Saturday, 26 March 2011

அந்த மூன்று நாட்களும் இதயம் வென்ற மூவருக்கான வாழ்த்துக்களும்


             நாம் வாழும் இந்த உலகத்தின் அச்சின் ஆரம்ப விசை எங்கிருந்து வந்தது என பலர் பலதை சொல்லிக் கொள்கிறார்கள்... அனால் எனக்கு எல்லாம் மனிதர்கள் தான் நேர் விசைகளும், மறை விசைகளும் தாராளமாகவே.. அந்த நேர் விசைகளில் நான் உறவுகளுக்கே முக்கிய இடம் அழிக்கிறேன்..
         ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனில் ஏதோ ஒரு ஈர்ப்பிருக்கும் அதை ஆராயத் தெரியாதவர் கண்களும் மனங்களும் தான் மறை விசைகளாக பரிணமிக்கும்...
      
எம் எதிரியிடம் கூட ஏதோ ஒரு ஈர்ப்பிருப்பதால் தான் அவனை எதிரியாக எம் பட்டியலில் வைத்திருப்போம்... அவசரமாய் சலம் கழிக்க ஓடும் போது காலில் ஒரு கல் அடிக்கலாம் அப்போது அது எம் எதிரி அனால் அதையே எடுத்து வைத்து போரிடுகிறோமா ? இல்லை அதன் மேல் எமக்கு ஈர்ப்பே வருவதில்லை... அதே போல் தான் எதிரிகளும்.. ஆனால் சில மனிதர்கள் அப்படியில்லை... நெருப்பு சுட்டது எனலாம்.. ஏன் சுட்டது என்றால் தொட்டதால் தான் சுட்டது என்போமே தவிர அதன் வெப்பமோ, பிரவாகமோ பற்றி கதைப்பதில்லை...

    அடுத்து வரும் 3 நாட்களுக்கு என் 3 உறவுகளின் பிறந்த நாளாகும் இதில் இரண்டு என் சகோதரிகள் ஒன்று எனது மருமகப்பிள்ளையொருவராகும்...

(உறவுகளே முக்கிய வேண்டு கோள் இவர்களது அனுமதியின்றியே இப்பதிவிடுவதால் யாரும் இவர்கள் பெயரை பாவித்து என்னையும் அவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம்)

27 பங்குனியில் எனது தங்கச்சியின் பிறந்த நாள்...
    
உனக்கு வாழ்த்துரைக்க
என்னிடம் சொற்களில்லை
அதன் வர்ணங்கள்
கண்களின் உணர்வு
வெப்பம்
சருமத்தின் உணர்வு
சந்தங்கள்
செவிகளின் உணர்வு
கனவுகள் மட்டுமே
மனங்களின் உணர்வு

உறக்கம் உதறி நீ
தாராளமாய் கனவு காண்
உன்னை நீ விழிக்கும் போது
கனவுகளே வழிகாட்டும்

(என்றும் இந்த அன்பு அண்ணனின் ஆசியும் வாழ்த்தும் உன்னோடே இருக்கும்..)

28 பங்குனி...
இப்படத்தை உருவாக்கியவர் வாழ்த்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
       என்னங்க படத்தைப் பார்த்ததும் நேர பார்க்கணும் போல இருக்கா.. உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தாங்க... இந்தப் பெரிய மனுசன் ரொம்பத் தூரத்தில் இருந்து தான் இம்புட்டு பேரிடமும் கலக்குறாரு (அக்கா இன்றைக்கே நாவுறு கழிச்சிடுங்க..)
            அன்பின் சந்தோஷ் குட்டி 64 கலையும் கற்று சீரும் சிறப்புடனும் வாழ என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..

29 பங்குனி
வயசு பெரிசாய் அதிகமில்லிங்க 14 வயசு தான் வித்தியாசம்..
         இவரது முகத்தை யாருமே இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் முன் ம.தி.சுதா என்ற ஒரு கெட்டவன் நல்லவனாக தெரிவதற்கு காரணமான பல பங்கு இந்த ஆசிரியையுடையது தான்...
      முக்கியமாகச் சொல்வதானால் இந்த உலகத்தில் இதுவரை நான் ஒரு பொய் கூட சொல்லாத ஒரே ஒரு நபர் என்றால் அவர் இந்த சிமாட்டியாகத்தானிருக்கும்..  இவர் வேறு யாருமல்ல என் உடன் பிறந்த சகோதரியாராகும்...
    என்றோ ஒரு நாள் திறந்து பழகிய முகப்புத்தகத்தில் என்னை மட்டும் நண்பராக்கிக் கொண்டு வாழும் ஒரு பெண்.. (அவருக்கு அதில் நாட்டமில்லை அனால் அது என்னவென்றறிவதில் ஏற்பட்ட ஆர்வக் கோளாறாகும்..)
     
