Saturday, 28 May 2011

பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

வணக்கம் உறவுகளே இதுவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு தான்....
          இது எந்த நிறுவனத்துக்கோ நபர்களுக்கோ எதிராக எழுதப்படும் பதிவல்ல நான் வாழும் இந்தச் சமூகத்திற்காக மட்டுமே எழுதும் பதிவு.
    இப்போது பலர் இதை நாட விரும்புகிறார்கள். ஆனால் அதனால் பல பிரச்சனைகள் இருக்கிறது.
  முக்கியமாக இதற்கான இணைய இணைப்பை பெற தனிப்பட்ட முறையிலான கணக்கிருக்க வேண்டும் அது மிகவும் பெறுமதி கூடியதாகும் காரணம் பிளக் பெரியின் மூலம் உடனடியாக மின்னஞ்சல் பெறக் கூடிய வசதி ஒன்றிருக்கிறது அதற்காகத் தான் இந்த இணைப்பு சேவையாகும் உதாரணத்துக்கு இலங்கையில் 200 mb அளவிலான பக்கேஜ் பெற குறைந்த பட்சம் 550 ரூபா பெறுமதியான பொதியை பெற வேண்டும். ஆனால் சாதாரணமாக நமது பிற்கொடுப்பனவு சிம் அட்டையை போட்டாலே இணைப்பு கிடைக்கிறது ஆனால் அவர்கள் விதிமுறையில் இதற்கு அனுமதியில்லை. crackberry.com எனும் தளத்தில் முற்கொடுப்பனவு இணைப்பாளருக்கான APN மற்றும் PROXY PORT என்பன கொடுக்கிறார்கள்.
     எனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை என்னவென்றால் புளுருத் வேலை செய்ய மறுக்கிறது. இணையத்தில் தேடினால் பலருக்கு இதே பிரச்சனை கீழே உள்ள வீடியோ பார்த்தால் தெரியும்.
அதன் பின் அவர்களது தளத்தை தொடர்பு கொண்ட போது எனது மொடல் நம்பர் கேட்டார்கள் அதை உறுதிப்படுத்திய பின் அதை கொண்டு வந்து மாற்றச் சொன்னார்கள் அனால் எனது கைபேசி பெறப்பட்ட இடம் கனடாவாகும் அதை தெரிவித்த போது அதற்கு மாற்று வழி இல்லை என்கிறார்கள். உறவுகளே நீங்களும் கைபேசியை வாங்கும் போது உங்கள் வழங்குனர் நிபந்தனையை கவனியுங்கள் காரணம் இப் பிரச்சனை பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை வருடத்திற்கு உத்தரவாதம் தருவார்கள் என கேளுங்கள்.
    அடுத்த விடயம் என்னவென்றால் call alert service ஐ நீங்கள் செயற்படுத்தினாலும் அது தானாகவே செயலிழந்து விடும். அதற்கான காரணம் யாருக்குமே இதுவரை தெரியாது.
        இந்தளவும் சொன்னவன் நல்ல விடயம் பற்றியும் சொல்லணும் அல்லவா சில நாட்களுக்கு முன் அண்ணன் ஆர்.கே.சதிஸ்குமார் இதன் WI_FI மூலம் இலவசமாக உரையாடுவது எப்படி என எழுதியிருந்தார்

reliance -ஐ ஏமாற்றி இலவசமாக பேசுவது எப்படி..?

நன்றி உறவுகளே நாளை விசேட சுடுசோற்று பாசல் தயாராக இருக்கிறது..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

43 comments:

மொத வட எனக்கா?

சுடு சோறு எனக்கா ?

இருங்க படிச்சிட்டு வாறன்

தமிழ்மணத்தில முதலாவது ஓட்டு நான் போட்டேன்! ஆகவே எனக்கும் ஓட்டு போடவும் சுதா! ஹி ஹி ஹி !

வணக்கம் உறவுகளே இதுவும் ஒரு விழிப்புணர்வுப் பதிவு தான்....///

அது உங்கட தனித்துவம் ஆச்சே நண்பா

சுதா எனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லத் தோணுது, இஞ்சத்தேய மாதிரி உங்கேயும் எல்லா நவீன வசதிகளும் விரைவில் வரவேணும்!

நன்றி உறவுகளே நாளை விசேட சுடுசோற்று பாசல் தயாராக இருக்கிறது..

அது என்னவென்று அறிய ஆவலா இருக்கு!

@Narayanan
No no.ungaluku oddai vadai maddumthan...

