புதன், 7 செப்டம்பர், 2011

யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

பிற்பகல் 4:54 - By ம.தி.சுதா 45


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
பதிவின் நோக்கம்- நாட்டுப் பற்றுரைக்கும் சில திருடர்களின் முகம் மூடிக் கிழிப்பு

கணக்கத் திருட்டு என்பது குறிப்பிட்ட சில காலத்திற்கு காலம் நடைபெறும் ஒரு வித வியாதி போல ஆகிவிட்டது.
இது எழுத்துலக ரீதியாக என்னை பாதிக்காவிட்டாலும் நண்பர்கள் மத்தியில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் என்னோடு நெருங்கிப் பழகும் இரு நெருங்கிய நண்பர்களே நேரடியாக கூறினார்கள். இந்தியாவின் “றோ” தான் செய்தது என்று.
அவர்கள் நேரே சொல்பவர்களாதலால் பரவாயில்லை இப்படி எத்தனை பேர் மனதில் இந்த எண்ணம் இருந்திருக்கும். அவர்களுக்கு என்னால் விளக்கம் தர முடியவில்லை காரணம் இருவரும் எழுத்துலகிலலோ அரசியலிலோ பழுத்த பழங்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல முடிந்தது அவர்களுக்கு கவிஞர் சிநேகனின் பேச்சையும், பதிவுலக அரசியல்புரட்சி மன்னன் டொன் அசோக் இன் தொடுப்பையும் கொடுத்தேன். ஏனென்றால் அவர்களை விடவா நான் ஸ்டேடஸ் போட்டேன்.
உண்மையில் நடப்பது இது தான்.
யாரோ ஒரு அரைகுறை தொழில் நுட்பம் தெரிந்த ஒரு கணக்குத் திருட்டாளன் எமது கணக்கு முகவரியை வைத்து எமது கணக்கு வழங்கி முகவருக்கு முறையீடு ஏதாவது இடுவதன் மூலமோ அல்லது அந்த முகவரிக்கூடாக கண்டபடி உள் நுழைய முற்பட்டு அக்கணக்கை குழப்புதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இதில் கணக்கை மீளப் பெறத் தெரிந்தவர்கள் அதையே பெற்றுக் கொள்கிறார்கள் தெரியாதவர்கள் தொலைந்ததாக நினைத்து மண்டையை காயப் போட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவுகிறார்கள்.
எனக்கு நடந்த சம்பவமே இதற்கு பெரும் உதாரணம். காரணம் எனது கணக்கை கையகப்படுத்தியிருந்தால் எனது மூஞ்சிப்புத்தகக் கணக்கு, ருவிட்டர் கணக்கு போன்றன பெறுவது பெரிய சிரமமில்லை காரணம் அதற்கும் இதே மெயில் தான் பாவித்தேன். (இப்போ எல்லாம் வேறு வேறு).
என் கடவுச் சொல்லு சாதரண திருட்டுக்கு ஏற்ற கடவுச் சொல்லல்ல இதோ பாருங்கள் vicram1995./!@#$sutha.#*jaffna2009 இதை திருடுவதற்கு எந்தளவு திறமை வேண்டும்.
சரி சம்பவத்திற்கு வாருங்கள். எனது கணக்கு டைசியாக செயலிழந்த போது உள் நுழைந்தவர் விபரம் இது தான். ஏன்யா என்ர பதிவு விறுத்தத்தில பில்கேட்சா என் கணக்கை குழப்ப வரணும் படத்தை பாருங்கள் தெரியும் Microsoft.com ல் இருந்தாம் வந்திருக்காங்க.
எனது கணக்கை கூகுலிடம் தேடக் கொடுத்த போது இப்படித் தான் சொன்னது. கணைக்குக் கிடைத்த பின் மெயிலுக்குள் பார்த்தால் யாரும் நுழைந்ததுக்கான ஐபியோ இடமோ அங்கே இருக்கவில்லை. அத்துடன் கூகுலால் அப்படி ஒரு கணக்கு இல்லை என தகவல் பகிரப்பட்ட போதும். அனுப்பிய அத்தனை மெயில்களும் விநியோகிக்கப்பட்டது ஒன்று கூட திரும்பி வரவில்லை.
அதே நேரம் புளொக் கூட செயலிழக்கப்பட்டிருந்தது அதற்கான படம் இது தான்.
உண்மையில் இது தொழில் நுட்பப் பதிவாளர்களுக்கு பெரிய சவாலாகும். காரணம் உங்களுக்கு பிரச்சனை வந்தால் தீர்ப்பீர்கள் ஆனால் மற்றவருக்கு வரும் போது என்ன செய்யப் போகறீர்கள். எல்லோருக்கும் உதவுவது தங்கள் கடமையல்லவா ?
இங்கே என்ன நடக்கிறது ? ஏன் நடக்கிறது ? எப்படி நடக்கிறது ? பதிவாய் போட்டால் இன்னும் பெறுமதியாக இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
குறிப்பு- அண்மையில் அண்ணர் நல்லநேரம் சதீஸ்குமாருக்கும் இப்படியான ஒரு கசப்பான சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. தயவு செய்து அவர் மீண்டும் தனது தளத்தை சீர்ப்படுத்துகிறார். அவரது பின்தொடர்பசர்கள் மீண்டும் சென்று அவரை பின் தொடருங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

