செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1)

பிற்பகல் 5:49 - By ம.தி.சுதா 30 நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.
இணையத்தில் எத்தனை மணித்தியாலங்களைச் செலவழிக்கிறோம் சில நிமிடங்களை இதற்கும் செலவழியுங்களேன். ஒவ்வொருத்தரும் 10 பேருக்காவது பகிர்ந்தாலே போதும். நீங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவரானால் மாதத்தில் ஒரு வேளை தேநீரை இவர்களுக்குக் கொடுத்தாலே போதும் உறவுகளே...
இந்தத் திட்டத்தில் இதுவரை 5 பேர் பயன்பெற்றிருப்பது மிகவும் சந்தோசமான சேய்தியாகும்.

பெயர்- தியாகராசா சந்திரகுமார்
பிறப்பு- 01.02.1967
முகவரி- 18 a/2 முத்து விநாயகபுரம்,
         முத்தையன்கட்டு,
          ஒட்டிசுட்டான்
குடும்பம்- மணமானவர்
        இரண்டு பிள்ளைகள் உண்டு
        லதுசியா (9 வயது)
        தனுப்பிரியன் (5 வயது)
குடும்ப வருமானம்- தோட்டம் (மனைவி மூலம்)
பாதிப்பு- முள்ளந்தண்டில் ஏற்பட்ட காயம் (2006 ல்) காரணமாக இடுப்பின் கீழ் இயங்கா நிலையும். அதனால் ஏற்பட்டுள்ள பெரும் படுக்கைப் புண்ணும் ஆகும்.
தற்போதைய இவர் செலவுகள்-
மாதந்த மருத்துவச் செலவு (12,000 இலங்கை ரூபாவிற்கு விற்கு மேல்)
குடும்பச் செலவு 12,000 இலங்கை ரூபா
பரிந்துரைப்பது- மருத்துவச் செலவிற்கான வசதியின்மையால் தீவீர நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுகிறார். இவருக்கான மருத்துவச் செலவையோ அல்லது குடும்பச் செலவையோ பகுதியாகவென்றாலும் ஒரு குழு பொறுப்பேற்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

Name- Thiyakaraja santhirakumar
Date of birth- 01/02/1977
Address- 18a/2 muththu vinayagarpuram,
       Muththaijankaddu,
      Oddisuddan.
Married person and 2 children
Name- lathusiya 9 years old.
      Thanuprijan 5 years old.
Family incoming – wife is a farmer.
Affect- injury on spinal cord. (2006)
Medical treatment - Rs 12000/=
family budget - Rs 12000/=
suggest for this perso- he's dont take the treatment. so many affected by infection of bedsore.

 தங்களிடம் வேண்டப்படுவது

               இது ஒரு சிறிய சமூக சேவையாகும் இதற்கு அரசியல் ரீதியாக எந்தவித அழுத்தமும் இருக்காது காரணம் இது தனிப்பட்ட மனிதரின் நடவடிக்கையாகும். அதே போல் இங்கு முதலில் அவர்களின் தொலை பேசி இலக்கம் வழங்கப்படமாட்டாது காரணம் தவறான பயன்பாட்டுக்கு ஆளாக்கலாம் அதனால் உதவ முன்வருவோருக்கு மட்டுமே அளிக்கப்படும். அதே போல் அவர்களுக்கான தேவையை நாம் பகிரங்கமாக அறிவிப்போம் நீங்கள் முடிந்ததை செய்யலாம் எவ்வளவு செய்கிறோம் என எமக்கு தெரியத்தரத் தேவையில்லை ஆனால் கட்டாயமான விடயம் என்ன வென்றால் யாருக்குச் செய்கிறோம் என்பதை அறியத் தரவும் காரணம் உதவிகள் எல்லோருக்கும் சமனாகக்கிடைக்க வேண்டும்.
       
தொடர்புக்கு- mathisutha56@gmail.com
எழுத்து வழித் தொடர்புகளே பெரிதும் விரும்பப்படுகிறது.

குறிப்பு -  மூஞ்சிப் புத்தகம் (பேஸ்புக்) ல் பகிர்வதானால் இந்த ஆக்கத்தின் கீழே அதற்கான தனிப் பொத்தான் அழிக்கப்பட்டுள்ளது அதை சொடுக்கி சில செக்கன் காத்திருந்து conform என்பதை கொடுக்கவும்.


மேலே உள்ள படத்தை தங்கள் தளத்தில் இணைத்து இந்த சேவையில் கைகோர்க்க விரும்பினால் இந்த ஆக்கத்திற்கான படத்தொடுப்பு இது தான் (படத்தின் அளவு 250 px x 150px, size 25kb)


தேவையானவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.
இந்த ஆக்கத்தை மாற்றங்கள் எதுவமின்றிப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன்.


