Sunday, 16 January 2011

தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

                   தமிழின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த ழகரம் தான் என்பது எல்லோருக்குமே தெரியும் இது பற்றி எனது தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1 என்ற பதிவில் முன்னர் எழுதியிருந்தேன்.
                   இதைப் பற்றி விவாதிப்பதற்கோ வாதிடுவதற்கோ நான் ஒரு பண்டிதனில்லை ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்ட ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் கூற விளைகிறேன்.
                   எம்மில் பலர் பலதை செய்கிறோம் அனால் ஏன் எனக் கோட்டால் யாரோ சொன்னார்கள் நாமும் செய்கிறோம் என்று தான் பதில் வரும் நானும் நண்பரும் பலரிடம் கேட்டு பல மாதிரியும் அடிபட்டும் பார்த்தோம் யாருடைய மூளைக்கும் எட்டவே இல்லை அதனால் தான் தங்களைக் கேட்கிறேன் எமது ழகரம் ஆனாது வேற்று மொழிக்காரருக்கு ஒரு பிரச்சனையான உச்சரிப்பிற்குரிய எழுத்துத் தான் அதையே நாம ஆங்கில உச்சரிப்புக்காக மாற்றி எழுதுகையில் தான் சிக்கலே வருகிறது.
           எல்லோரும் (நான் உட்பட) ழகரத்திற்கு ஆங்கிலத்தில் ZH ஐப் பாவிக்கிறோம். இந்தப் பழக்கம் எப்படி அரம்பித்தது என்று யாராச்சும் சொல்லுங்களேன்.
           சென்ற வாரம் GOOGLE EARTH ல் பார்த்த போது யாரோ ஒருவர் YAZHPANAM என போட்டிருப்பதைக் கண்டேன் போட்டவர் எமது ஊரின் பெயரை உலகறிய வைக்கும் நல்ல மனதுடன் தான் இட்டிருக்கிறார் அவருக்கு நன்றி அனால் இதையே ஒரு வெளி நாட்டவன் பார்த்தால் எப்படி வாசிப்பான் text to speech ல் விட்டுப் பார்த்தேன் யசுப்பாணம் என்கிறது 
        இது மட்டமல்ல இப்போது கூட அங்கிலத்தில் (குறுவட்டில்) உள்ள ஆயுத எழுத்து, காதலில் விழந்தேன் போன்ற திரைப்படப் பெயர்களை பலருக்கு வாசிக்கத் தெரியாது.
          ஆனால் இங்குள்ள சிக்கல் தெரிகிறது லகரத்திற்கத் தான் L பாவிப்பதால் அங்கே ஒரு பிரச்சனையும் இல்லை அப்படி வைத்துக் கொண்டால் ளகரம் இதே பிரச்சனையை கொடுக்கம் தானே ஏன் நம்மவர் அதற்கு உருவாக்கவில்லை. 
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள் முடிந்தால் தமிழ்மணம் இன்டலியில் ஒரு வாக்கிட்டுப் போங்களேன்

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

45 comments:

Jana said...

உங்கள் கதை அப்படி..என் கதை..நான் பெரிதும் தவறுவிடும் எழுத்துக்கள், இந்த "ழ" கர, "ள"கர மயக்கங்களே.
உச்சரிப்பு மட்டும் பக்கவா வரும்.

Jana said...

ஐ... வெகு நாளுக்கு அப்புறம் சுடுசோறுக்கே சுடுசோறு குடுத்திட்டேன்.

தம்பி உண்ட தமிழ் காதலுக்கு அளவே இல்ல
எனக்கு ஜோசிக்க பண்டித மூளை இல்ல
நான் ஒரு பாமரன்

எனக்கும் ரொம்ப நாளாவே இதே கேள்வி ;)

read the following :

http://en.wikipedia.org/wiki/Retroflex_consonant

http://en.wikipedia.org/wiki/Retroflex_approximant

as i'm @ wrk,i'll wrt latr.

