Saturday, 16 April 2011

என் நூறாவது பதிவை திருடிய சுயநலக்காரி..
இந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.

இந்த வரிகளை
உனக்காய் பிரசவிப்பதில்
பெருமை கொள்கிறது
என் பேனா
என்னை பிரசவித்தவள் தான்
நீயெனும் போது
வார்த்தைகளை மறைக்கிறது
பொறாமையாய் இருக்கலாம்.

இருந்தாலும்
அம்மா நீ சுயநலக்காரி தான்
உன்மேலான பாசத்தை
பங்கிட மறுத்து
எனக்கு நீ தங்கையை கொடுக்கல

செவாக்கின் ஓட்டமாயிருந்த
என் பதிவை
சச்சினின் சதம் போலாக்கி
என் 100 ஐயும் திருடிவிட்டாய்

போனால் போகட்டும்
அம்மா தானே என்றால்
உனை புகழ
நான் நினைத்த சந்தர்ப்பத்தை
வார்த்தைகள் பெறக் கூடாதென
என் கைகளையும் முடக்கி விட்டாய்

நான் எழுந்து வருவேனா
என என்றெண்ணியிருந்தேன்
அம்மா உன் வேண்டுதல் வலிமையானது
இதை உன் பிறந்த நாளுக்காய் படைப்பதில்
பெருமை கொள்கிற
நீ பெற்றவனின் ஓடை...

என் முதல் பதிவை நாளை பிறந்த நாள் கொண்டாடும் மகேஸ் தில்லையம்பலத்துக்கே என் பிறந்த நாள் பரிசாய் அளிக்கிறேன்.

உனை உருக்கித் தானே
எனக்கு ஊன் கொடுத்தாய்
அன்புத்தாயே

வறுமை தான் நமக்கு
வாழ்வென்றானபோதும்
இருள் நீக்கவெனத்தானே
எனை ஈன்றெடுத்தாய்

கடவுள் என்று பேரிருந்தும்
தான் நினைப்பதை மட்டுமே
எமக்காய் செய்வான்

உன்னால் தான்
என் நெஞ்சிலொரு
துளை ஒன்று வந்ததாய்
உலகம் சொல்லுது

அன்புத்தாயே
என் இதயம் இப்போது
இதயமாய் இல்லை
குருதிப்பாய்ச்சலில்
உன் பெயர் ஒலிப்பதால்
அது ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது.
(சுடர்ஒளி 2008)

              என் 100 வது பதிவை தட்டுத் தடுமாறி அடைந்து விட்டேன். அதே போல் சில இலக்கிருந்தது அதையும் அடைந்துவிட்டேன் அதிலும் இறுதியாக இருந்த ஒரு இலக்குத் தான் இன்ட்லியில் 10,000 வாக்கிட வேண்டும் என்பது அதையும் அடைந்தாயிற்று.
             நான் இந்தளவுக்கு வளரக்காரணமாக இருந்த அத்தனை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும். என் பயணம் ஆரம்பித்து 11 மாதங்களும் அடையாத நிலையில் 299 பின்தொடர்பவர்கள். 125,000 மேற்பட்ட பார்வையாளர்கள் (ஒரு பதிவுக்கான சராசரி..). இலங்கை ஊடகங்களில் எனக்குக் கிடைத்த அங்கீகாரம் அதை விட முக்கியமாக இந்த பதிவுலகத்தில் எனக்குக் கிடைத்த உறவுகள் எல்லோரையும் இந்த இடத்தில் நினைவு கூர்ந்து விடை பெறுகிறேன்.
        என் கைகள் சரியானதும் ஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே. குணமாகும் வரை என் இணையப் பயணத்தை மட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

குறிப்பு - பெரிய ஆயத்தத்துடன் எனது 100 வது பதிவிற்கு காத்திருந்தும் தளத்தை முழுமையாக சீர்ப்படுத்த முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் தன் வேலைப்பழுவையும் புறந்தள்ளி என் முகப்புப் படத்தை உருவாக்கித் தந்த உடன் பிறவாத அன்பு அண்ணன் குகரூபனுக்கும் களைத்திருக்கும் என் கரங்களை ஊக்கப்படுத்தி என் சுடு சோற்றை பறிப்பதிலேயே குறியாயிருக்கும் அன்புத் தங்கைக்கும் என் நன்றிகள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

76 comments:

சுடு சோறு சாப்பிட்டு நெடுநாளாச்சு.இன்று 100 வது சுடுசோறு எனக்குத்தான்.........

வடை போச்சே மக்கா...

அண்ணனைத் தந்த அன்னைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்............

//அம்மா நீ சுயநலக்காரி தான்
உன்மேலான பாசத்தை
பங்கிட மறுத்து
எனக்கு நீ தங்கையை கொடுக்கல//

அம்மா'ன்னா சும்மாவா...சூப்பர் கவிதைகள் மற்றும் வாழ்த்துகள் மக்கா...

congratulations sutha for 100 th post.

