Monday, 28 February 2011

காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

வணக்கம் அன்புச் சகோதரங்களே சேமம் எப்படி ?
இன்று இரண்டு விடயப் பரப்பை உள்ளடக்கிச் சந்திக்கிறேன். சரி வாருங்கள் உள்ளே போவோம்.
     இலங்கையில் மிக விரைவாக பரவலடைந்து வரும் தொலைத் தொடர்பு வலையமைப்புக்கள் பல்வேறுபட்ட மாற்றங்களுடன் பலருக்கு அறிமுகமாகின்றது. நாங்கள் நேர்மையானவர்கள் அதிகமா வெட்டுறதில்லை என பீற்றிக் கொள்ளும் டயலக் வலையமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வு விடயத்துடன் சந்திக்கிறேன்.
     முதலாவது RINGING TONE சம்பந்தமான விடயம் ஒன்றைப் பார்ப்போம். இந்த வசதியானத முற்கொடுப்பனவு பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இவர்களது இணையத்தளம் போனால் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது அதாவது செயற்படுத்தற்கட்டணம் 50 ரூபாவும் மாதாந்த வாடகை 30 ரூபாவும் தான். அதைத் தான் படம் காட்டுகின்றது. இந்த விதி முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கு சேவைக்கட்டணமாக 50 ரூபா அறவிடப்படுகிறது. நம்மவர் பில்லை ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் வரிகளும் உள்ளடங்கலாக முற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 39 ரூபா, பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 98 ரூபா இது பலருக்குத் தெரியாது.
    சரி அது அப்படியே இருக்கட்டும் நீங்கள் ஒரு பாட்டை மாற்றினால் ஆரம்பத்திலேயே அந்த மாதத்திற்கான கட்டணம் அறவிடப்படும். அனால் முதல் இருந்த பாடல் செயலிழக்கமாட்டாது அதற்கான கட்டணமும் மாதம் மாதம் அறவிடப்படும். இது பற்றி எங்குமே அறிவுறுத்தப்படவில்லை.

அடுத்தது இணைய இணைப்புத் தொடர்பானது
   BROAD BAND இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கதே. நான் 2 ஜீபி தான் பாவிக்கிறேன். (என்னடா இவன் இந்தக் கொஞ்சமாய் வச்சிருக்கானே என்று நினைக்காதிங்க இவங்கட இணைப்பு வேகத்தில மாதம் முழுக்கப் பாவித்தாலும் இது முடியாது) இதற்கான கட்டணம் 690 ரூபாவாக இருந்தது ஆனால் இப்போது 490 ரூபாவாக மாற்றியுள்ளார்கள் சந்தோசமே அனால் எனது பில்லில் காசு குறையலா ஏன் எனக் கேட்டேன் அதற்கு தற்போது 3 ஜீபி 690 ஆகா மாற்றப்பட்டுள்ளதாம் அதனால் எனக்கு 3 ஜீபியாக மாற்றப்பட்டுள்ளதாம். அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?
   இந்த விறுத்தத்தில் அவர்களது இணைய வேகம் 7.2 mbps வரை போகுமாம். யாராவது கேட்டால் சிரிப்பாங்கள்.
   சகோதரங்களே அவதானமாக இருங்க இது எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்பதால் அறிய முடிந்தது உங்களுக்கும் இருக்கும் அதை மற்றவங்களுக்கும் பகிருங்க நாமும் நல்லாயிருக்கணும் எம்மைச் சுழ உள்ளவங்களும் நல்லாயிருக்கணும். நான் நல்லாயிருக்க வாக்கைப் போடுங்க மற்றவங்க நல்லாயிருக்க இதை எல்லோருக்கும் பகிருங்க..

தயவு செய்து இந்த பதிவர்களை பற்றி விபரம் தாருங்கள்.
மகாதேவன் V.K  – இவர் தகவல் துளிகள் என்னும் வலைத் தளத்தை கட்டார் எனும் இடத்தில் இருந்து எழுதி வந்தார் வாரத்துக்கு 5 மின்னஞ்சலாவது பாசமாய் போடுவார் திடீரென இவரது எந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

GSR - ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் இந்த வருடம் பிறந்ததற்கு இன்னும் பதிவே போடல புரியாத கிறுக்கல்கள் என்ற வலைத்தளத்தில் அருமையான கணணித் தகவல்களைப் பகிர்ந்து வந்தார். இப்போ எந்தத் தொடர்புமே இல்லை

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் பகிருங்கள்.


