Featured Articles
All Stories

வெள்ளி, 21 ஜனவரி, 2011

காதல் கற்பித்த தமிழ் பாடம்


உன்னை எனக்கு பிடிக்கவில்லை
என்று நீ பறைந்திருந்தால்
என் காதலுக்கது
முற்றுப் புள்ளியாகியிருக்கும்.......


என் காதலை சொன்ன கணம்
நீ எதிர் பார்க்கா கேள்வியை
நான் கேட்பதாய் சொன்னாயே
என் காதலுக்கது ஆச்சர்யக்குறி !!!!!!!!!!
பிற்பகல் 8:03 - By ம.தி.சுதா 68

68 கருத்துகள்:

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

                   தமிழின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த ழகரம் தான் என்பது எல்லோருக்குமே தெரியும் இது பற்றி எனது தமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1 என்ற பதிவில் முன்னர் எழுதியிருந்தேன்.
                   இதைப் பற்றி விவாதிப்பதற்கோ வாதிடுவதற்கோ நான் ஒரு பண்டிதனில்லை ஆனால் தமிழ் மீது பற்றுக் கொண்ட ஒரு சாதாரண வாசகன் என்ற முறையில் கூற விளைகிறேன்.
                   எம்மில் பலர் பலதை செய்கிறோம் அனால் ஏன் எனக் கோட்டால் யாரோ சொன்னார்கள் நாமும் செய்கிறோம் என்று தான் பதில் வரும் நானும் நண்பரும் பலரிடம் கேட்டு பல மாதிரியும் அடிபட்டும் பார்த்தோம் யாருடைய மூளைக்கும் எட்டவே இல்லை அதனால் தான் தங்களைக் கேட்கிறேன் எமது ழகரம் ஆனாது வேற்று மொழிக்காரருக்கு ஒரு பிரச்சனையான உச்சரிப்பிற்குரிய எழுத்துத் தான் அதையே நாம ஆங்கில உச்சரிப்புக்காக மாற்றி எழுதுகையில் தான் சிக்கலே வருகிறது.
பிற்பகல் 4:04 - By ம.தி.சுதா 45

45 கருத்துகள்:

வியாழன், 13 ஜனவரி, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

                நான் அடிக்கடி சொல்லும் வசனம் இது தான் முந்த நாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் நான் பதிவுலகில் இது வரை எதையுமே நான் சாதிக்கவில்லை ஆனால் இத்தனை உறவுகள் எப்படிக் கிடைத்தன என்பது எனக்கே அதிசயமான விடயமாகும். என்னை இத் தொடர் பதிவுக்கு நல்ல நேரம் சதீஸ் அண்ணா அழைத்திருக்கிறார் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தொடர்கிறேன்.
            நான் பதிவுலகிற்கு வந்து இன்றுடன் 212 நாள் ஆகிறது நான் இங்கு எப்படி வந்தன் என்று சொல்வதே நல்லது என நினைக்கிறேன் தடுப்பு முகாமில் இருந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு பத்திரிகைக்கே அனுமதி இருந்த நேரம் நல்ல மனம் கொண்ட எமது ராணுவ அதிகாரியால் (கருணாநாயக்க) தினக்குரல் பத்திரிகை கிடைக்கும் அதில் உள்ள யாழ்தேவி இணையத்தால் இணைய அறிமுகப்பகுதிதான் அப்பப்போ பத்திரிகைக்கு கிறுக்கிக் கொண்டிருந்த என்னை இப்படியான ஒரு ஆர்வத்தை இட்டுத் தந்தது.
பிற்பகல் 9:43 - By ம.தி.சுதா 58

58 கருத்துகள்:

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்

               ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது அசினுக்கெதிராகவோ அல்லது காவலனுக்கு எதிராகவோ எழுதப்படும் பதிவல்ல. எம்மை (என்னையல்ல) ஒரு கேணைக்கிறுக்கன் என நினைத்த ஒருவருக்காக எழுதப்படும் பதிவாகும்.
               சமீபத்திய நாட்களில் எல்லோரும் தமிழன் ஏமாற்றப்பட்ட கதையை நடிகர்கள் மூலமாகவும் அரசியல்வாதிகள் மூலமாகவும் கே(கெ)ட்டாகி விட்டது. என்ன பலரால் சிலதை ஏற்கமுடியாதுள்ளது ஒருவன் படம் நடித்தால் படத்தை பார்ப்போம் ரசிப்போம் அது சரி அதற்காக அவன் செய்வதெல்லாம் சரி என வாதிடக் கூடாது. ஏற்கனவே அசினின் சமூகப் பணியால் பார்வை இழந்த யாழ் வறியவர்கள் என்ற தலைப்பிட்டு எழுதிய ஒரு புதிய செய்தியால் பலருக்கு என் மீது கோபமிருக்கிறது நான் மீண்டும் சொல்கிறேன் தலைப்பானது உள்ளே உள்ள கட்டுரையை பரப்புவதற்காகவே இடப்பட்டது அவர் செய்த சேவை பாராட்டத்தக்கது
முற்பகல் 12:51 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

சனி, 8 ஜனவரி, 2011

என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..

