புதன், 19 அக்டோபர், 2011

பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்

முற்பகல் 10:41 - By ம.தி.சுதா 27

           அரசியல் என்றாலே பொய் புரட்டில் தேர்ந்தவராகவும் பித்தலாட்டக்காரராக கை தேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். ஆனால் கொலை வெறி பிடித்த காட்டு மிராண்டிகளாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்தத் தேவையுமில்லை.
           இங்கு சுட்டப்படும் அரசியல்வாதி இந்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரமாகும். கடந்த சில நாட்களாக ஆளும்கட்சியின் பலத்துடன் இவர் அரங்கேற்ற இருந்த கொலைவெறியாட்டம் அம்பலத்திற்கு வருகிறது.
        ராஜீவ் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட அந்த 3 உயிர்களையும் கொன்றாவது தம் வெறியை தீர்த்துக்கொள்ள வடநாட்டில் உள்ள காங்கிரசை விட தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் துடியாய்த் துடிக்கிறது.
     பின்னணி என்ன என்பதைப்பற்றி அனைவருக்குமே தெரியும். ராஜீவின் கொலையுடன் அத்தனை தலைகளுக்கும் தொடர்பிருக்கிறது. அதை மறைப்பதற்காக சரியான குற்றச்சாட்டில்லாமல் தூக்கில் தொங்க வைக்கத் துடிக்கிறார்கள்.
    உதாரணத்திற்கு பேரறிவாளனை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்மீதான குற்றச்சாட்டு குண்டுக்கான பட்டறி(மின்கலம்) வாங்கிக் கொடுத்தாராம். அதை சாட்சியாகச் சொன்னது ஒரு பெட்டிக்கடைக்காரன் மட்டுமே. ஒரு தூக்கிற்கு இந்த ஒரு சாட்சி போதுமா? அந்தளவுக்கு இந்தியச் சட்டத்துறையும் காங்கிரசுக்கு விலை போய்விட்டதா என ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
       அதற்கு காரணம் சிபிஐயின் முக்கிய அதிகாரி ஒருவரே சொல்கிறார் “புலிகள் எதைச் செய்தாலும் ரகசியமாகவே செய்வார்கள். அது செய்பவருக்குமட்டுமே தெரிந்திருக்கும்” அப்படியானால் ஒரு மின்கலம் வாங்குபவனுக்கு விளக்கம் கொடுத்தா சொல்லியிருப்பார்கள்.
      ப.சிதம்பரத்தின் பக்கம் சாட்டையை திருப்பினால் அவர்மீது எழுந்திருக்கும் மிகப் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் இவர்களின் தூக்குத் தண்டனை குறித்த தீர்மானம் அவரது தனிப்பட்ட முடிவு என்பதேயாகும்.
   சட்டத்தின் பிரகாராம் வேறு சில அமைச்சர்களின் சிபாரிசும் இருக்க வேண்டுமாம். ஆனால் உள்துறை அமைச்சகத்தில் நடந்தது சட்டத்திற்கு புறம்பான விடயமாகும்.
      இவர்களது தண்டனை சம்பந்தமாக உள்துறை அமைச்சகம் தெரிவிப்பதற்கு முதல் நாள் பிற்பகல் வை. கோபாலசாமி அவர்கள் சிதம்பரத்தை நேரடியாகச் சந்தித்தாராம். அது பற்றி கோபாலசாமி கூறுகையில் “கைதிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி வினவிய போது அது சம்பந்தமாக சாதகமான பதிலை நான் பெற்றுத் தருவேன் என சிதம்பரம் உறுதியளித்ததாகவும் ஆனால் அவருக்கு இத்தண்டனை வழங்குவது பற்றி முதலே திர்மானம் எடுக்கப்பட்டது தெரியும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

       ஒரு கொலைவெறியாட்டத்திற்கு இந்தளவு பச்சோந்தித்தனம் தேவையா?
       இந்தக் கொலையால் உங்களுக்கு என்ன வரப் போகிறது?

அதுமட்டுமல்ல திருச்சி வேலுச்சாமி என்பவர் வரைந்த மடலும் அதற்கு அவர்கள் அழித்த விளக்கமும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்கிரஸின் கொலை வெறி என்றைக்குமே அடங்கப்போவதில்லை என்பது உறுதியான விடயமே.
     அதுமட்டுமல்ல இந்தச் சம்பவங்களால் காங்கிரசுக்கு சார்பான பலபதிவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். வாழ்க உங்கள் மனிதமும் வக்கிர புத்தியும்.

ஒன்று மட்டும் எனக்கு சந்தேகமாய் இருக்கிறது.

