Wednesday, 18 May 2011

உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்..

என் அன்பு உறவுகளே சேமம் எப்படி ?

          இதைப் படிக்க தங்களுக்கு பொறுமை இருக்குமோ தெரியல இருந்தாலும் கெஞ்சிக் கேட்கிறேன் ஒரு 5 நிமிடம் இந்த ஈனத் தமிழனுக்காக செலவழியுங்களேன்.
         இந்த உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டு பலரின் பகடைக்காய்கள் ஆகிவிட்டோம். ஒரு சில புலம் பெயர் தமிழரின் செயலால் எம்மிடம் இருக்கும் கொஞ்ச சுதந்திரமும் பறிக்கப்பட்டு விட்டது. அவர்களால் எம் மீது நிஜமான பாசம் கொண்ட பலரை கூட களங்கப்பட வைத்து விட்டார்கள்.. நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன். இங்கு நான் சொல்வது சிலருக்கு நியாயமாக படலாம் பலருக்கு கோபத்தை கிளறலாம். ஆனால் உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் நான் சொல்வதில் ஏதாவது நியாயமின்மை இருக்கிறதா ?
           போர் முடிந்து பலமாதங்கள் கடந்த விட்டது ஒவ்வொரு உலகத்தமிழனும் வேணும் வேணும் என்கிறோம்..
   எது வேணும் என்றால் ?
   தனி நாடு வேணும்.
   எப்படி வேணும் ?
   திருப்பி அடிப்போம்..
   யார் அடிப்பது எங்களால் இனி எதற்கும் ஏலாது நீங்கள் வாறிங்களா ?
   மௌனம் மௌனம் மௌனம்...

இது தான் இன்றைய நிலமை..
         அதிர்வு தளத்தில் சில ஆதாரங்களுடன் அதை வழக்கு ஆக்கவதற்காக எனச் சொல்லி பெரும் தொகைப் பணத்தை சேர்க்கிறார்கள்...
      ஒரு மனித உரிமை மீறலை உலக அரங்கேற்றத்திற்கு பணம் சேர்க்கிறார்கள் என இந்த இணையம் சொல்கிறது. அதற்கு சேர்ந்துள்ள பணத்தை பார்த்திர்களா ? தமிழனாக பிறந்த ஒவ்வொருத்தனும் பிறந்தது முதல் இதைத் தானே செய்கிறோம் பழி வாங்கணும் என்ற உணர்வு வந்துவிட்டால் அவனும் கொடிய மிருகம் போலத் தான் இந்தப் பணத்தை செலவழித்து எம்மால் என்னத்தை சாதிக்க முடியும் அந்தளவு பணத்தையும் மண்ணாக்குவது தான் மிச்சம். இத்தனை பேர் சாகும் போது தொலைக்காட்சியிலும் செய்மதியிலும் அதே ஐநாவும் மனித உரிமை ஆணைக் குழுவும் பார்த்தபடி தானே இருந்தது அப்போ செய்யாதவர்களா இப்போ செய்யப் போகிறார்கள்.. என்ன நான் மகிந்தாவுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என குற்றம் சுமத்தப் போகிறிர்களா ? சுமத்துங்கள் பரவாயில்லை அதற்கு முன் மனிதன் இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த செய்தியை பாருங்கள்..


மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் - இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது 
இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.


        இப்போது சேர்ந்துள்ள பணத்தில் ஒரு தொகுதியை பாருங்கள்
              இது பற்றி யாருக்காவது தெரியுமா ? அந்தப் பணத்தை அநியாயமாக்காமல் நல்லதிற்கு செலவழிக்கலாமே... ஒன்றை மட்டும் உணருங்கள் உறவுகளே இவையெல்லாம் உழைப்பதற்கான தந்திரத்தில் ஒன்று.. உதாரணத்திற்கு இங்கு சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும் போது நீங்கள் எங்களுக்காக கொட்டும் மழை , பனி என்று கூட பாராமல் எமக்காக வதைபட்டீர்கள் அப்போது கூட ஒரு கூட்டம் பணம் சேர்த்தது அதில் எவ்வளவு எங்களுக்க கிடைத்தது என யாருக்காவது தெரியுமா ? தேவைாயனால் எமக்கு உதவிய நிறுவனங்களின் பெயர் தருகிறேன் அதில் எதாவது ஒரு அமைப்புடன் அந்த பணம் செர்த்தவருக்கான தொடர்பிருக்கா சொல்லுங்கள்..