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சின்ன வயதில் ஞாயிறு ரெண்டரை மணிக்கு டிவி முன்னால் ஓடி போய் நின்று "பொன் மாலை பொசுது" என வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவைப் பார்க்கும் போது அதுதான் ஞாபகம் வருகிறது

சரியான கேள்வி. மன்னிக்கவும், பதில் சொல்லத் தெரியவில்லை.
இலங்கை மழை நிலவரம் பற்றி ஒரு பதிவெழுத முடியுமா சகோ?

//காதலில் விழந்தேன்//
நீங்கள் காதலில் விழுந்ததாலோ என்னவோ எழுத்துக்கள், சரியாக விழவில்லை.

கருத்துச் சொல்லும் அளவுக்கு அறிவில்லை..

இது எல்லோரையும் சென்றடைய வாக்கிட்டுள்ளேன்.

"ழ"கரம் தமிழ் கொடுத்த வரம் ஆழ்துழாது மேலுழுது செல்வதையே நம்மவர்கள் கடைபிடிப்பதால் வந்த விளைவு என்று தோன்றுகிறது என்னுள் சகோ ................

ழ வை zh என குறிப்பிடுவது பயன்படுத்த பயன்படுத்த பழகிவிடும்..

ஆங்கில சி எழுத்து சில நேரங்களில் எஸ் என்ற ஓசையையும் சில நேரங்களில் க என்ற ஓசையையும் தரும்.. அது பழகி விட்டதல்லவா..
அதே போல zh வை ழ என உச்சரிக்க பழகிவிடுவார்கள்

ஏன் zh ழ வாக உச்சரிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கம் -

http://en.wikipedia.org/wiki/Retroflex_consonant

http://en.wikipedia.org/wiki/Retroflex_approximant

நல்ல கேள்விதான் அண்ணா......ஆனால் பதில் சொல்லும் அளவிற்கு அறிவில் நான் சிறந்தவனல்ல....

இருப்பினும் இவை பழக்கத்தில் வந்தால் எல்லாம் சரி வரும் என நான் நினைக்கின்றேன்...!


இக் கேள்விக்கான பதில்களுக்காக உங்களுடன் நானும் காத்திருக்கின்றேன்...

vanathy said...

yaravathu pathil sollungal. please????

NIZAMUDEEN said...

வாக்கிட்டுவிட்டேன்;
யாரும் பதில் த(வ)ந்தால் படித்துக்
கொள்கிறேன்.

jee said...

--அதே போல zh வை ழ என உச்சரிக்க பழகிவிடுவார்கள்--
பார்வையாளனுக்கு தம்பி சுதா கேட்ட விடயம் எப்போதாவது ழ க்கு பதிலாக நாம் zh பாவிக்கும் போது எம்மால் அதிகம் கவனம் கொடுக்கப்பட்டு விசேடமாக உச்சரிக்கப்பட வேண்டும் என நினைத்த விடையம் (எல்ல ஆங்கிலம் வாசிப்பவர்களும் Phonetics தெரியாது)இங்கு தலைகீழாக மாறிவிடுகிறது. நாம் கொடுக்கும் இவ் zh 10% மானவர்களுக்கு மட்டுமே சரியாக உச்சரிக்க முடியும்.மீதி 90% பேர் எப்படி .......
இவர்களிடம் வாழைப்பழம் உச்சரிக்கப்பட்டால்...............

