சனி, 11 ஜூன், 2011

சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With video

பிற்பகல் 9:38 - By ம.தி.சுதா 88

வணக்கம் உறவுகளே...
       புளொக்குடன் பெரும்பாடு பட்டு அனுமதி வாங்கிப் பதிவிடுகிறேன் என் இறுதிப் பதிவு கூட பலருக்கு போய் சேரவில்லை. எனன காரணமோ தெரியல பதிவுகள் அப்டேட் ஆகா மறுக்கிறது.
       சரி அது இருக்கட்டும்பதிவிற்கு வருவோமா ? இன்று நான் யாரையுமே கடுப்பேற்றப் போவதில்லை காரணம் அடிக்கடி நான் சமூகப் பதிவுகளை போடுவதால் யாரோ ஒருவராவது கடுப்பாகி விடுகிறார். அதனால் என்னை ஏதோ சிரியஸ் மனிதனாகவே பார்க்கிறார்கள். என்னோடு நெருங்கிப் பழகும் ஒரு சிலருக்குத் தான் நான் எப்படி எனத் தெரியும் இந்த படங்களைப் பாருங்கள் என்னைப் படுத்தும்பாடு தெரியும்.
அண்ணனோட கைவரிசை “சுதாவும் தோழர்களும் ....”
தொடுப்பு
மதுரனுடைய கைவரிசை “பிரபல பதிவர் ஒருவருடைய ஆப்பீஸ் அட்டகாசங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது... இது தொடர்பாக இன்னும் பல திடுக்கிடும் புகைப்பட ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். வெகு விரைவில் அவை திரைக்கு வரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்”
தொடுப்பு
தங்கச்சியுடைய கைவரிசை எந்தப் பெண்ணுக்காக சிங்கத்துடன் இத்தனை போட்டி.....?”
            அட அது கூட வேணாமுங்க இந்த வீடியோவை பாருங்கள் ஒரு அதிமேதாவியாக தன் பாட்டுக்கு சிந்தித்துக் கொண்டிருப்பவனை எப்படியெல்லாம் சீண்டுகிறார்கள் என்று.

     அட அது ஒரு பக்கம் இருக்கட்டும் சுதா என்ன சுயபுராணத்தில் இறங்கிட்டானே என யோசிக்காதிங்க. தமிழ்வாசியின் பேட்டியில் என்னோடு நெருங்கிப் பழகும் சித்தாரா, நிருபன், ரஜீவன் (ஓட்டை வடை) போன்றோர் நான் சாதாரணமாக பழகுவது போல அதை மொக்கை (நகைச்சுவை) பதிவாகவும் போடலாமே என ஒரு காட்டுக் காட்டினார்கள். சரி அடுத்த திகதி 15 ல் ஒரு முக்கிய பதிவு போட வேண்டியிருப்பதால் அதற்கு பிறகு ஒரு 4 பதிவு கடந்த பிறகு போடுகிறேனே.
            அதுவரை என்னுடைய உண்மையான பக்கத்தை பாருங்கள் யாருக்காவது என்னை கடித்துக் குதற ஆசையிருந்தால் படங்களின் கீழே தொடுப்பு என்றிருப்பதை சொடுக்கி போய் கும்முங்கள்..


குறிப்பு - சகோதரங்களே ஒரு வாரத்தின் பின் நாளை தான் எல்லோர் தளமும் ஒரு வலம் வரலாம் என இருக்கிறேன்.

என்னோட இறுதிப் பதிவான

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

88 கருத்துகள்:

ஐ அண்ணா.......வாறன் பொறு.

நிரூபன் சொன்னது…

மாப்பிளை,
இன்னைக்கு சுடு சோறு யாரும் கேட்காததால்,
எனக்கு தான் சுடு சோறு.