Lakshmi said...

அம்மாவுக்கான பதிவு அமர்க்களம்.

Templates really super! wishe to the designar

பதிவுகளின் எண்ணிக்கையினை விட, நீங்கள் கூறும் கருத்துக்களையே அதிகமாக நேசிக்கிற ரசிகர்கள் சார்பாக, இம் முறை நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்களைச் சொல்வதை விடுத்து, உங்கள் பதிவுகளின் உள்ளடக்கம் இன்னும் பல கோணங்களில் விரிவடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தப் பதிவை தட்டச்சிட உதவிய அருமை அக்காவிற்கு முதலில் நன்றி சொல்லி தொடர்கிறேன்.//

நாங்களும் நன்றிகளைச் சொல்லுகிறோம்.
ஹி...ஹி..

கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..

டிசைன் உண்மையிலே அருமையாக இருக்கிறது...

வாழ்த்துக்கள் நண்பா

இந்த வரிகளை
உனக்காய் பிரசவிப்பதில்
பெருமை கொள்கிறது
என் பேனா
என்னை பிரசவித்தவள் தான்
நீயெனும் போது
வார்த்தைகளை மறைக்கிறது
பொறாமையாய் இருக்கலாம்.//

வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இக் கவிதையில் வந்து விழுந்திருக்கின்றன.
உண்மையான பாசத்தின் உருவகத்தின் முன்பு வார்த்தைகளுக்கே பொறாமையாம்....இது கற்பனையின் ஆணி வேர்..!

This comment has been removed by the author.

செவாக்கின் ஓட்டமாயிருந்த
என் பதிவை
சச்சினின் சதம் போலாக்கி
என் 100 ஐயும் திருடிவிட்டாய்//

ஒப்பீட்டு உவமை..........கவிதைக்கு வலுச் சேர்த்து அழகு தருகிறது.

போனால் போகட்டும்
அம்மா தானே என்றால்
உனை புகழ
நான் நினைத்த சந்தர்ப்பத்தை
வார்த்தைகள் பெறக் கூடாதென
என் கைகளையும் முடக்கி விட்டாய்//

இது தான் மனித வாழ்வின் நியதி, ஒரு சில தருணங்களில் எங்கள் இன்பங்களை அனுபவிக்க முடியாத வண்ணம் தடைகள் வந்து விடும், ஆனாலும் அவை தடைகளல்ல, படிக்கற்களே என நினைத்து பெருமை கொள்ளுங்கள் சகோதரா, வெகு விரைவில் கைகள் குணமாகி, கவலைகள் மறக்க புதுக் காவியம் எழுதும் வல்லமை உங்களிடம் உருவாகும்!

ஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே..//


ஆஹா.. நம்ம விஞ்ஞானி இப்போ ஆய்வு கூடத்தில பிசியாகிட்டாரா..

சுடர் ஒளிக் கவிதை தொடர்பாக என்னால் ஏதும் சொல்ல இயலவில்லை..

நூறு அல்ல நூறாயிரம் பதிவுகளைத் தர வேண்டும்.சுடு சோற்றை நானே பெறவேண்டும்.உன் நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா..........

@நிரூபன் said...
தங்கை இல்லையே எனச் சந்தோசப்படுவீர்கள் எனப் பார்த்தால், வேதனை கொள்கிறீர்கள். சீதனம் நிறையக் கேட்பார்கள்...ஹி.. ஹி...

தங்கை உள்ளவன் சொல்லுறேன். நீங்கள் அதிஷ்டசாலி, இல்லேன்னா மாடாய் உழைக்கப் பண்ணிடுவாங்க..

I HATE THIS COMMENT....

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIME கணிப்பு அல்ல)

வாழ்த்துக்கள்.

Ramani said...

11 மாதங்களில் எனில் உண்மையில்
இமாலயச் சாதனைதான்
சாதனை தொடர இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்

சூப்பரா இருக்கு பாஸ்

நூறாவது பதிவிற்கு இதயம் நிறைந்த ந்ல் வாழ்த்துக்கள். தொடங்கிய சித்திரை புத்தாண்டு வாழ்வில் இனிமை சேர்க்கப் பிரார்த்திக்கிறேன்.
ஒரு புல்லாங்குழலாய்
உன் பெயர் மட்டுமே
தருகிறது// -
அருமையான வரிகள்.

நல்ல ஒரு அருமையான நெகிழ்வான கவிதையுடன் சதமடித்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துகள்,இன்னும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகள்

"..நான் எழுந்து வருவேனா
என என்றெண்ணியிருந்தேன்
அம்மா உன் வேண்டுதல் வலிமையானது.."

