Friday, 4 March 2011

பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

வணக்கம் சகோதரங்களே சேமம் எப்படி ?

         அவசர பதிவொன்றுடன் அவசரமாக சந்திக்க வேண்டி வந்துவிட்டது. செவ்வாய் கிழமையே பதிவிட வேண்டியது நேரம் இன்மையால் தவற விட்டுவிட்டேன்.
        இப்போது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எனச் சொல்லி பலர் பல வழியில் பணம் பறிக்கத் தொடங்கி விட்டார்கள். இவ்வளவு காலமும் தரகர்கள் மூலம் ஒரு பெரும் தொகைப் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது கொஞ்சம் பணம் படைத்தவர்கள் தான். அனால் இப்போ அப்படியில்லை நடுத்தர வர்க்கத்துக்கு கீழ்ப்பட்டவர்களையும் இலக்கு வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
          சென்ற சனிக்கிழமை காலை யாழ்ப்பத்திரிகையான உதயனில் ஒரு விளம்பரம் வந்தது இதில் கனடாவிற்கு உடனடி வேலை வாய்ப்புடனான வீசா எனவும் 0777140416 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இருந்தது. ஒரு நண்பர் ஒருவர் தொடர்பு கொள்ளுமாறு வற்பறுத்தினார். அதற்கு கொழும்பிலிருந்து ஒருவர் கதைத்தார். அந்த உரையாடலை சுருக்கமாகத் தருகிறேன்.

அவர் - திங்கட் கிழமை கனடா தூதரகத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கணுமாம்.             அதனால் மறு நாள் கையளிக்க வேண்டுமாம்.
நான் - சரி எங்கு கொண்டுவருவது உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது.
அவர் - இல்லை தம்பி நாளை ஞாயிறு அலுவலகம் திறக்காது உடனடியாக கொடுக்கணும் அதனால் நீங்கள் கொழும்பு வந்து எனக்கு போன் பண்ணுங்க நான் லொட்ஜ்ஜிற்கு வந்து வாங்கறன்.
நான் - முதல் எவ்வளவு பணம் கட்டணும்
அவர் - அதெல்லாம் தேவையில்லை நான் விசா கையில் தருகையில் நீங்கள் 32 லட்சம் தந்தால் சரி.
நான் - அப்படியென்றால் ஆவணம் மட்டும் போதுமா ?
அவர்- இல்லை ஒரு றிசிட் (பற்றுச் சீட்டு) போடணும் அதற்கு 12,200 ரூபா தரணும்.
நான் - வேலை எங்கே ?
அவர் - கனடா எயாப்பொட் ஒன்றில் துப்பரவுப் பணி மாதம் 3 லட்சம் சம்பளம்.

(இவ்வளவும் உங்களுக்கு விளங்கிக் கொள்ளப் போதும் என நினைக்கிறேன். 10 லட்ச ரூபாய் படி 10 பேரை கூட இப்ப ஏமாற்ற முடிவதில்லை அதனால் 10 அயிரம் ரூபா படி 1000 பேரை எமாற்ற ஒரு திட்டம் தான் இது)

சரி இன்னொரு விடயம் கனடாவில் அப்பிள் தோட்டத்தில் வேலை எனக் கூறியும் எடுக்கிறார்கள் முதலில் வீமான பயணச் சீட்டுக்கு 2 1/2 லட்சம் செலுத்தினால் சரி மிகுதி 15 லட்சத்தை வேலை செய்யும் போது கழிக்கப்படுமாம். இதற்கு கனடா நண்பர் யாராவது விளக்கம் தாருங்கள். காரணம் இப்போது அங்கே குளிர் காலம் சரியாக முடியவில்லை அதனால் மரத்தில் இலைகள் கூட இருக்காது. வைகாசி, ஆனி காலப்பகுதி வரை இங்கிருந்து போபவர்கள் என்ன செய்வார்கள்.

முடிந்தவரை மற்றைய நண்பர்களுக்கும் சொல்லுங்கள். யாருக்காவது தகவல் பகிரணுமுன்னா கீழே உள்ள FACE BOOK பொத்தானை சொடுக்கி உங்கள் சுவரில் பகிருங்கள். அல்லது மெயில் பொத்தனை சொடுக்கி மின்னஞ்சலாக அனுப்பலாம். 

நன்றி மீண்டும் சந்திப்போம்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

53 comments:

ஆஹா.எனக்குத்தான் சோளப் பொரியா............

ஆமாம் அண்ணா.இப்படியான ஏமாற்றுக்காரர்களை நம்பி நம் நாட்டில் எத்தனையோ பேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து நிக்கிறாங்க.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பாங்க.இதற்கெல்லாம் தகுந்த நடவடிக்கை எடுக்க யார்தான் முன் வருவாங்க.......?

