Monday, 21 November 2011

இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

பதிவுலகத்தில் எனது புதிய முயற்சி ஒன்று. தமிழ் சினிமா சம்பந்தமாக இணையத்தளங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளை வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தொகுத்து வழங்கலாம் என்று இருக்கிறேன். இது சம்பந்தமான எந்த அபிப்பிராயம் என்றாலும் ஒளிவு மறைவின்றிச் சொல்லுங்கள். இந்த தகவல் சேகரிப்பிற்கு என்னோடு சேர்ந்து உதவும் உறவுகளுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார். இந்த கார் ரூ. 84 லட்சத்து 17 ஆயிரம் முதல் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வம்சம் படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக வந்தேன். அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த 4,5 படங்களில் பாவாடை தாவணி அணியும் கிராமத்துப் பெண் கதாபாத்திரமாகத் தான் இருந்தது. அதனால் தான் எனது நடிப்பில் பெரிய இடைவெளி வந்தது என சுனைனா கூறினார்.

சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. சிம்பு நடிகர் என்பதால் செல்லும் இடங்களில் நிறைய பேர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம் என் மகன் மீது மீடியாக்கள் திட்டமிட்டு கேரக்டர் அசாசினேஷன் நடத்தி வருகிறதுஎன்று டி.ராஜேந்தர் இந்த முறையும் தன் மகன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

 அஜீத் போட்ட ஆர்வ சுழி தலக்கோணம் என்ற படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறேன் என அறிமுக நாயகன் ஜித்தேஷ் கூறினார்.

 பில்லா-2வில், அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் தமிழில் அறிமுகமாகிறார்.

அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் “19 செப்டம்பர் என்ற படத்தில் அசின் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ள உருமி படத்தின் தமிழ் வடிவ இசையை வெளியிடுகிறார் நடிகர் விஜய்.

ஈழம் தொடர்பாக பல காலமாகவே தனது கருத்துக்களை மிக அழுத்தமாக பதிவு செய்து வரும் புகழேந்தி தங்கராஜ் என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் படத்திற்காக சத்தியராஜ் சம்பளத்தை குறைத்துள்ளார்.

கில்லிபட வெற்றியின்போது 2004ம் ஆண்டு இலங்கை தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்தேன். விரைவில் இலங்கைக்கு செல்வேன். ரசிகர்களை சந்திப்பேன்’’ என்று  விஜய் கூறினார்.

சிறுத்தை’, ‘சகுனிஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் கார்த்திசந்தானம் கூட்டணி புதிய படமொன்றில் தொடர்கிறது.

 ஷங்கரின்நண்பன்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலன்று வெளியாகிறது. தமிழில்நண்பனாகவும்தெலுங்கில் ’3 ராஸ்கல்ஸ்ஆகவும் வெளியாகிறது.

கோபடத்திற்குப் பிறகு ஜீவாவுக்கான ரசிகர் வட்டம் கூடியுள்ளதுஎனவேபுதிதாய் இணையும் சரண் ஜீவா கூட்டணி தமிழ் திரையுலகில் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷாவும் சிம்புவும் இணையும் மூன்றாவது படம்.

கேஜே.யேசுதாஸ் ஒரு பாடகராக அறிமுகமாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அரண் இயக்குனர் மேஜர் ரவி ராணுவ பின்னணியில் கதைகளை அமைத்து வந்த பாணியை மாற்றி அடுத்து ஆக்சன் படம் இயக்குகிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்த அனன்யா, அஞ்சலி அடுத்து திலீப் நடிக்கும்நாடோடி மன்னன் மலையாள படத்தில் இணைகின்றனர்.

18ம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் நடிகைகள் ஹேமமாலினி, ஜெயப்பிரதாவுக்கு சாதனை பெண்கள் விருதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வழங்குகிறார்.

நடிகை மம்தா-பிரஜித் திருமணம் இம்மாதம் 28ம் தேதி கோழிக்கோடில் நடக்கிறது.

சமீபத்தில் வெளியான ராக்ஸ்டார் இந்தி படத்தை மனைவியுடன் தியேட்டருக்கு சென்று பார்த்தார் ஜெயம் ரவி.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று முதலில் பெயர் சூட்டப்பட்ட படம் இப்போது. பி. கோஎன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது. கொஞ்சம் இடைவெறிவிட்டு இந்தப் படத்தை எடுக்கும் திட்டமுள்ளது,” என்று செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.

அங்காடித்தெருபடம் மூலம் பிரபலமான நடிகர் மகேஷ், அடுத்து புதுமுக இயக்குநர் ராம்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்குவெயிலோடு விளையாடுஎன பெயரிட்டுள்ளனர்.