நிரூபன் சொன்னது…

அடிங், கொய்யாலா....
நம்மளைக் கொல்ல நகைச்சுவைப் பதிவு போடுறியா?
இல்லே நாம கேட்டோம் என்பதை உணர்ந்து சந்தோசப்படுத்த போடுறியா?
ஒரு மார்க்கமாத் தான் கிளம்பியிருக்கிறாய். இல்லே.

நிரூபன் சொன்னது…

வணக்கம் உறவுகளே...//

சேமம் எப்படி?

உன் திட்டம் எனக்கு எப்பவோ விளங்கிடிச்சு அதுதான் மற்றவங்களையும் உசுப்பேத்தினமேலே...ஹ ஹ ஹ ஹா.

நிரூபன் சொன்னது…

புளொக்குடன் பெரும்பாடு பட்டு அனுமதி வாங்கிப் பதிவிடுகிறேன் என் இறுதிப் பதிவு கூட பலருக்கு போய் சேரவில்லை. எனன காரணமோ தெரியல பதிவுகள் அப்டேட் ஆகா மறுக்கிறது.//

அடேய் பாவி,
என்ன காரணம் என்று தெரியாமல் இருக்கிறியா?
வன்னியால் வந்த ஆளுங்க முட்கம்பி படம் போடுறோம் என்று சாபம் போடுறது தான் காரணம்((((;
ஹி...ஹி...
இது கூடத் தெரியாமல் சின்ன புள்ள மாதிரி,
இப்பவும் வவுனிக்குளத்தில நின்றா எப்பூடி?
வண்ணன் விளையாட்டுத் திடலுக்கு வர வேண்டாமோ;-))

நிரூபன் சொன்னது…

மாப்பிளை, இண்ட்லி யை காணலை.

நிரூபன் said...
மாப்பிளை,
இன்னைக்கு சுடு சோறு யாரும் கேட்காததால்,
எனக்கு தான் சுடு சோறு.

அப்ப நாங்க என்ன சொதியா குடிச்சனாங்க.....

நிரூபன் சொன்னது…

என்னோடு நெருங்கிப் பழகும் ஒரு சிலருக்குத் தான் நான் எப்படி எனத் தெரியும் இந்த படங்களைப் பாருங்கள் என்னைப் படுத்தும்பாடு தெரியும்.//

அடப் பாவி, இது நமக்குத் தான் முதலே தெரிஞ்ச விசயமாச்சே...

ஆமா அதெப்படி உன்னோடு நெருங்கிப் பழகும் இவர்களுக்கு மட்டும் உன்னைப் பற்றி நன்றாகப் புரியும்?

இந்த லூசுப் பெண்ணையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்தியதிற்கு ரொம்ப நன்றி அண்ணா.....

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
நிரூபன் said...
மாப்பிளை,
இன்னைக்கு சுடு சோறு யாரும் கேட்காததால்,
எனக்கு தான் சுடு சோறு.

அப்ப நாங்க என்ன சொதியா குடிச்சனாங்க.....//

இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தா,
அது கூட கிடைச்சிருக்காதே;-))

இது தான் அப்பவே சொல்லியிருக்காங்க.

பந்திக்கு முந்து
படைக்கு பிந்து!

நிரூபன் சொன்னது…

பப்பாசி பறித்த பிரபலமோ;-))

என்ன ஒரு கொடுமை...
உன்னைப் பப்பாவில் தான் எல்லோரும் ஏற்றி விடுறாங்க என்று கேள்வி;-))

மெய்யாலுமே?

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
இந்த லூசுப் பெண்ணையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்தியதிற்கு ரொம்ப நன்றி அண்ணா....//

அது சரி,
லூசுப் பெண் எப்படிப் பதிவெழுதும்?
ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

இது தொடர்பாக இன்னும் பல திடுக்கிடும் புகைப்பட ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். வெகு விரைவில் அவை திரைக்கு வரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்//

ஹி...ஹி....
மச்சான், நாடு தாங்காதுடா.
இதுவே போதும்,
நாம நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கல.

