Friday, 21 January 2011

காதல் கற்பித்த தமிழ் பாடம்


உன்னை எனக்கு பிடிக்கவில்லை
என்று நீ பறைந்திருந்தால்
என் காதலுக்கது
முற்றுப் புள்ளியாகியிருக்கும்.......


என் காதலை சொன்ன கணம்
நீ எதிர் பார்க்கா கேள்வியை
நான் கேட்பதாய் சொன்னாயே
என் காதலுக்கது ஆச்சர்யக்குறி !!!!!!!!!!வீட்டார் அறிந்தால்
வீண் பிரச்சனை என்றாயே
அதற்கிட்டேன் பல
""""""""மேற்கோற் குறி""""""""


என் குணம் தெரிந்த
கொப்பனும் செங்கொடி தூக்கினானே
அப்போ என் நெஞ்சில்
பல கேள்விக்குறி ????????


இலட்சியம் ஒன்றுக்காய்
காத்திருக்கிறேன் - என
மழுப்பினாயே
அப்பொதும் நான் இட்டுக் கொண்டேன்
பல கமாக்களை ,,,,,,,,,,,


என்றும் நீயென் உயிரெழுத்து
மாற்றி எழுதாதே என் தலையெழுத்தை.
குறிப்பு - என் அன்பு உறவுகளுக்கு அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு என்னால் பதிவு எழுத முடியாத நிலையில் உள்ளேன் ஆனால் முடிந்தவரை வாசிப்பை குறைக்கமாட்டேன். யாரும் தேடவேண்டாம் எம் உறவு என்றும் தொடரும்.....

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

69 comments:

Intresting kavidhai.
Seekiram vanga anna

முற்றுப்புள்ளி இல்லாது தொடரட்டும் உங்கள் கவிதை ஆர்வம்..

,கமாப்புள்ளியாய் தொடரட்டும் தங்களின் கவிதைகளின் மெருகேற்றம். ”கவிதை அருமை” நண்பரே..!!

கவிதை அருமை....விரைவில் வர வாழ்த்துகள்..


http://sivagnanam-janakan.blogspot.com/2011/01/blog-post_21.html

குறியீடுக்கவிதை நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

அருமை அருமை

ஜூப்பர்...குறியீடுகளின் அர்த்தத்தை கவிதை மூலம் சொன்ன வாத்தியார் நீங்கள்..

ஹா ஹா ஹா அட்டகாசமா இருக்கு...

KANA VARO said...

ஷோ! பிரச்சனை இப்ப "குறி" யில தான்.

Jana said...

கவிதையில் தமிழ்க்குறிகள்..யதார்த்தம் ஆனால் இறுதியில் உங்கள் குறிப்பு முகத்தில் ஒரு ஏக்கக்குறியை வைத்துவிட்டதே!! நீண்டநாட்கள் எடுக்காமல் சீக்கிரம் திரும்பிடனும் சரியா..

Vinu said...

கவிதை நல்லது

போயிட்டு சாவகாசம வாங்க..... அப்பாடா லீவு விட்டுட்டாங்கபா

NIZAMUDEEN said...

விரைவில் வந்து இதுபோன்ற சுவைமிகு
படைப்புக்களை நிறைய தாருங்கள்.

அடடே

மொத கமெண்டு (உங்களுக்கில்ல எனக்கு)

கவிதை சூப்பர்

நம்ம ஏரியாப் பக்கமும் கொஞ்சம் வாங்க தல

varagan said...

வாழ்த்துக்கள்.

கவிதை அருமை.

என்றும் அன்புடன்

வராகன்.

கவிதை நடை அழகாய் இருக்கிறது ..பாராட்டுக்கள. ......

விடுமுறை எடுத்து கொண்டு மீண்டும் வாருங்கள காத்திருக்கிறோம். . ........

Chitra said...

எல்லாம் நல்ல செய்தியாகவே இருக்கட்டும். விரைவில் வாருங்கள்!