இந்தியா காந்திய தேசமா? அல்லது காந்தி பிறந்த தேசமா?


(திருச்சி வேலுச்சாமியின் கடிதங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது)
x_3b8a66db

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

27 கருத்துகள்:

அருள் சொன்னது…

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

SURYAJEEVA சொன்னது…

மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் நோவார்டிஸ் என்ற தனியார் மருந்து நிறுவனத்தின் கொள்ளைக்காக ஊரறிய வாதாடிய வழக்கறிஞர் ப.சி. அவர் இதுவும் செய்வார் இதுக்கும் மேலயும் செய்வார்..

கவி அழகன் சொன்னது…

கொடுமைக்காரன்

சிதம்பரம் யாருக்கும் எதுவும் செய்ய நினைக்காத சுயநலக்காரர்.

கண்ணுல அம்புட்டாம்னா செருப்பாலே அடிக்கணும்னு தோணுது ராஸ்கல், காங்கிரசும் அதன் அல்லகைகளையும்...

தனிமரம் சொன்னது…

சிதம்பரம் ஒரு காங்கிரஸ் அன்னக்காவடி பதவி மோகத்திற்காக எதுவும் செய்வார் ரஜனியிடம் 1996 இல் போய் நின்றது தெரியும் தானே .காந்தி தேசம் இப்படி எதிர்கால வல்லரசு நோக்கிற்கு சரியல்ல!

கூடல் பாலா சொன்னது…

பதவி வெறி ..கொலை வெறி பிடித்த மிருகம் ...

ஆடுகிற ஆட்டம் பதவி இருக்கும் வரையே...

அம்பலத்தார் சொன்னது…

வணக்கம், கொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு தண்டனை கொலைதான் என்றால், அப்புறம் இந்த மூன்று அப்பாவி இளைஞரையும் கொலை செய்ய உடந்தையாக இருக்கும் காங்கிரஸ் அடிவருடிகளிற்கு தண்டனை என்ன?

செங்கோவி சொன்னது…

யார் தடுத்தாலும் நியாயம் வென்றே தீரும், கவலை விடுங்கள்.

பெயரில்லா சொன்னது…

சுயநலம் தானே இப்ப கொடிகட்டி பறக்குது#
தோனியும் நடிகராகின்றார்.

பெயரில்லா சொன்னது…

கொடுமை...

sarujan சொன்னது…

உண்மை விரைவில் வெளிவரும்

காட்டான் சொன்னது…

வணக்கம் மதி
உண்மை வென்றே தீரும்....

காட்டான் சொன்னது…

மற்றவர்களை நிம்மதியில்லாமல் துடிக்க செய்தவர் இப்போ 2ஜி யால் துடிக்கின்றார் எதை தின்றால் பித்தம் தெளியும்ன்னு திரிகின்றார்.....

ஆமினா சொன்னது…

//யார் தடுத்தாலும் நியாயம் வென்றே தீரும், கவலை விடுங்கள்.//

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
நல்லதோர் அரசியற் பதிவு,
பச்சோந்திகளாயும்,
கபட நாடகம் புரிவோராகவும் வலம் வரும் காங்கிரஸின் வால் பிடி சிதம்பரத்தின் சுயரூபத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் அருமையான பதிவு.

Unknown சொன்னது…

சரிதான் ப .சி அல்ல பச்சோந்தி

Unknown சொன்னது…

தமிழ்மணம் -1
யுடான்ஸ் - 1

Unknown சொன்னது…

கொடுமை

ஹேமா சொன்னது…

மதி...என்ன சொன்னாலும் திருந்த இடமில்லை.அதுதானே அரசியல் !

அநீதியின் ஆட்சியில் நீதியை நிர்வாணமாய்ப் பார்ப்பதற்கும்
அழிப்பதற்கும் எத்தனை அரசியல்வாதிகள் முக மூடிகளுடன்
அலைகிறார்கள்!....வேதனை தரும் பகிர்வு சகோ .

dont worryசிதம்பரத்துக்கு ஆப்பு காத்திருக்கு

jagadeesh சொன்னது…

மற்ற இருவரையும் தூக்கில் போட்டுக் கொள்ளலாம் என்கிறீர்களா?எப்படியோ! புலிகளின் அத்தியாயம் ஒழிந்தது. ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியையே பால்படுத்யவர்கள் புலிகள்.

பெயரில்லா சொன்னது…

////jagadeesh said... /// லூசுப்பய ...

Unknown சொன்னது…

மாப்ள பகிர்வுக்கு நன்றி...தர்மம் வெல்லும் கவலைபடாதீங்க..

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி
பகிர்வுக்கு ......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top