma எனப் போட்டு தேடினேன் அப்போது தான் கிடைத்தது...

சிங்கன் சிரிப்பு. செத்தது போல் நடிக்க வேண்டியவர் சற்று அசைந்ததும், 'சரியாச் சாவுலே' என்று பார்வையாளர் ஒருமுறை கூச்சல் போட்டது நினைவுக்கு வருகிறது.
வாழ்த்துக்கள் சுதாகர்! அதிரடி பதிவை எதிர்பார்க்கிறோம். (உங்களைப் பற்றியக் குறிப்பு சற்று நெஞ்சை அடைத்தது. உங்கள் குறிக்கோள் நிறைவேற வாழ்த்துக்கள்)

vanathy said...

ஊரில் இருந்த போது நாடகங்கள் என்றாலே விருப்பம். இப்பெல்லாம் எதிலும் விருப்பம் இல்லை.

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

அப்பாதுரை said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி ஐயா...

என்றும் முயற்சியை கை விடேன்..

vanathy said...

ஏன் அக்கா பார்க்க சந்தர்ப்பம் இல்லையா...

மிக்க நன்றி அக்கா..

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி சகோதரம்...

Nalla pathivu Sago.

Natchathira Pathivarukku Vaalthukkal.

துரைடேனியல் said...

ரொம்ப ரொம்ப நன்றி சகோ...

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top