இக் கேள்வி மூலம் பலபேர் சந்தேகம் தீரும் தம்பி

நன்றி

இப்போதுதான் வேலை முடித்து வந்தேன் சுதா! உங்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல எனக்கு பல பக்கங்கள் வேண்டும்! முதலில் ' ழ ' என்ற எழுத்துக்கு ' ZH ' பாவிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது தமிழ் மொழியில் சிறப்பு எழுத்தாகிய ' ழ ' வினது சரியான உச்சரிப்பை ' ZH' தராது!ஆமாம் வேற்று மொழிக்காரர் ' ழ' வை எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க, நாம் எப்படி உச்சரிக்கிறோம் என்பதே முக்கியமானது! எனக்குத் தெரிந்து இலங்கையில் யாருமே இதனை சரியாக உச்சரிப்பதில்லை! எத்தனையோ தமிழ் அறிஞர்களுடனும், வானொலித் துறை சார்ந்தவர்களுடனும் பழகி இருக்கிறேன். யாரும் ' ழ ' வை சரியாக உச்சரித்து நான் கேட்கவில்லை! ' பழம் ' என்பதையும் ' வளம் ' என்பதையும் ஒரே மாதிரியாகவே உச்சரிக்கிறார்கள்!சில காலங்களுக்கு முன்னர், வானொலியில் புதுமையைப் புகுத்த விரும்பிய ஒரு குழுவினர், ' ழ ' வுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வானொலியில் பேசலாயினர்! ஆனால் எதிர்பாராத விதமாக அவர்களது முயற்சி வெற்றி அடையாமல் போனதோடு, அவர்களது உச்சரிப்பு துருத்திக்கொண்டு தெரிய ஆரம்பித்ததால், அதுவே நகைப்புக்கிடமாகி, அவர்களைக் கிண்டல் பண்ணுவோர், ' ழ ' வை வைத்தே கிண்டல் அடித்ததையும் பார்த்தோம்!அக்காலப் பகுதியில் புதிதாக அறிவிப்பு பயிற்சிகள் பெற முயன்ற பல இளைஞர்கள், ' ழ ' வை மிகவும் அழுத்தி ஒரு புதுவிதமான உச்சரிப்பு முறைக்கு தம்மை பழக்கப்படுத்தினர்! அதாவது ' கழுத்து' என்ற சொல்லை ' கள்ழுத்து ' என்று உச்சரிக்கலாயினர்! இப்போது இவ்விதம் அழுத்தும் முயற்சியை எல்லோரும் கைவிட்டு விட்டனர்! இத்தோடு இலங்கையில் ' ழ' சமாதிநிலைக்கு சென்றுவிட்டது!எனக்குத்தெரிந்து இலங்கையில் ' ழ ' வை நூறு விழுக்காடு சரியாக உச்சரிக்கும் எந்தவொரு ஒலிபரப்பாளரையும் என்னால் சுட்டிக்காட்ட முடியாது! திரு.பி.எச்.அப்துல் ஹமீது கூட ' ழ ' வை உச்சரிக்கும் போது, எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுத்து " இப்போது நான் ' ழ ' வை உச்சரிப்பதை நேயர்கள் கேட்கலாம் " என்று முன்னறிவிப்பு செய்து, உச்சரிப்பது போலவே உச்சரிக்கிறார்!ஆமா இவ்வளவு பேசுறியே உன்னால ' ழ ' வை சரியாக உச்சரிக்க முடியுமா என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் ' கண்டிப்பாக என்னால் முடியாது ' என்பதே! ஆனால் நான் வானொலியில் பணியாற்றிய காலத்தில் பலநூறு தடவைகள் இந்த ' ழ ' வுடன் போராடி இருக்கிறேன்! எனக்கு இறுதியில் கிடைத்தது தோல்விதான்!ஆனால் இந்த ' ழ ' வை மிகவும் அனாயாசமாக, இயல்பாக, அழகாக உச்சரித்த ஒருவரை நான் இலங்கையில் சந்தித்தேன்! அவர் வேறு யாரும் அல்ல என்னுடைய தமிழ் ஆசிரியரும், தமிழகப் பேராசிரியருமான திரு.அறிவரசன் ஐயா அவர்கள்தான்! 2007 ம் ஆண்டு காலப்பகுதியில், விசேட அழைப்பின் பேரில் கிளிநொச்சிக்கு வந்த இவர் அங்கு ' பல பிரபலங்களுக்கு ' தமிழ் கற்பித்தார்!அவரிடம் விசேட தேவை ஒன்றுக்காக தமிழ் கற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது! அவர் தமிழ் பேசும் போது, உண்மையாகவே இன்பத் தேன் வந்து வந்து காதுக்குள் பாயும்! தமிழ் மீது அளவுகடந்த பிடிப்பு ஏற்படும்! ஏதேதோ உணர்வுகள் எல்லாம் வந்து போகும்! அவ்வளவு சுத்தமாகவும், இனிமையாகவும் தமிழ் பேசுவார்!! அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவும் இவரிடமே தமிழ் பயின்றார்! நீங்கள் ' ழ ' வினது சரியான உச்சரிப்பை அறிந்து கொள்ள வேண்டுமானால் அந்த தமிழகப் பேராசிரியரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும்!எனவே தமிழ் அவ்வளவு சாதாரணமான மொழி கிடையாது! அதிலும் ' ழ ' வை உச்சரிப்பது முயல்கொம்புதான்! தமிழர்களாகிய எங்களுக்கே ' ழ ' இவ்வளவு சிரமத்தை கொடுக்கும் போது, ஏனைய மொழிக்காரர் ' ழ ' வை உச்சரிக்க நினைப்பது அல்லது அவர்கள் சரியாக உச்சரிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுவது முட்டாள்தனமே!எனவே சுதா, உங்களுக்கு வந்த சந்தேகம் சரியானதே! எனது பதில் ' ழ ' வை நாங்கள் முதலில் சரியாக உச்சரிக்க முயல்வோம்! ' ள ' வைப் பற்றி இப்போதைக்கு எதுவுமே பேச வேண்டாம்!