கிருபா சொன்னது…

உங்கள சேர்ந்து நானும் உங்கள விட பெரிய மொக்க பதிவு போட்டிருக்கேன்
பாருங்களேன் ஹிஹி


வடிவேலு ரிட்டன்ஸ் (வரும் ஆனா வராது)

நிரூபன் சொன்னது…

மச்சி, நீங்க தொப்பென்று விழுகிற லுமாலா சைக்கிள் என்னுடையது தானே?
ரிம் ஓட்ட வடையினுடையது தானே?
ரயர் மட்டு,
தேறாங்கண்டல் விதானையாரின் மகளோடை சைக்கிளில் இருந்து சுட்டது தானே;-)))

நிரூபன் சொன்னது…

என்னோடு நெருங்கிப் பழகும் சித்தாரா, நிருபன், ரஜீவன் (ஓட்டை வடை) போன்றோர் நான் சாதாரணமாக பழகுவது போல அதை மொக்கை (நகைச்சுவை) பதிவாகவும் போடலாமே என ஒரு காட்டுக் காட்டினார்கள்.//

மாப்ளே, அதுக்காக நீ ரிஸ்க் எடுத்து, சைக்கிளை சுட்டுக் கொண்டு வந்து விழுந்து மரண மொக்கையெல்லே போட்டிருக்காய்.

ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

என்னோடு நெருங்கிப் பழகும் சித்தாரா, நிருபன், ரஜீவன் (ஓட்டை வடை) போன்றோர் நான் சாதாரணமாக பழகுவது போல அதை மொக்கை (நகைச்சுவை) பதிவாகவும் போடலாமே என ஒரு காட்டுக் காட்டினார்கள்.//

மாப்ளே, அதுக்காக நீ ரிஸ்க் எடுத்து, சைக்கிளை சுட்டுக் கொண்டு வந்து விழுந்து மரண மொக்கையெல்லே போட்டிருக்காய்.

ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

யோ...வலையில் என்ன இன்னைக்கு கூட்டம் கம்மியா?

மச்சி, நீங்க தொப்பென்று விழுகிற லுமாலா சைக்கிள் என்னுடையது தானே?
ரிம் ஓட்ட வடையினுடையது தானே?
ரயர் மட்டு,
தேறாங்கண்டல் விதானையாரின் மகளோடை சைக்கிளில் இருந்து சுட்டது தானே;-)))

11 June 2011 22:01

தேறாங்கண்டல் விதானையார் பற்றி கதைக்க வேண்டாம் எண்டெல்லோ சொன்னனான்/! அவளும் நானும் எப்படி இருந்தம் ?

மச்சி சுதா இப்புடி பொத்தெண்டு விழுந்தா நாளைக்கு.........

ஆஃபீஸ் போறேலையோ?

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தேறாங்கண்டல் விதானையார் பற்றி கதைக்க வேண்டாம் எண்டெல்லோ சொன்னனான்/! அவளும் நானும் எப்படி இருந்தம் ?//

என்ன எப்படி இருந்தீங்க?
நானும் அவளும் லவ்சு விடுறதைப் பார்த்து,
அப்பளம் மாதிரிப் பொரிஞ்சு போயிருந்தீங்க...
கீரியும் பாம்பும் மாதிரி இருந்த கதை...
நமக்குத் தெரியுமே;-))
ஹி! ஹி!

எல்லாரும் சேர்ந்து சுதாவ பப்பாவில ஏத்திப் ப்போட்டாங்கள்

தேறாங்கண்டல் விதானையார் பற்றி கதைக்க வேண்டாம் எண்டெல்லோ சொன்னனான்/! அவளும் நானும் எப்படி இருந்தம் ?//

என்ன எப்படி இருந்தீங்க?
நானும் அவளும் லவ்சு விடுறதைப் பார்த்து,
அப்பளம் மாதிரிப் பொரிஞ்சு போயிருந்தீங்க...
கீரியும் பாம்பும் மாதிரி இருந்த கதை...
நமக்குத் தெரியுமே;-))
ஹி! ஹி!