இதை பாருங்கள்
       கடந்த 22/3/2009 தேதி அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 43 வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.மொத்தம் 288 மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நாடு வல்லரசாக வேண்டுமானால் இளைஞர்களின் மனதுவைத்தால் தான் முடியும் ஆக இளைஞர்கள் இந்த நாட்டின் நட்சத்திரங்கள் என பேசிவிட்டு மாணவர்களுக்கு பட்டமளித்துக்கொண்டு இருக்கும் போது அதே கல்லூரியில்Bsc(zoo) படித்து முடித்த சுமதியை பட்டமளிக்க மேடைக்கு வந்த சுமதி அழுதுகொண்டு இலங்கையில் எமது சொந்தங்கள் கொல்லப் பட்டுகொண்டிருக்கும் போது இங்கு சந்தோசமாக பட்டத்தை வாங்கி அதை கொண்டாட முடியாது எனவே எனக்கு பட்டம் வாங்க விருப்பமில்லைன்னு சொல்லிவிட்டு போக அனைவருக்கும் பேரதிர்ச்சி,

      இதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்.. அவரது செயல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது ஒரு உத்வேகம் வந்தது போல இருந்தது ஆனால் ஒரு முறை சிந்தித்தேன் அதன் பிறகு அவர் செய்தது அப்பட்டமான தப்பாகவே படுகிறது... காரணம் எம்மிடம் அவர்களால் அழிக்க முடியாமல் போன ஒரே சொத்து கல்வி தான் அதை நாமே தற்கொலை போல செய்யணுமா ? எம்மீது தீவிர பற்றுக் கொண்ட தமிழ் நாட்டு உறவுகளே தயவு செய்து சிந்தியுங்கள் எமக்காக யாரும் உயிரையோ கல்வியையோ விட்டு விடாதீர்கள்.. அது பலருக்கு பிரச்சார கருவியே தவிர வேறொன்றுமில்லை கடைசியாக அந்த ஒப்பற்ற மனிதன் தீக்குளித்து தன் இன்னுயிரை எமக்காக இழந்த போது கூட ஓரிரண்டு அரசியல்வாதி தான் தப்பென அப்படி செய்ய வேண்டாமென தடுத்தார்கள் ஆனால் மற்ற எவரேனும் சொன்னார்களா ? இல்லை அவர்களுக்கு வெறும் வாய் மெல்பவருக்கு அவல் போலவே ஆனது... வேண்டாம் உறவுகளே ஏன் அரசியல்வாதியின் உடலை கொழுத்தினால் எரியாதா ? எந்த அரசியல்வாதிக்காவது அந்தளவு துணிவிருக்கா ?
       இன்று கூட வன்னியில் எத்தனை வீட்டில் உலை வைக்கப்படுகிறதோ தெரியல நிவாரணத்தை மட்டுமே நம்பி சிவிக்கும் பல குடும்பங்கள் இருக்கிறது. 55 வயதுடைய அம்மா கூட றோட்டில் கல் அள்ளி வேலை செய்கிறது ஏன் அந்த 600 ரூபா கூலிக்காகத் தான் இவர்கள் எப்போது மீளுவார்கள் யார் இவரை மீட்டெடுப்பார்கள். இனிவரும் காலங்களில் எம் வாழ்வையும் நிம்மதியையும திர்மானிக்கப் போவது நீங்கள் தான் தயவு செய்து ஒரு கணமெனும் எங்களுக்காக சிந்தியுங்கள்... இங்குள்ள உங்கள் உறவுகளை நேரடியாக தொடர்பு கொண்டு நிலைப்பாட்டை அறியுங்கள் உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.. என் மனதில் பட்டதை ஒரு சமூக சேவையாளனாக பகிர்கிறேன் தப்பிருந்தால் சுட்டிக்காட்டங்கள்...


