வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

பிற்பகல் 2:00 - By ம.தி.சுதா 55


சகோதரர்களே எப்படி இருக்கிறீர்கள்.

        நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
      ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
          கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
           பழைய காலங்களில் இப்படி அடிக்கொரு கோயில் வைக்கவில்லை அப்படி வைப்பதற்கு எல்லோருடமும் வசிதியிருக்கவில்லை. வெள்ளப் பெருக்கு ,மழை போன்ற காலங்களில் குடி மக்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள் அவர்கள் ஒதுங்கவதற்கு ஒரு பொதுவான இடமாக இந்த இடம் அமைக்கப் பெற்றிருந்தது. இங்கு சாதிகளை சம்பந்தப்படுத்த வேண்டாம் கோயில்களும் கடவுள்களும் எல்லோர்க்கும் பொதுவானதே
    ஒரு பெரியவர் சொன்னார் கொடித்தம்பம் வைக்கப்பட்டதன் காரணம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பதற்குத் தானாம். நானும் சிந்தித்துப் பார்த்தென் அது வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் யாரும் தேவையற்று நுழைவதில்லை அத்துடன் அதன் நுனி பகுதி OHM'S LAW விற்கு அமைவாக கூராகவே அமைக்கப்பட்டள்ளது. (R=Pl/a) அத்துடன் ஊரிலேயே உயரமான கட்டிடம் ஆலயமாகத் தான் இருக்கும்.
     ஆலயங்களில் பாதணிகள் உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் அதன் கீழ்த்தளம் பெரும்பாலும் பொழியப்பட்ட கருங்கற்களாலேயே அமைக்கப்படும். அவை நடக்கும் போது பாதத்திலுள்ள நரம்பு முளைகளை அருட்டுவதால் நல்லதொரு சிகிச்சையாக அது அமைகிறது இது பற்றி அக்குபங்சர் சிகிச்சையில் விளக்கமளிக்கப்படடள்ளது.
           அத்துடன் ஆலய நடைமுறைகளும் விஞ்ஞான காரணங்களை சார்ந்தே இருக்கிறது அதில் முக்கியமாக சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்

              உளவியல் ரீதியாகவும் மக்களிடை நல்ல மன நிலையையும் தோற்ற விக்கிறது. முன்னைய காலத்தில் ஆலயத்திருவிழாவில் வைத்துத் தான் திருமணங்களைப் பேசிமுடிப்பார்கள். ஆலயங்களில் ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்
நம்ம ஊர் கோயிலுக்கு போக இங்கே சொடுக்குங்கள்
        நாம் அறிவியல் வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தவில்லை இப்போதும் ஆலயங்களில் காது கிழிய பாடல்கள் போடுவதும் புனிதமான மந்திரம் என ஐயர் படிப்பதை சாக்கடை சந்து பொந்தெல்லாம் கேட்கும் வரை ஒலிக்கவிடுவதுமென நாமே எம்மை தரம் குறைத்துக் கொள்கிறோம். இவை பற்றி பலர் பலதை அறிந்திருப்பிர்கள் பகிருங்கள். இந்தப் பதிவை நான் இன்னும் முடிக்கவில்லை இது ஒரு பெரும் புயலுக்கு முந்திய தென்றல் தான்...


குறிப்பு - எனது கடைசிப் பதிவைப் பார்த்து நானே அதிசயித்துவிட்டேன் இவ்வளவு கருத்தரையாளர்களா நன்றி உறவுகளே.. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சிறிது காலத்திற்கு என்னால் வாரம் ஒரு பதிவு மட்டுமே இடமுடியும அத்துடன் வாரம் இரு தடவை தன் தங்கள் தளவருகையும் முடியும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.

கருத்திட்டும் வாக்கிட்டும் சோர்ந்து போன என் விரல்களை புதுப்பிக்கும் என் உறவுகளுக்கு பல கோடி நன்றிகள்

அன்புச்சகோதரன்
ம.தி.சுதா

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

55 கருத்துகள்:

ஷஹன்ஷா சொன்னது…

என் மனதின் ஆதங்கத்தையும் சொல்லியுள்ளீர்கள்...அருமை..

ஆலய திருவிளா முடிந்துதும் ஆன்மீக பதிவு...!