11 June 2011 22:08

பொறு நீ ஆரைச் சொல்லுறாய் மூத்தவளோ இளையவளோ?

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said..

ஹலோ சார் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குத்தான் சுடுசோறு.நீங்க ௧௧ நிமிஷம் லேற்றாக்கும்.//


ஏன் சுடு சோறு வாங்குவதற்கும் நாள் நட்சத்திரம் பார்ப்பாங்களோ?

நிரூபன் said...
சித்தாரா மகேஷ். said...
நிரூபன் said...
மாப்பிளை,
இன்னைக்கு சுடு சோறு யாரும் கேட்காததால்,
எனக்கு தான் சுடு சோறு.

அப்ப நாங்க என்ன சொதியா குடிச்சனாங்க.....//

இன்னும் கொஞ்சம் லேட்டா வந்தா,
அது கூட கிடைச்சிருக்காதே;-))

இது தான் அப்பவே சொல்லியிருக்காங்க.

பந்திக்கு முந்து
படைக்கு பிந்து!


ஹலோ சார் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குத்தான் சுடுசோறு.நீங்க 11 நிமிஷம் லேற்றாக்கும்.

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எல்லாரும் சேர்ந்து சுதாவ பப்பாவில ஏத்திப் ப்போட்டாங்கள்//

கந்தையா அண்ணேன்ர காணிக்கை பப்பா பிடிங்கி பிடிபட்ட ஆள் இப்ப யார் என்று தெரிஞ்சு போச்சு.

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பொறு நீ ஆரைச் சொல்லுறாய் மூத்தவளோ இளையவளோ?//

மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,
நான் நடுவிலாளைப் பற்றியெல்லோ பேசுறேன்;-))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எல்லாரும் சேர்ந்து சுதாவ பப்பாவில ஏத்திப் ப்போட்டாங்கள்//

கந்தையா அண்ணேன்ர காணிக்கை பப்பா பிடிங்கி பிடிபட்ட ஆள் இப்ப யார் என்று தெரிஞ்சு போச்சு.

11 June 2011 22:10

முறைக்கு நீதான் மச்சி பப்பாசிப்பழம் புடுங்கியிருக்க வேணும்! சுதா பிடுங்கினது ஆச்சரியமா இருக்கு!

சாப்பிட!

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...

ஹலோ சார் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குத்தான் சுடுசோறு.நீங்க 11 நிமிஷம் லேற்றாக்கும்.//

நான் எப்ப உமக்குப் படிப்பிச்சனான்?
நான் உமக்கு கிளாஸ் எடுத்தனானே?
சார் சார் என்று சொல்லுறீங்க...
ஹி...

பதினொரு நிமிசம் லேட் என்றாலும்,
பாயில உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய முத ஆள் நான் தான்;-)))
ஹி...ஹி....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பொறு நீ ஆரைச் சொல்லுறாய் மூத்தவளோ இளையவளோ?//

மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,
நான் நடுவிலாளைப் பற்றியெல்லோ பேசுறேன்;-))

11 June 2011 22:11

அவளுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை! நாங்க ரெண்டு பேரும் புட்டும் தேங்காய்ப்பூவும் மாதிரிதானே இருந்த நாங்கள்!

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முறைக்கு நீதான் மச்சி பப்பாசிப்பழம் புடுங்கியிருக்க வேணும்! சுதா பிடுங்கினது ஆச்சரியமா இருக்கு!

சாப்பிட!//

மவனே பிச்சுப் புடுவன், பிச்சி...ஜாக்கிரதையா இருக்கப் பழகு.

மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,

ஏன் ஷம்போ இல்லையோ?

