Wednesday, 29 December 2010

பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

               இசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும். அது போல் தான் எனது பார்வையும் அமையப் போகிறது. சகோதரர் ஜீவதர்சன் அழைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 10 அண்டில் என் மனதை கவர்ந்த பாடல்களை தருகிறேன்


 “ஆயிரம் தான் கவி சொன்னேன்
          முதலாவது பாடலை கட்டாயம் சகல உறவகளையும் கேட்குமாறு பணிவுடன் கேட்கிறேன். இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் லோசன் அண்ணாவின் தாயின் பிறந்த நாள் அன்று தான். அப்போது அதை திருடிய எனது கைப்பேசி இன்று் என்னை கலங்கடித்த வண்ணமே இருக்கிறது. பின்னர் தம்பி ஜனகன் தான் இந்த பாடல் பெற உதவினார். வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். அவர் ஆயிரத்தில் ஒருவனில் எழுதிய ஒரு வரியால் கடுப்பாகி இருந்த என்னை மீண்டும் அவர் பக்கம் ஈர்த்த வரிகள் இவை
பாடல் - ஆயிரம் தான் கவி சொன்னேன்
பாடியவர் - எஸ்.பி.பி, சின்மயி
இசை - இனியவன்

லஸ்ஸன லஸ்ஸன” (lassana lassana)
            இந்த சிங்களப் பாடல் ஒரு தடவை கேட்டால் போதும் மறுபடியும் கேட்கத் தூண்டும் கேட்டால் ஒரு தடவையெனும் முணுமுணுக்க  வைத்துவிடும். Sangeeth Wijesuriya வால் படிக்கப்பட்ட இப்பாடல் மிகவும் அருமையான ஒரு காதல் உணர்வுப் பாடலாகும்.

உனக்கென இருப்பேன்
            ஜோஸ்வா சிறீதர் என்ற ஒரு இசையமைப்பாளரை முதல் படத்திலேயே பலர் மனதில் நச் என பதிய வைத்த இப்பாடல் ஹரிச்சரணால் படிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவரிடம் சிறப்பாக பெறமுடியாததற்கு காதல் தான் காரணம் எனவும் சொல்லிக் கொண்டார்கள். திரைக்கதையில் அப்படியே ஒட்டிப் போகும் இப்பாடல் மிகவும் அழுத்தமானது

காதல் வந்தால் சொலலியனுப்பு
                வித்தியாசாகரின் இசையமைப்பில் ஒரு துணிகரமாக உருவாக்கப்பட்ட பாடல் இது காரணம் குத்துப் பாடல்களையெ பாடி வந்த டிப்புவுக்குப் பின்னாலும் ஒரு நல்ல திறமை இருப்பதை இயற்கை படப்பாடலான இது பெற்றுக் கொடுத்தது.

யார் யார் சிவம்
   இப்பாடலையும் வித்தியாசகரே இசையமைத்திருந்தார். அன்பே சிவப்பாடலான இப்பாடலை கமலஹாசன் மிகவும் உச்சஸ்தாயி வரை சென்று மனதை நெகிழ வைத்திருப்பார்.

நீயா பேசியது
       திருமலையில் ஒரு சிகரத்தில் வைக்கப்பட்ட விளக்கப் போல் என்றும் ஒலிக்கும் இப்பாடலை சங்கர்மகாதேவன் உருக்கி எடுத்திருப்பார். எனது நண்பர் ஒருவர் சொன்னதன் பிற்பாடு தான் இதில் ஒரு ஓட்டையை கவனித்தேன். அப்பாடலை சத்தத்தை நிறுத்தி விட்டு பாருங்கள். அக்காட்சியை இப்பாடல் தான் உயிர்ப்பித்தது அப்படியே தெரிகிறது.

