Thursday, 2 December 2010

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

          இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
           இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.
இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.

பொருட்கள்
தற்போதை விலை
வன்னி விலை (சராசரி)
அரிசி
60 ரூபாய்
5500 ரூபாய்

மா
75 ரூபாய்
6500 ரூபாய்

சீனி
96 ரூபாய்
5000 ரூபாய்
தேயிலை
420 ரூபாய்
4500 ரூபாய்
செத்தல்
180 ரூபாய்
16000 ரூபாய்
தேங்காய்
30 ரூபாய்
2500 ரூபாய்
தங்கம் ஒரு பவுண்
41000 ரூபாய்
2500 ரூபாய்
சாதாரண பருப்பு
160 ரூபாய்
4500 ரூபாய்
தேநீர்
10 ரூபாய்
60 ரூபாய்
பால் தேநீர்
20 ரூபாய்
100 ரூபாய்
றொட்டி
10 ரூபாய்
50 ரூபாய்
பெற்றோல்
132 ரூபாய்
20 ரூபாய்

           இதில் ரசிக்கக் கூடிய ஒரு விலைப்பட்டியலும் இருக்கிறது. ஒரு ஹீரோ கொண்ட (HERO HONDA MOTER BIKE) உந்துருளியின் விலை தெரியுமா..? ஒரு நபர் இரண்டு தேங்காய்களைக் கொடுத்து ஒரு உந்துருளியைப் பெற்றுக் கொண்டார். இன்னொரு நபர் தனது ஆட்டோவை மூன்று தேங்காய்களுக்கு விற்றார்.
           இது போர் என்பது எவ்வளவு கொடுரமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். ஷெல் விழுந்து இறந்ததையே குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் பட்டினியால் இறந்ததை கணக்கிலெடுப்பதில்லை. எத்தனையோ தகப்பன்கள் தம் பிள்ளையின் உணவுக்காய் போய் மாண்ட கதையிருக்கிறது. இப்போதும் கூட உடல் சிதறிப் பலியான தன் கணவன் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொட்டுடன் வாழும் விதவைகளும் இருக்கிறார்கள்.
வாருங்கள் கடைசியாக ஒரு குட்டிக் கதை
ஒரு சிறுவனுக்கு இன்னொரு சிறுவன் நகங்களை வெட்டிக் கொண்டிருந்தானாம் அதுவும் சாதாரணமாக இல்லை மிக மிக வேகமாக அதை எட்ட இருந்து பார்த்த ஒரு கூட்டம் கை தட்டி உற்சாகப்படுத்தியது. அவன் உற்சாகத்தில் இன்னும் வேகமாக வெட்ட ஆரம்பித் தான் அப்போது அவன் தசையும் வெட்டப் பட்டது இரத்தம் கசிந்தது அவன் அழுதான் ஆனால் அவன் அழுததை அந்த போட்டி உற்சாகம் அவர்களை கவனிக்கத் தடுத்து விட்டது. இறுதியாகத் தான் அந்தக் கூட்டம் இதைக் கண்டது அப்போது இந்தப் போட்டிக்கு சூதாட்டம் கட்டிய ஒருவன் சொன்னானாம். சண்டை என்றால் சட்டை கிழியும் தானே.
தங்கள் கருத்துக்களையும் இதற்கான வாக்குகளையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன்

குறிப்பு – கருத்துக்கள் தணிக்கைக்குட்பட்டவையே பிரசுரிக்கப்படும். அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர்.

 அப்புறம் எனது நண்பன் தந்தான் அல்லது எனது செய்தியாளர் தந்தான் பிரசுரித்தேன் என்றெல்லாம் கதைவிடக் கூடாது இன்று முதலாவது தங்களுக்கு வரும் தகவலை ஒரு முறை கூகுல் செர்ஜ்ஜில் போட்டுப் பார்த்துவிட்டுப் போடவும்.

இந்த வார சிறந்த வலையமைப்புகளுக்கான பட்டியலில் 10 வது இடம் தந்த தமிழ் மணத்திற்கு  என் நன்றிகள்.. அத்துடன் என்னை அறிமுகப்பதிவராக அறிமகப்படுத்திய மாதவராஜ் அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்...

UPDATE
அன்புச் சகோதரர்களுக்கு......
நான் குறிப்பில் இவ்வளவு கடுமையான விதிமுறை போட்டிருப்பதற்கான காரணம் எனது பழைய ஆக்கம் ஒன்றான அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! என்ற ஆக்கத்தை 7 தளங்கள் அசினுக்கெதிரான பிரச்சாரத்திற்காகவும் தமிழரை பாழாக்கும் வேறுசில காரணங்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்டன. அது எனக்கு பெரிய சங்கடத்தை உருவாக்கியிருந்தமையே இந்த முடிவுக்குக் காரணமாகும்.