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவளுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை! நாங்க ரெண்டு பேரும் புட்டும் தேங்காய்ப்பூவும் மாதிரிதானே இருந்த நாங்கள்!//

அடிங்,
விட்டா சொல்லுவீங்க, சீனியும் எறும்பும் மாதிரி ஒட்டிக் கொண்டும் இருந்தம் என்று,

யாருக்கு ரீல் விடுறாய் மச்சி.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முறைக்கு நீதான் மச்சி பப்பாசிப்பழம் புடுங்கியிருக்க வேணும்! சுதா பிடுங்கினது ஆச்சரியமா இருக்கு!

சாப்பிட!//

மவனே பிச்சுப் புடுவன், பிச்சி...ஜாக்கிரதையா இருக்கப் பழகு.

11 June 2011 22:15

ஏன் பி\றகு நானும் பபாசி பழம் புடுங்கவேண்டி வருமோ?

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,

ஏன் ஷம்போ இல்லையோ?//

இல்ல மச்சி, தண்ணி தட்டுப் பட்டாம்,....

சாரி எழுத்துப் பிழை/
தண்ணி தட்டுப்பாடாம்,

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏன் பி\றகு நானும் பபாசி பழம் புடுங்கவேண்டி வருமோ?//

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க, ஈச்சம் பழம் புடுங்கத் தான் லாயக்கு..

ஹி,.ஹு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,

ஏன் ஷம்போ இல்லையோ?//

இல்ல மச்சி, தண்ணி தட்டுப் பட்டாம்,....

சாரி எழுத்துப் பிழை/
தண்ணி தட்டுப்பாடாம்,

11 June 2011 22:17

அப்ப அவளுக்கு தண்ணியில காண்டம்...... ஸாரி கண்டம் இருந்திருக்கு! இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமே?

நிரூபன் said...
மாப்பிளை,
இன்னைக்கு சுடு சோறு யாரும் கேட்காததால்,
எனக்கு தான் சுடு சோறு.

சரி சரி.நமக்கு அடிக்கடி கிடைக்கிற சுடுசோறுதானே.ஆனா நீங்க பாவம் யாரும் சுடுசோறு கேட்காவிட்டால்தானே உங்களுக்கு கிடைக்கும்.பிழைச்சுப் போங்க.ஹ ஹ ஹ ஹா.....

நிரூபன் சொன்னது…

Comment deleted
This post has been removed by the author.//

ஆதர் அண்ணை என்பது- அந்த தென்னியங்குளத்தில,
சங்கக் கடைச் சாமான்களை பின் வீட்டுப் பொட்டையளுக்கு இலவசமா குடுப்பார். அவரைத் தானே?
அவர் ஏன் சுதாவின்ர ப்ளாக்கிற்கு வந்து கமெண்டை டிலீஸ் பண்ண வேணும்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏன் பி\றகு நானும் பபாசி பழம் புடுங்கவேண்டி வருமோ?//

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க, ஈச்சம் பழம் புடுங்கத் தான் லாயக்கு..

ஹி,.ஹு...

11 June 2011 22:18

எண்டாலும் விதானையாரின்ர இளைவவள அடிக்கேலாது, அவள் மூத்தவள் எப்பனெண்ட உடன......... பயந்துபோடுவாள்

நிரூபன் சொன்னது…

சித்தாரா மகேஷ். said...
நிரூபன் said..

சரி சரி.நமக்கு அடிக்கடி கிடைக்கிற சுடுசோறுதானே.ஆனா நீங்க பாவம் யாரும் சுடுசோறு கேட்காவிட்டால்தானே உங்களுக்கு கிடைக்கும்.பிழைச்சுப் போங்க.ஹ ஹ ஹ ஹா.....//

இப்புடி ஒரு நிலமை எனக்கு வேண்டவே வேணாம். புதூர் நாகதம்பிரான் மேல அடிச்சு சத்தியம் பண்ணுறேன்,
எனக்கு இந்தச் சுடு சோறு வேண்டாம்.