அப்படின்னா...எனக்குத்தான் சுடு சோறா?

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

Ashwin-WIN said...

நல்ல பதிவு..
ஒரே நாளில் பணக்காரர் ஆகுவதேப்படி என்று நல்லாவே படித்துவைத்திருக்கிறான்..
Ashwin Arangam

NICE...

இதோ வந்து விட்டேன்..

பகீ said...

சோளப்பொரி, சுடுசோறு???????

நல்ல பதிவு
ஏமாரும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற ஏமாற்றுகாரர்கள் இருப்பார்கள்..
எதுவாக இருந்தாலும் விசாரித்து விட்டு அப்புறம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் அதுதான் சரி..

இதையும் கொஞ்சம் படிங்க..

http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_04.html

@ரஹீம் கஸாலி
நாங்கதானே சுடு சோறு சாப்பிட்டோம்.அதுதான் இப்போ அறிடிச்சே..............
@ரஹீம் கஸாலி
நாங்கதானே சுடு சோறு சாப்பிட்டோம்.அதுதான் இப்போ ஆறிடிச்சே..............


நம்பிக்கையால்.......

பணத்த கொடுத்து ஏமாறாதிங்க சகோ....

Unknown said...

ம்ம் நல்ல விழிப்புணர்வு மச்சி...
பதிவுக்கு நன்றி...

Unknown said...

கொள்ளைக்கார கும்பல் தலைவனுங்க பெருகிட்டானுங்க நண்பா!

Chitra said...

எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற வராங்க.... வந்த வரை லாபம் என்று வந்துடுறாங்க... மக்கள் தான் விழிப்பா இருக்கணும்.

Unknown said...

அதெலாம் முடியாது
எனக்குத்தான் வடை
SOLLAPORI எல்லாம்

Unknown said...

நல்ல பதிவு

மிகவும் அவசியமான பதிவு சுதா! கனடா பற்றித் தெரியவில்லை! இருந்தாலும் அது சுத்துமாத்து என்று தெரிகிறது! பிரான்ஸ் - தில்லு முல்லுகள் பற்றி வேணும்னா எழுதுறேன்!

Unknown said...

விழிப்புணர்வு பதிவு, இம்மாதிரி மோசடிகளில் படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் ஏமாறுகிறார்கள்..

என்னங்க விசா வாங்குறதுக்கு 32 லட்சமா ?
எனக்கு இது பத்தி அதிகம் தெரியாதுங்க ..

Anonymous said...

எல்லாம் வெளிநாட்டு மோகம் அண்ணா.

Unknown said...

கிராம மக்கள் தினசரி நிறையபேரிடம் இப்படி ஏமாறுகிறார்கள்

Unknown said...

அரசு இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

kobikashok said...

பணம் பாதாளம் வரை பாயும்

பத்திரிக்கை நிறுவனங்கள் இவ்வாறான விளம்பரங்களை வெளியிடும் போது வியாபார நோக்கத்தை தவிர்த்து சமூக நோக்கோடு செயற்பட வேண்டும்...

பணத்தேவை ஒருவரை ஏமாற்றுகிறது.
மற்றொருவரை ஏமாறவைக்கிறது,

ரேவா said...

நல்லப் பதிவு... இது போய்ச் சேரவேண்டியவரை சேர்ந்தால் மிக்க நல்லது... பணம் எல்லோரையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது.... வேதனை...

பயனுள்ள பதிவு மக்கா....

நல்ல பதிவு
உங்களது சமூக அக்கறையை பாராட்டுகிறேன்....

Jana said...

என்ன மதிசுதா மீண்டும் ஒருமுறை!!! இப்ப உள்வரவில் சரியான இறுக்க நடைமுறையினை கனடா எடுத்துள்ளது. அத்தோடு, இலங்கையர் விடயத்தில் என்ன செய்வது என்ற முடிவுக்கு கனடா விரைவாக வரவுள்ளதாக தெரிகின்றது. இந்த நிலையில் இதுவேறையா?
இப்படித்தான் 1999ஆம் ஆண்டு அலாஸ்காவுக்கு மீன் பக்ரறி ஒன்றுக்கு அக்கள் தேவை என்று கனபேர் ஏமாந்தார்கள். ஒன்று தெரியுமா? அலாஸ்காவில் பனி உறைந்திருக்கும். ரில்லர் போட்டா மீன்பிடிப்பது! அனால் அதிலும் சிலர் ஏமாந்தனர் என்பது வேதனையான உண்மை.
இத்தகைய விளம்பரங்கள் தொடர்பாக தனியே செய்யவேண்டிய ஒரே வேலை அரச புலனாய்வுத்துறை, பொலிஸாரிடம் முறைப்படி முறைப்பாடு செய்வதே. இப்படியாக பலர் அண்மையில் பிடிப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஹேமா said...