                         என்ன நானும் பி.பி மாதிரி (பிலோசபி பிரபாகரனை நான் அழைக்கும் செல்லப் பெயர்) எழுத ஆரம்பித்து விட்டேனா என யோசிக்காதிங்க. எனக்கு கனவுகள் மீது ஒரளவு நம்பிக்கை உண்டு. ஆனால் எல்லாவற்றையும் சொன்னால் பைத்தியக்காரன் ஆக்கி விடுவார்களோ என்று பயம்.
         எனக்கு வரும் கனவுகளுக்கான தீர்வுகளை நானே கண்டு விடுவதால் பலதை சொல்வதே இல்லை ஆனால் நேற்று கண்ட கனவு என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது.
       கனவு கண்ட நேரம் அதிகாலை 3-5 ற்குள் இருக்கலாம்.வழமையாக வாரத்திற்கு ஒரு தடவையேனும் போர் சம்பந்தமான கனவுகள் என்னை ஆக்கிரமிப்பதுண்டு பெரும்பாலும் ஷெல் விச்சினுள் தப்புவது போன்றும், களம் ஒன்றின் ஊடு கடப்பது போன்றும் வரும். திடுக்கிட்டு எழும்பும் தருணங்களில் இரு கைகளையும் காதில் பொற்றியபடி முழங்கை நெஞ்சினுள் புகுத்திய பாதுகாப்பு நிலையில் கிடப்பேன். இது எனக்கு மட்டமல்ல பலருக்கிருக்கும் பிரச்சனை எனது மருமகன் இப்போதும் ஏதாவது பெரிய சத்தம் கேட்டால் உடனே விழுந்து படுப்பான்.
பிற்பகல் 7:52 - By ம.தி.சுதா 47

47 கருத்துகள்:

புதன், 5 ஜனவரி, 2011

இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

         அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகி இருப்பது இளைய தளபதி விஜயின் காவலன் திரைப்படம் தான் ஆனால் அது எதிர் கொள்ளும் சர்ச்சைகளுக்கு அளவே இல்லை ஏற்கனவே அசினுக்கு வந்த பிரச்சனையை சிமானின் கோபத்தால் அவர் வெற்றிகரமாகத் தடுத்தார் ஆனால் அவரை தலையிடி விடுவதாயில்லை.
               இலங்கையில் ரஜனி படங்கள் போல் அவர் படத்தை யாரும் அடிபட்டு வாங்காதது அவர் மீதான நம்பிக்கையை சிதறடித்துள்ளது. யாழில் மனோகரா வாங்குகிறது என முன்னரே உறுதியானாலும் பொதுவாக முதலில் ஆறு திரையரங்குகளே முன்வந்திருந்தது இப்போ அது எட்டு ஆகா அதிகரித்துள்ளது.
பிற்பகல் 10:52 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

செவ்வாய், 4 ஜனவரி, 2011

பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

            யாருமே எதையும் எதிர் பார்த்து நடப்பதில்லை அதில் ஒன்று தான் மரணமும் அது யார் இவரென்று பாகுபாடு பார்ப்பதில்லை அதன் வலையில் வீழ்ந்தவர் தான் டிஸ்கோ உலகின் மன்னனாக திகழ்ந்த பொபி பெரல் (Bobby Farrell) ஆவார்.
                  அவர் இறக்கும் போதும் ஒரு இளைஞனாகவே இறந்தது தான் அதிசயமாகும் இப்பாடலை பாருங்கள் என்ன ஒரு வேகம் என்ன ஒரு உடல் கட்டு இந்த 61 வயதில் எவ்வளவு நேரம் தலை கீழாக நிற்கிறார் பார்த்தீர்களா ? (இந்த வீடியோ மொஸ்கோவில் இடம் பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 30.10.2010 அன்று பெறப்பட்டதாகும் அதிகமாக இன்னும் பலர் பார்க்காத காணோளியாகும் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் இந்த கானோளி சொனி மியுசிக்கால் தடுக்கப்படலாம்)
பிற்பகல் 8:25 - By ம.தி.சுதா 47

47 கருத்துகள்:

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

                     புத்தாண்டின் முதல் பதிவிற்குள் அழைக்கப்படும் தங்களை மிகவும் பணிவன்புடன் வரவேற்கின்றேன். தலைப்பே பதிவின் கனத்தை உரைத்திருக்கும் அனால் இது தலைப்பிற்கு ஏற்ப கனம் உடையதா அல்லது மொக்கையா என தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எதற்கும் கீழே உள்ள காளோளியை ஒரு தடவை பார்த்தீர்களானால் இதன் கனத்தை தங்களுக்கு இலகுவாக்க முடியும் எனக் கருதுகிறேன்.
முற்பகல் 8:42 - By ம.தி.சுதா 45

45 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top