களைகளை அழிக்கவென
களை கொல்லி இட்டோம்
பயிர்கள் தான் அழிந்தது
களைகள் மிதந்தது
பயிர்கள் வளரவென
ஒருபிடிஉரமிடுங்களேன்
பொட்டல் நிலத்தில்
தொட்டதெல்லாம்
முட்கள் தான்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

குறிப்பு - உறவுகளே இந்த விடயம் தங்களுக்கு நியாயமாகப்பட்டால் இதை பலருக்கு சொல்லுங்கள். கீழே உள்ள வதனப்புத்தக விருப்பப் பொத்தானை (FACE BOOK LIKE BUTTON) அழுத்தி பாகிருங்கள்.. முடிந்தால் இன்ட்லி, தமிழ்மணம் போன்றவற்றில் வாக்கிட்டு ஈழ முலையில் இருந்து பகிரப்படும் இம்மடலை பலரிடம் போய் சேர உதவுங்கள்...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

56 comments:

மாப்ள என்ன சொல்றது தெரியல.......இவ்வளவு கொடுமை நடக்குதா..........அந்த அப்பாவி மக்களுக்குன்னு அளிச்ச பணத்த எதுக்கு தான் செலவு பண்றானுங்க!

akulan said...

"உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.."
அண்ணா இதை நானும் ஏற்று கொள்ளுகிறேன்.....
சிந்திக்க வேண்டிய தருணம்.....

akulan said...

புலம் பெயர்ந்து வாழும் எங்களால் எல்லாத்தையும் இலகுவாக ஏற்றுகொள்ள முடியவில்லை அண்ணா.........

Ashwin-WIN said...

சுதா ஒரு நியாயமான நிதான பகிர்வு.. 99 வீதம் ஒத்துப்போகிறது என் மனதும்.

நீங்கள் சொல்வதில் உள்ள நியாயம் புரிகின்றது..

கொடுமை கொடுமை

வருகிறேன் சகோதரம் கொஞ்சம் தாமதமாக.

இந்த கொடுமைதான் பெரிய கொடுமை

மனக்குமுறலை வெளியிட்ட பகிர்வு.

கொடுமையான விஷயம்.... எப்போ மாறுமோ இந்த நிலை.

mayubcs said...

I Agree with you, ...........

Lakshmi said...

சுதா, நீங்க சொல்வதில் நியாயம் இருக்கு.

Anonymous said...

// நான் நடந்ததை பற்றி அதிகம் கதைக்க விரும்பல நடக்கப் போறதைப்பற்றி கதைக்கவே விரும்புகிறேன் //

நியாயமான வலிகள் நிறைந்த பதிவு. தங்களின் கருத்தையே நானும் பிரதிப் பலிக்கின்றேன். போரால் போரை வெல்ல முடியாது, அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.

தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் துன்பப் பட்ட மக்களுக்கு, அவர்களின் துன்பத்தை அறுவடை செய்துக் கொண்டு புலத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய தருணமிது.

தமிழீழம் வேண்டுமா? தமிழன் வேண்டுமா? என்றால் நான் முதலில் தமிழன் தான் வேண்டும் என்பேன். தமிழன் இல்லாமல் தமிழீழம் சாத்தியமா? இல்லையே.. அப்படி இருக்க தமிழனின் வாழ்வை வளமாக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் புலத்தில் நியாயம் பேசுவோர்......

உண்டிக் கொடுத்தாரே உயிர்க் கொடுத்தாரே !

