Thursday, 24 February 2011

பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

 நீண்ட நாளுக்குப் பிறகு எனது வழமையான பாணிக்கு திரும்புகிறேன்
        மனித தேவைகள் தான் புதிய கண்டுபிடிப்புக்களை தோற்றுவித்தது என்பார்கள் அதே போல் எனக்கும் ஒரு பெரிய தேவை இருந்தது அதற்காக ஒரு நண்பன் ஆரம்பித்து தந்த இக் கண்டுபிடிப்பு எனக்கு பெரிதும் உதவியது.
         எல்லோரும் ஏதோ ஒரு போதை வஸ்துக்கு அடிமையாயிருப்பார்கள். நானும் ஒரு போதைவஸ்து அடிமையாளன் தான் தேநீர் கிடைத்தால் எனக்கு தேவருக்கு அமிர்தம் கிடைத்த சந்தோசம் ஆனால் கிடைக்காவிடிலும் இருப்பேன் கொஞ்சம் சொம்பேறியாயிருப்பேன்.
நான் தாங்க
               அண்மையில் கூட நம்ம ஆர்கே.சதீஸ்குமார் உயரப்பயணம் போனாராம் சொல்லாமல் போனபடியால் நல்லதொரு உற்சாக பானத்தை தவறவிட்டுவிட்டார். அதனால் தான் சீபி.செந்தில்குமார் மேலே போக முதலே நம்மளுக்கு சொல்லிட்டார். அவருக்கு நான் சொல்லியுள்ளேன் “காதற்ற ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே” யோவ் அப்படியிருக்கையில் இம்புட்டு பொருளும் கொண்டு போவிரா ? சீபிக்கு என்ன நடந்தாலும் அவரை பேட்டி எடுத்து மாட்டிவிட்ட தட்டைவடைக்கு ஓட்டை போட்டு சுடும் ரஜீவன் தான் பொறுப்பு...

சரி விசயத்திற்கள் போவோம்
பொலுத்தீன் பை
தேவையான பொருட்கள்
ஒரு பிளாஸ்டிக் போத்தல், ஒரு பொலுத்தீன் பை (இங்கு சொப்பிங் பாக் என்போம்), ஒரு தீப்பெட்டி, தேநீருக்குத் தேவையான தேயிலை, சீனி, ஒரு டம்ளர் நீர் (குவளை நீர்)

செய்முறை
>>>>>போத்தலினுள் ஒரு டம்ளர் நீரை விட்டு தேவையான அளவு தேயிலை , சீனி போன்றவற்றை இட்டு வாயை மூடியால் காற்று வெளியேறா வண்ணம் இறுக்கமாக மூடவும் பின்னர் வடிவாகக் குலுக்கவும்


>>>>>பொலுத்தின் பையை கீலம் கீலமாகக் கிழிக்கவும்


>>>>>அதன் ஒரு அந்தத்தில் நெருப்பை பற்ற வைத்து போத்தலின் அடியில் பிடித்துக் கொண்டு போத்தலை சுழற்றி வர வேண்டும் 5-10 நிமிடத்தில் சுடச் சுட அருமையான தேநீர் தயார்

         இது ஒரு சாதாரண விடயம் தான் அனால் பலருக்கு உதவியிருக்கிறது உடல் நலக்கேடு பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளக் தேவையில்லை காரணம் நான் இப்போதும் இரும்பு போலவே இருக்கிறேன் (ஹ.....ஹ....நிறமில்லிங்க உடலை சொல்றேன்) பயப்படாமல் செய்து பாருங்கள் எந்தவித மணமும் ஏற்படாது இக்கட்டான நேரத்தில் நிச்சயம் உதவும்.
            
அறிவியல் விளக்கப் பகுதி - இது எப்படி சாத்தியமாகும் என எண்ணத் தோன்றுகிறதா. வளியும் ஒரு வித வெப்பக்கடத்தல் ஊடகமாகும். உள்ளே உள்ள நீர் கொஞ்சம் சூடாகி நீராவி தோன்றினாலே போதும் அது உள்ளே உள்ள வளியை சூடாக்க ஆரம்பிக்கும். சாதாரணமாகவே நீராவி தான் உயர் வெப்பம் கூடியது உதாரணத்திற்காக பார்த்தால் ஒருவருக்கு சுடு நீர் பட்டு வரும் காய வேதனையை விட நீராவி பட்டால் வரும் தாக்கம் அதிகமாகும். சத்திரசிகிச்சை உபகரணங்களைக் கூட நீராவியால் (AUTO CLAVE) தான் சுத்திகரிப்பர்.


