வியாழன், 28 ஏப்ரல், 2011

தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

முற்பகல் 12:05 - By ம.தி.சுதா 41


         வணக்கம் உறவுகளே முன்னையா பதிவான பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்  இலும் சொன்னேன் இதிலும் சொல்லிக் கொண்டே நகர்கிறேன் நான் ஒரு தேநீர் பிரியன் (அடிமை என்பதே சரியானது).
         இந்த விடயத்தை நண்பர் குருபரன் தான் நினைவுக்கு கொண்டு வந்திருந்தார். நன்றி குரு. வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.
             தேநீரென்பது சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. அத்துடன் அது தயாரிப்பதற்கு கட்டாயம் சீனி மற்றும் தேயிலை அத்தியாவசியமான பொருட்களாகிறது. அதன் கிக்கிற்கு காரணமே தேயிலை தான் அனால் தேயிலை கொஞ்சம் விலை கூடிய பொருள் பல தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கிடைப்பதே இல்லை. அதற்கு தீர்வு தரும் ஒரே வழி என்ன தெரியுமா ? கீழே வாருங்கள்....
          ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதற்குள் சிறிதளவு சீனியை போட்டு வடிவாக சூடு காட்டுங்கள் அலுமினியப் பாத்திரம் எடுத்ததன் காரணம் மண் பாத்திரமானால் சினீப்பாணியை அது உறிஞ்சி விடும் அதனால் தான்.
              சரி இப்போது சினி கொஞ்சம் கரியாகும் வரை காய்ச்சுங்கள் மூக்கை அரிக்கும் வாசம் ஒன்று எழும் அதே போல் காய்ச்சும் போது நீரை விடக் கூடாது
காரணம் அப்படி விட்டால் பின்னர் சீனி காய்ச்சப்பட்டு வற்றுவது கடினம் கருகாது. இப்போது கருகி வந்துவிட்டதா சரி அடுத்த கட்டமாக பானையை இறக்கி அதை கட்டிபட விடுங்கள்
          அத்துடன் படிந்துள்ளதையும் சுரண்டி எடுங்கள் அப்புறம் தேநீருக்கு தேவையான அளவு நீரை விட்டு சூடாக்குங்கள் நன்கு சூடானதும் இந்த பாணிக் கட்டியை போடுங்கள்
               தேயிலை அளவுக்கு நிறம் இல்லாவிடினும் கலவை அளவு மாறாவிடின் சுவையும் மாறாது அருமையான தேநீர் கிடைக்கும்.
                    யாரும் சண்டைக்கு வராதிங்கப்பா சும்மா ஒரு அனுபவப் பகிர்வு தான் இது தொடரும் முன்னையா இடக்கு முடடக்கப் பதிவுகள் கிழே உள்ள தொடுப்பில்.. (ஆனால் இங்கு பொய்யாகவோ மிகைப்படுத்தியோ நான் பகிரவில்லை உறவுகளே)

காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி... 
சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு (உறவுகளே இந்த பதிவின் கருத்தையும் படிக்க தவற வேண்டாம் இது ஒரு காலப்பதிவு. புயலுக்கு முன் வீசிய தென்றல் வருடிய இடம்)

குறிப்பு - உறவுகளே நான் மீண்டும் வந்துவிட்டேன் இனி வழமை போல வாரமொரு பதிவும் வாரமொரு தளவருகையுமமென என் பயணம் தொடரும். என்னை நலம் விசாரித்த அத்தனை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

41 கருத்துகள்:

I have get hot tea...

பெயரில்லா சொன்னது…

அப்போ இனி நாட்டில தேயில விற்பனை வீழ்ச்சி அடையப்போகிறதே...) நல்ல கண்டுபிடிப்பு ஒரு தடவை முயற்ச்சி செய்து பார்க்கிறேன்.....

Thanks.try panni parkiren.but,sarivaralanna.....?

Unknown சொன்னது…

அசத்தல் அருமை
வாழ்த்துக்கள்

நல்ல கண்டுபிடிப்பு...கின்னஸ் ரெகார்டில் சேர்க்க முயற்சிக்கவும்

நிரூபன் சொன்னது…

கண்டு பிடிப்பு அருமை... ஆனால் இதன் பின் விளைவுகள் பற்றி முயற்சி செய்து பார்த்துத் தான் சொல்ல வேண்டும்.

அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை........

Unknown சொன்னது…

ஹிஹி ஏதும் சந்தர்ப்பம் வந்தால் பார்ப்போம்..
ம்ம் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் மதி,,
காத்திரப் பதிவராமே நீங்கள்?என் ப்ளாக்'இல் அவ்வாறு தான்
அலங்கரிக்கிறீர்கள்!!