வன்னியில் மட்டகளப்பில் யாழில் என தமிழர்கள் ஒவ்வொரு இரவும் பசியோடு போவதை எண்ணி நெஞ்சம் கணக்கின்றது......

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் .... புண்கண்ணீர் பூசல் தரும் அல்லவா???

புலத்தில் அன்புடையோர் இருப்பார்களானால் ஈழ நிலத்தில் பசியோடு ஒருவன் இல்லாமல் இருக்க வழி செய்யுங்கள் முதலில்.. அப்புறம் மற்றவற்றை யோசிப்போம்

Anonymous said...

அண்ணா உங்கள் கருத்து நூறு வீதம் நியாயமானது தான், மக்களுக்காக மண்ணே ஒழிய மண்ணுக்காக மக்கள் அல்ல.

Anonymous said...

////நீங்கள் எங்களுக்காக கொட்டும் மழை , பனி என்று கூட பாராமல் எமக்காக வதைபட்டீர்கள் அப்போது கூட ஒரு கூட்டம் பணம் சேர்த்தது அதில் எவ்வளவு எங்களுக்க கிடைத்தது என யாருக்காவது தெரியுமா ?//// நானும் அறிந்தது தான். இப்படி பட்டவர்களால் தான் எல்லாமே நாசமாய் போனது

இப்படி ஏமாத்தி சாப்பிட்ட எந்த பொறம்போக்கு பசங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.

இது என்ன கொடுமை.. உங்களின் பதிவில் ஆதங்கம் புரிகிறது.. என்று மாருமோ.. இந்த அநியாயங்கள்

சுதா நானும் அங்கிருந்து தானே வந்தேன்! வன்னிமக்களின் துன்பம் எனக்கு நன்கு தெரியும்! அதே வேளை இப்போதைய புலம்பெயர் தேசத்து நிலைமைகளை எடுத்துச்சொல்வதும் எனது கடமையாகிறது!
முதலில், இனியும் வன்னிமக்கள் போராட வேண்டும் என்றோ, யுத்தத்தில் பலியாக வேண்டும் என்றோ, சண்டை மீண்டும் தொடங்க வேண்டும் என்றோ இங்கு இப்போது யாருமே பேசுவதில்லை! அந்தக்காலம் மாறிவிட்டது! யுத்தம் முடிவடைந்த பின்னர் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இங்கு வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்துள்ளார்கள்!
அவர்கள் கூறும் கதைகளைக் கேட்டு கேட்டு புலம் பெயர் தமிழர்கள் ஆரம்பத்தில் நம்ப மறுத்தாலும், இப்போது ஏற்றுக்கொள்கின்றனர்! புலிகள் இழைத்த தவறுகளை இப்போது அனைத்து புலம் பெயர் மக்களும் தெரிந்தே வைத்துள்ளார்கள்!ஆனால் சர்வதேச ரீதியில் நாம் சிலவற்றை செய்தே ஆகவேண்டியுள்ளது! மற்றும் படி புலம்பெயர் மக்களுக்கு வன்னி மக்கள் மீது பாசம் இருக்கவே செய்கிறது!

உங்களது பதிவின் காத்திரமான கருத்துக்களை வரவேற்கிறேன் சகோ. எங்களூரின் யதார்த்தத்தை உணர்ந்தாவது மக்களுக்காக சேமித்த பணத்தை மக்களுக்காகப் பயன்படுத்தினால் நன்மையாக இருக்கும் என்பதே எனது கருத்தும்.

நியாய பூர்வமான உங்களின் கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகிறேன் சகோ.

ஹேமா said...

மதி...நீங்கள் சொல்வது சரியானாலும் சிலவேளை ஏதோ ஒரு நல்லது நடந்திருந்தால் நாமேதான் கொண்டாடியும் இருப்போம்.நமது தேவை என்பது எல்லோருக்குமே என்ன என்பது ஒன்றுதான்.ஆனால் சிங்கள அரசிடம் கேட்கும் விதம்தான் வேறு.ஆனால் சிங்கள அரசு ஒருநாளும் தானாகத் தரப்போவதுமில்லை.அதுவரை நாம் என்றும் அவர்களுக்கு அடிமைகளே.ஏதோ ஒரு வழியில் பிடுங்கித்தான் எடுக்கவேணும் எம் சுதந்திரத்தை !