இப்போ எல்லா நாடுகளுமே கவனமாக இருக்கிறது.நாட்டில் பணம் கொடுப்பவர்கள் யோசித்துக் கொடுக்கவேணும் !

விழிப்புணர்்வு பதிவு நிச்சயம் பலரை செனன்றடய வேண்டும்

அதிர்ச்சி தகவலாய் இருக்கிறது சார்.

அக்கறையான பதிவு... சரியாகத் தெரியாமல் யாரிடமும் பணம் கொடுப்பது, புத்திசாலிதனம் இல்லை..

கூடுதல் கவனத்துடன் இருத்தல் நல்லது.. :-)

உண்மையில் காலத்துக்கு ஏற்ற பதிவு நண்பரே

டைமிங்க் போஸ்ட் நண்பா

வெந்த புண்ணிலை வேலை பாய்ச்சும் வேலை தான் செய்கிறார்கள் ..அந்த தரகர் ஒரு தமிழன் தானே ? பாமரர்கள் பாவம் சகோதரா .. நல்லவேளை புலிக்கு புல்லு போடுற வேலை எண்டு சொல்லேல்ல ..நல்ல பதிவு ..இது விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினால் சரி .இல்லாவிட்டால் இப்படி பலர் வந்துகொண்டே இருப்பார்கள் .

எத்தர்கள் எங்கும் ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறார்கள். கவனம் மட்டுமே காப்பாற்றும்.

எச்சரிக்கையூட்டும் தகவலுடன் கட்டுரை!
நன்றி, சகோதரம்!

Mohana said...

///[இப்படித்தான் 1999ஆம் ஆண்டு அலாஸ்காவுக்கு மீன் பக்ரறி ஒன்றுக்கு அக்கள் தேவை என்று கனபேர் ஏமாந்தார்கள். ஒன்று தெரியுமா? அலாஸ்காவில் பனி உறைந்திருக்கும். ரில்லர் போட்டா மீன்பிடிப்பது!_)'///
அண்ணன் மதிசுதாவுக்கு ...அலாஸ்கா அமெரிக்காவின் ஒரு மாநிலம் இங்கு மீன்பிடி தான் பிரதானமான தொழில் இதை போல் சில காலங்களுக்கு நோர்வே நாடும் மீன்பிடியில் தான் தங்கியிருந்தது தற்போது பெற்றோலியம் பெறப்படுதால் மீன்பிடி சற்றுகுறைந்துள்ளது ஆனால் இவை இரண்டும் பனி உறைந்துள்ள நாடுகள் தான் பனிக்கும் மீன்பிடிக்கும் சம்மந்தம் குறைவு அன்ராட்டிக்காவலும் மீன், பென்குவின், சீல் வகை உயிரினங்கள் உண்டு
http://www.alaskanfishing.com/
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504221

சுதா, இது பற்றி அதிக விவரங்கள் எனக்குத் தெரியாது. நேற்றே உங்கள் பதிவைப் படித்தேன்.

வெளிநாட்டு வேலை என்றால் நிதானமாக யோசித்து செயல்படுங்கள்

Unknown said...

// 10 லட்ச ரூபாய் படி 10 பேரை கூட இப்ப ஏமாற்ற முடிவதில்லை அதனால் 10 அயிரம் ரூபா படி 1000 பேரை எமாற்ற ஒரு திட்டம் தான் இது//

அதே தான்! நம்மவர்களும் இவ்வளவு குறைந்த பணத்திலா? எதற்கும் ஒருமுறை முயற்சி செய்யலாமேன்னு களத்தில இறங்க....நான் நினைக்கிறேன் இப்போ அவர்கள் தங்கள் 'டார்கெட்' பணத்தை அடைந்திருப்பார்கள்!

இப்படியான ஏமாற்றுக்காரர்களை நம்பி நம் நாட்டில் எத்தனையோ பேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து நிக்கிறாங்க.ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பாங்க.நல்லப் பதிவு... இது போய்ச் சேரவேண்டியவரை சேர்ந்தால் மிக்க நல்லது... பணம் எல்லோரையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது.... வேதனை...

வணக்கம் சகோதரம், எனது வலைப் பூவில் உங்களின் பதிவின் அப்டேற் தெரியவில்லை. அது தான் லேட்.