       அவர் என்னை எப்படி வளர்த்தார் என தனிப்பதிவில் சொல்வதே நல்லது.. இவர் மட்டும் தான் என் வீட்டிலேயே என்னை அடித்த ஒருவர் மற்ற எவருக்குமே துளி பயம் கிடையாது (ஆனால் என் மூன்று சகோதரங்களின் கால்களிலும் அப்பா அடித்த தழும்பு இப்பவும் இருக்கிறது)
   அவர் இன்னும் கல்வியில் வெற்றி பெற்று பல மாணவர்களை இச் சமூகத்திற்கு கொடுக்கணும் என அவரை மனதார வாழ்த்துகிறேன்...

குறிப்பு - சகோதரர் பிரகாஷ் அவர்கள் ஒரு விளம்பரத்தை தன் தளத்தில் இட்டுள்ளார். என்னிடம் ஏதாவது விட்ட குறை தொட்ட குறை இருந்தால் அவர் பெயர் மேல் சொடுக்கிச் சென்று வெளிப்படையாகக் கேளுங்க வெளிப்படையகவே சொல்கிறேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

44 comments:

சுடுசோறுக்கே சுடுசோறா...?

எனது வாழ்த்துக்களும்....

பேட்டிக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் நண்பரே...

Chitra said...

அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் சேர்த்து தெரிவித்து விடுங்கள். அழகிய பதிவு!

தங்கைக்கான கவிதை சிறப்பாக உள்ளது.

tamilvaasi said...

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் சகோ...

Anonymous said...

///உறக்கம் உதறி நீ
தாராளமாய் கனவு காண்
உன்னை நீ விழிக்கும் போது
கனவுகளே வழிகாட்டும்/// நல்ல வரிகள் ..
எனது வாழ்த்துக்களும் நீங்கள் வாழ்த்தி நிற்ப்போருக்கு,,,,,,,,,,

வணக்கம் சகோ, உங்களுடன் சேர்ந்து, நீங்கள் வாழ்த்தும் அந்த மூன்று அன்பு உள்ளங்களையும் நானும் ஏனைய பதிவர்களுடன் இணைந்து வாழ்த்துகிறேன்..


குழப்படிகாரனை அப்பாவியாக மாற்றிய அக்காச்சி:))
அக்காச்சி இவனை அப்பாவியா, நல்லவனா மாற்றியவர் நீங்களா!
கை தொழ வேண்டும் உங்களை!
வாழ்த்துக்கள் அக்கா..

கடைக்குப் போய் காய் கறி வாங்கி வரச் சொன்னால் பதிவுலக ஞாபகத்திலை ‘அக்கா இந்தா கடைக்குப் போயிட்டு வாறன், சுடு சோறு எனக்குத் தான் என்று சுதா சொல்லுவதாக வடமராட்சிப் பக்கம் தகவல் பரவுது, உண்மையா?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

பிறந்தநாளைக்கொண்டாடும் மூவருக்கும் வாழ்த்துக்கள்!! டீச்சர எங்கோ பார்த்த மாதிரி இருக்கு சுதா!

My Hearty Wishes..

ரேவா said...

என்னுடைய வாழ்த்தையும் இணைத்துக் கொள்ளுங்கள் சகோ... மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்........உங்கள் மூவருக்கும்,,,

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்
பிறந்தநாளைக்கொண்டாடும் மூவருக்கும் வாழ்த்துக்கள்!!

Sriakila said...

அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

vanathy said...

mm.. super post. Happy B'day to all.

Unknown said...

பிறந்த நாளை கொண்டாடுகின்ற மூன்று பேருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..

மூவருக்கும் வாழ்த்துக்களும்... வேண்டுதல்களும்...

Ram said...

எப்ப வந்தாலும் கேப்பன்.. எனக்கு தான் பஜ்ஜி..

வாழ்த்து தான் சொல்லமுடியும்..

மதி, அனைவருக்கும் பிறந்ததின வாழ்த்துக்களை என் சார்பாகவும் தெரியப்படுத்தவும்.

அனை வருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

Unknown said...

வணக்கம் சகோதரம் நிறையப்பதிவுகள் கடந்துவிட்டன என்னால்த்தான் வரமுடியவில்லை நிட்ச்ச்சயம் நேரம் கிடைக்கும் போது அனைத்து பதிவுகளையும் படிக்கின்றேன்.

உறவுகளின் நிகழ்வுகளை பகிர்வதன் மூலம் தங்களின் வாசகர்கள் மற்றும் எங்களைபோன்ற சொந்தகளின் உள்ளங்களில் நீங்கள் இன்னும் நெருக்கமாகி விட்டீர்கள்.