நன்றி

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

94 comments:

Unknown said...

புதிய விஷயம் சுதா! உங்கள் குட்டிக் கதை நல்லா இருக்கு!

Unknown said...

வெட்டப்பட்ட தசைக்கு அல்ல விரல்களுக்கு இப்போ காலம் கடந்து அனுதாபப் படுபவர்களும், இன்னும் கூட சண்டை என்றால் சட்டை கிழியும் தானே என்பவர்களும்.
ஆமா அதை எட்ட இருந்து பார்த்த ஒரு கூட்டம் கை தட்டி உற்சாகப்படுத்திய கூட்டம் , பாதிக்கப் பட்டவனின் சொந்தங்கள் தான இல்லையா?

Kiruthigan said...

இத மாதிரி பதிவுகளை தான் ரொடப எதிர்பார்க்கிறோம் ம.தி சுதா...
எழுத தகுதியானவரும் நீங்களே.
தங்கம் விலை ஆச்சரியப்பட வைச்விடிச்சு..
அங்கே மனித உயிர்களே விலைமதிப்பில்லாம இருந்துதாமே உண்மையா?

எப்பா............................

KANA VARO said...

நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை யாழிலும் 2006ம் ஆண்டு பாதை பூட்டிய பின் ஏற்பட்டது தானே!

Unknown said...

//KANA VARO said...
நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை யாழிலும் 2006ம் ஆண்டு பாதை பூட்டிய பின் ஏற்பட்டது தானே//

யாழ்ல இந்த அளவுக்குப் போகல.

தேங்காஎண்ணெய் - 1500
பெட்ரோல் - 500௦௦
வெள்ளை வெங்காயம் - 1500
செத்தல் - 2000

அப்பிடின்னு ஒரு நியாயமான(?!) விலைதான் போச்சு

nis said...

யப்பா, இதென்ன கொடுமை. செத்தல் 16000 ரூபாவா,
ஆர்யா படத்தில வடிவேலு கரட் வித்தவனுக்கு அடித்த மாதிரி , இவ்வளவு விலைக்கு வித்த கடைக் காரங்களுக்கு நல்ல மொத்து மொத்தனும்.

வைகை said...

உணரமுடியுது மதி!! எங்களை நம்ப வைக்கவே இவ்வளவு சிரமப்படும் நீங்கள், இதை அனுபவிக்க எவ்வளவு சிரமப்பட்டுருக்கீர்கள் என்று!!! இதற்காக அனுதாபப்படக்கூட எங்கள் அரசியல்வாதிகள் எங்களை தகுதுயானவர்கலாக வைக்கவில்லை!!!

sudha super post

>>>>குறிப்பு – கருத்துக்கள் தணிக்கைக்குட்பட்டவையே பிரசுரிக்கப்படும். அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர்.

haaha haa

kalakkal

விலை கண்டு வருத்தம் கொள்கிறேன்!

Unknown said...

இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்//
ஆரம்பமே பயமுறுத்துதே..என்னுடைய போஸ்டும் நிறைய திருட்டு போய் விட்டது...

Unknown said...

என்ன கொள்ளை விலை?

Unknown said...

அங்கு அதிபர் மாத்திரமே சுகமாக இருக்கிறாரா..

நல்ல தகவல் மதி....

பகிர்வுக்கு மிக்க நன்றி

Jana said...

அந்த இருண்ட காலங்கள்....! பெருமூச்சுமட்டுமே விடமுடிகின்றது.

karthikkumar said...

மனித உயிர்களுக்கு கூட அங்கு இந்த மதிப்பு இல்லையா. நல்ல கேள்வி

இன்னும் மூடி வைக்கப்பட்ட கொடுமைகள் எவ்வளவோ ..........

வினோ said...

இன்னும் எவ்வளவு இருக்கோ :(

கொடுமையான விலை...

எத்தனை பேர் பட்டினியால் இறந்தார்களோ....

மிக நல்ல பதிவு!

படிக்கும்போதே கஷ்டமா தான் இருந்தது விலைபட்டியல்..ம்ம்...

இந்த விலைபட்டியல் போர்கால சுவடுகளை இன்னும் புரியவைக்குது...

தேவையான பதிவு, புகையிலை விலையையும் சேர்த்துக்கோங்க.

இவ்வளவு விலையா?
புதுசா இருக்கே!

இன்னும் வெளிவராதவை ஏராளம் உண்டு சுதா.... உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்....