//இத்தனை பேர் சாகும் போது தொலைக்காட்சியிலும் செய்மதியிலும் அதே ஐநாவும் மனித உரிமை ஆணைக் குழுவும் பார்த்தபடி தானே இருந்தது அப்போ செய்யாதவர்களா இப்போ செய்யப் போகிறார்கள்..

200 % ஒத்துப் போகின்றேன்.இதெல்லாம் சும்மா தங்க்ளது வலைக்குள் இலங்கை அரசு விழும் வரை ஆடப் போகும் நாடகம்.அது நடந்தால் போர்க்குற்றம் எல்லால் அவர்களுக்குத் தூசு

Nesan said...

உங்களின் உனர்வு புரிகின்றது மதி என்னால் வேறு எதுவும் சொல்லமுடியவில்லை இழப்புக்களை தானே தாங்கி வாழ்கிறோம்!

மாப்ள இவ்வளவு கொடுமையா? அவனுங்க நாசமா போகட்டும்..

இப்பிடியும் அநியாயமா...!!!!

vanathy said...

கொடுமை தான். என் கணவர் அடிக்கடி சொல்வதை தான் நீங்களும் சொல்லி இருக்கிறீங்க. வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களால் தான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு இல்லை. இது எப்ப விளங்கப் போவுதோ தெரியவில்லை.
அந்தப் படம் மனதை கனக்கச் செய்கிறது.

ஜீ... said...

உண்மை சுதா! நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதே! ஆமா இன்னும் யாரும் வந்து வாந்தி எடுக்கலையா?

akulan said...

dear sister..vanathy
(வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களால் தான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு இல்லை. இது எப்ப விளங்கப் போவுதோ தெரியவில்லை.)
கண்டிப்பாக இதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியவில்லை. ஈழத்தில் வாழும் எத்தனை குடும்பங்கள் புலத்தில் இருப்பவர்களை நம்பி வாழ்கின்றனர்.

ஏன் உங்களுக்கு எங்களால் விடிவு இல்லை .......அல்லது ஏன் நீங்கள் எங்களால்தான் விடிவு கிடைக்கவேனும் என்று எண்ணவேண்டும்?

சரி புலத்தில் இருக்கும் எல்லோரும் உங்கு போராட வந்தால் என்ன நடக்கும்............

Giruba said...

உங்கள் கூற்று முற்றிலும் உண்மை, வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களால் தான் ஈழத்தமிழர்களுக்கு விடிவு இல்லை
என்பதை நான் மறுக்கிறேன் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்பது என் கருத்து உங்களை போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதே என் அவா
"நெருப்புக்கு தெரியாது நாம் எதை எரிக்கிறோம் என்று"
தவறுக்கு முழு காரணம் அவர்களல்ல
"தவ்றாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்"

பகிர்வுக்கு நன்றி . தங்களின் இந்த பதிவை எங்கள் தளத்தில் பதிவு செய்ய பட்டுள்ளது . தவறு எனில் தங்களின் முடிவை emailஅறிய தரலாம்
http://usetamil.net

FOOD said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அத்தனை துன்பங்கள்.

உங்கள் ஆதங்கம் நியாயமானது.
உலகில் பிறந்த நாம் வாழவேண்டும்.
கௌரவமாக அது தமிழினத்திற்கு
எட்டாக்கனி. போட்டியும் பொறாமையும் காட்டிக்கொடுப்புக்களும் தமிழனிடம் கூடப்பிறந்த்தவை

உங்கள் ஆதங்கம் நியாயமானது.
உலகில் பிறந்த நாம் வாழவேண்டும்.
கௌரவமாக அது தமிழினத்திற்கு
எட்டாக்கனி. போட்டியும் பொறாமையும் காட்டிக்கொடுப்புக்களும் தமிழனிடம் கூடப்பிறந்த்தவை

This comment has been removed by the author.