தங்கள் குடும்பத்து உறவுகள் அனைவரும் வாழ்க வழமுடன்.

அரபு தேசத்திலிருந்து அன்புடன் மகாதேவன்.

மூவருக்கும் எனது வாழ்த்துக்களையும் சேர்த்து தெரிவித்து விடுங்கள். கவிதை அருமை. உங்க குட்டி மருமகபிள்ளையும் சூப்பர்..
அக்காவின் பாசத்துக்கு ஒரு சபாஷ்..

பிறந்தநாளைக்கொண்டாடும் மூவருக்கும் வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள்.

தலைப்பைப் பார்த்தவுடன் பிறந்ததினத்திற்கான பதிவென்று கணிக்க முடியவில்லை.
மூவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அழகான பதிவுங்க.

அனைவருக்கும் என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. குட்டிப் பையன் ரொம்ப அழகாக இருக்கிறான்..

வாழ்த்துகள் வாழ்த்துகள் மக்கா...

வாழ்த்துக்கள் மதிசுதா அந்த மூவருக்கும் :-)
என்றோ ஒரு நாள் திறந்து பழகிய முகப்புத்தகத்தில் என்னை மட்டும் நண்பராக்கிக் கொண்டு வாழும் ஒரு பெண்.. haha :-))

என் வாழ்வின் கல்விக்கும் அடித்தளம் இட்டவர்களில் ஒருவர் தான் உங்களேடு நிற்பவர்..

Happy birthday to all three.
Have a wonderful day...
Vetha.Elangathilakam.
Denmark.
(kovaikkavi- wordpress.
kavithai - google)

மூவருக்கும் வாழ்த்துக்கள்!

என் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லிவிடுங்கள்.
அழகிய பதிவு

மூன்று உறவுகளுக்கும் என் வாழ்த்துகளையும் பகிர்கின்றேன்......

பேட்டி படிக்க ஆவலுடன் உள்ளேன்...

***வரும் ஜென்மம் யாவும் உன் தங்கையாகும் வரம் ஒன்று தந்து உன் தங்கையை வாழ்த்து ***
உங்கள் உறவுகள் ரொம்ப கொடுத்து வச்சவங்க.வாழ்த்துக்கள்.

***சந்தோஷ் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்***
அக்கா மகனுக்கு இந்த அன்ரியின் பிறந்தநாள் வாழ்த்தையும் கூறி விடுங்களேன்...அருகில் இருந்து வாழ்த்த முடியாவிட்டாலும் எப்போதும் எங்கள் வாழ்த்து உனக்கே.

ADMIN said...

எனது வாழ்த்துக்களும் அவர்கள் மூவருக்கும் உரித்தாகட்டும்..!!

பதிவின் வார்த்தைகள் எம்மைக் கவர்ந்தது..வாழ்த்துக்கள் தங்களுக்கும்..!!

தங்கை , சந்தோஷ் மற்றும் அக்காவிற்கு எனது இனிய வாழ்த்துகள்..
அப்புறம் இதோ போய் கேள்வி கேட்டுட்டு வந்திடறேன்.. ஹி ஹி

ஹேமா said...

சுத...பதிவைப்படிக்கும்போதே பாசமும் வெளிப்படுகிறது.சும்மா நினைப்பதற்காகப் போட்ட பதிவாய் இல்லை இது.உங்கள் மனதில் நிலைத்து நிற்பவர்களை இன்னும் இருத்திக்கொள்ள இட்ட பதிவு.உங்கள் அன்போடு எங்கள் வாழ்த்தும் சேரட்டும் !

மூவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக் கவிதை உயிரோட்டமாக இருக்கிறது

தங்கள் உறவுகளுக்கு, எங்கள் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

இன்று உனவு உலகத்தில்: http://unavuulagam.blogspot.com/2011/03/2011.html

அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......

தம்பி சுதா!
உவை மூன்றுபேரும் எனது நெருங்கிய உறவுகள், எனது வாழ்த்துக்கள் என்றும் அதாவது நான் மறந்தாலும் அவைக்கு கிடைக்கும்..இதிலை உங்களால் பதியப்பட்ட பதிவில் வரும் வார்த்தைகள் அத்தனையும் உங்க அடிமனதிலை இருந்து வந்தவை என்பதை என்னால் புரியக் கூடியதாகவுள்ளது.
உங்களை பிள்ளையாக பெற்றதிற்கு உங்க பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவங்க...

Unknown said...

வாழ்த்துக்கள் மூவருக்கும் எப்போ பேட்டி? ஆவலாயுள்ளேன்!

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top