ஜீவா நடிக்கும் புதிய படம் – காதலிக்க நேரமில்லை

சோனாவின் சம்பளத்தை வெளியில் சொல்ல அஞ்சும் கோடம்பாக்கம்

நடிகை ஸ்ரேயாவை கல்வீசி விரட்டியடித்தது போலவே, மற்றொரு முன்னணி நடிகையான இலியானாவையும் விரட்டியடித்துள்ளது தெலுங்கானா ஆர்ப்பாட்டக்காரர்கள்.

ஜோதிகா, குழந்தைகளுடன் விரைவில் ஆப்ரிக்கா போகப்போவதாக கூறினார் சூர்யா.

புதிய பல மாற்றங்களுடன் அட்டகாசமாக ஆரம்பமாகும் சுல்தான் தி வாரியர்

ஜெனிலியாவுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் பெப்ரவரி திருமணம்

பில்லா-2′ படத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தினை தொடர்ந்து நாகிரெட்டி தயாரிக்கும் அஜீத் படத்தினைசிறுத்தைபடத்தினை இயக்கிய சிவா இயக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடுபடங்களில் நடித்தவர் வினய். தற்போது மாதேஷ் இயக்கும்மிரட்டல்படத்தில் நடித்து வருகிறார்.

சமுத்திரக்கனி இயக்கியுள்ளபோராளிபடம் இந்தியில் தயாராகிறது. சசிகுமார், நரேஷ், ஸ்வாதி, நிவேதா நடிக்கும் படம், ‘போராளி’. கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார்.

அண்ணா என்று உறவு கொண்டாடும் கதாநாயகிகள் – சங்கடத்தில் சல்மான் கான்

நடிகை ஐஸ்வர்யா ராயுக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் பச்சனின் குடும்ப வாரிசை ஐஸ்வர்யா ராய் பெற்று எடுத்தார்.

திருமணத்துக்குப் பிறகு, கணவரோடு பஹ்ரைனில் செட்டிலாகப் போவதாக நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

தனுஷ் படத்திலிருந்து என்னை வேண்டுமென்றே நீக்கினார்கள் – அமலா பால்

இசையமைப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குநர் பட்டியலில் இப்போதைய வரவு எஸ் ஜே சூர்யா.
இந்தியில் விண்ணைத் தாண்டும் கௌதம் மேனன்

18ம் நூற்றாண்டில் நடந்த சம்பவமானஅரவான் பட கதை, 21ம் நூற்றாண்டின் முக்கிய பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்று உறுதியாக கூறுகிறார் இயக்குனர் வசந்தபாலன்.

நான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி தினமும் ஜிம்முக்கு சென்று 15 கிலோ உடல் எடை குறைத்திருக்கிறார்.

பிரேம்ஜி நடிக்கும் ‘2010 பாக்யராஜ் பட டைட்டில் ‘2012 பாக்யராஜ் என மாறுகிறது.

பெரோஸ் கான் இயக்கும்கீரிப்பிள்ளைபடத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் திஷா பாண்டே.

17வது சர்வதேச குழந்தைகள் பட விழா ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 40 நாடுகளை சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகின்றன.

நடிகர் விஜயகாந்த் பெயரில் திரட்டப்படும் திருட்டுப்பணம்.

நயன்தாரா பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி அவருக்கும் பிரபு தேவாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணதேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.

போதையில் வாகனமோட்டியதால் லைசென்சை பறி கொடுத்த நடிகர்  நிகில்.


வேட்டைக்காக துபாய் செல்கிறார்கள் ஆர்யாஅமலாபால்


தேனி அல்லி நகரத்தில் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடாவெட்டி பொங்கல் வைத்து பாரதிராஜாவின் கனவுப் படம் என வர்ணிக்கப்படும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் தொடக்கவிழாவை நடத்துகிறார் பாரதிராஜா.

 

சினேகாவை எனக்கு பிடிப்பதற்கு தெலுங்கில் வெளியான ராமதாசு என்ற படத்தின் நடிப்பும் ஒரு காரணம் என்று நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

 

விஜய்யின் புதிய படம்மாலை நேர மழைத்துளி’ : ஜோடி சேர்கிறார் காஜல்

 

அனுஷ்கா வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

 

நயன்தாரா நடித்துள்ள கடைசி படம் இன்று ரிலீஸ் ஆகிறது. நாளை அவருக்கு பர்த்டே. அப்போது நடிப்பிலிருந்து தான் விலகுவது பற்றி அறிவிக்க உள்ளார்.

 

அல்லரி நரேஷ், ஷெரின் நடித்த டேஞ்சர் தெலுங்கு படம், தமிழில் அபாயம் என்ற பெயரில் டப் ஆகிறது.


சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சேத்தன் பகத்தின் நூலை சூர்யா வெளியிட்டார்.