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். தாயன்பிற்கு ஈடு ஏது.

100 பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் ஆற்றவேண்டிய பணி நிறையக் காத்திருக்கிறது .மறக்க வேண்டாம். தொடருங்கள். நிச்சயம் முடியும் உங்களால்.

Nesan said...

வாழ்த்துக்கள் 100சிறப்பா வரட்டும் தாயின் பெருமையும் தமக்கையின் உதவியும் ஓரு சேரப்பெற்றது இன்பமே!

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதிசுதா.... டெம்ப்ளேட் மிக அருமை... வேலை இருந்ததால் சாட் செய்ய இயலவில்லை...சகோ...

இந்த நூறாவது பதிவுக்கு உதவிய உங்கள் குடும்பத்தார்க்கு எனது நன்றிகளும், வணக்கங்களும்...

கவிதை நல்ல இருக்கு ! ஆனா எனக்கு என்னமோ அதைவிட கவிதைக்கான தலைப்பு தான் ரொம்ப பிடிச்சிருக்கு௧
நீங்கள் நலம்பெற கடவுளை வேண்டுகிறேன்...

அருமையான உணர்வு வரிகள்!...மதியோடையில்
என்றும் வற்றாத புது நீரூற்றாக நலன்பெற்று,நல்
வளம்பெற்று விரைந்து வர இறைவனது நல் ஆசியையும்
எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்!....நூறு ஆயிரம்,ஆயிரமாக
தொடர வாழ்த்துகள் மதி!..........

டெம்பிளேட்டின் தலைப் பக்கம்... அழகான அர்த்தமுள்ள படத்தோடு காட்சி தருகிறது சகோ.

This comment has been removed by the author.
RUBAN said...

உன் சாதனைப் பட்டியலை வியந்து பார்கின்றது உன் முதல் பிறப்பு ....சுதா வாயார வாழ்த்துவதக்கு இடம் தரவில்ல உன் மேல் கொண்ட பொறாமை ...இருந்தாலும் வாய்க்குள்ளே சொல்லிக்கொள்கிறேன் நீ வாழும்வரை தமிழும் உசிர் பிழைக்கும் .நம் உறவுகளின் .உசிரும் உணர்வும் வாழும்

This comment has been removed by the author.
Anonymous said...

சதம் போட்டதுக்கு மீண்டும் இந்த சிறியேனின் வாழ்த்துக்கள். பதிவுலகில் உங்கள் சேவை தொடரட்டும்.

Anonymous said...

நூறாவது பதிவு அம்மாவுக்கா _ நெகிழ வைத்துவிட்டீர்கள்.. அடியேனின் பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக....

வாழ்த்துக்கள் மதி...
அத்துடன் உங்கள் பக்கம் மிக அழகாக இருக்கிறது...
சொல்ல மறந்து...
இப்போது சொல்லிவிட்டேன்...
வாழ்த்துக்கள்..

congrats brother...

akulan said...

தள வடிவமைப்பு மிகவும் நல்லா இருக்குறது.....
மென்மேலும் உங்கள் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்.........

Chitra said...

என் கைகள் சரியானதும் ஒரு கிராமியக் கண்டு பிடிப்புச் சம்பந்தமான பதிவொன்றுடன் விரைவில் சந்திக்கிறேன் உறவுகளே. குணமாகும் வரை என் இணையப் பயணத்தை மட்டுப்படுத்திக் கொள்கிறேன்.


....Get well soon!

....congratulations for the 100th post!!

100 வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள் சுதா.. தளவடிவமைப்பு அழகாக உள்ளது...

வாழ்த்துக்கள் . விரைவில் குணம் பெற பிரார்த்தனைகளுடன்.

வேற ஓடேக்க வந்திட்டனோ எண்டு நினைச்சன் சுடுசோறு எண்டத பாதிட்டுதான் மதி ஓடேக்க தன வந்திருக்கன் என்டு உருதிபடுதினணன் அப்படியே மாறிட்டு டெம்ப்ளேட் எல்லாம் கலகல இருக்கு

உங்கள் இலக்குகளில் தொடர்ந்து வெற்றிபெற என் வாழ்த்துக்கள் சகோதரா......

siva said...

வாழ்த்துக்கள் நண்பா அதிகம் வரமுடிவது இல்லை
வாழ்க வளமுடன்
நல்ல பதிவு பல பயன் உள்ள தகவல்கள்
உங்கள் பயணம் தொடரட்டும்

siva said...

49...

siva said...

ஹே ஐம்பதாவது வடை எனக்கே
நூறாவது பதிவில் ஐம்பதாவது பாயசம் எனக்கே

உங்களுக்கு இறைவன் அனைத்து நலனையும் தரட்டும்...