குறிப்பு - உறவுகளே இன்று முதல் எனது தளத்தின் பெயர் நான் ஆரம்பத்தில் வைக்க நினைத்தது போல !♔ மதியோடை ♔!என்றே மாற்றப்படுகிறது...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

62 comments:

நல்ல தரமான பதிவுகளை தந்து வருகிறீர்கள் அண்ணா.வளர்க உங்கள் பணி...............

Jana said...

ஐ...சுடுசோறு Just miss

Jana said...

நமக்கு தெரிந்த அண்ணர் ஒருவர் இதுவிடயமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார், அதில் தாங்களும் விரும்பினால் இணைந்துகொள்ளலாம். உண்மையாக

tamilvaasi said...

அருமையான பதிவு... மெயில் பார்க்கவும் மதி..

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

ஹஹஹா.அதுதான் நாம வந்திட்டமலே.நாம சுடு சோற்றை விட்டிடுவமோ..............

Unknown said...

பிட்கொடுப்பனவு நல்லம் என்று பொய் கடைசியில் இவ்வாறு அறுத்து விடுவார்கள் பாஸ்..என்ன பாஸ்...
அதனால தான் நாம எப்பவுமே முற் கொடுப்பனவு...
ஹிஹி

இன்று இலங்கையில் தொலைபேசி; இணையம் பாவிப்போரில் இவற்றைப் பற்றித் துருவித் துருவிப் பார்ப்போர், உங்கள் போல் வெகுசிலரே! இவர்களால் இதை வழங்குவோருக்கு எப்பாதிப்பும் இல்லை.
அத்துடன் பலரின் உறவினர் வெளிநாடுகளில் இருந்து ஸ்கைப்பில் பேசுவதற்காக மாத்திரம் இணையத் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்கள் இந்த பில் சமாச்சாரமெல்லாம் மேய நேரமில்லாதோர்.
அதனால் இது பற்றிக் கவலைப்படுவதில்லை.
கைத் தொலைபேசியும் இளைஞர்களின் கவச குண்டலம்; அதற்கு இறைப்பது அப்பா; அம்மா இல்லையோ
வேறு யாராவது அடுத்தவர் உழைப்பு, அதானால் இந்த சுறண்டல் பற்றித் தெரிந்தாலும் அவர்கள் அக்கறைப்படுவதில்லை.
இதைப் பற்றிச் சொன்னாலே பிடிக்காது. காசைக் கொடுத்து விட்டு கம் மென இரு. இது தான் அவர்கள்
கொள்கை!
நான் என் உறவுகளில் கணித்தது இவை; இன்னும் பல்லாயிரம் பேர் இதே மன நிலைதான்.
மாற்றம் வரும் எனும் நம்பிக்கை எனக்கில்லை.

தகவலுக்கு நன்றி..
அவர்களை தேடும் பணியில் தான்
நானும் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறேன்..

Unknown said...

அப்படியே யாதவன் - என்ற பதிவரின் வலைப்பூவை கண்டுபிடித்துக்கொடுக்கவும்..

Unknown said...

//இன்று இலங்கையில் தொலைபேசி; இணையம் பாவிப்போரில் இவற்றைப் பற்றித் துருவித் துருவிப் பார்ப்போர், உங்கள் போல் வெகுசிலரே! //


இந்த எண்ணிக்கை நிச்சயம் வெகுவிரைவில் அதிகரிக்கும்.

Unknown said...

அலைபேசி வழி இணையம் பரவலாக பயன்படுத்தப்படும் போது இன்னும் கட்டணம் குறையும்.
இந்தியாவிலும் முன்பு கட்டணம் மிக அதிகமாகவே இருந்தன..

நானும் அந்த இரண்டு பதிவர்களையும் தேடுகிறேன். நல்ல தகவல்களையும் தொழிற்நுட்ப பதிவுகளையும் போடுபவர்கள்! அவர்களின் கமெண்ட்களை கூட சமீபகாலமாக காணவில்லை!

பிளாக் டைட்டில் மாற்றமா? பிளாக்கின் ஓனர்..?