ஷஹன்ஷா சொன்னது…

மன்னிக்கவும் திருவிழா என வரவேண்டும்..

அட அருமையான புதிய தகவலா இருக்கே மக்கா.....

arasan சொன்னது…

அருமையான சிந்தனை நண்பரே ,,.,
நிச்சயம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு ..
சீக்கிரம் வாங்க ...

Unknown சொன்னது…

உங்க அறிவு சார்ந்த பதிவுக்கு நன்றி நண்பா

நான் படித்த படிப்பிலையும் இவைகள் உள்ளது நண்பா........அத எழுதி வச்சிட்டு போடலாமா வேணாமான்னு தான் விட்டுட்டேன் ஹி ஹி!

Unknown சொன்னது…

//சிறிது காலத்திற்கு என்னால் வாரம் ஒரு பதிவு மட்டுமே இடமுடியும அத்துடன் வாரம் இரு தடவை தன் தங்கள் தளவருகையும் முடியும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.//

நல்லது சகோ. இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. இயல்பாய் எடுத்துக்கொள்கிறோம்..

Unknown சொன்னது…

R= V/I என்பது தானே OHM"S LAW?

Unknown சொன்னது…

ஆலயங்களின் அமைவிடங்களுக்கான அறிவியல் அடிப்படை, ஆச்சர்யப்படுத்தும் விஷயம் தான்..

Amudhavan சொன்னது…

சரியான தகவல்களை நல்ல தகவல்களைத்தானே சொல்லவருகிறீர்கள். அப்புறம் எதற்குத் தேவையில்லாத தயக்கங்கள்? தொடரட்டும் உங்களின் அறிவுத்தேடல்...

வைகை சொன்னது…

சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்//////////

எனக்கும் இதில் உடன்பாடு உண்டு!

ம.தி.சுதா சொன்னது…

பாரத்... பாரதி... said...
R= V/I என்பது தானே OHM"S LAW?

நீங்கள் சொல்வதும் சரி தான் சகோதரா அந்தச் சமன்பாடு மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது.. இது அதிலிருந்து நிறுவி எடுக்கப்பட்டது இது பரப்பளவுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு பெறப்பட்டது... கூர்மையான பொருட்களில் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதைக்காட்டலாம்...

//ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்//

நான் நல்லூர்க் கோவிலுக்குள் சென்று தரிசிக்காததற்கு இதுதான் காரணமோ?! ;-)

roshaniee சொன்னது…

//மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது//

நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான பதிவு

Unknown சொன்னது…

ஆண்களையும் ஆடையுடன் செல்ல அனுமதிக்கலாம்...இதனாலேயே நான் பல தரிசனங்களை மிஸ் பண்ணி இருக்கேன் பாஸ்.

என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html

கடைசிப்பதிவுன்னு சொல்லாதீங்க.. லேட்டஸ்ட்டா போட்ட பதிவுன்னு சொல்லுங்க.

இளங்கோ சொன்னது…

கோவில் பற்றிய தகவல்கள் நன்று.

சுதர்ஷன் சொன்னது…

//ஆலயங்களில் பாதணிகள் உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் அதன் கீழ்த்தளம் பெரும்பாலும் பொழியப்பட்ட கருங்கற்களாலேயே அமைக்கப்படும். அவை நடக்கும் போது பாதத்திலுள்ள நரம்பு முளைகளை அருட்டுவதால் நல்லதொரு சிகிச்சையாக அது அமைகிறது//
இது மிகவும் அருமையான தகவலும் புதுசும் கூட சகோதரா ..வாழ்த்துக்கள் :)

மோகன்ஜி சொன்னது…

உபயோகமான தகவல்கள்.சிந்திக்க தூண்டுபவை... மேலும் இப்படி பல எழுதுங்கள் தம்பி!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

நானும் தொடர்கிறேன்,சிறந்த பதிவு.

Chitra சொன்னது…

அத்துடன் ஆலய நடைமுறைகளும் விஞ்ஞான காரணங்களை சார்ந்தே இருக்கிறது ...