வெளிநாடுகளில் வாழும் உறவுகள் பாதிக்கபட்ட எம் மக்களுக்கு உதவ நினைத்தால் ஒரு குடும்பத்தை தாமாகவே நேரடியாவே தொடர்புகொண்டு அவர்களது வங்கிக்கணகுக்கு மாதம் மாதம் ஒரு தொகையை அனுப்பி வைத்து உதவலாம் அல்லவா?

@ இத்தனை பேர் சாகும் போது தொலைக்காட்சியிலும் செய்மதியிலும் அதே ஐநாவும் மனித உரிமை ஆணைக் குழுவும் பார்த்தபடி தானே இருந்தது அப்போ செய்யாதவர்களா இப்போ செய்யப் போகிறார்கள். //


இன்னும் ஒரு போரா ? வேண்டவே வேண்டாம் மீண்டும் 30 வருடம் போராடி இறுதியில் இப்படியொரு நிலை வந்தால் இலங்கைத்தீவில் ஒரு தமிழனும் மிஞ்சமாட்டான்.

இது தொடக்கம் தான். தமிழர்கள் பார்க்க வேண்டிய விடயங்கள் இன்னும் இருக்கு. ராஜபக்ஷே பதவிக்காலம் முடிவதற்குள் வேடிக்கைப் பாருங்க........

தங்களின் கூர்மையான அவதானிப்புடன் உருவான விழிப்புணர்வு பதிவு இது.

வாழ்த்துக்கள் தம்பி.

tharsigan said...

ஒவொரு ஈழதமிழனும் சுயநலத்துடன் (அதாவது மற்றவர் பற்றி படாமல்) வாழ்வதே சிறந்ததாகக் தோன்றுகிறது.
உதவி, திருப்பி அடிக்கின்றோம்,அது இது என்ற பெயரில் உவத்திரம் செய்வதிலும் பார்க்க இதுவே சிறந்தது. ஈழத்தில் வாழும் எங்களை இதுக்கு மேலும் துன்புறுத்தாதீர்கள்.

tharsigan said...

//////akulan said.....................
சரி புலத்தில் இருக்கும் எல்லோரும் உங்கு போராட வந்தால் என்ன நடக்கும்...........
/////

சாத்தியமானத்தை சொல்லுங்கள்....

tharsigan said...

//////akulan said.....................
சரி புலத்தில் இருக்கும் எல்லோரும் உங்கு போராட வந்தால் என்ன நடக்கும்...........
/////

சாத்தியமானத்தை சொல்லுங்கள்....

உண்மை நிலவரத்தைக் கூறியிருக்கிறீர்கள். கேட்க வேண்டியவர்கள் காதுகளில் எல்லாம் ஒலிக்க வேண்டும்.

bala said...

''இன்று கூட வன்னியில் எத்தனை வீட்டில் உலை வைக்கப்படுகிறதோ தெரியல நிவாரணத்தை மட்டுமே நம்பி சிவிக்கும் பல குடும்பங்கள் இருக்கிறது. 55 வயதுடைய அம்மா கூட றோட்டில் கல் அள்ளி வேலை செய்கிறது ஏன் அந்த 600 ரூபா கூலிக்காகத் தான் இவர்கள் எப்போது மீளுவார்கள் யார் இவரை மீட்டெடுப்பார்கள்.''
என்ன சொல்வது வலியும், நியாயமும் அனுபவித்தவனுக்கே தெரியும் ........ உங்கள் வலி வேதனை இவை இன்னும் அரசியல் சாயம் பூசுவதை தான் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை . இங்கே தமிழர் இயக்கம் என்று இருக்கு அவங்க நல்லவங்களா கெட்டவங்களா தெரியலை சகோதரனே ! . ஏன் சொல்கிறேன் என்றால் அவர்கள் சொல்வதும் நாங்களாக படித்து தெரிந்து கொள்வதும் நல்ல வலைதளமா அது என்பது கூட தெரியாதா அப்பாவி தமிழ் உணர்வு மிக்க தமிழகர் இருகின்றனர் ... எது உண்மை எது போய் என்று புரிந்து கொள்ள இயலாத தமிழகம் . உங்கள் இன்றைய நிலை படிக்கும் போதே இதயத்தில் இரத்தம் கசிகின்றது ...... உங்கள் வாழ்வு விடியல் காண யாரை வேண்டுவது என்று கூட தெரியாதா ஒரு இளகிய தமிழன் .