வாடா தம்பி வா பானைக்குள் இருந்தால் தான் அகபேக்க வரும் எண்டுவாங்கள் ,
உண்ட பானைக்க காதலும் கிடந்தது இருக்கு இவ்வளவுநாளும் , எழுது எழுது இன்னும் எழுது

:))

கவிதைகள் அனைத்தும் அருமை சகோதரா..

அருமை சுதா
ம்ம் அப்புறம் சீக்கிரம் விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பி விடுங்கள் நீங்கள் இல்லாத பதிவுலகம் சுறு சுறுப்பாய் இருக்கும் என தோன்றவில்லை.

”கவிதை அருமை”
..பாராட்டுக்கள.

தமிழிலில் இவ்வளவு குறியீடு உண்டா? இப்பதான் தெரியிது. ஹிஹிஹி
வழங்கியவர்:http://jiyathahamed.blogspot.com/

ஜீ... said...

விரைவில் திரும்பி வாங்க! :-)

தமிழ்க்குறிய்யீட்ட்டை வைத்தே கவிதைகள் ம் ம் கலக்கல்தான்

உங்க சவுகர்யத்துக்கு எல்லாம் லீவ் குடுக்க முடியாது..ஹ ஹா

வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

அருமை

சீக்கிரம் வாங்க சகோதரா!! :)
தமிழின் நிறுத்தற்குறிகளைக் காதல் பார்வையில் பார்ப்பது எதனுடைய "அறிகுறி"??
அருமை நண்பா.... சீக்கிரம் மீண்டும் வந்து பயணத்தைத் தொடருங்கள் :)

ம்ம்ம். தொடரட்டும் நண்பரே

அசத்தல் கவி வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல

கவிதை அருமை.

Bavan said...

:))

அருமையான கவிதைங்க

raji said...

அருமை

Nesan said...

இலட்சியங்களை அடையும் வரை காத்திருக்குமா உங்கள் வாலிபம் என்று கேட்டாளா தலையொழுத்தை  மாற்றும் மங்கை.

Lakshmi said...

குறியீடுகளை வைத்தே இப்படி ஒரு சூப்பர் கவிதையா? கலக்கிட்டீங்க நண் பா. சீக்கிரமே திரும்பிவர வாழ்த்துக்கள்.

>>> நீங்கதானா அது! கண்டிப்பா ஒரு நாள் இங்க வந்து சுடு சோறு சாப்புட ட்ரை பண்றேன்.

// என் குணம் தெரிந்த
கொப்பனும் செங்கொடி தூக்கினானே//

>>>அவன் எதுக்கு எமோஷன் ஆகிறான். ராஸ்கோல்!
You continue…

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

கவிதை அருமை.
சீக்கிரமே திரும்பிவர வாழ்த்துக்கள்.

Lingeswaran said...

சுதாவுக்கும் காதல் நோய் வந்துவிட்டது....! பெண்கள் ரொம்பத்தான் வாட விடுகிறார்கள்....லேட்டஸ்டா வாங்க நண்பரே..

vanathy said...

well written, Bro.

Riyas said...

அழகாயிருக்கு கவிதை

கவிதை அனைத்தும் சூப்பர் விரைவில் மீண்டும் வர வாழ்த்துக்கள்...

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9399.html

Anonymous said...

சில நேரங்களில்... கேள்விக்குறி(?) நிமிர்ந்து ஆச்சரியக்குறி(!).அந்த வகை இந்த கவிதை...
ஆனால்... மழை வரும் அறிகுறி ஏதும் இல்லை.

roshaniee said...

nice

வணக்கம் சகோதரம்,இலக்கணமும் காதலும் இணைந்தே உள்ளது என்னபதனை தங்களின் கவிதையினூடாக கண்டேன். காதலை இலக்கியத்தினுள் தாங்கள் உட்புகுத்திய விதமும் அருமை. நானும் சிறு வயதில் இப்படி ஒரு இலக்கணத் தொடர்களை வைத்து ஒரு கவிதை எழுதினேன், தங்களின் கவிதை தான் அதனையும் நினைவுபடுத்தியது.