......சுவாரசியமான தகவல்களுடன் வந்த பதிவு... ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்பு சுதா ,
நல்ல முயற்சி .
இன்னும் சில கழித்து, உங்கள் பதிவை நீங்கள் பார்க்கும்போது என்ன தோன்றுகிறதோ அது எனக்கு இப்போது தோன்றுகிறது
பிள்ளையார் சுழி அருமையாக வந்துள்ளது
பி .கு கோவில்கள் மன்னர்கள் போர் காலத்தில் தப்பிக்கும் அரணாக கூட இருந்திருக்கிறது

--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

கார்த்தி சொன்னது…

உண்மையில் கோயில் தொடர்பான ஒவ்வொரு செயல்களுக்கும் விஞ்ஙான ரீதியான விளக்கங்களும் இருந்து வந்துள்ளன. இதை உங்கள் பதிவு மூலம் தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்.
Physics ம் நன்றாக தெரிந்து வைத்துள்ளீாகள். தொடரட்டும் உங்கள் வெற்றிநடை...

shanmugavel சொன்னது…

சுவாரஸ்யமான தகவலகள்.தொடருங்கள்.

S.T.Seelan (S.Thanigaseelan) சொன்னது…

தேவையான பதிவு சிந்திக்கவேண்டியது......

மிகவும் சுவாரசியமான தகவல்கள், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

தனிமரம் சொன்னது…

யாகம் செய்கிண்ற அக்கினிப்புகையில் எமது தலைவலி,தும்மல்,தலைப்பாரம்,என்பனநீங்குகின்றது.சமய ரீதியில் விஞ்ஞாணம் கலந்துள்ளது உண்மையே.அழகான எழுத்து நடை,நல்ல புகைப்பட இனைப்பு.தொடருங்கள்

நிரூபன் சொன்னது…

ஆலயங்களில் காது கிழிய பாடல்கள் போடுவதும் புனிதமான மந்திரம் என ஐயர் படிப்பதை சாக்கடை சந்து பொந்தெல்லாம் கேட்கும் வரை ஒலிக்கவிடுவதுமென நாமே எம்மை தரம் குறைத்துக் கொள்கிறோம். இவை பற்றி பலர் பலதை அறிந்திருப்பிர்கள் பகிருங்கள். இந்தப் பதிவை நான் இன்னும் முடிக்கவில்லை இது ஒரு பெரும் புயலுக்கு முந்திய தென்றல் தான்..//

அருமையான பதிவு சகோதரம், நீங்கள் மேற் கூறிய விடயங்கள் பற்றி வெகு விரைவில் ஒரு பதிவு நான் போடலாம் என்று நினைக்கிறேன். விடயப் பகிர்விற்காக நன்றிகள் சகோதரா.

ஆகுலன் சொன்னது…

"ஆலயங்களில் ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்"

இது நல்லா இருக்குது....
நன்றி

நிலாமதி சொன்னது…

பகிர்தலுக்கு நன்றி . பல் விடயங்கள் ஏற்றுக் கொள்ள கூடியவை.

Admin சொன்னது…

அருமையான தகவல் நன்றி சகோதரா..

Inuvaijurmayuran சொன்னது…

எங்களின் மத வழிபாட்டில் பின்பற்றப்படும் ஒவ்வொரு விடையமும் உண்மையிலஅர்த்தம் பொதிந்தவை. ஆனால் வழிகாட்டிகளான மதகுருமாரும் தம்மை தாமே கடவுள் என பிரகடனப்படுத்தி பாலியல் சேஷ்டை புரியும் ஆசாமிமாரும்தான் மக்களுக்கு மத வழிபாடு மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

http://inuvaijurmayuran.blogspot.com/2011/02/blog-post_18.html

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு நண்பரே . வாழ்த்துக்கள்.
கோவில்களில் கும்பாபிஷேகம் போன்ற தருணங்களில் தெரு முழுக்க 'பெரிய ஸ்பீக்கர்' கட்டி முழு அளவு சத்தத்தையும் கூட்டி மந்திரங்களை முழக்குவதை ஒலிபரப்பு செய்கிறார்கள். எல்லா மக்களையும், முதிர்ந்த வயதினர், பிணியாளர்கள், படிக்கும் குழந்தைகள் என அனைவரையும் பாடாய்ப்படுத்தி விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