பழம் வன்னிமக்களிடம் இருந்தது பணம் புலம்பெயர் மக்களிடம் இருந்தது என்ற கோட்பாடு யுத்தகாலத்தில் கதைக்கபட்டது ஏன் காதுகளில் விழுந்திருக்கு.

ஒவொரு தாயும் தன சொந்த பிள்ளையை போராட கொடுத்து விட்டு விசர்பிடித்து திரிஞ்சதும் நேற்று போன பிள்ளை நாளை பெட்டியில் வந்ததும் ( பெட்டிக்குள் யார் எண்டு கூட தெரியாது ) பார்த்து வேதனை பட்டதும் இன்னும் பல . உண்மையில் பல புலம்பெயர் தமிழர்களுக்கு தெரியாது. ஏன் சண்டை நடந்துகொண்டிருக்கேக கிளிநொச்சியில் இருந்து விட்டு பிற்பகுதியில் வெளியில் சென்று இடம்பெயர்ந்த மக்களோடு வேலை செய்த எனக்கே இன்னும் கட்சி நீரத்தில் மக்கள் பட்ட அவலத்தை முழுமையாய் புரிந்துகொள்ளமுடியாமல் இருக்கு . எனது கற்பனைக்கு அப்பாட்பட்ட அவலம் நினைத்துபார்க்கும் அளவுக்கு சக்தி இல்லை

ஒருத்தன் அவனினின் குடும்பம் குழந்தை வீடு தொழில் நிலம் உறவு நண்பர்கள் சமுகம் எல்லாம் ஒன்ண்டும் விடாமல் எல்லாத்துக்கும் அவலம் இழப்பு என்றால் அவன் என்ன செய்வான் மஊலையில் சிந்தனை திறன் இழந்தவானாக தான் இருப்பான் . இறுதிவரை வன்னியில் இருந்தவர்கள் இன்னும் சுய நினைவுடன் சாதாரண மனிதர்களாக இருப்பதே பெரிய விடயம் . ஒருக்கா உயிர் போபோதே என்று நினைக்கவே எப்படி இருக்கும் ஒவொரு நிமிடமும் உயிர் போபோதே தண்ட மட்டும் இல்லை தனை சுற்றி உள்ள எல்லாருக்கும் எண்டு நினைகேக்க எப்படி இருக்கும் . பயத்தில உயிர் தானாகவே போயிடும்

சில இடங்களில் நிகழ்வுகள் வைப்பார்கள் நல்லா குடிக்க கொடுப்பார்கள் கொடுத்திட்டு தமிழரை பற்றி பேசி உசுபேதிட்டு கடைசியல் கன காசு கறந்திடுவார்கள். அவர்கள் சுயநினைவின்றி காச அள்ளி அள்ளி கொடுப்பார்கள். மானம் கெட்ட பிழைப்பு

நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமைகளை அனுபவித்துள்ளார்கள்..

இனியாவது ஒரு விடிவு கிடைக்கட்டும்..

பல புதிய தகவல் அறிந்தோம்..

ஒன்றுகூடித்தான் இனி தேர் இழுக்கணும்.. மக்களுக்கு ஆறுதலாய் இருக்க முயலணும்..