குழந்தைப் பிள்ளை மாதிரி அழுறீங்க, நீங்களே சாப்பிடுங்க.
ஹி...ஹி...

நிரூபன் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எண்டாலும் விதானையாரின்ர இளைவவள அடிக்கேலாது, அவள் மூத்தவள் எப்பனெண்ட உடன......... பயந்துபோடுவாள்//

யோ, உம்மைப் பார்த்தாலே அவள் பயந்து ஓடுவாள்.
இதிலை பெரிய வீராப்பு..
ஹி.ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எண்டாலும் விதானையாரின்ர இளைவவள அடிக்கேலாது, அவள் மூத்தவள் எப்பனெண்ட உடன......... பயந்துபோடுவாள்//

யோ, உம்மைப் பார்த்தாலே அவள் பயந்து ஓடுவாள்.
இதிலை பெரிய வீராப்பு..
ஹி.ஹி...

11 June 2011 22:23

மச்சி முதலாளி வந்திட்டார்.... ஐ ஆம் எஸ் கேப்

Ashwin-WIN சொன்னது…

நண்பா இதை சத்திய சோதனை பாகம் ஒன்று என்று பதிவிட்டு மாசம் மாசம் பதிவிடலாம். எங்களுக்கும் ஜாலியா இருக்கும். உங்க தங்கச்சிக்கு மொதல்ல ஒரு சபாஸ். இன்னும் இன்னும் அன்னிய பத்தி நெறைய எதிர்பாக்குரம். # என்னா ஒரு கொலைவெறி பாத்தியளா

நிகழ்வுகள் சொன்னது…

தேறாங்கண்டல் விதானையார் மட்டும் இத கேள்வி படனும் தற்கொல பண்ணிடுவார் ))

நிரூபன் சொன்னது…

நிகழ்வுகள் said...
தேறாங்கண்டல் விதானையார் மட்டும் இத கேள்வி படனும் தற்கொல பண்ணிடுவார் ))//

ஏன் நாங்கள் விதானையாரைப் பற்றியே கதைக்கிறம்?
அவரோடை பொம்பிளைப் பிள்ளைகளைப் பற்றித் தானே;-))

மனுசன் ஊர்ச் சனத்தின்ரை நிவாரணக் கார்ட்டையே கட் பண்ணி சுருட்டின ஆள்,
இதுக்குப் போய் தற்கொலை பண்ணுவாரே?
பாலியாற்றில இறங்கி உல்லாசமா குளிச்சு தான் மகிழ்வார்.

நிகழ்வுகள் சொன்னது…

////நிரூபன் said...

மூத்தவள் முழுகாமல் எல்லோ அப்ப இருந்தவள்,
நான் நடுவிலாளைப் பற்றியெல்லோ பேசுறேன்;-)) /// என்பா முளுகல ,அந்த பக்கம் தான நிறைய குளங்கள் கிடக்குது, ஒன்றில விழுந்து எழும்ப வேண்டியது தானே...

Unknown சொன்னது…

நீ நடத்து ராசா... அபோ இனி மொக்கை பதிவுகளும் வருமா????

கார்த்தி சொன்னது…

அண்ணே மதி சுதா அண்ணே என்ன நடந்தது? என்ன நடக்குது? மொக்கையெண்டுட்டு முழு மொக்கையா தாறீங்க?

Angel சொன்னது…

முதல் படம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ,
உங்க கூடவே மரம் ஏறுகின்றாரே அவர் யாரு .

பெயரில்லா சொன்னது…

செம காமெடி பாஸ் !!! அந்த போட்டெலாம் இருக்கிறது நீங்க தானா ? வீடியோ நல்லாருக்கு ...

Unknown சொன்னது…

மாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது ஹிஹி!

சுதா SJ சொன்னது…

போட்டோஸ் போலவே அழகான பதிவு பாஸ்

ம்ம்ம். தூள் கிளப்புரிங்க சகோ...