விண்ணைத்தாண்டி வருவாயா பட இந்தி ரீமேக்கான ஏக் தா திவானா ஜனவரியில் ரிலீசாகிறது.


தமிழ், மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கும் ரக்ஷா படத்தில் சுரேஷ் கோபி நடிக்கிறார்.

சமீபத்தில் அந்தமானில் ஸ்கூபா டைவிங் செய்தது த்ரில்லான அனுபவம் என நெகிழ்கிறார் அமலா பால்.
கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான் படத்தில் அம்மா வேடத்தில் மாஜி ஹீரோயின் தாரா நடிக்கிறார்.

கில்லி’  படத்தில் இடம்பெற்றஅப்படிப் போடு போடு..’  பாடலை தனது தயாரிப்பில் உருவாகி இருக்கும்லக்கி அன்லக்கிபடத்திற்காக வாங்கி இருக்கிறார்  சோனு தூத்.

 

நாய்களைக் காதலிக்க ஆரம்பித்திருக்கும் ஸ்ரேயா

 

பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து இயக்கியுள்ள வித்தகன் படம் இன்று வெளியாகிறது.

சிகிச்சசைக்காக அவுஸ்திரேலியாவிற்கு செல்கிறார் மாதவன்

 

கஜினி’, ‘போக்கிரி’, ‘காவலன்’, ‘சிங்கம்படங்களின் இந்தி ரீமேக் வெற்றி பெற்றதையடுத்து தமிழ் படங்களுக்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றிகரமாக ஓடும் தமிழ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ரூ. 1 கோடியும் அதற்கு மேலும் கொடுத்து வாங்க தயாராக உள்ளனர்.

கிறிஸ்துமஸ் தின வெளியீடாக தமிழில் ஷாருக்கானின் ‘ DON -2 


டிசம்பர் 1ம் திகதி வெளிவருகிறது சசிகுமாரின்போராளி


செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.

அம்மாதான் என் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர்த்ரிஷா


ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கிவிட்டது.

நடிப்புக்கு முழுக்கு போட்டதாக கூறுவது உண்மையல்லமந்திரா பேடி

தமிழ் சினிமாவில் நடிக்க, தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி பெருமிதம் கொள்கிறார்.

நாட்டுப் பிரச்சனையை எழுதினால் வேறு வேலை செய்ய முடியாதுகவிஞர் வாலி


எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லைநடிகை அஞ்சலி


பாட்டு, டான்ஸ், சண்டைக்காட்சி இருந்தால் ரசிகர்களை கவுக்க முடியும்! கதை முக்கியமில்லை என்று மஜா படத்தை இயக்கிய டைரக்டர் ஷபி கூறியுள்ளார்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

33 comments:

உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆ... ஒரே மூச்சில் இவ்வளவையும் எப்படிப் படிப்பது மதிசுதா?..

நல்ல முயற்சி. ஒரே இடத்தில் பல தகவல்கள்...

இதேபோல் தலைப்பிலும் சினிமா என்பதைச் சுட்டிக் காட்டினால் தாமதமாக வந்தாலும் தேடிப் படிக்க வசதியாக இருக்கும்.

ஐய்ய்ய்ய்ய்ய் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)) அடடா எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை( நான் ஓடினால்தான் அதுவும் ஓடும்:))... சரி சரி விஷயத்துக்கு வருவோம்...

பெயருக்கேற்ப அங்காங்கு படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்... ஏனெண்டால் ஆரோ ஹன்ஷிகாவாம்:)) நான் இன்னும் கண்டு பிடிக்கேல்லை ஹையோ ஹையோ:))...

சந்தேகத்துக்கு விடை சொல்லுவீங்களோ....

ரஜனிகாந்தின் இப்போதைய உடல்நிலை எப்படி இருக்கு?
மாதவனுக்கு என்ன பிரச்சனை?

ஐஸ்வர்யா பற்றி இப்பவும் எல்லோரும் பகல்கனவு காண்றீங்களோ? அவதான் எட்டாக் கனியாகிட்டாவே:)).... ராஜ் உம் ஏதோ புலம்பினமாதிரி இருந்துது....:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

@ athira

அக்கா மெயில் ஐடி தாங்கோ எல்லாச் சந்தேகத்தையும் தீர்த்து விடுறேன்...

mathisutha56@gmail.com

Anonymous said...

அக்கா மெயில் ஐடி தாங்கோ எல்லாச் சந்தேகத்தையும் தீர்த்து விடுறேன்...
-:)

Yoga.S. said...

நல்ல முயற்சி,தொடருங்கள்.ஆனால்,உங்கள் கை வரிசையையும் கொஞ்சம் காட்டுங்கள்.அதாவது நீங்களே எழுதுங்கள்,சிறப்பாயிருக்கும்!