எங்கேனும் எப்போதும்
          இது ஒரு மீள் கலவை பாடலாக பொல்லாதவன் திரைப்படம் ஒலிக்க விட்டிருந்தாலும் எஸ்பிபி குரலில் மீண்டும் கேட்கும் போது ஒரு புது உணர்வையே தோற்றுவித்தது. அதிலும் திவ்யா, தனுஸ் வரும் காட்சி அமைப்புகள் இன்னும் வித்தியாசத்தை தோற்றவித்தது.

அழுவதற்கென்றே எவரும் வந்து
           ஈழத்தில் உருவான இப்பாடலை இசைப்பிரியனின் இசையில் இசையரசன் படித்திருந்தார். இசையில் ஒரு பெரும் சோகத்தையும் வரிகளில் அவர்களை மீள மன உறுதி பெறுவது போலவும் தத்ரூபமாகவும் உருவாக்கியிருப்பார்கள். (இப்பாடலின் இசையை கூர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

ரா..ரா..சரசுக்கு ரா..ரா
                இந்தப்பாடலும் மொழி கடந்திருந்தாலும் இசையால் பலரை கட்டிப் போட்ட பாடல். இதில் சேளந்தர்யா தோன்றும் பாடலை மிகவும் ரசிப்பேன். அத்துடன் இப்பாடல் தமிழாக்கி பாடப்பட்ட போது இன்னும் என்னை கவர்ந்தது.

தீயில் விழுந்த
            வரலாறு திரைப்படத்தில் ராகுமானால் உருவாக்கப்பட்ட இப்பாடல் அஜித்தின் நடிப்பிற்கு தீனி போட்ட ஒரு பாடலாக அமைந்திருந்தது அதற்கான பலத்தை வைரமுத்துவின் வரிகள் வழங்கியது மிகவும் சிறப்பாக இருந்தது.

         என்ன சகோதரர்களே இந்த பாடல் கடலில் என் மனதில்பட்ட முதல் 10 படலை இட்டிருக்கிறேன்... பிடித்திருக்கிறதா.. பல பாடல்களை குறிப்பிடாமல் போவது மனவருத்தம் தான் என்ன செய்வது

         இந்த வருடத்தில் பல மனகஸ்டங்கள் பரிணமித்திருந்தாலும் வருடக்கடைசியில் பதிவுலகத்தின் மூலம் சில சந்தோசங்கள் எற்பட்டுள்ளது. பலர் மனதில் நான் இடம் பிடித்திருப்பது மிகவும் சந்தோசமாயுள்ளது. அது நிலைப்பதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன். அதற்கு ஆரம்ப வழிகாட்டியாக இருந்த ஒரு பதிவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
           தமிழ்மணத்தில் நான் சமர்ப்பித்த 3 பதிவுகளும் அடுத்தகட்டத்திற்கு தெரிவானது மிகவும் சந்தோசமாயிருக்கிறது. எனது தகுதிக்கு இதே போதுமானது என கருதுகிறேன் அதை பெற்றுத் தந்த என் அன்புச் சகோதரங்களுக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.


தமிழ் மணத்தெரிவில் உள்ள எனது பதிவுகள்.

1. ஈழமக்களின் வாழ்வியல், மனித உரிமைகள், சமூக பொருளாதார சிக்கல்கள்... பகுதியில் எம் அவலத்தை விபரித்த......
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
என்ற பதிவையும்.

2. செய்திகள்/ நிகழ்வுகளின் அலசல் பகுதியில்.... இந்த உலகிற்கு முதல் முதலாக ஒரு உண்மைச் செய்தியை நான் வெளிக் கொணர்வதற்காகவும். சில ஏழைகளின் திர்வுக்காவும் எழுதியதை பல இணையத்தளங்கள் தமது பிரச்சார ஆயுதமாகப் பாவித்த ஒரு ஆக்கமான (ஒன்பது தளங்கள் திருடிப் பதிவேற்றியது... இறுதியாக மீனகம்..)
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...
என்ற பதிவையும்.