Unknown சொன்னது…

கோயில்கள் கட்டுவது...
பெரும் மழை, வெள்ள காலங்களில் பாதுகாப்புத் தேடி ஒதுங்கத்தான்..
காலப் போக்கில் மக்கள் அதையே நம்பிக்கையுடன் வழிபடத் துவங்கிவிட்டனர்..
இதைப் பற்றி நிறைய ஆராய்ந்துள்ளேன், ஒரு பதிவு போடணும்...
(அதுக்கும் நேரம் வரணும், இதுதான் 'நம்பிக்கை')

vanathy சொன்னது…

நல்ல தகவல்கள் தானே. இதில் யாருக்கு வேறு கருத்துகள் இருக்கப் போவுது. தொடர்ந்து எழுதுங்கோ, சுதா.

மா.குருபரன் சொன்னது…

நல்லதொரு பதிவு சகோதரா.

பாலா சொன்னது…

அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் ஓட்டும்.

Jana சொன்னது…

நிண்ட நாட்களாக கோவிலுடன் இருந்தது இப்படி ஒரு பதிவை எழுத தூண்டிவிட்டதுபோல! நடக்கட்டும். "கிளிநொச்சி ஏன் இப்படி" என்ற ஒரு பதிவையும் சீக்கிரம் எதிர்பார்க்கின்றேன்.

தீபிகா சொன்னது…

சிறப்பான பதிவு..

பெயரில்லா சொன்னது…

இது போன்ற கட்டுரைகளை அடிக்கடி எழுதுங்க

I'm very sorry Sutha for the long delay.this post is really great.all are true.i welcome all your thoughts.

thanks

அருண் சொன்னது…

//கொடித்தம்பம் வைக்கப்பட்டதன் காரணம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பதற்குத் தானாம்.//
இத மட்டும் தான் ஏற்கனவே கேள்வி பட்டிருக்கேன்.மத்ததெல்லாம் நமக்கு புதுசு..

கலையன்பன் சொன்னது…

அறியப்படாத பல புதிய செய்திகள்!
தொடருங்கள் சகோதரரே!
-கலையன்பன்.

(இது பாடல் பற்றிய தேடல்!)
ராத்திரிப் பொழுது உன்னப் பாக்குற பொழுது...

Muruganandan M.K. சொன்னது…

"...வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே.."

கிண்டலுடன் உங்கள் விளக்கம் சுவைக்கிறது

FARHAN சொன்னது…

உங்களின் இந்த பதிவை முழுமையாக படித்தவுடம் கருதிடலாம்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைகிண்றீர்கள்?

Unknown சொன்னது…

கோவில்கள்
பல தகவல்கள் அருமை
நானும் உங்களை பின் தொடருகிறேன்
நல்ல பல அறிய விசயங்களை
கற்றுக்கொள்ள உதவுகிறது
உங்கள் தளம்
வாழ்த்துக்கள்

sury siva சொன்னது…

அக்காலத்திலே நமது நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலுமே கோவில்கள், குளங்கள், இவற்றை
எல்லாம் அமைப்பதும் சீர் அமைப்பதும் பொருளாதார வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருந்த்ன. மக்களுக்கு
அவர் தம் உடல் திறன், தனித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வேலை கொடுத்து, அதன் மூலம்
அவர்களுக்கு ஊதியத்தை அளித்து, அவர்கள் எல்லோரும் தனது உழைப்பிலே தான் ஊதியம் ஈட்டுகிறோம்
என்று ஒரு தன்னம்பிக்கையும், தன் நிறைவையும், சுய மரியாதையையும் ஏற்படுத்தின. ஒரு கோவில் கட்டுவதெனின்
எத்தனை விதம் விதமான பொறியாளர், கட்டிட வல்லுனர், சிற்பிகள், நிறம் பூசுபவர்கள், பல்வேறு விதமான‌
ஆயனர் பணியாளர்கள்இவர்களுக்கெல்லாம் அதற்கேற்ப கல்வி கற்றுக்கொடுக்க பள்ளிகள், அதன் ஆசிரியர்கள்,.
கரிகாலன் கட்டிய காவிரி அணை என்றால் எத்தனை பொறியாளர்களுக்கு, பணியாரள் அங்கு வேலை செய்திருப்பார்?
என எண்ணிப்பார்த்தால், அக்காலத்தே கோவில் குளங்கள் கட்டுவது, கோவில்களில் பெரிய மண்டபம் எழுப்பி
அதில் நாட்டியம், இசை நிகழ்ச்சிகளை நடத்துவது எல்லாமே அக்காலத்தில் ஒரு சமுதாய, பொருளாதார செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்து அதன் மூலம், மக்கள் வருவாயை பெருக்கி, அதில் ஒரு பங்கு வரியாகப்
பெற்று அதில் சட்டம், ஒழுங்கு, இவற்றை பரிபாலிப்பதே. கோவில் கட்டி முடித்தபின்னே, ஒரு விழா என்றால்,
அதில் பூசை செய்வோருக்கு மட்டுமா வருவாய் கிடைக்கிறது?