@ ரெவெரி

மிக்க நன்றிங்க... நல்ல காலம் அக்கா திருப்பிப் பார்க்கல..

@ Yoga.S.FR..

நிச்சயமாக மாஸ்டர் அடுத்த முறையிலிருந்து தங்கள் ஆலோசனைப்படியே செய்கிறேன் மிக்க நன்றி..

// ♔ம.தி.சுதா♔ said...
@ athira

அக்கா மெயில் ஐடி தாங்கோ எல்லாச் சந்தேகத்தையும் தீர்த்து விடுறேன்...

mathisutha56@gmail.com//

karrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrrr:):))))))))))

அப்போ இனி ஒவ்வொரு சண்டே யும் உங்க தளத்தில சினிமா செய்திகள் படிக்கலாம் . நேரம் மிச்சமாகும் . நல்லது நடக்கட்டும் நடக்கட்டும் .

என்று டி.ராஜேந்தர் இந்த முறையும் தன் மகன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

வணக்கம் தம்பி..
ஹா ஹா இந்த முறையுமா சி(வ)ம்ப பெத்ததால என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு..!!

எங்களுக்கு நோகாம நொங்கு எடுக்க வைக்கிறீங்க ரெம்ப சந்தோஷம்.

ஆனா அண்ணன் சொல்வதை போல் உங்கள்”டச்சும்” வேண்டும் எங்களுக்கு..!!

அடேங்கப்பா எவ்வளவு செய்திகள்...

tamilvaasi said...

இம்புட்டு செய்தியை வாசிக்கவே இம்புட்டு நேரம் ஆகுதே... நீங்க தேடிப்பிடித்து தொகுக்க எம்புட்டு நேரம் ஆகியிருக்கும்? நல்ல சினி தொகுப்பு. நன்றி சுதா...


நம்ம தளத்தில்:
ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்

தொகுப்பில் உங்கள் உழைப்பு ஜொலிக்கிறது. பகிர்விற்கு நன்றி சகோதரரே.

உடான்ஸ் இணைப்பு கொடுத்துள்ளேன்.

பாலா said...

பிரபல சினிமா மாத இதழை வாசிப்பது போல இருந்தது.

K.s.s.Rajh said...

பாஸ் சிறப்பான தொகுப்புக்கள் யோகா ஜயா சொன்ன மாதிரி உங்கள் ஸ்டைலையும் கொஞ்சம் காட்டுங்க

Unknown said...

ம்ம்ம்ம்... எப்ப எப்பா ஆரம்பமே கலக்கலாக இருக்கு..நல்ல முயற்சி,தொடருங்கள். எப்படி இவ்வளவு விஷயங்களை சேகரித்திங்களோ...?

sakthi said...

நல்ல தொகுப்பு இனிமை

அன்புடன் ,
கோவை சக்தி

எல்லா பத்திரிக்கையும் சேர்த்து படித்ததுபோல
அத்தனை செய்திகளையும் ஒண்ணுபோல படிக்க வைச்சதுக்கு
மிக்க நன்றி நண்பரே...

Mathuran said...

அண்ணே இது உங்களுக்கே நியாயமா இருக்கா..... இவ்வளவு நீளமா இருக்கே எப்ப படிச்சு முடிக்கிறது

Mathuran said...

அடடா நீநீநீண்ட நாட்களுக்கு பிறகு சுதா அண்ணா கமெண்ட்ஸுக்கு பதில் போட்டிருக்கிறாரே

சுடசுட சுடும் எனிமா ச்சே ச்சீ சினிமாலா செய்தி சூப்பருங்கோ, இனி பத்திரிக்கை பக்கமே போகவேண்டாம்...

கடும் உழைப்பில் உருவான பதிவு

புது முயற்சி வாழ்த்துக்கள்

Anonymous said...

all news under one roof thanks sir...

என் அபிமான பாடகர் ஜேசுதாஸ் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

Meena said...

புதுப் பகுதி சிறக்க வாழ்த்துக்கள்!

Prem S said...

அதிக செய்திகள் படிக்க அயர்வை தருகிறது .குறைவாக அதிக படங்களுடன் போடலாமே

ADMIN said...

ம். நிறைய தகவலடங்கிய பதிவு. பகிர்வுக்கு நன்றி..!! அந்த ஐஸ்வர்யா குழந்தையுடன் இருப்பது நீங்க கிராஃபிக்ஸ் பண்ணியதா?

Yoga.S. said...

இன்று ஓர் பொன்னான நாள்! ஆம்,எங்கள் விடுதலைப் பேரொளி அவதரித்த நாள்!எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வல்லானை வேண்டுவோம்!

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top