நல்ல சந்தேகம். தெரிஞ்சவங்க கிட்டே கேட்கனும்

ஜீ... said...

'இசை மழை' என்று ஒரு காலத்தில் பல டேப்புகள் வைத்திருப்பார்கள் பலர்! அதை இசை 'மசாய்' என்று வாசித்த ஞாபகங்கள் வருகிறது! :-)

Srini said...

" ரொம்ப சிக்கலான TOPIC தலைவரே..கஷ்டம்..!! பாருங்க, எல்லாருமே குழம்பிக்கிறாங்க..
வேணும்னா இப்படி செஞ்சு பாத்தா ? “ழ்” க்கு “ ZL போட்டுப்பார்த்தா ? TAMIZL.. VAAZLKKAI.. EZLUTHTHU...

சரியான கேள்வி. மன்னிக்கவும், பதில் தெரியவில்லை.

ஹேமா said...

ம்...உண்மைதான் சுதா.என் தளத்தின் பெயரிலேயே இந்தச் சிக்கலை உணர்கிறேன் !

Mark K Maity said...

u r correct

THOPPITHOPPI said...

நானும் பல
முறை யோசிச்சி இருக்கேன்.

Chitra said...

zha - - ழ என்று தமிழரை தவிர பிறருக்கு தெரிவதில்லை.

நல்ல பதிவு .. நாங்கள் எங்கள் ஊரில் இந்த ழ வை வைத்து தான் வாழ்ந்து வருகிறோம் :))))(பலரை கிண்டல் செய்வதற்காக )

raji said...

நல்ல பதிவு.ஆனால் தமிழின் சிறப்பே ழகரம்தான்

மற்றபடி உச்சரிப்பு சிக்கல்கள் எல்லா மொழியிலுமே ஏற்படுவதுதான்


உதாரணமாக ஒரு ஆங்கில வார்த்தையை ஆங்கிலேயர்கள் உச்சரிக்கும் அதே விதத்தில்
நம்மவர்களால் உச்சரிக்க இயலாது


ஏதேனும் ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டோமானால் அதை தமிழன் உச்சரிக்கும் விதமும்
மலையாளி உச்சரிக்கும் விதமும் வேறுபடும்,மற்றும் கன்னடக்காரர்களோ இலங்கைத் தமிழர்களோ அதையே வேறு
மாதிரி உச்சரிப்பார்கள்.எனவே உச்சரிப்பு மற்றும் உபயோகிப்பு சிக்கல்கள் எல்லா மொழிகளிலுமே இருக்கும் என்பதே தங்களது கேள்விக்கு எனது கருத்து

உண்மைலேயே ரொம்ப முக்கியமான சந்தேகம்க.
நானும் முதலில் அதாவது இந்த ழ வுக்கு ZH போடுறது பத்தி தெரியாததுக்கு முன்னாடி சில பேரோட பெயர்களை தப்பா வாசித்திருக்கிறேன். அப்புறம் தான் தெரிந்தது ZH போட்ட ழ அப்படின்னு ..

raji said...