>>>ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் கடந்த டிசம்பர் 30 ம் திகதி தான் கடைசிப் பதிவு போட்டார்

கடைசிப்பதிவு போட்டார் என்பது அமங்கலமாக இருக்கு.. அவரது லேட்டஸ்ட் பதிவு என திருத்தவும்

என்னை மிரட்ற மாதிரியே அவங்களையும் மிரட்டுனீங்களோ என்னவோ?

இவனுங்க கொள்ளை அடிக்கிறானுங்கன்னு தெரியுது .. அதுவும் நான் 1000 mins பக்கேஜ் பாவிக்கிறேன் ..அதிலை தான் கொள்ளை கூட ..என்ன செய்றது ...காட்டுக்குள்ளையும் நல்ல சிக்னல் கிடைக்குது எண்ட ஒரே காரணத்துக்காக வைச்சிருக்கேன் ..
hehe :D

இங்கயும் சில தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கயாலருக்குத் தெரியாமலே அந்த சேவைக்கு இந்த சேவைக்கு என பணம் பிடுங்குவது நடந்து கொண்டுதான் இருக்கிறது .. ஆனா பட்டு வச்சா இப்படி போகுதான்னு தெரியல ..எனக்கு அப்படி அனுபவம் இல்லை ..

Unknown said...

இங்கியும் கொலையா கொல்றாங்க நண்பரே

Unknown said...

நாலு நாளு சிபி தளத்த தொடர்ந்து பாத்து இருப்பாங்களோன்னு டவுட்டு ஹி ஹி

SORRY SUTHA I COULDN'T WRITE IN TAMIL.

THIS POST WILL MAKE A GREAT ATTENTION AMONG THE PEOPLE.

THANKS FOR SHARING SUCH AS USEFUL POSTS......

ஏழைகளை பாதிக்கும் விஷயங்களை அரசு உடன நடவடிக்கை எடுக்க வேண்டும்..

அது யாருங்க இரண்டு பேர்...

/////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
வாழ்ந்து விட்டு போவோம்/////

விவரம் அறிய...

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

WHAT IS THE SLT DOING?

நல்லபதிவு.

Chitra said...

புதிய தலைப்பும் நல்லா இருக்குதுங்க... உங்கள் பதிவுலக நண்பர்களை, விரைவில் தொடர்பு கொள்ள வாழ்த்துக்கள்!

நல்ல பதிவு.

//நாமும் நல்லாயிருக்கணும் எம்மைச் சுழ உள்ளவங்களும் நல்லாயிருக்கணும். நான் நல்லாயிருக்க வாக்கைப் போடுங்க//
vaakku pottu vidukiren nanpare.. :)

நண்பரே , இந்தியாவிலும் , கொள்ளை கொள்ளைதான், தொலைதொடர்பு துறையில் அனுமதி குடுக்குற இடத்தில ஆரம்பமாகுது அப்படியே மொத்தமா கடைசில ஈனா வானா மக்கா தானே , இவனுங்கள யாரு கேக்கறது ......... எல்லாம் கூட்டு களவாளி பாய புள்ளைங்க.........

நண்பரே உங்களை இந்த பதிவை வேறொரு தளத்திலும் பார்த்தேன். அது உங்கள் தளமா? இந்த சுட்டியை அழுத்துங்க

jagadeesh said...

CONDITIONS APPLY ன்னு போட்டிருக்கும், அதப் படிக்கலையா நீங்க?

நல்ல பதிவு

இன்று உங்கள் வலைப்பக்கம் வந்தேன். நல்ல முயற்சி ஒன்றை எடுத்துளீர்கள். இங்கும் பல நிறுவனங்கள் கொள்ளை அடிக்கத்தான் செய்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். விழிப்புணர்வு வரும்.

பாரத்... பாரதி... said...
அப்படியே யாதவன் - என்ற பதிவரின் வலைப்பூவை கண்டுபிடித்துக்கொடுக்கவும்.//

http://kavikilavan.blogspot.com/

வணக்கம் சகோதரம், இது தான் யாதவனின் வலைப்பூ.

ஓட்ட வட நாராயணன் said...
WHAT IS THE SLT DOING?//

வணக்கம் சகோதரம் மதி சுதா, மிக மிக அருமையான சமுதாய முன்னேற்றம் சார் பதிவு. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். SLT கொள்ளை அடிக்கிறாங்களோ இல்லையோ ஒரு புளொக்கை திறக்க நாலு நிமிசத்திற்கு மேலை எடுக்கிறாங்கள். அந்தளவு சிலோ. SLT பற்றி ஆராய்ந்து தான் சொல்ல வேணும். வெகு விரைவில் எயார் டெல்லிற்கு மாறலாம் என தீர்மானித்துள்ளேன். குறைந்த காசில், நிறைந்த சேவை தரும் Broad band ஏதாவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் சொல்லுங்கோ. அதுக்கும் மாறிப் பார்ப்போம்.