Mathuran சொன்னது…

அடப்பாவிங்களா!!!
காலைல பார்த்தா சுதா அண்ணான்ட பதிவு டாஸ்போர்ட்ல அப்டேட் ஆகியிருந்திச்சு.. சரி சுடுசோறுதான் இல்லாட்டியும் பரவாயில்ல ஒரு ரெண்டாவது, மூன்றாவது இடமாவது கிடைக்கும்னு பார்த்தா எல்லாருமா சேர்ந்து கும்மி அடிச்சிட்டிங்களே.... இது உங்களுக்கே நல்ல இருக்கா

Mathuran சொன்னது…

சுதா அண்ணா.. உங்கள சைக்கிள்ள இருந்து தள்ளி விட்டவர் சரியான அப்பாவி.. அவருக்கு ஒழுங்கா தள்ளிவிடக்கூட தெரியல்ல

Mathuran சொன்னது…

ஃஃசித்தாரா மகேஷ். said...
இந்த லூசுப் பெண்ணையும் ஒரு பதிவராக அறிமுகப்படுத்தியதிற்கு ரொம்ப நன்றி அண்ணா....ஃஃஃஃ

உங்க நேர்மை எனக்கு பிடிச்சருக்கு

Mathuran சொன்னது…

ஃஃஃநிரூபன் said...
இது தொடர்பாக இன்னும் பல திடுக்கிடும் புகைப்பட ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார். வெகு விரைவில் அவை திரைக்கு வரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்//

ஹி...ஹி....
மச்சான், நாடு தாங்காதுடா.
இதுவே போதும்,
நாம நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கல.ஃஃஃஃஃ

பாஸ் இதுக்கே இப்பிடின்னா எப்புடி?
இன்னும் நிறைய இருக்கு பாஸ்
ஆப்பீஸ்ல தூங்கிறது,
கள்ள மாங்காய் பிடுங்கிறது,
ஆப்பீஸ்ல இருந்து பதிவு போடுறது..... இப்பிடி எக்கச்சக்கமா இருக்கு

Mathuran சொன்னது…

ஃஃஃஃசித்தாரா மகேஷ். said...

ஹலோ சார் நீங்க என்னதான் சொன்னாலும் எனக்குத்தான் சுடுசோறு.நீங்க 11 நிமிஷம் லேற்றாக்கும்.//

நான் எப்ப உமக்குப் படிப்பிச்சனான்?
நான் உமக்கு கிளாஸ் எடுத்தனானே?
சார் சார் என்று சொல்லுறீங்க...
ஹி...

பதினொரு நிமிசம் லேட் என்றாலும்,
பாயில உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய முத ஆள் நான் தான்;-)))
ஹி...ஹி....ஃஃஃஃ

சரி சரி... ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க.... ஒரு ஓரமா நில்லுங்க

Nice Photos....

சகோ நிருபன் க்கு எவ்வளவு கோபம் வருது?

Unknown சொன்னது…

ஹிஹிஹி இது எனக்கு தெரிந்த விடயம் தானே ஹிஹி

Unknown சொன்னது…

ஹிஹிஹி இது எனக்கு தெரிந்த விடயம் தானே ஹிஹி

Unknown சொன்னது…

தோழமையுடன் மாஸ்டர் ஏஎல்ஏ முஹம்மத்
வாரமொரு பதிவு என மட்டுப்படுத்தியதுதான் நான் கோபப்பபடக்காரணம் என்றாலும் சந்தோஸாம் கூடவே ஒரு சிரிப்பு ஏனென்று தெரியுதா நாளுக்கு நாள் நான்கு ஐந்து என பதிவிடுவோரின் பதிவுகளைவிட வாரமொரு முறை பதிவிடும் உங்கள் பதிவு என்றுமெ கிராக்கியிள்ளது என்பதை மறந்திட வேண்டாம்
என்றாலும் வாரத்துக்கு இரு முறை என்று மாற்றினால் என்ன ??????

jagadeesh சொன்னது…

பப்பாசி யா? எந்த ஊரு தமிழ்யா இது..