சமூகத்தில் உள்ள ஒரு சில ஏமாற்றுக்காரர்களைப் பற்றிய விழிப்புணர்வுப் பதிவு. அருமை. இந் நேரத்தில் நாம் அனைவரும் இவ் விடயம் பற்றிச் சிந்திக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மத்திய கிழக்கில் வேலை வாய்ப்பு வாங்கி தருகிறோம் என்பவர் தொடக்கம், மேற்கத்தைய நாடுகளிற்கு ஆட்களை அனுப்புவோர் வரை எல்லோரும் தமது செப்படி வித்தைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

குருநகர் இறங்குதுறை மூலம் ஆஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பும் முயற்சிகளும் ஒரு சிலரால் தொடங்கப்பட்டு விட்டன. இற்றையளவில் குடாநாட்டினையும், மட்டக்களப்பினையும் பொறுத்தவரை சொகுசான கப்பல்களில் ஏற்றி ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புகிறோம் என்று கூறி சின்ன வள்ளங்களில் ஏற்றி பரலோகம் அனுப்பும் செயற்பாடுகளும் தொடங்கி விட்டன.

எனது நண்பன் ஒருவனும், குருநகர் இறங்குதுறை ஊடாக தீவகத்திற்கு சென்று அங்கிருந்து கச்சதீவைக் கடந்து ஆஸ்திரேலியா போகும் முயற்சியில் ஈடுபட்டு, இந்தோனேசியாவில் கப்பல் உடை பட்டு இப்போது சிறையில் இருக்கிறான். அவனுக்குச் சொன்னதெல்லாம். ஆமி நடுக்கடலிலை நிற்பாங்கள். இலங்கை இந்திய எல்லையை கடக்கும் வரை சின்ன வள்ளத்திலை மீன் பிடிப்பது போல போவோம். பின்னர் நடுக்கடலில் வைத்து உங்களை பெரிய கப்பலிலை ஏற்றுவோம் என்று தான். வெறும் பத்து இலட்சம் ரூபாயுடன் அவன் நடுக்கடலில் அல்லாடி நரக லோக வேதனை அனுபவித்ததாக தன் உறவினர்களுடன் பேசும் போது சொன்ன்னதாக அவனின் சகோதரி சொன்னார்.
ஆகவே இது பற்றி நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ் விடயம் பற்றிய விழிப்புணர்விற்குச் சரியான ஊடகம் எமது குடாநாட்டுப் பத்திரிகைகள் தான். சுதா நீங்கள் இவ் விடயங்களை ஒரு கட்டுரையாக உதயன், வலம்புரி, தினக்குரல், முதலிய ஊடகங்களுக்கு வரைந்து அனுப்பினால் பயனுள்ளதாக அமையுமே? உங்களுக்கு இது சிரமம் என்றால், தகவல்களைத் திரட்டுவது கடினம் என்றால்
நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளேன்.

இத்தகைய செய்திகளை யாழில் பொது மக்கள் வாசிகக் கூடியதாக் பரப்புங்கள். ( உங்களை ஏஜென்சி திட்ட கூடும் )
அங்கு தான் . இது ஆரம்பமாகிறது . சிலர் நிர்பந்தத்தால் வெளிகிடுகிரார்கள் . அடுப்புக்கு தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக.உங்கள் சmuதாய நலனுக்கு ,பகிர்வுக்குனன்றி

விழிப்புணர்வு பதிவு.

vanathy said...

இதெல்லாம் சும்மா கதை விடுறாங்க. கனடாவில் அப்பிள் பறிப்பதா? அதை பறிச்சு எப்ப வந்த கடனை அடைப்பது. இனிமேல் மே மாசம் தான் ஆப்பிள் சீசன். ஏமாற இருந்துக்கோங்க, அப்பு.

விசயத்தை அறிய தந்தமைக்கு நன்றி!

அவசியமான பதிவு சுதா இப்படித்தான் என் தோழியோருவரை சுவிஸ் அழைத்துச் செல்வதாக சொல்லி ஆரம்பத்திலேயே ஒரு லட்சம் வரை கவர்ந்த பின்னர் காணாமல் போயுள்ளனர்.

ஏமாரும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற ஏமாற்றுகாரர்கள் இருப்பார்கள்..விழிப்புணர்வு பதிவு..

50 - நான்தான்...

Learn said...

விழிப்புணர்பு பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ADMIN said...

உண்மை நிலையை விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள்.. ! அங்கு மட்டுமல்ல.. உலகத்தில் ஒரு கோடி இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்...! ஏமாறும் பாமர மக்களுக்குத்தான் சற்று பகுத்தறிவு வேண்டும்.. சிந்தித்து செயல்பட வேண்டும்.. பணம் என்றதுமே எதையும் சிந்திக்காமல் ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை.. ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்..! அப்படியே இங்கு வந்து பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..! பதிவின் தலைப்பு: கவலையே இல்லாமல் வாழ ஆசையா? கவலை நீக்கும் மருந்து/// http://thangampalani.blogspot.com/2011/03/how-to-destroy-your-worries-or-how-to.html

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top