ழ உச்சரிப்பு பற்றி தாங்கள் குறிப்பிட்டதும் எனக்கு வேறு ஒன்றும் ஞாபகத்திற்கு வருகிறது

தமிழில் 'ஞான சௌந்தரி' என்ற பெயரை மற்ற மொழிக்காரர்கள் எப்படி எல்லாம் உச்சரிப்பார்கள்
என்று இங்கே பார்க்கலாம்

ஆங்கிலத்தில் இதை எழுதும்போது Gnaana sowndhari என எழுதுவோம்.மற்ற மொழிக்காரர்கள் இதை

கான சௌந்தரி என்றுதான் படிப்பார்கள்.

இது போன்ற சிக்கல்கள் எல்லா மொழிகளிலும் வரும்தான்

நீங்க சொன்னதுல என்னால செய்ய முடிந்தது ஒன்றே ஒன்று தான் எல்லா திரட்டிகளிலும் ஓட்டு போட்டாச்சு

தமிழின் மகத்தான எழுத்து "ழ " இதைப்பற்றிய உமது பதிவு உண்மையில் பரட்டுகளுக்குரியான . தொடருங்கள் உங்களின் உன்னதமான பணியை . நன்றி . பாராட்டுகள் .

Lakshmi said...

தமிழ்காரங்களே ழ வை சரியா உச்சரிக்கத்தெரியாம திணருறாங்க. வாயப்பயம்னுதான் பெரும்பாலானவர்கள் உச்சரிக்கராங்க. அதிலும் தமிழை ஆங்கிலத்தில் கொலை பண்ணிடுவாங்க.
படுக்காத மெத்தை இது என்ன தமிழ் படம்னு புருயுதா?படிக்காத மேதை தான்.
பாலும் பழமும்-- பாலும் பசமும். நேசமணி பொன்னையா--- நாசமா நீ போனியா? எப்படி இருக்கு?

FARHAN said...

நின்னிகிட்டு யோசிச்சன்
உட்காந்து யோசிச்சன்
படுத்துகிட்டு கூட யோசிச்சன்
ஆனா அண்ணனால இதுக்கு பதில் தெரியலபா தெரியல

Nesan said...

மொழிமாற்றம் செய்யும்போது உணர்வு கெடுவது இதனால்தான்

முடிவைப்பெற்றிருந்தால் இன்னோர் பதிவில் விளக்கமாக தரவும்!

அருமையான் தகவல் நன்றி

அருமையான் தகவல் நன்றி

நல்லது... இது பலரை சிந்திக்க வைத்திருக்கிறது> மாத்தி யோசி சகோ. மிக அழகாக தெளிவு படுத்தியுள்ளார். 'ழகர உச்சரிப்புக்கு ழ என்ற ஆங்கில எழுத்துக்கள் தேவையற்றவை தான்... ஆனால் இப்பொழுது எழுத்துரு மாற்றியிலும் அது பயன்பாட்டுக்கு வந்துவிட்ட‌படியால் வேறு வழியில்லை... தேவையான இடத்தில் அதையே உபயோகிப்போம். நான் பெருமையோடு தெரிவிப்பது.. என் தந்தை மிக அழகாக அந்த எழுத்தை உச்சரிப்பார்.. ஆனால் அவர் இப்பொழுது உயிரோடு இல்லை. இனியாவது நாங்கள் முயற்சிப்போம்