45 கருத்துகள்:

K சொன்னது…

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

உங்களோட 402 வது ஃபாலோயர் நான் தான்! எனக்கு வெல்கம் சொல்ல மாட்டீங்களா? ( என்னது? அதெல்லாம் கேட்டு வாங்க கூடாதா? )

அப்புறம், எங்க எல்லாருக்கும் பயன்மிக்க ஒரு பதிவு போட்டிருக்கீங்க! ரொம்ப நன்றி சார்!

பெயரில்லா சொன்னது…

மதி..நான் இதனால் பட்ட மன உளைச்சல் அதிகம்.என் ப்ளாக் திருட்டு வினோதம்.என் மெயில் ஐடியில் நுழைந்து,என் ப்ளாக்கை மட்டும் அவர்கள் மெயிலுக்கு மாற்றி,சுத்தமாக அழித்தனர்.கூகிளுக்கு மெயில்,புகார் செய்தும் பலன் இல்லை.நான் பேக்கப் எடுத்தும் வைக்கவில்லை.ஈரோடு அரசு மருத்துவமனை பற்றி எழுதிய காட்டமான பதிவு காரணமா,அல்லது ஜோதிடம் பத்தி எழுதுவதால் வந்த பொறாமையா தெரியவில்லை.இதற்கிடையே தமிழ்மணமும் சதி செய்கிறது.பணம் கொடுத்தால் என் பதிவை முகப்பில் காட்டுவார்களாம்.காரணம் கேட்டால் நான் ஜோதிட பதிவு எழுதுகிறேனாம்...

Unknown சொன்னது…

மாப்ள கஷ்டமான விஷயம் தானுங்க!

கஷ்டமாதான் இருக்குய்யா...

தமிழ் உதயம் சொன்னது…

பிளாக்கர் டிப்ஸ் வழங்கும் நண்பர்கள் - இதற்கும் டிப்ஸ் தந்து உதவ வேண்டும்.

KANA VARO சொன்னது…

ஒவ்வொரு பதிவயும் பகிர்ந்தவுடன், தளம் முழுவதையும் தரவிறக்கி கொள்வேன். இதை விட என்னால் என்ன செய்ய முடியும்\?

SURYAJEEVA சொன்னது…

இப்படியும் ஒரு பிரச்சினை இருக்குதா.. நமக்கு வேற கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியாதே.. அப்பா இப்படி என்ன புலம்ப விட்டுட்டீங்களே, இது ஞாயமா? ரெவெரி எங்கப்பா இருக்க?

இந்த திருட்டு பற்றியும் ஒரு விழிப்புணர்வு பதிவுகள் வர வேண்டும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

சகோ உங்களுக்கு இப்பத்தான் நடக்குதா ...ஓ... முதல் அனுபவமா ...வாழ்த்துக்கள்.

இங்க என்ன நடக்குதுன்னே புரியல்லியே.

மாய உலகம் சொன்னது…

தமிழ் மணம் 5

மாய உலகம் சொன்னது…

சொன்னது போல் இதற்க்கும் ஒரு பதிவை கொடுத்தால் பதிவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்... பகிர்வுக்கு நன்றி நண்பரே

சுதா SJ சொன்னது…

வணக்கம் சுதா அண்ணா,

நல்ல பதுவு அண்ணா. எனக்குதெரிந்தே இவர்களால் பாதிக்கபட்டோர் அதிகம்
அண்மையில் மைந்தன் மதுரன் போன்றவர்களிடம் கூட திருடினார்கள்.
இவர்களை என்ன செய்வது என்றே தெரியவைல்லை.

நீங்கள் சொல்வது போல் இந்த திருட்டால் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்
சமாளித்துகொள்வார்கள் தெரியாதவர்கள் நிலைதான் ரெம்ப பரிதாபம்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் மச்சி,
ஒரு கணக்கைத் திருடுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை முடக்கலாம் எனக் கனவு காணும் அற்பப் பதர்களின் வேலை இது...