3. உலக சினிமா விமர்சனம், குறும்படங்கள், திரைப்படக்கலை பகுதியில் எமது மதிப்பிற்குரிய இயக்குனர் சிகரம் பாரதிராஜா திருடிய கதை ஒன்றை அதார பூர்வமாக எழுதிய..
இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்

       அத்துடன் பாண்டிச்சேரி வலைப்பூவனது தனது சஞ்சிகையில் எனது விமர்சனத்தையும் இட்டுள்ளது அதற்கும் என் நன்றிகள். இது மட்டுமல்லாமல் எமது மூத்த பதிவருள் ஒருவரான வத்தியத்தேவன் ஆக்கமும் அதில் இடப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

44 comments:

//அப்பாடலை சத்தத்தை நிறுத்தி விட்டு பாருங்கள். அக்காட்சியை இப்பாடல் தான் உயிர்ப்பித்தது அப்படியே தெரிகிற//

புரியல பாஸ்

இசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும்//

I agreed

வித்தியாசமான தெரிவுகள்

என்ன பாஸ் தொடர்ந்து பாடலில் இறங்கிட்டிங்க


இதையும் படிச்சி பாருங்க

ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

அருமை....அண்ணா......!

எப்படி அண்ணா ரசனைகள் ஒன்றாய் இருக்கின்றன......

இனியவன் இசையில் அமைந்த அந்த ஆல்பத்தில் வைரமுத்து மரம் பற்றிய கவிதை ஒன்றும் பாடலாக்கப்பட்டுள்ளது...அதுவும் அருமை....கேட்டுப்பாருங்கள்....

நல்ல பாடல் தேர்வுகள்..
தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Rajeevan said...

இன்று உண்மையிலேயே என்னை அழவைத்துவிட்டீர்கள் சுதா! அன்பு நண்பன் இசையரசனின் பாடலை மீண்டும் கேட்டு, மனசே வெடித்து விட்டது. இசையரசன் இன்று உயிருடன் இல்லை. இசையமைப்பாளரும் நண்பனுமாகிய இசைப்பிரியன் ( மயூரன் ) இப்போது நான்கு சுவர்களுக்குள்! நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

Meena said...

லஸ்ஸன லஸ்ஸன கேட்டேன் நன்றாக இருந்தது. நன்றி

அனைத்துப் பாடல்களும் சிறப்பான தேர்வு

பகிர்வுக்கு நன்றி நண்பரே

தமிழ்மணத்தில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் மற்றும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா.....

உங்களுக்கு பிடித்த 10 பாசல்களில் பத்து பாடல்களில் நான்கு பாடல்களுக்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளது மகிழ்ச்சி.

Anuthinan S said...

அருமையான,வித்தியாசமான பாடல் தெரிவுகள் அண்ணா!!!


தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

வைகை said...

வித்தியாசமான பாடல்களின் தொகுப்பு சகோ!

வைகை said...

தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

poottuththaakkungka போட்டுததாக்குங்க

சிறப்பான பதிவு

நல்ல தேர்வு .

THOPPITHOPPI said...

அருமை

தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

KANA VARO said...

நல்ல தெரிவுகள் சுதா! தமிழ்மணத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்.

எல்லா பாடல் தேர்வுகளும் அருமை சகோ!!

அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாழ்த்துக்கள்

மதி...! 1 ) lassana lassana) சாங் இப்ப தான் கேட்டேன்...சூப்பர் ஆ இருந்தது...இலியானா பார்த்து கொஞ்சம் குழம்பிட்டேன் முதலில்..அப்புறம் அந்த படகாட்சியில் இந்த ஆல்பம் மிக்ஸ் பண்ணது புரிஞ்சது...:))