அங்கிருப்பவர்களால்தான் நிஜ நிலைமை தெரிய வருது

இயலாமை கொட்டிக்கிடக்கு.நீங்கள் சொல்வதில் எந்த அநியாயமும் இல்லை.

தமிழன் பற்றி பேசி பணம் சம்பாதிக்கவே பலர் விரும்புகிறனர். அவர்களுக்கு வரும் பணத்தையும் அபகரிக்கும் கயவர்களை என்ன சொல்வது?

:((

jagadeesh said...

தனி நாடெல்லாம் கொடுக்க மாட்டாங்க. பகல் கனவு தான். எல்லாத்தையும் ராஜபக்சேவே நல்ல படியா செஞ்சு முடிப்பார். ஒண்ணா ஒத்துமையா வாழ முயற்சி செய்யுங்க.

Chandran said...

புலம் பெயர் தமிழரின் விருப்பின் படியே செயல்படுபவர்கள் தமிழக பதிவர்கள் பெரும்பான்மையோர். அவர்களுக்கு இலங்கை தமிழ் மக்களது வாழ்க்கை நிலை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. திருப்பி அடிப்போம் என்று கும்பலில் கோவிந்தா போடுபவர்கள். தாங்களும் பொறுத்து பொறுத்து முடியாமல் இப்போ தான் இதை எழுதியுள்ளீர்கள்! முன்பே இதை எழுதியிருந்தால் பல நியாயமான தமிழ் உள்ளங்கள் உண்மையை உணர்ந்திருக்கும். எனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் உங்கள் இணைப்பை கொடுத்தேன்.
இலங்கை தமிழர்களின் துன்பம் புலி கூட்டத்திற்க்கு மிக பெரிய பணவருவாய் (மில்லியன்EUR)தரும் விடயமாக உள்ளது. ஹொலன்ட், நோர்வேயில் இன்று முக்கிய செய்திகளாக உள்ளவை.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான நெடியவன் கடந்த 18ம் திகதி நோர்வே அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாக நோர்வே தொலைக்காட்சியான ரி.வி.2 செய்தி வெளியிட்டுள்ளது.புலிகளுக்கு பல மில்லியன் பணத்தை ஐரோப்பாவில் இருந்து கையாண்டு வருவதாக ஹொலன்ட் பொலிஸார் நோர்வே நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததாகவும் நோர்வே தொலைக்காட்சியான ரி.வி.2 செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களை தொடர்து துன்பத்தில் வைத்திருப்பது என்பது எதற்காக புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளால் மேற் கொள்ளபடுகிறது என்பதை புரிந்து புரிந்து கொள்ள முடிகிறது.

angelin said...

//உதவ விருப்பமிருந்தால் நீங்கள் சிறு குழுவாக சேர்ந்து சில அநாதரவான பிள்ளைகளை கற்பியுங்கள், விதவைகளுக்கு ஒரு சிறு கைத்தொழில் மூலதனத்தை கடனாக கொடுங்கள் உறவுகளே.."//
உண்மைதான் சகோ .

தேவையான நல்ல பதிவு


தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

தம்பீ
இருதலைக் கொள்ளி எறும்பு
என்று சொல்வார்களே அதுபோல என்
போன்ற உண்மைத் தமிழ் உள்ளங்களின் நிலை உள்ளன
சங்க இலகியத்தில் ஒரு காட்சி
நண்பகல,கடுமையான வெயில்
மலைச் சரிவில் வைக்கப் பட்டிருகிற
வெண்ணை
அனல் பட்டு உருகி ஓடுகிறது அதைப்
பார்கிறான் ஒருவன் அவன்--
கையில் ஊமையன் ஒடி எடுக்க
கையில்லை பிறரை கூவி அழைக்க
வாயில்லை
வெண்ணை உருக அவன் கண்
களில் கண்ணீ பெருக நிற்கிறான்
ஆம் அதுபோல இப் பதிவை
படித்த பின் என்னால் எதுவும எழத
இயலவில்லை மன்னிக்க
புலவர் சா இராமாநசம்

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top