மதியோடை-அழகான பெயர் சகோதரா! தொடர்ந்து நல்ல பதிவுகள் தாருங்கள்.வாழ்த்துக்கள்

kajan said...

அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?
என குறிப்பிட்டிருந்தீர்கள்
நீங்கள் உங்களுடைய PACKAGE ஐ மாற்றும் போது IBB490 அல்லது IBB690 போன்றுதான் டைப் செய்து SMS செய்வீர்கள்!!!!!
எனவே நீங்கள் கேட்பது 690 இற்கு இணைய இணைப்பு கொடு என்றுதான் கேட்கிறீர்கள்

{அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?}


இந்த விறுத்தத்தில் அவர்களது இணைய வேகம் 7.2 mbps வரை போகுமாம். யாராவது கேட்டால் சிரிப்பாங்கள்.
என குறிப்பிட்டிருந்தீர்கள்
DIALOG சொல்லுவது {Theoretical – Upload/Download Bandwidth
1.8 Mbps (Upload)
7.2 Mbps (Download)

Difference between theoretical bandwidth and data transfer speeds could differ due to below

* Terminal – capacity of the HSPA modem used and hardware capabilities of the computer
* Coverage – depending on the type of network coverage available at the time of accessing the internet
* Loading – Amount of traffic handled by the base station at a given time
* Internet site

Average speed 1 Mbps}

அல்லது இங்கு செல்லவும்

http://www.dialog.lk/personal/broadband/hspa/bandwidth-speeds/speed/

சராசரி வேகம் 1Mbps என குறிப்பிட்டுள்ளார்கள்
எனக்கு 1Mbps வருகிறது தேவை எனின் சொல்லுங்கள் அதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும்.

kajan said...

dialog இனால் போன மாதம்தான் 490 ரூபா package அறிமுகப்படுத்தப்பட்டது.(அதை நீங்கள் செயற்படுத்த 4/January/2011 இற்கு முன்னர் IBB490 என sms செய்திருக்க வேண்டும்.)
எனவே அதற்கான பில் 5/January/2011
இன் பின்னர்தான் சேர்க்கப்படும்.
அப்படி இருக்கும்போது பில் இல் உங்களால் எவ்வாறுதான் பிழை கூற முடிந்ததோ தெரியவில்லை!

என்னைப் பொறுத்தவரை இலாபமான மொபைல்பிரோட்பன்ட் எனின் அது DIALOG ஆக தான் இருக்கும்.

பின்குறிப்பு: நானும் டயலாக் வாடிக்கையாளர் தான்.

நான் டயலொக் பிற்கொடுப்பனவு கைத்தொலைபேசி இணைப்பு பயன்படுத்துகிறேன். ரிங்இன்டோன் சேவைக்கு மாதாந்தம் 50 ரூபாய் மற்றும் வரிகள் தான் அறவிடுகிறார்கள். பாடல் ஒன்றுக்கு மாதாந்தம் 30 ரூபாய் அறவிடுகிறார்கள். பாடலொன்றைத் தெரியும் போது தன்னிச்சையாக “ஒடோ ரீனியு” அக்டிவ் ஆகும், நீங்கள் ஒன்லைன் மூலம் அல்லது உங்களுக்கு வந்த கன்ஃபர்மேஷன் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டபடி அதை நிறுத்தலாம், அதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு மாசமும் அந்தப் பாடல் தன்னிச்சையாக ரினியு ஆகும். “ஒடோ ரினியு” அக்டிவ் ஆகியது பற்றி நீங்கள் பாடலை டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டயலொக் இணையவேகம் பற்றி கஜன் அளித்துள்ள விளக்கம் சரி. அவர்கள் இணைய வேகம் போட்டுவிட்டு கீழே * அடையாளம் போட்டு குறிப்பிட்டிருப்பார்கள். நிச்சயம் இலங்கையில் இன்று 7 எம்பிபிஎஸ் எல்லாம் சாத்தியமில்லை.