 இனி என்ன உங்க வேட்டை தான் குட்டுறதுண்ணா குட்டுங்க, திட்டறதுண்ணா திட்டுங்க ஆனால் வாக்கு மட்டும் போட்டிடுங்க எதற்கும் வாக்கை போட்டிட்டு தேநீரை குடியுங்க (ஹ..ஹ.... சும்மா வெருட்டினேன்)
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


நேரம் கிடைத்தால் என்னோட பழைய கண்டுபிடிப்புகளின் தொடுப்பு கீழே இருக்கு பாருங்க...
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...
வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி...கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு..சாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு

சோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

66 comments:

ஆமா நல்ல ஐடியா.............நன்றி.......

wait

நல்லா வர்லன்னா பாரு..

சீபிக்கு என்ன நடந்தாலும் அவரை பேட்டி எடுத்து மாட்டிவிட்ட தட்டைவடைக்கு ஓட்டை போட்டு சுடும் ரஜீவன் தான் பொறுப்பு...

ஏன் சுதா சி பி க்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தாரு அவரு?

தமிழ் 10 இணையுங்கள்..

நல்லா இருக்கு சுதா உங்க கண்டுபிடிப்பு! அவசியம் பொலித்தீன் பேக்கில் தான் சூடு காட்ட வேண்டுமா? வேறு மூலங்களைப் பயன்படுத்தக் கூடாதா?

நல்லா இருக்கு Bro!

அறிவியல் விளக்கமும் முறையும் நல்லா இருக்கு சுதா ...செய்திடவேண்டியது தான் ... :)

//இரும்பு போலவே இருக்கிறேன் (ஹ.....ஹ....நிறமில்லிங்க உடலை சொல்றேன்)//

hehe :D

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

எல்லாம் நல்லம் ஆனால் தயவுசெய்து பொலித்தீன், பிளாஸ்திக் போன்றவற்றை எரிக்காதீர்கள், அவை சூழலை, குறிப்பாக வளியைப் பாரதூரமாக மாசுப்படுத்தும். அதைச் சுவாசிப்பது உங்கள் நுரையீரலுக்குச் சிறந்ததல்ல.

நல்ல ஐடியா.

நல்ல ஐடியாவா இருக்கே மக்கா....

Jana said...

பதிவு நல்ல இருக்கு..பானம் நல்லா இரக்கா என்று நீங்க தயாரித்து முதலில் நீங்க அதை குடித்தவுடன், பின்னர் நான் குடித்துவிட்டு சொல்லட்டுமா?

Unknown said...

நல்ல ஐடியா

புதுசு புதுசா கண்டு பிடிங்க...

என் தல உருளுது?

பதிவுலகின் மூலிகை ராமர் வாழ்க.

இதுக்குக்கூட மைனஸ் ஓட்டா? ஒரு வேளை சுதா திடீர்னு பிரபல பதிவர் ஆகிட்டாரா?

நல்ல ஐடியா....

அருமையான பதிவு சுதா.

vinu said...

nallaa irrukea

Unknown said...

பாஸ்,
நீங்க வில்லேஜ் விஞ்ஞானி-ங்க....

Unknown said...

யாருங்க அது இந்த பதிவுக்கு நெகட்டிங் ஓட்டுப்போட்ட புண்ணியவான்...
(அய்யோ.. நான் இப்பதாங்க வரேன்.)

ஹஹஹா பயங்கரமான ஐடியாதான், ஆனா ப்ளாஸ்டிக்கை எரிக்க வேணாமே? (அதுக்குத்தான் யாரோ புண்ணியவான் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்காரோ? அது நான் இல்லீங்கோ.........)

Unknown said...

//பதிவுலகின் மூலிகை ராமர் வாழ்க.//

யாரோ புண்ணியவான் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்காரோ?
mathisutha56@gmail.com.ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ...............

//தேநீருக்குத் தேவையான தேயிலை, சீனி, ஒரு டம்ளர் நீர் (குவளை நீர்)
//

அது தேயிலைப் பொடிதானே .. ஹி ஹி ..

//தான் உயர் வெப்பம் கூடியது உதாரணத்திற்காக பார்த்தால் ஒருவருக்கு சுடு நீர் பட்டு வரும் காய வேதனையை விட நீராவி பட்டால் வரும் தாக்கம் அதிகமாகும். //

இது உண்மைதாங்க .. அது பயங்கர சூடா இருக்கும் .. விஞ்ஞானி மதி சுதா வாழ்க .. ஹி ஹி

வணக்கம் சுதா, உற்சாகபானம் தயாரிக்க்கும் முறை பற்றிய விளக்கம் அருமை. இந்த தொழில் நுட்ப அடிப்படையில் வேறு பானங்கள் ஏதும் மலிவாக தயாரிக்க முடியாதோ? சும்மா பம்பலுக்கு கேட்டன்.

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகின் மூலிகை ராமர் வாழ்க//
ha ha :-)

//Jana said...
பதிவு நல்ல இருக்கு..பானம் நல்லா இரக்கா//
Same doubt! :-)

சகோதரங்களே இந்தப் பதிவு எனது சொந்த அனுபவம் யாரும் சந்தேகப்பட வேண்டாம்... பதிவர் மீது கொலை வழக்கு என்ற செய்திக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்..

ஹ..ஹ..ஹ..