2) அழுவதற்கென்றே எவரும் வந்து” ம்ம்..இப்ப இதையும் பார்த்தேன்...என்னவோ ரொம்ப நெகிழ்ச்சியாவும் இருந்தது...வரிகள் எல்லாம் ரொம்ப என்கரேஜ் பண்றமாதிரி இருந்தது...msv சார் இசை சாயலில் இந்த இசையை அவதானித்தேன்...
வித்யாசமான இரு பாடல்களை நான் இந்த பதிவில் கண்டேன்...நன்றி மதி...Happy Newyear...அடுத்த ஆண்டு வெகு சுகமாக இருக்க என் வாழ்த்துக்கள் :))

அருமையான பதிவு சகோதரம்

"அழுவதற்கென்றே எவரும் வந்து"

கண்ணீரோடு கலந்த மறக்க முடியாத பாடல் ஒன்று

//அத்துடன் பாண்டிச்சேரி வலைப்பூவனது தனது சஞ்சிகையில் எனது விமர்சனத்தையும் இட்டுள்ளது//

வாழ்த்துக்கள் சகோதரம் தமிழ் மணத்திலும் வாக்குகள் வழங்கியாச்சு

வாழ்த்துக்கள்

dineshkumar said...

நல்ல தேர்வு சகோ நான் வாக்களித்துவிட்டேன் தங்களுக்கு

சுவாரஸ்யமான படவரிசை தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றி. இனிய முன்கூட்டிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

நல்ல தொகுப்பு..

Lakshmi said...

மிகவும் வித்யாசமான,அதேசமயம்
மிக அருமையான் பாடல்களின் தெரிவு.
நல்ல ரசனை உங்களுக்கு.

Jana said...

அருமையான பாடல் தெரிவுகள் சுதா. இப்போதும் உங்கள் மனம் கவர்ந்த ஒரு பாடலை மிஸ் பண்ணிவிட்டீர்களே???

தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

மிக அருமையான் பாடல்களின் தெரிவு.
தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்....

கலக்கல்... நீளமான பதிவு... பாடல்கள் தொகுப்பாய் நன்று.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

http://vayalaan.blogspot.com/2010/12/blog-post_29.html

படிச்சிட்டு திட்டப்படாது.

எப்பூடி.. said...

உங்களுக்கு பிடித்த 10 பாசல்களில் பத்து பாடல்களில் நான்கு பாடல்களுக்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளது மகிழ்ச்சி

நானும் வழிமொழிகிறேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்

நல்ல ரசனையான தேர்வு ..

அனைத்தும் கலக்கலான தேர்வு ///

Balavasakan said...

அத்தனையும் எனக்கும் பிடித்த பாடல்கள்,,,, தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

உனக்கென இருப்பேன் எனக்கு பிடித்த பாடல்.

அருமையான் பாடல்கள் தெரிவு நண்பா

தமிழ்மணத்தில் வெற்றிவகை சூடா வாழ்த்துக்கள் நண்பா
2010-ன் சிறந்த 20 பாடல்கள்

"காதல் வந்தால் சொல்லியனுப்பு", "யார் யார் சிவம்", "நீயா பேசியது", "சரசுக்கு ரா ரா..." இதெல்லாம் எப்பவுமே கேட்கலாம் பாஸ்!

ஜீ... said...

நல்ல தெரிவுகள்! 'ஆயிரம் தான்', 'அழுவதற்கென்றே எவரும் வந்து' இப்பொது தான் கேட்டேன்!
தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு (ஐ.சி.யும் கிடைக்க) வாழ்த்துக்கள்! :-)

நல்ல பாடல் தேர்வுகள்.

தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Prem said...

அற்புதமான பாடல் தெரிவுகள்.... உங்கள் தமிழ்மணத்திற்கான் இடுகைகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!!

நல்ல தொகுப்பு நண்பரே...

தமிழ்மணத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

ஹேமா said...

சுதா....மிக மிக அருமையான தெரிவுகள்.சும்மா தேடி எடுக்காமல் மனதில் பதிந்து எடுத்த தேடல்கள்.உண்மையில் ரசித்தேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எங்கள் ரத்த சொந்தம் ம.தி. சுதா அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top