// பிற்கொடுப்பனவு வாடிக்கையாளருக்கான கட்டணம் 98 ரூபா இது பலருக்குத் தெரியாது.

சநானும் இது பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் என்னுடைய பில்லை செக் செய்வதில்லை!

நண்பரே பெயர் மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்.. அப்படியே மருமகள் மதிவதனிக்கும் வாழ்த்துக்கள்...

சகோதரம் கஜன் அவர்களே நீங்கள் கூறிய விளக்கத்திற்கு மிக்க நன்றி.... தயவு செய்து ஒரு பாமரனின் இடத்தில் இருந்து பாருங்கள் இன்றும் கூட எனது நண்பர்களில் 10 மேற்பட்டோர் விளக்கமின்றியே இருக்கிறார்கள்.... இதை விட HUTCH செய்வது மிக கேவலமான செயற்பாடு தயவு செய்து அதற்கும் முடிந்தால் எனக்கு தெளிவு படுத்துங்கள்... தொடுப்பு கீழே தருகிறேன்.... முடிந்தால் எனது அடுத்த பதிவு ஒன்றும் டயலக்கை பற்றித் தான் (ஒரு மாதத்தில் 2 ஜீபி பக்கேஜ்ஜிற்கு 8000 ரூபா பில் வந்த கதை) அதையும் பார்த்த விளக்க முடியுமா ?

வருகைக்கும் உதவிக்கும் மிக்க நன்றி சகோதரம்....

HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.
http://mathisutha.blogspot.com/2010/12/hutch.html

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அசோக்....

எனது நண்பன் ஒருவன் 4 பாடல்களுக்கு காசு கட்டிக் கொண்டிருக்கிறான். எஸ்எம்எஸ் ஐ எடுத்தக் காட்டினேன். “அட இது இதுக்குத் தான் வந்ததா ?” என்கிறான்....

vanathy said...

nalla pathivu.

@ ம.தி.சுதா

பலருக்கு இந்த விளக்கம் இல்லாதது கவலைக்குரியது. இது போன்ற விஷயங்கள் எல்லாம் தட்டுங்கள் திறக்கப்படும் ரகம் தான். நீங்கள் கேட்டால் மட்டுமே இவை பற்றிய “மேலதிக” விளக்கங்கள் தரப்படும். பக்கேஜ்கள் தெரிவுசெய்யும் போது மெத்தக்கவனம் தேவை. சிலவேளைகளில் எங்கள் அவசரம் தான் எங்களுக்கு பாதிப்பாகிவிடுகிறது. அந்த நண்பரை ஒன்லைனில் சென்று மற்ற பாடல்களை டிலீட் செய்யச் சொல்லுங்கள் அல்லது “ஒடோ ரினியு” வை ஓஃவ் செய்யச் சொல்லுங்கள்.

Ashwin-WIN said...

//அட நாதரிப் பய புள்ளைகளா நான் உங்களிட்டை 690 ற்கு இணைய இணைப்பு கொடு என்று சொன்னேனா ? அல்லது 2 ஜீபி கொடு என்று சொன்னேனா ?//
அருமைய்யா..
கட்டாயம் பதியவேண்டிய பதிவு சுதா. இந்த டயலாக் காரங்கள் புளைக்குறதே இந்த நாறப்புளைப்புதானே..

விழிப்புணவு இடுகை அருமை மதிசுதா.

//அப்படியே யாதவன் - என்ற பதிவரின் வலைப்பூவை கண்டுபிடித்துக்கொடுக்கவும்.//

பாரதி சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..

மதியோடை அருமை..

FARHAN said...

மக்களுக்கு தெரியாமல் அவர்களை சுரண்டுவதற்கு தொலைதொடர்பு நிறுவனங்களே முன்னிலை வகிக்கின்றது .இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராவும் இதே நிலைமைதான் இங்கே கத்தாரில் சமீபத்தில் மாதம் நூறு ரியால் இலங்கை காசிற்கு 3000/-என்று சொல்லி 2gb விளம்பரம் செய்தார்கள் நானும் நம்பி அதனை எடுத்தேன் கடைசியில் முதல் மாத பிள்ளே ஆப்பு வைத்துவிட்டார்கள் வந்த பில்லோ 500 ரியல் இலங்கை காசிற்கு 15000/-ரூபா

சிறப்பான பதிவுக்கு நன்றி நண்பரே :)