நன்றிச் செதுக்கலுடன்..
அன்புச் சகோதரன்.
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

30 கருத்துகள்:

சுதா SJ சொன்னது…

முதல் மழை என்னை நனைத்ததே.. :)

சுதா SJ சொன்னது…

சாரி பாஸ் , விளையாட்டாக பாட்டு பாடிட்டேல்லாம் உங்க பதிவுக்கு வந்தேன்,
ரெம்ப சாரி பாஸ். மனசு கனக்கும் தகவல் பாஸ்.

சுதர்ஷன் சொன்னது…

என்னாலான உதவியை செய்கிறேன் சுதா .. உதவி செய்வதற்கு அமைப்புகள் இல்லையா ? இந்த அரசாங்க அதிபர் எல்லாம் எங்கே போனார் .>? என்ன செய்கிறார்கள் மக்கள் பணத்தை வைத்து .. !!! பிள்ளைகளின் படிப்பு எப்படி செல்கிறது >???

காட்டான் சொன்னது…

நான் உங்களோடு தொடர்பு கொள்கிறேன்.. ஈமெயில் மூலம் இப்போது நேரமில்லை மன்னிக்கவும்...

கூடல் பாலா சொன்னது…

நல்லதொரு சேவை சுதா .....எனது முகநூலில் பகிர்ந்து விட்டேன் .......

Prabu Krishna சொன்னது…

Good work. I am also Shared. Thank you For your great work. Great salute. i will use this in my blog

பெயரில்லா சொன்னது…

முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன் பாஸ்.

மாய உலகம் சொன்னது…

நண்பரே மனம் கனக்க வைக்க இந்த பதிவை எனது தளத்தில் பகிர்ந்துகொண்டேன்... நன்றி நண்பரே!

நிரூபன் சொன்னது…

மச்சி, என்னாலான உதவிகளையும் நான் வழங்குகிறேன்.

ஆகுலன் சொன்னது…

நான் முக நூலில் பகிர்கிறேன்.....

Mathuran சொன்னது…

சுதா அண்ணா இந்த தகவலை என் தளத்திலும் முகப்புத்தகத்திலும் பகிர்ந்துகொள்கிறேன்

Mathuran சொன்னது…

சுதா அண்ணா இந்த தகவலை என் தளத்திலும் முகப்புத்தகத்திலும் பகிர்ந்துகொள்கிறேன்

உதவுவோம்

Chitra சொன்னது…

அவருக்கு வேண்டிய உதவிகள் விரைவில் கிடைக்கட்டும். மாய உலகம் பதிவில், இந்த பதிவை கண்டு, எனது Facebook home page இல் லிங்க் கொடுத்து இருக்கிறேன். அவருக்காகவும் அவரது குடும்பத்துக்காகவும் ஜெபிக்கிறோம்.

கவி அழகன் சொன்னது…

அருமையான முயற்ச்சி சிறுதுளி பெரு வெள்ளம் ஆகட்டும்
வாழ்த்துகின்றேன்

Unknown சொன்னது…

முகநூலில் பகிர்ந்து கொண்டேன்! முயற்சி வெற்றியடையட்டும்!

நானும் எனது முகநூலில் பகிர்ந்து விட்டேன் மக்கா.....

நீங்கள் தான் இவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பதில்லை. என்னைப் போல இந்தத் தகவலை பகிர்ந்தாலே போதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவராவது உதவக்கூடும்.ஆமா சுதா, சரியா சொன்னீங்க.

rajamelaiyur சொன்னது…

கண்டிப்பா உதவுவோம்

rajamelaiyur சொன்னது…

இன்று என் வலையில்


இது என்ன தெரியுமா?

நல்லதொரு சேவை

என்னாலான உதவியை செய்கிறேன் நண்பரே..
பாராட்டுகள் உங்களுக்கு..

ஆமினா சொன்னது…

கண்டிப்பாக உதவுவோம் சகோ

மனசு கனக்கும் தகவல். எனது தளத்திலும் பகிர்கிறேன்.

கார்த்தி சொன்னது…

நல்ல முயற்சி!! நாங்களும் உதவுவோம்!!

உணவு உலகம் சொன்னது…

நல்ல முயற்சி. அனைவரும் உதவ முன் வருவர்.

Unknown சொன்னது…

உங்க முயற்சிக்கு நன்றி மாப்ள...நானும் முயற்சிக்கிறேன்!

K.s.s.Rajh சொன்னது…

வணக்கம் உங்கள் முயற்சிக்கு முதலில் ஒரு சலூட்.இந்த தகவலை எனது முகநூலில் பகிர்ந்து விட்டேன்.
எனது வலைப்பதிவில் அடுத்த பதிவுகளில் நிச்சயம் இந்த லிங்கை இணைத்து விடுகின்றேன்.
என்னால் ஆன உதவிகளை வழங்குவேன்.

நன்றி
K.s.s.Rajh
from
nanparkal/நண்பர்கள்

பெயரில்லா சொன்னது…

அண்ணா நானும் உங்கள் பதிவை பிரதியிட்டுள்ளேன்.

பி.அமல்ராஜ் சொன்னது…

முகநூலில் பகிர்ந்துகொண்டுள்ளேன்.. உங்கள் சேவை தொடரட்டும்...

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top