sury siva சொன்னது…

பூ விற்பவர்கள், நாதஸ்வரம் மத்தளம் வாசிப்பவர்கள்,
பல்லக்கு தூக்குபவர்க்ள், சமையற்கார்கள் , ஏன் ! அந்த நேரத்திலே குழுமும் குழந்தைச் செல்வங்களுக்காக‌
விளையாட்டுச் சாமான்களைத் தயார் செய்து கோவில் வாசலில் வைத்து வியாபாரம் செய்பவர்க்ள் எல்லோருக்குமே
ஒரு வணிக வாய்ப்பு கிடைக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்று அக்கால மக்கள் உளமாற நம்பி,
தமது தொழிலில் , இறையின் கோபத்துக்கு உள்ளாவோம் என்று தத்தம் மனச்சாட்சி சொல்லும் அடிப்படையில்
வாழ்ந்த காலங்கள் அவை.
contd.

sury siva சொன்னது…

நிற்க. கோவில்களின் கோபுரங்கள் ஏன் அத்துணை உயரம் !! துவஜஸ்தம்பங்கள் ஏன் அவ்வளவு உயரம் !!
மின்னல் உள்வாங்கியாக இருக்கலாம், அதே சமயம், மக்கள் அவ் வானளாவிய கோபுரங்களை ப்ப்பார்த்து,
தாமும் அதுபோல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என உயர்வான சிந்தனைக்ளைக் கொள்ளவேண்டும் எனவே.

திரு சிவகுமாரன் அவர்கள் வலை வழியே இன்று அதிகாலை உங்கள் பதிவிற்கு வந்தேன்.
இனி அடிக்கடி வரவேண்டுமென உங்கள் எழுத்தும் சிந்தனையும் அழைக்கின்றன.


சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com

பெயரில்லா சொன்னது…

நல்ல கருத்தாக்கம்.கொஞ்சமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.இன்னும் நிறைய விஷயங்களை தரவும்.

Sivatharisan சொன்னது…

அருமையான புதிய தகவலா இருக்கே

அன்பு நண்பன் சொன்னது…

nanre pakernthu kondamaiku,,,

சிவகுமாரன் சொன்னது…

கோயில்கள் சமுதாயக் கூடங்களாய் விளங்கின. தானியக் கிடங்குகளாய் இருந்தன. கலைக் கூடங்களாகவும், கவிதைகள் காவியங்கள் போன்றவற்றின் மேடைகளாகவும் இருந்தன. கோயில்கள் நம் தேசத்தின் பொக்கிசங்கள். அவை சக்தியின் பிறப்பிடங்கள். அமைதியின் இருப்பிடங்கள்.

பெயரில்லா சொன்னது…

மிகவும் நன்றாக உள்ளது சகோதரா ...நான் சமூக மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக பிரஜை......சற்று என் தளம் வந்து செல்லுங்கள் ..மிகவும் நன்றி ..

http://myblogonly4youth.blogspot.com/

கோவில்கள் ஆன்மீக சமூக விஞ்ஞான கலாச்சார முன்னேற்றங்களுகும்,உடல் நலத்திற்கும் உறுதுணை புரிகின்றன்.

Unknown சொன்னது…

அந்த காலத்தில எல்லாம் வீடுகள் கோயிலை விட உயரம் குறைவா இருந்தது. எந்த தெருவில் இருந்து பார்த்தாலும் கோயில் கோபுரம் தெரியுமம். இப்ப கோயிலைத் தேட வேண்டி இருக்கு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top