நல்ல ஐடியாவா இருக்கே ....
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.

கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் நண்பரே :)

பகிர்வுக்கு நன்றி

//சகோதரங்களே இந்தப் பதிவு எனது சொந்த அனுபவம் யாரும் சந்தேகப்பட வேண்டாம்... பதிவர் மீது கொலை வழக்கு என்ற செய்திக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்..

ஹ..ஹ..ஹ.. //

நம்பிட்டோம் சுதா...:-)

பாலா said...

சயன்டிஸ்ட் மாதிரி ஏதோ சொல்றீங்க... நமக்குத்தான் ஏற மாட்டேங்குது. ஆனாலும் ஓட்டு உங்களுக்கே...

என்ன ஒரு கண்டுபிடிப்பு ஆனால் பிளாஸ்டிக் எரிப்பது நல்லதில்லையே ..........

நல்லா இருந்தது...
விஞ்ஞான ரீதியான விளக்கம் சூப்பர்...

நல்ல ஐடியா. ஆபத்திற்கு உதவும்.

அது சரி பொலிதீனை எரிப்பதற்கும் சுழல் மாசடைதல், ஓசோன், புவி வெப்பமடைதல் ஆகியவற்றிற்கும் தொடர்பு இருப்பதாக பேசிக் கொள்கிறார்களே. அதைப் பற்றியும் சொல்லுங்களேன்.

anuthinan said...

அறிவியல் தேனிருக்கு நன்றிகள் அண்ணா!!

ட்ரை பண்ணி பார்க்கிறேன்

ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

பிளாஸ்டிக் மணம் இருக்குமே. அய்யோ நான் இத றை பண்ண மாட்டன். இந்தகண்டுபிடிப்பு பயமா இருக்கு!

ஐடியா சூப்பர் ..வாழ்த்துக்கள்

நல்ல ஐடியா! கலக்குறீங்க தம்பி!

அட்டகாசமான பதிவு. என்னமோ சைன்டிபிக்காத்தான் தெரியுது, ஆனா எப்படி வொர்க்அவுட் ஆகும்னு தெரியல!

Unknown said...

கொஞ்சம் லேட்
பட் ப்ரெசென்ட்
நல்ல தகவல்கள் மதி அண்ணா

nalathu than sakothra sole erukenka....

Kir said...

ஆஹா என்ன இது இப்படி எல்லாமா கண்டுபிடிப்பாங்க்...

vanathy said...

இப்படி அடிக்கடி பொலித்தீன் பையில் தேநீர் போட்டுக் குடிச்சா சொர்க்கம் தான். நல்லா கண்டு பிடிக்கிறீங்க!!!

நன்றி விஞ்ஞாநியாரே

kobikashok said...

பகிர்வுக்கு நன்றி ட்ரை பண்ணி பார்க்கிறேன் ம.தி.சுதா

பரவால்லியே, தேனீர் தயாரிப்பு. அடுத்து என்ன?

Unknown said...

ஓடையில் நனைந்து மகிழ்ந்தேன் அருமையான தகவல்

பாலிதீன் பைகளை எரிக்காமல் டீ தயாரானால் இன்னும் நன்றாக இருக்கும்.

கண்பிடிப்பு தொடரட்டம்...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

முயற்சி செய்து பார்க்கிறேன் சகோ... நல்ல தகவல்.....

என்ன ஒரு கண்டுபிடிப்பு ஆனால் பிளாஸ்டிக் எரிப்பது நல்லதில்லையே ..........

Unknown said...

ஆகா ..அருமையான கண்டு பிடிப்பு ...இனி பாத்திர செலவு மிச்சம் ..


இளைஞர்கள் உலகம்...

http://myblogonly4youth.blogspot.com/2011/02/blog-post_25.html

வலைச்சர ஆசிரியர் பணி காரணமாக தொடர்ச்சியாக வர முடியவில்லை... மன்னித்தருளவும்...

ஆதவா said...

இதற்காகவே ரூம் போட்டு யோசிப்பீங்களா???

tamilvaasi said...
Riyas said...

ம்ம்ம் செய்து பார்த்திடலாம்..

பால் விலை இன்னும் அதிகமாகிட்டா உங்க கண்டுபிடிப்பை ட்ரை செய்வேன்.
வாக்களித்துவிட்டேன்.

பால் விலை இன்னும் அதிகமாகிட்டா உங்க கண்டுபிடிப்பை ட்ரை செய்வேன்.
வாக்களித்துவிட்டேன்.

பால் விலை இன்னும் அதிகமாகிட்டா உங்க கண்டுபிடிப்பை ட்ரை செய்வேன்.
வாக்களித்துவிட்டேன்.

பால் விலை இன்னும் அதிகமாகிட்டா உங்க கண்டுபிடிப்பை ட்ரை செய்வேன்.
வாக்களித்துவிட்டேன்.

மன்னிக்கவும்,விசிபில் வராததால் நிறைய க்ளிக்கிடேன் .

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top