///GSR - ஞானசேகரன் என்ற இவர் என்னில் மிகவும் பாசமுடைய ஒருவர் இந்த வருடம் பிறந்ததற்கு இன்னும் பதிவே போடல புரியாத கிறுக்கல்கள் என்ற வலைத்தளத்தில் அருமையான கணணித் தகவல்களைப் பகிர்ந்து வந்தார். இப்போ எந்தத் தொடர்புமே இல்லை//

அன்பிற்குரிய நண்பரும் எனது பதிவுலக குருவுமான மதிப்பிற்குரிய திரு ஜிஎஸ்ஆர் அவர்களை சமீபத்தில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன் இப்போது அதிக வேலைப்பளுவின் காரணமாக இணைய பக்கம் வரமுடிவதில்லை என்று கூறினார்...

விரைவில் அவர் வேலைப்பளு குறைந்தவுடன் புது உற்சாகத்தோடு மீண்டும் பதிவுலகத்திற்கு வந்து கணினி தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்... :))

Kousalya Raj said...

அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். பகிர்வுக்கு நன்றி.

புது பெயர் நன்றாக இருக்கிறது.

Prapa said...

இதுக்கு முதலும் இன்னுமொரு தொலைபேசி சேவை வழங்குனரை பற்றியும் அழகாக் பேசியிருந்தோம் என மதி.....அருமை.

அதுசரி நானும் தாண்ட இன்னும் பதிவு போடல...என்னையும் தேடன் டா ,,, ஹீ ஹி .

அருமையான பதிவு.
புது பெயர் நன்றாக இருக்கிறது.

 நீங்கள் சுட்டிக்காட்டியவிசயம் கருத்தில் கொள்ளவேண்டியவை சாமனிய மத்தியதரமக்களின் வருவாயில் அதிக சுரண்டல் இது .மதியோடை நல்ல விசயங்களை பகிறட்டும்

நானும் வந்துட்டேன்..

நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு தலைவரே...மறந்துட்டீங்களா என்ன?

ஹேமா said...

மதி....வாழ்த்துகள் தொடருங்கள் முந்தைய உற்சாகத்தோடு !

Unknown said...

puthu peyarum arumaiyaka ullathu

Kanya said...

தரமான பதிவு

Anonymous said...

சின்ன மீனை போட்டு பெரிய மீன் பிடிக்கும் செயல்.இப்படி நிறைய உள்ளன.

//////சராசரி வேகம் 1Mbps என குறிப்பிட்டுள்ளார்கள்
எனக்கு 1Mbps வருகிறது தேவை எனின் சொல்லுங்கள் அதையும் என்னால் உறுதிப்படுத்த முடியும்////

சகோதரம் நீங்க எந்த இடத்திலிருந்த பாவிக்கிறிர்கள் என சொல்லலியே.. கட்டாயம் உறுதிப்படுத்துங்கள் காரணம் இங்கே adsl லைனிலேயே அந்தளவு வருவதில்லை....

Vengatesh TR said...

// அன்பிற்குரிய நண்பரும் எனது பதிவுலக குருவுமான மதிப்பிற்குரிய திரு ஜிஎஸ்ஆர் அவர்களை சமீபத்தில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன் இப்போது அதிக வேலைப்பளுவின் காரணமாக இணைய பக்கம் வரமுடிவதில்லை என்று கூறினார்...

// விரைவில் அவர் வேலைப்பளு குறைந்தவுடன் புது உற்சாகத்தோடு மீண்டும் பதிவுலகத்திற்கு வந்து கணினி தகவல்களை பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்... :))

.நானும் அவர்களை, தேடுபர்வகளில், ஒருவன், நண்பரே !

.'மதியோடை' என்றால், என்ன பொருள், என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

சிகப்பு மனிதன் said...

மிக்க நன்றி சகோதரம் மாணவனும் கூறியிருந்தார்...

எனது தலை (முதல்) எழுத்தைக் கொண்டே அந்தப் பெயரை இட்டுள்ளேன்.. முதலே தெரிந்தெடுத்த பெயர் ஆனால் உப தலைப்பை மாறி தலைப்பில் இட்டுவிட்டதால் நனைவோமா ? என இருந்தது...

Unknown said...

கோடி நன்றிகள் சகோதரம் தங்களின் அன்புக்கு! மீண்டும் தொடர்வோம்.
இங்கே கருத்துக்களை பகிர்ந்த உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top