சசிகுமார் சொன்னது…

super tips

Jeevan சொன்னது…

super
past memorirs running infront of the eyes

Unknown சொன்னது…

நீ ஒரு விஞ்ஞானியா...இப்போ உடல்நலம் பரவா இல்லயா மாப்ள!

ஆகுலன் சொன்னது…

சுடு சோறு கொஞ்சத்தில மிஸ்ஸிங்......
முதல் 11 பேரையும் வன்மையாக கண்டிக்கிறேன்...........

குட்

Unknown சொன்னது…

வாங்க சுதா! இப்போ ஓக்கேயா?

Mahan.Thamesh சொன்னது…

நல்ல குறிப்பு சீ சீ கண்டுபிடிப்பு

arasan சொன்னது…

நல்ல தகவல் ...

பெயரில்லா சொன்னது…

அருமையான ஐடியா நண்பரே பகிர்வுக்கு நன்றி

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

புதுசு புதுசா சொல்லுங்க

Speed Master சொன்னது…

வாங்க வாங்க

இன்னும் நிறைய கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

ADMIN சொன்னது…

அட..! நல்ல கண்டுபிடிப்புதான்.. நமக்குத் தான் நேரமில்லே..!

அருமையா விஞாநிய்யா நீரு அசத்தல்.....

வருக..நண்பரே..வருக,,,

Jana சொன்னது…

Wel come Boy :)

வாங்க, வாங்க............!

புதுமையான விஷயம்..
அப்படியா சங்கதி..

தனிமரம் சொன்னது…

இப்படி குடிக்கும்போது பின் விளைவுகள் வராதா!நல்ல அருமையான கண்டு பிடிப்பு  முதலில் காப்புறுதி செய்யுங்கள்!

இளங்கோ சொன்னது…

:)

சிசு சொன்னது…

இனி வாராவாரம் ஆரவாரமா... ஹை ஜாலி... :)

புதுசு புதுசா யோசிக்கிரீங்க. நடக்கட்டும்.

Bharkavi சொன்னது…

நல்ல கண்டுபிடிப்பு sudha :D

விமர்சனம் சொன்னது…

உங்கள் சில பதிவுகள் தரமானவை; பாராட்ட வேண்டிய விஷயம். அதே சமயத்தில், பின்னூட்டம் இடுவதில் கொஞ்சம் தரத்தினை மேம்படுத்தி கொள்ளலாம் என்பது எங்கள் கருத்து. சுடு சோறு! பழைய சோறு போன்ற பின்னூட்டத்தை தவிர்த்து, மசாலா மாங்குனிகளுக்கிடையே நல்ல பதிவர் என்ற பெயரை நிலை நிறுத்த வேண்டுகிறோம்.நீங்கள் இந்த கருத்தை ஏற்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில், தமிழ் வலையுலகம் சிறக்க வேண்டும் என்பது தான் உங்கள் எண்ணமும் கூட... வணக்கம்.
நீங்கள் பூரண நலமடைந்து வருவதை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறோம்....

உணவு உலகம் சொன்னது…

இது நல்லாயிருக்கே!

சின்ன கண்ணன் சொன்னது…

a good Tea break, applasssssssss for your invention.

கவி அழகன் சொன்னது…

வன்னி மக்கள் எங்கோயோ பிறக்க வேண்டியவர்கள்
தேயிலை இல்லாமல் தேநீர் பெட்ரோல் இல்லாமல் மோட்டார் வண்டி

கவி அழகன் சொன்னது…

தாமதமான பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.உதிரி நேரம் கிடைப்பது இங்கே முயல் கொம்பாய் இருக்கிறது

FARHAN சொன்னது…

எனக்கொரு டீ கிடைக்குமா?

சிவரதி சொன்னது…

இன்னும் நிறைய கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

நீங்கள் ஒரு சின்ன அளவிலான விஞ்ஞானி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

Unknown சொன்னது…

உங்கள் உடல் நலம் முழுமையாக நலம் பெற எமது பிரார்த்தனைகளும்..

ஹேமா சொன்னது…

மதி...இதுதான் கரமல்.இங்கு இப்பிடிக் காய்ச்சி டெசேட்டுக்கு மேல் அழகு படுத்த ஊற்றுவார்கள்.வாசனை நல்லாயிருக்கும்.ம் கண்டுபிடிப்பும் நல்லாத்தானிருக்கு !

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top