பிளக்பெரி போன் வாங்க யோசிக்கிறவங்க கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு இது..

நல்ல பதிவு....!!

தமிழ்மணம் ஓட்டும் போட்டாச்சு, சரி பணம் குடு...

niru said...
This comment has been removed by the author.

வழமையான உங்களின் தனி ஸ்டைலில் ஒரு அருமையான விழ்ப்புணர்வுப் பதிவு சகா.

பயனுள்ள பதிவு பாஸ்...
கிளமைக்கொன்று போட்டாலும் குத்துற மாதிரி போடுறீங்க ஹிஹி

இங்கே அரபு நாடுகளிலும் அடிக்கடி பல பல பிரச்சனைகளை பிளக்பெரி சந்திக்கிறது அனால் அதன் மின்னஞ்சல் சேவை மட்டும் அருமை.

எல்லோரும் கட்டாயம் அறிய வேண்டிய தகவல் பதிவுக்கு நன்றிகள் சகோதரம்.

நல்ல பகிர்வு சகோ..என் நண்பர்கள் சிலரும் இதையே சொல்லிப் புலம்பினர். இதில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொண்டு, பயன்படுத்துவதை விட எம்.பிஏ பண்ணுவது ஈஸி என்று நொந்து போய்ச் சொன்னார்!

Anonymous said...

இந்த போனுக்கு இரண்டு வருட உத்தரவாதம் கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் !!

Anonymous said...

நல்ல விழிப்புணர்வு பதிவு..

ஜீ... said...

பிளாக்பெரியால் நிறையப்பேர் பாதிக்கப் பட்டிருப்பார்கள் போலிருக்கிறதே! நானும் கேள்விப்பட்டேன்!

akulan said...

எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை...

NOKIA 1100ஐயே நான் மாத்த காணுல இதுக்குள்ள பிளக் பெரியா??
பலருக்கு பயனாக இருந்திருக்கும்!

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

அருமையான விழ்ப்புணர்வுப் பதிவுக்கு நன்றி.

என்னையும் ஒரு பதிவராக அறிமுகம் தந்ததற்கு மிக்க நன்றிகள் சுதா அண்ணா

ஒரு ஃபோன் வாங்கலாம் எண்டுல்ல இருந்தேன்....

விழிப்புணர்வு செய்தமைக்கு நன்றீங்கண்ணா..

சுடு சோறா...?? சூப்பர்..!

sinmajan said...

Blackberry வாங்க இருப்பவர்களுக்கு பயனுடையதாயிருக்கும்..
நம்மளை மாதிரி பசங்க smart phone வாங்க எண்ணும் போது இதையெல்லாம் சீர் செய்திடுவங்க தானே..

நல்ல பதிவு சகோ உண்மையிலே அனைவருக்கும் உதவும் .

நீட் போஸ்ட்

Nesan said...

தேவையான விசயத்தை எப்படி எல்லாம் படம் போட்டுக்காட்டுகிறார் நம்ம சுதா!முக்கியமான விசயம் இது. நாலை சுடுவடை எனக்கா??

Nesan said...

தேவையான விசயத்தை எப்படி எல்லாம் படம் போட்டுக்காட்டுகிறார் நம்ம சுதா!முக்கியமான விசயம் இது. நாளை சுடுவடை எனக்கா?? அச்சில் பிழை வந்துவிட்டது நண்பா!

தொழில்நுட்ப வளர்ச்சியும் கோளாறு

பாலா said...

எல்லோருக்கும் பயனுள்ள பதிவுதான். என்னிடம் பிளாக் பெர்ரி இல்லை.

பயனுள்ள பதிவு

nice info..thanks

http://zenguna.blogspot.com

இந்த தொழில் நுட்பம் நிலை நிலை நிறுத்தப்பட இன்னும் சில மாற்றங்கள் வரும். ஆனால் அதற்குள் புதிதாக வேறு வந்துடுவிடும்

FOOD said...

தொழில் நுட்ப கோளாறுகள் குறித்த தொலை நோக்கு பதிவு.

விழிப்புணர்வு பதிவு++++

பயனுள்ள பதிவு

http://erodethangadurai.blogspot.com/

சிறந்த பதிவு என்னமா!!!!!!!! எழுதுறீங்க

www.masteralamohamed.blogspot.com

புதிய செய்தி..நல்ல பதிவு வாழ்த்துக்கள்..
vaithee.co.cc

Kss.Rajh said...

பயன் உள்ள பதிவு

பயனுள்ள தகவல் நன்றி. . .

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top