R. Gopi said...

\\இது போர் என்பது எவ்வளவு கொடுரமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.\\

இந்த சிறிய உதாரணமே ரத்தத்தை உறையச் செய்கிறது.

சுதா!!!
சுதா சகல சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு கணினியின் முன்னால் இருந்துகொண்டு விசைப்பலகையை தட்டும் எங்களுக்கு உவை கதையாய் அல்லது சம்பவமாகத்தான் தெரியுமே ஒழிய அவலமாகத் தெரிய சந்தர்ப்பமேயில்லை.

அன்று எங்களுக்காக அர்ப்பணிப்புக்கள் செய்தவர்களை இன்று விமர்சிக்கும் நாங்கள் ஒரு மானிட ஜாதியா???
என்ன செய்வது இது எமதினத்திற்கு ஒரு சாபக்கேடாகவே கருத முடிகிறது.

உங்களது இந்த அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

Chitra said...

உங்கள் இடுகையை வாசித்து விட்டு, இன்னும் மீளவில்லை. எப்படி சமாளிக்க முடியும்?

மணம் சொல்லவோணா வேதனை படுகிறது சுதா!

வணக்கம் சுதா!

நான் கருத்துக்கள உறுப்பினராக இருக்கும் யாழ் இணையத்தளத்தில் உங்களது இந்த ஆக்கத்தை பதிவுசெய்ய உங்களது அனுமதி கிடைக்குமா???

நன்றி.

sinmajan said...

மரணங்கள் மலிந்த பூமியில்..
மனித உயிர் தான் மலிவானது.. :(

Anonymous said...

உலகில் எல்லா இடங்களிலும் போரின் கொடுமைகள் சாதாரண மக்கள் இடமே திணிக்க படுகிறது .
ஈராக் போரின் போது அங்கு (1 loaf)பிரட் $10(US) விற்றதாக படித்த நாபகம் .

vanathy said...

என்னத்தை சொல்ல? மக்களுக்கு எப்பதான் விடிவு கிடைக்குமோ தெரியவில்லை!

எவ்வளவு வசதியாக இருக்கிறோம் நாங்களெல்லாம். நினைக்கவே பயமாக இருக்கிறது. நான் எழுதிய கவிதையின் கடைசி வரியின் பொருளை நானே இப்போது தான் உணர்கிறேன்.
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/blog-post.html

Anonymous said...

வேதனை நண்பா :(

ஒரு cooler கொடுத்திட்டு 3 தேங்காய் வாங்கின கதையும் இருக்கடாப்பா

Unknown said...

வெட்டப்பட்டவை நகங்கள் மட்டுமல்ல மனித நேயமும் தான்.

போர் என்றால் என்ன என்று அறியாத இன்றைய தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் சொன்ன செய்தி வித்தியாசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

sirantha pathivarukku vazhthukkal.

போர் , சண்டை , சாவு ................ இதெல்லாம் சொல்லிப்புரிய வைக்க முடியாது சார் .... இந்த இடுக்கையில் போரின் தீவிரம் பற்றி தெரிந்து கொண்டோம் ...........

ஹேமா said...

குட்டிக் கதை கதை சொல்கிறது சுதா.இன்னும் சொல்ல நிறையவே இருக்கு எங்களைப்பற்றி !

Unknown said...

நல்ல பதிவு.

Unknown said...

//இது போர் என்பது எவ்வளவு கொடுரமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். ஷெல் விழுந்து இறந்ததையே குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் பட்டினியால் இறந்ததை கணக்கிலெடுப்பதில்லை. எத்தனையோ தகப்பன்கள் தம் பிள்ளையின் உணவுக்காய் போய் மாண்ட கதையிருக்கிறது. இப்போதும் கூட உடல் சிதறிப் பலியான தன் கணவன் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொட்டுடன் வாழும் விதவைகளும் இருக்கிறார்கள்.//

மிக்க வலியை உண்டாக்கிய வரிகள்..

Unknown said...

//தங்கம் விலை ஆச்சரியப்பட வைச்விடிச்சு..
அங்கே மனித உயிர்களே விலைமதிப்பில்லாம இருந்துதாமே உண்மையா?//

Unknown said...

//இதற்காக அனுதாபப்படக்கூட எங்கள் அரசியல்வாதிகள் எங்களை தகுதியானவர்கலாக வைக்கவில்லை!!!//

jee said...

அன்புடன் சுதா அருமையான பதிவு அழிவுகளின் கோரத்தை இப்படியும் செல்லலாம் என்பதை காட்டியுள்ளீர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ..........

pichaikaaran said...

