Thursday, 30 December 2010

அழியா வடுக்கள்

இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவுக்குள் கரை நீ
என்னிலாடும்
உணர்வுக்குள் துளி நீ
என்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த தூரிகை நீநெருப்பைத் தொட்டாலும்
உன் நினைவு தான் எனைச் சுடுகிறதே
பனித் துளியைத் தொட்டாலும்
உன் முத்தம் தான்
இப்போதும் குளிர்கிறதே


நின்னை சரணடைய
என்னைத் தொலைத்தவன் நான்
கண்காணாத் தூரத்திலும்
வெள்ளியாய் சிரிப்பது நீயா
சூரியன் பார்த்து கலங்காக் கண்
அவ் வெள்ளி பார்த்துக் கலங்குவதேன்


உனை சந்திக்கும் வரை
எனை நான் சிந்தித்ததில்லை
உனை சந்தியா... விடில்
என் வாழ்வே சிந்தியிருக்கும்.


நீ தொலைந்தாயா
நான் தொலைத்தேனா
அவர்கள் திருடினாரா
தெரிந்தால் சொல்லுங்களேன்


குறிப்பு - .
            என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

47 comments:

ஜீ... said...

//என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்//

நிலைக்க வாழ்த்துகிறேன்! :-)

ஜீ... said...

இன்ட்லி, தமிழ்மணம் இணைங்கப்பு!!

//நின்னை சரணடைய
என்னைத் தொலைத்தவன் நான்
கண்காணாத் தூரத்திலும்
வெள்ளியாய் சிரிப்பது நீயா
சூரியன் பார்த்து கலங்காக் கண்
அவ் வெள்ளி பார்த்துக் கலங்குவதேன்//

கவிதை அருமை நண்பா

// என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்///
சந்தேகம் 01. நிம்மதியனா???? யாழ்ப்பாணத்தில் தானே இருக்கிறீங்க??
ச02."இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்???!!!!"

Rajeevan said...

உங்கள் கவிதையின் ஆழமான அர்த்தங்கள் எனக்குப் புரிகிறது சுதா! அனைத்தையுமே கண்ணால் கண்டவன் நான்!! வரும் ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாக அமைவதாக! - தமிழ்மணத்தில் உங்களுக்கு வாக்குப் போட்டேன்! அங்கு நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

Anuthinan S said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

கவிதை அருமை...

விடைபெறுகின்றேன்....2010க்கு சொன்னேன்....

உங்களை போலதான் நானும் எதிர்பார்ப்புகளோடு எதிர்பார்க்கின்றேன் 2011 ஐ.....
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..தங்களுக்கும்..குடும்பத்தினருக்கும்..நண்பர்களுக்கும்....

அருமை நண்பா வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

Nesan said...

Nallathai nadakkadum.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வைகை said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா!

//என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

நானும் பிரார்த்திக்கின்றேன், புத்தாண்டு சுபமாக மலர வாழ்த்துக்கள்.

//என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.//

என் ப்ரார்த்தனைகளும்

KANA VARO said...

கவிதை அருமை
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் நண்பா

Anonymous said...

அன்புத் தோழருக்கு வணக்கம்,

எமது தளத்தில் இருந்து மற்றுமொரு இணைய சஞ்சிகையாக அறிமுகத்தவத்தினை ( mag.pondicherryblog.com ) வெளியிடுகிறோம். இதில் பல பதிவர்களின் நல்ல எழுத்துக்களை வெளியிடுகிறோம். இந்த வாரப் பதிப்பில் தங்களின் படைப்பும் வெளியிடப்பட இருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் வலையேற்றப்படும்.

பார்த்துவிட்டு கருத்துக் கூறவும், இவற்றில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என்னிடம் கூறுங்கள், நீக்கிவிடுகிறோம். தாங்கள் மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

இங்ஙனம்,

அங்கிதா வர்மா,
தலைமை ஆசிரியர் - பாண்டிச்சேரி வலைப்பூ

நினைவோடு வந்திருக்கிறது கவிதை
வாழ்த்துக்கள்,புதிய ஆண்டிலும் உங்கள் எழுத்துக்கள் உங்கள் பாதையிலே தொடருட்டும் சகோதரா.

தமிழ்மணத்திலும் வெற்றி உங்களுக்கு நிட்ச்ச்யம் எனது வாழ்த்துக்கள் முன்கூட்டியே கூறிக்கொள்கின்றேன்.

/////என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்/////

வாழ்த்துக்கள் சகோதரம், 2011ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக மலர வாழ்த்துகிறேன்

karthikkumar said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.

அருமையான கவிதை.. தொடர்ந்து எழுதுங்கள்...
இனி அடிக்கடி சந்திப்போம்.. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

sinmajan said...

நிம்மதியான 2011 அமைய வாழ்த்துக்கள்..

கவிதை அருமை சுதா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.

தங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும் அமைதி தவழ வேண்டுகிறேன்.

நிகழ்வுகளின் நினைவுகளை வரிகளில் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா,

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

Jana said...

எல்லாம் கடந்துபோகும்...தங்கள் எதிர்பார்ப்புகள்போலவே நாளைய புதுவருடம் அமைய என் வாழ்த்துக்கள்.

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா.

"என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன்."
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து நிம்மதியான வாழ்வு அனைவருக்கும் கிட்டட்டும்.

உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த வருடம் நல்லொதொரு அமைதி வழங்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ...
உங்களுக்கும் , உறவுகளுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Vasagan said...

//என் இளமைப் பருவத்தின் முதலாவது நிம்மதியான ஆண்டொன்றுக்குள் நுழையப் போகிறேன். இது நிலைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்//

நானும் பிரார்த்திக்கின்றேன், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Lakshmi said...

வரும் புத்தாண்டு உங்களுக்கு அனைத்து நலgங்களும் நடந்திட வாழ்த்துக்கள்.

Select a single Target!

You could be nothing if you want to be everything!

Any how All the best!

அருமை. உங்களுக்கும் இனிய புதுவருடட வாழ்த்துக்கள். நினைத்தது கைகூடட்டும். முயற்சிகள் வெற்றீயாகட்டும்

இவ்வருடத்தில் நீங்கள் எண்ணிய யாவும் நிறைவேற வாழ்த்துக்கள். வெற்றிகரமான ஆண்டக அமையட்டும். வாழ்த்துக்களும் , என் பிரார்த்தனிகளும் கிடைக்கட்டும். .

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

கலக்குங்க

உங்களுக்கு ஒரு ஆச்சரியம்

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை) எனது பதிவை பார்க்கவும்

sivatharisan said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு இனியதாக அமைய வாழ்த்துகள்

NIZAMUDEEN said...

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

NIZAMUDEEN said...

அன்பு சகோதரரே!
இந்த பதிவைப் படித்து, பதில் சொல்வீர்களா?
எத்தனை நாள் பிரிந்து இங்கிருப்பேன் என்னுயிரே!
 !

பதிவின் பெயர் : நனைவோமா?ம.தி.சுதா இடம் : 59Add this Traffic

தமிழ்மணத்தில் 2010 ஆண்டு 59 வது இடத்தை பெற்றதற்க்கு வாழ்த்துக்கள் சகோதரா

THOPPITHOPPI said...

2010 ஆண்டு 59 வது இடம் ஏமாற்றமே,
பதிவுலகில் நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா

natbas said...

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

(ரொம்ப லேட்டாய் வந்து, ஆறிப் போன பழங்கஞ்சி கொண்டு செல்கிறேன்!)

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top