அடே தம்பி வாழ்த்துக்கள்


தொடர்க உந்தன் எழுத்து
தொடுக உந்தன் இலக்கு
வளர்க தமிழ் சிறப்பு
அதுவே என் விருப்பு

ஜீ... said...

வாழ்த்துக்கள்! வலைத்தளம் அழகாக உள்ளது!

வாழ்த்துக்கள்.

என் மன கனிந்த நல்வாழ்த்துக்கள் நூறு என்பது எளிதல்ல. அது ஒரு சகாப்தம் மீண்டும் வாழ்த்துக்கின்றேன்

அன்புடன்

புதுக்கோட்டை ஜி வரதராஜன்

உங்கள் வலைப்பூவின் புதிய வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. எழுத்துக்கள் அடர்த்தியான வண்ணத்தில் போடவும்.

//11 மாதங்களில் எனில் உண்மையில்
இமாலயச் சாதனைதான்
சாதனை தொடர இதயம் கனிந்த
நல்வாழ்த்துக்கள்//

Jana said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சுதா! எல்லாப்புகழும் அம்மாவுக்குத்தானா? அதெல்லாம் சரி.. சீக்கிரம் குணமடைந்து திரும்பவும் பழைய சூட்டுடன் மதிசுதாவை காண பெரும் ஆர்வத்துடன் இங்கே அதே அன்பு அண்ணன்.

என் கைகள் சரியானதும்....//

அப்படியா ??? சகோதரம் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திட்கின்றேன்.

100 வது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் தள வடிவமைப்பு அழகாக சிறப்பாகவுள்ளது தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள் தம்பி.

தாய் எங்கள் நடமாடும் தெய்வமல்லவா? தங்களின் குடும்ப பாசமும் பல சதம்கள்தான் சகோதரம்.
வாழ்த்துக்கள்.

உங்களின் 100 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் .
நீங்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Kousalya said...

அம்மாவின் மேல் உள்ள பாசம் வரிகளில் தெரிகிறது...உங்களின் பதிவுகளில் ஒரு தனித்தன்மை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...

இலக்குகளை அடைந்துவிட்டதாக கூறினீர்கள் உங்களுடன் நானும் மகிழ்கிறேன்.

இரு கவிதைகளும் மிக அருமை.

கிராமிய கண்டு பிடிப்பு பற்றிய பதிவிற்காக எதிர்பார்ப்புடன்...

நூறாவது பதிவிற்கும், இனி தொடரும் பதிவுகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் சுதா.

உங்களுக்கான பிராத்தனைகளுடன்...!

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். டைட்டில் செம

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதிசுதா.. அவர்களே..!

கவிதைகள் கரைய வைத்தன மனதை..!!

உள்ளத்தில் உள்ளதை உள்ளது உள்ளபடியே அறிய தருவதில் உங்களைத் தவிர வேறொருவர் யாருமிலர்.. வாழ்த்துக்கள்..!!

உங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் //
அம்மாவின் கவிதை அருமை ..
சகோ இன்னும் நீண்ட பயணம் பயணிக்க வாழ்த்துக்கள் ...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மதி! :)

ஹேமா said...

மதி...இன்னும் நிறைய எழுதவேணும் நீங்கள்.அன்பு வாழ்த்துகள்.அம்மாவை நினைக்கிறீர்கள்.உங்கள் வாழ்வு என்றுமே வளமாய்த்தான் அமையும் !

வாழ்த்துக்கள் மதி சுதா

வாழ்த்துக்கள் மதிசுதா.
:)
குறுகிய காலத்தினுள் பிரம்மாண்ட மான பதிவர்களின் ஆதரவைப்பெற்ற பதிவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினக்கிறேன்.
பதிவுலக அரசியல்கள் பம்மாத்துகளை விடுத்து வரிசையில் நின்று முன்னுக்கு வந்திருக்கிறீர்கள்.
தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்க வாழ்த்துக்கள்.

டெம்ளட் & ஹெடர் அழகாயிருக்கிறது.

வாழ்த்துக்கள் மதி.. தொடருங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தை..

என் அன்புத்தம்பி சதமடித்ததிற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

FOOD said...

சதம் சாத்தியமானதில் சந்தோசம் சகோ.

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

அம்மாவுக்கான பதிவு அருமை ..

100 வதுபதிவுக்கு வாழ்த்துக்கள் மதி!

அம்மான்னா அம்மாதான்

சுதா நிறைய சொல்லனும், பாராட்டனும் அதுவும் உங்கம்மா பிறந்தநாள் எல்லாமே பிந்திய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் காரனம் உடல் உபாதை என்று சொல்லி தப்பிட முடியாது...புரிந்திருக்கும்..முக்கியமாக அம்மாவிற்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...அப்புறமாக வாறன் நிறைய பேசுவம்.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top