என்றும் நீயென் உயிரெழுத்து
மாற்றி எழுதாதே என் தலையெழுத்தை.//

இக் கவிதைக்கு அழகு சேர்க்கும் வரிகளாகவும் கவிதை உணர்வின் உயிர்நாடியாகவும் இருப்பது இவ் வரிகள் தான். அருமை அருமை, ரசித்தேன். சகோதரன் யாதவன் சொன்னது போல பானைக்குள் இருந்தால் தான் அகப்பைக்குள் வரும். தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்(காதலில்).

வெகு விரைவில் அடுத்தபதிவுடன் வருவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

நல்ல நறுக்கு பாராட்டுகள் . சகோதரி சித்ரா அவங்க மட்டும் தனியாக வாழ்த்தி அனுப்பிவைக்கிறார்கள் நாமும் வாழ்த்துவோம் வெற்றியடைக .

என் அன்பு உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.. இத்தனை பேருடைய அன்புக்கு பாத்திரமானவன் என நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது...

தப்பாக நினைச்சிடாதிங்க இது 2007 ல் ஒரு பத்திரிகைக்கு எழுதியது கவிதைதானுங்கோ... இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு அதா கொஞ்சம் ஓவராயில்லை... நன்றி வெகுவிரைவில் ஒரு புதுப் பதிவுடன் சந்திக்கிறேன்...

//என் அன்பு உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.. இத்தனை பேருடைய அன்புக்கு பாத்திரமானவன் என நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது...//


உங்களிடம் சொல்லாத அன்பும் ஏராளம் சகோ...

//நீண்டநாட்கள் எடுக்காமல் சீக்கிரம் திரும்பிடனும் சரியா..
//

என்ன இப்படி கலக்குறீங்க

//உன்னை எனக்கு பிடிக்கவில்லை
என்று நீ பறைந்திருந்தால்
என் காதலுக்கது
முற்றுப் புள்ளியாகியிருக்கும்//

முற்றுப்புள்ளி அருகில் நீயும் சின்னப் புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் தொடர்ந்து விடும் . ஹி ஹி .. சினிமா பாட்டுங்க ..

ஆதவா said...

மிக நன்றாக இருக்கிறது.
நிறுத்தற்குறிகளைக் கொண்டே கவிதை புனைவது ஒரு சிறப்பான இடத்தை அடைவதற்குண்டான வழி!
மொத்த வாழ்க்கையும் “குறி”களாக மாறிப்போனதை உணர்ந்தேன்.
நன்று

Srini said...

" குறி “ ப்பிட்டுச்சொல்றதுக்கு என்ன அவ்ளோ சாதாரண ஆளா நீங்க ?
சூப்பர்...”

நன்றாகவுள்ளது

sivatharisan said...

அருமை அருமை

தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன்

கவிதையிலும் கலக்குறீங்க சகா

அருமை அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Rajeswari said...

தொடர்பெழுத்தாய் தொடருங்கள்...

இடையெழுத்தாய் இளைபாறிவிட்டு.

எப்ப திரும்பி வாறதா உத்தேசம்?

FARHAN said...

பாஸ் எப்ப வருவீங்க ?

Lingeswaran said...

தலைவா...சீக்கிரம் வாங்க...

ரொம்ப நன்றாக இருக்கிறது அண்ணா.........

அருமையா இருக்குங்க உங்க கவிதை.. எல்லா குறியீடுகளையும் வைத்தே அருமையான கவிதை எழுதிட்டீங்க. பகிர்வுக்கு நன்றி.

தமிழ் நகைச்சுவைகளுக்கு https://valaithamizhjokes.blogspot.in/

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top