Unknown சொன்னது…

mee the firstu

பதிவு விட

பின்னூட்டங்கள் அருமை

நீங்கள் நன்றாக மரம் யேருவீர்கள் போல

vaalthukkal.

கவி அழகன் சொன்னது…

அடப்பாவி மக்கா பப்பா மரத்திலும் யாரும் ஏறுவாங்களா

கவி அழகன் சொன்னது…

ப்லோக்கேரையும் தடை பண்ணுவாங்களா எகுத்து சுதந்திரம் தமிழனுக்கு எங்கு போனாலும் இல்லை போல இருக்கு யார் இன்னொரு தமிழன் தான் தடை பண்ணியிருப்பான்

Mathuran சொன்னது…

//jagadeesh said...
பப்பாசி யா? எந்த ஊரு தமிழ்யா இது..//

பப்பாளி என்பதே சரியானது.. எங்களூரில்

பப்பாளி
பப்பாசி
பப்பா பழம்

என்றெல்லாம் சொல்லுவார்கள்

:)

குணசேகரன்... சொன்னது…

வாவ். நல்லாத்தான் இருக்கு.

சுதா ஒரு சாயல்ல.. ஹி ஹி ஹி

ஆகுலன் சொன்னது…

முதல் மூன்று பேரையும் வன்மையாக கண்டிக்கிறேன்............ இப்படியா குமுறுறது.......

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

அன்பு நண்பன் சொன்னது…

புகைபடங்கள் நல்லா இருக்கு, video super, r u ok????

ஹி...ஹி...

ADMIN சொன்னது…

படங்கள் சிரிப்பை வரவழைத்தது...!

எங்க சாமி இதெல்லாம் புடிச்சிங்க?
நீங்க எங்கயோ போயிட்டிங்க நண்பா
அமெரிக்காவுக்கு உங்கபயோடேட்டாவ அனுப்புங்க.

தனிமரம் சொன்னது…

என்ன சுதா எங்கே இப்படி எல்லாம் பிடிக்க முடிகிறது . கொஞ்சம் தாமதம் வருவதற்கு அதற்குள் இப்படி எல்லாரும் கும்மியடிக்கிறார்கள் இதைக்கூட ஒருபதிவாக போடலாம்.

Sadhu சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Sadhu சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

அண்ணா மரம் ஏறுவதில் எல்லோரிடமும் என்ன ஒற்றுமை? நான் மந்திக்கும்...........இடையிலான ஒற்றுமையை சொன்னேன்.

sinmajan சொன்னது…

சொந்தச் செலவில சூனியம் வைக்கிற உங்க நேர்மை புடிச்சிருக்கு

ஷஹன்ஷா சொன்னது…

என்னாமா யோசிக்கறானுங்க...


பலே பதிவு..

அண்ணா அந்த வீடியோ கலக்கல்... சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகலதானே...??# அடிக்க வராதேயுங்கோ..

டிலான் சொன்னது…

அண்ணை மதிசுதா அண்ணை! சுகங்கள் எல்லாம் எப்படி? எங்களை எல்லாம் மறந்திட்டீங்களோ என்று கேட்கமாட்டேன். காரணம் இந்தப்பதிவு படங்கள்மூலம் நிங்கள் உங்கள் முன்னைய கூர்ப்பைக்கூட மறக்கேல்லை என்று புரியுது. (சும்ம ஜோக்குக்குத்தான் )
பார்ரா மதிசுதா பப்பாப்பளத்தை பிடிக்க இந்தப்பாடு படுறாரு :)

rajamelaiyur சொன்னது…

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கொள்ளைகார பதிவர்கள்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top