தோழா, ழ கரம் சிற்ப்பானது. தமிழ் கற்றுக்கொடுத்தவர்களின் பிழை அதிகம். ஆங்கிலத்தில் அன்பு என்பதை ஏ என் பி யூ , ஏ என் பி யு என்று உச்சரித்தால் அன்பு என வராது. ஏ என் பி யு என்ற ஒலிதான் வரும்.தமிழில் எழுத்தைப் படித்தாலே சொல் வந்துவிடும். அப்படி பகுத்துப்பகுத்து உறுவாக்கப்பட்டுள்ளது.இன்று கணினியில் பல பகுப்புகள் செய்யைப்பட்டதுபோல் கணினிப்படுத்தப்பட்டது தமிழ். ஆங்கிலத்தில் எப்படி உச்செரிக்கமுடியுமோ அப்படி உச்சரிக்கட்டும். பொருள் விளங்கினால் போதும். ஒவ்வொரு முழியிலும் உச்சரிக்க முடியாத எழுத்துக்கள் உள்ளன. இதில் மயங்க வேண்டாம். உங்கள் நாவினை ல என்பத்அற்கு நுனியை எங்கே ஒட்டுகிறீகளோ அங்கிரிந்து சற்று உள்ளே தொட்டால் ள வரும். இன்னும் சற்று உல்லே தொட்டால் ழ வரும் . மிக எளிது.

VITHYAN'S said...

இறை கற்பனை இலான் அவர்களுடைய வாதத்தை ஏற்றுகொள்கிறேன். நானும் அதை தான் பேசும்போது முயற்சிக்கிறேன். எனக்கு இன்னுமொரு சந்தேகமும் உள்ளது. ல, ன விற்கு முன்னால் உள்ள எழுத்திலும் சிறிய ஒரு மாறுதல் தேவை தானா என்பது? நான் யாரையும் இங்கு புண்படுத்துவதற்காக கூறவில்லை. அன்னை, அன்பு, கல் போன்ற சொற்களை உச்சரிக்கும்போது ஒரு வித ae ஒலியோடு உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.உச்சரிக்கும்போது நாவை இரண்டாவது எழுத்துக்காக பல் நுனிக்கு கொண்டுவர இது உதவுகிறது எனினும் இது சரிதானா?அந்த ஒலி சிங்களத்தில் உள்ளது.ඇன்பு,ඇன்னை என உச்சரிப்பது போல இருகிறது. இந்த 2 மொழியையும் சேர்த்து எழுதியதற்காக என்னை கடவுள் மன்னிப்பாராக? யாரவது உதவுங்களேன்?

Anonymous said...

திராவிட மொழிகளில் ழ கரம் இருந்தது. தெலுங்கில் 6-ம் நூற்றாண்டோடு சுவாக, கன்னடத்தில் 9-ம் நூற்றாண்டோடு சுவாக, இலங்கையில் எப்போது எனத் தெரியவில்லை ஆனால் சுவாக, பிராகிருத பாதிப்போ என்னவோ, தமிழகத்தில் வட தமிழ்நாடு மட்டும் தென்பாண்டியில் சுவாக செய்யப்பட்டு சென்னை ஊடக தயவால் மற்ற இடங்களிலும் சுவாக ஆகின, வட கேரளத்திலும் சுவாக ஆகிய நிலையில், நாஞ்சில் நாடு மற்றும் நடு, தென் கேரளத்தில் ழ உயிர்ப்புடன் உள்ளது. மலையாளிகள் பலர் சூப்பராக ழகரம் உச்சரிப்பர். நானும் இப்போது தான் பழகி வருகின்றேன், மலையாளிகளிடம். நிற்க ஆங்கிலத்தில் ழகரத்தை zh என்று எழுத தேவையில்லை. L என்று எழுதினாலே போதும். தமிழ்நாடு, கேரளத்தில் மட்டுமா ஆங்கிலம் இருக்கும் உலகம் பூரா இருக்கு நம்ம விடுற சவுண்ட் அவங்களுக்கு புரியுமா என்ன?

sk said...

ழ இந்த எழுத்திற்கு தமிழில் பொருள் ஏதும் உண்டா?

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top