விழ விழ எழுவது போல..
இலவசமாகத் தரும் கூகிளிடமிருந்து நாம எத்தனை ப்ளாக் வேண்டுமானாலும் உருவாக்கி இன்னும் வீரியமாக எழுதுவோம் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும்.,

காட்டான் சொன்னது…

என்ன மாப்பிள உங்களுக்குமா?? அப்ப என்னைப்போல காட்டான்களுக்கு????

காட்டான் சொன்னது…

என்ன மாப்பிள உங்களுக்குமா?? அப்ப என்னைப்போல காட்டான்களுக்கு????

ஆகுலன் சொன்னது…

அண்ணே நீங்கதான் எங்கள மாதிரி ஆக்களுக்கு உதவணும்....
எனது கணக்கை திருடினால்....

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

என்னங்க இது?வேலமெனக்கெட்டு இப்படிலாம் செய்றாங்களா?

rajamelaiyur சொன்னது…

Mail hack is very big problem in now a days . . .

Mathuran சொன்னது…

விடுங்க சுதா அண்ணா.. நிரூபன் சொன்னதுபோல கூகிள்காரன் இலவசமா தாறான்... நாங்க எத்தனை ப்ளாக் வேணும் எண்டாலும் ஒப்பின் பண்ணலாம்தானே..

balu சொன்னது…

இன்று மீண்டும் என் கணக்கு முடக்கப்பட்டது...இதை சரி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும்.

ஆர்.கே.சதிஷ்குமார்
நல்ல நேரம்

balu சொன்னது…

நாங்க எத்தனை ப்ளாக் வேணும் எண்டாலும் ஒப்பின் பண்ணலாம்தானே//
செய்யலாம்..ஆனால் ஹிட்ஸ் ,டிராஃபிக் ரேங் குறைந்து விடும்.சொற்ப ஆட்களே வருவர்.இத்தனை நாள் உருவாக்கிய ஹிட்ஸ் போய்விடும்..நான் நான்கு வருடம் எழுதிக்கொண்டிருந்த sathish777 என்ற ஐடி போனபோது எதையோ இழந்தது போல உள்ளது.இப்போது மெயில் ஐடியையும் முடக்கிவிட்டனர்.
சதீஷ்குமார்,நல்லநேரம்

Unknown சொன்னது…

ம்ம்ம்...என்னதான் செய்வது?

Prabu Krishna சொன்னது…

சகோ இப்போது கூகுள் தான் வலைப்பூக்களை நீக்கும் வேலையில் உள்ளது. எனது கவிதை வலைப்பூவும் ஸ்பாம் செய்யப்பட்டு உள்ளது. வலைப்ப்பூ ஆங்கிலத்தில் இல்லாத காரணத்தால் திரும்ப பெறுவது கடினம் தான்.

ஆமினா சொன்னது…

//சகோ இப்போது கூகுள் தான் வலைப்பூக்களை நீக்கும் வேலையில் உள்ளது//

அடடா.......

இதென்ன கொடுமை :-(

sakthivel சொன்னது…

இதற்க்கும் ஒரு பதிவை கொடுத்தால் பதிவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்
இந்த திருட்டால் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்
சமாளித்துகொள்வார்கள் தெரியாதவர்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பரே

ராஜ நடராஜன் சொன்னது…

என்னது!சதிசும் உங்க பின்னாடி கியுல நிற்கிறாரா?

Unknown சொன்னது…

அடக்கடவுளே!
இப்படி எல்லாம்கூட
நடக்குமா
வளரும் விஞ்ஞானத்தோடு
விளையாடும் வக்கிர புத்திக்காரர்களா
நம்பவே முடியவில்லை
வலைவந்து கருத்துரை வழங்கினீர் நன்றி!

புலவர் சா இராமாநுசம்

K சொன்னது…

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

சார், நான் ஒரு புதிய பதிவர்! இன்னிக்கு சர்ச்சைக்குரிய ஒரு பதிவு போட்டிருக்கேன்!

உங்களமாதிரி பெரியவுக வந்து, படிச்சுட்டு கருத்து சொன்னா, சந்தோசமா இருக்கும் சார்!

சார், உங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன் சார்!

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் சகோ........உண்மையில் இப்படியானவர்களின் செயல் வருந்தக்கது....மீண்டும் உங்கள் அனைத்து பிர்சனையில் இருந்து விடுபட்டு பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்

தனிமரம் சொன்னது…

ஏன் தான் இப்படி குள்ளநரித்தனம் செய்கிறார்கள் வலைப்பதிவு போனால் ஒவ்வொரு தடவையும் மதியும், நிரூவையும் நான் எப்படித் தேடிப்பிடிப்பது சகோ!

தனிமரம் சொன்னது…

சகோ ஓட்டுப் போடுவதற்கு என் கைபேசியில் தகராறு என நினைக்கின்றேன் இண்ட்லியை நிரூ போல் அடுத்த பதிவில் இணைத்துவிடுங்கள் ஓட்டுப் போட இலகுவாக இருக்கும் தனிமரம் தொழில்நுட்பத்தில் வீக் தெரியும் தானே! ஓட்டுப்போடாமல் ஓடிவிட்டான் என்று திட்டக்கூடாது ! 

:-(

i am feel sad....என்ன நடக்குதுன்னே புரியல்லியே!!!!!புரியல்லியே!!!!புரியல்லியே!!!!!புரியல்லியே!!!!!!!!!

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி
இன்னைக்கு தான் முதன் முதலில் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.
வந்ததுமே
அதிர்ச்சி தரும் பதிவு.
இதற்கு ஒரு தீர்வு சீக்கிரம் கண்டறிய வேண்டும்.

கவி அழகன் சொன்னது…

அநியாயம் செய்தா முனியாண்டி கேப்பான்

வணக்கம் சகோ (அம்மா எப்படி உள்ளார்?...)இப்பெல்லாம்
கஸ்ரப்பட்டு ஆக்கத்தை எழுதிவிட்டுத் தூங்கும்போது இந்தத் திருடரையும் நினைக்காத நாளில்லை .நன்றி உங்கள்
பகிர்வுக்கு .

கொடுமை தான்

கார்த்தி சொன்னது…

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க வழியேது??

பெயரில்லா சொன்னது…

எனக்கு தெரிந்த விஷயங்களை வைத்து இந்த பிரச்சனைக்கான காரணங்களையும் தீர்வையும் ஒரு பதிவாக இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எழுதுகிறேன்...

நாம் ஒற்றுமையாக இருந்தால் வெளியிலிருந்து யாரும் எதுவும் செய்யமுடியாது...

எஸ் சக்திவேல் சொன்னது…

>யாரோ ஒரு அரைகுறை தொழில் நுட்பம் தெரிந்த ஒரு கணக்குத் திருட்டா------------

திருடன்கள் பெரும்பாலும் அரைகுறைதான். இருக்க, உங்கள் பழைய password இனைப் மேலே பார்த்தேன். இதை உடைத்திருக்க முடியாது 99.999999999999 %. அடுத்த சாத்தியம், உங்கள் கம்பியூட்டரில் இல் keylogging spyware இனை இடுவது. அனேகமாக பொதுக் கம்பியூட்டர்களில் தான் இது நிகழும். மற்றது, நீங்கள் சொன்னது மாதிரி social hacking. நிற்க, இன்னொரு வழி. forgot password- secret answer வழி. நம்மில் அநேகர் இலகுவான secret answer குடுத்திருப்போம். "அம்மாவின் பெயர் என்ன? அல்லது ஊர் என்ன என்பது மாதிரி. உங்களை நன்கு அல்லது சுமாராகத் தெரிந்தவர்களின் கையில் இப்ப reset செய்யப்பட்ட password!

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவில் குறிப்பிட்ட வேண்டுகோளை நிறைவேற்றும் எனது பதிவை பாருங்கள்.
உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1
http://pc-park.blogspot.com/2011/09/gmail.html

Unknown சொன்னது…

பதிவுலகத்தில் இப்படியும் இருக்கிறார்களே இவர்களை என்ன செய்வது?கஷ்டமாதான் இருக்கு

vadakaraithariq சொன்னது…

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை

thenkongu sathasivam சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

எனக்கு அவ்வளவு தொழில்நுட்பம் தெரியாது ஒரு முறை கூகுளில் எதையோ தேடிக்கொண்டு இருந்தபோது ஒரு தளத்தினை காண நேர்ந்தது அதை திறந்த போது என் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் (kaspersky) கத்தியது pause செய்து விட்டு என்னவென்று பார்த்தேன் gmail,facebook,yahoo போன்றவற்றின் ID கொடுத்தால் பாஸ்வர்ட் தருகின்றது என் மெயில் ID கொடுத்தேன் (ஒரு தைரியம்தான்) சரியாக என் பாஸ்வேர்டினை தந்தது அதனால் எச்சரிக்கையாக இருக்கின்றேன்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top