போர் என்ற கொடூரத்தையும் அதன் அவலத்தையும் ஒவ்வொரு முறை அறியும்போதும் அதிர்ச்சியாகவே இருக்கிறது

நல்ல பதிவு. எம்மவர்கள் பட்ட துயர் விலைப்பட்டியலிலும் வெளிப்டுகிறது.

THOPPITHOPPI said...

/////
இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
//////

நல்ல பதிவுகள் மற்றவர்களிடம் எப்படியாவது சென்றடையட்டும்.

Unknown said...

மிகவும் நல்ல பதிவுங்க..

விலைப்பட்டியல் மலைக்கச் செய்கிறது.. ரொம்பக் கொடுமை..

Unknown said...

எதைக் கூறுவது ?

பதிவுக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரன்

ரொம்பக் கொடுமை சார் இது! போரினால் வந்த மரணத்தை விட பட்டினிச்சாவு, கொடூரம்...! இது போன்றபதிவுகள் அடிக்கடி போடுங்க நண்பா... !

இந்தனைக் கொடுமையிலும் தங்கத்தின் விலை ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது!

கொடுமை..

கொடுமை கொடுமை

//பொட்டுடன் வாழும் விதவைகளும் இருக்கிறார்கள்//

மனம் கனக்கிறது நண்பா

படித்ததும் மனசு கனத்தது நண்பா...
அந்த வேதனை அருகிலிருந்து உணரும்போதுதான் தெரியும்... தமிழ்மண சிறப்புக்கு வாழ்த்துக்கள்.

//இது போர் என்பது எவ்வளவு கொடுரமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். ஷெல் விழுந்து இறந்ததையே குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் பட்டினியால் இறந்ததை கணக்கிலெடுப்பதில்லை. எத்தனையோ தகப்பன்கள் தம் பிள்ளையின் உணவுக்காய் போய் மாண்ட கதையிருக்கிறது. இப்போதும் கூட உடல் சிதறிப் பலியான தன் கணவன் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொட்டுடன் வாழும் விதவைகளும் இருக்கிறார்கள்.//

மனது வலிக்கிறது நண்பா

உணர்வுகளை வலிகளுடன் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

தொடரட்டும் உங்கள் பணி

ஜீ... said...
புதிய விஷயம் சுதா! உங்கள் குட்டிக் கதை நல்லா இருக்கு!

...............

இது சிலரை குட்டப் போட்ட கதை தானே

Cool Boy கிருத்திகன். said...
இத மாதிரி பதிவுகளை தான் ரொடப எதிர்பார்க்கிறோம் ம.தி சுதா...
எழுத தகுதியானவரும் நீங்களே.
தங்கம் விலை ஆச்சரியப்பட வைச்விடிச்சு..
அங்கே மனித உயிர்களே விலைமதிப்பில்லாம இருந்துதாமே உண்மையா?

................

நன்றி சகோதரா...

ஜீ... said...
வெட்டப்பட்ட தசைக்கு அல்ல விரல்களுக்கு இப்போ காலம் கடந்து அனுதாபப் படுபவர்களும், இன்னும் கூட சண்டை என்றால் சட்டை கிழியும் தானே என்பவர்களும்.
ஆமா அதை எட்ட இருந்து பார்த்த ஒரு கூட்டம் கை தட்டி உற்சாகப்படுத்திய கூட்டம் , பாதிக்கப் பட்டவனின் சொந்தங்கள் தான இல்லையா?

............

அப்படியும் இருக்கலாம்...

சசிகுமார் said...
எப்பா............................
...................

நன்றி சகோதரா..

KANA VARO said...
நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை யாழிலும் 2006ம் ஆண்டு பாதை பூட்டிய பின் ஏற்பட்டது தானே!

.................

ஆமாம் கேள்விப்பட்டேன்..

ஜீ... said...
//KANA VARO said...
நல்ல பதிவு. கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை யாழிலும் 2006ம் ஆண்டு பாதை பூட்டிய பின் ஏற்பட்டது தானே//

யாழ்ல இந்த அளவுக்குப் போகல.

தேங்காஎண்ணெய் - 1500
பெட்ரோல் - 500௦௦
வெள்ளை வெங்காயம் - 1500
செத்தல் - 2000

அப்பிடின்னு ஒரு நியாயமான(?!) விலைதான் போச்சு

...................

ஆமாம் சகோதரா...

nis said...
யப்பா, இதென்ன கொடுமை. செத்தல் 16000 ரூபாவா,
ஆர்யா படத்தில வடிவேலு கரட் வித்தவனுக்கு அடித்த மாதிரி , இவ்வளவு விலைக்கு வித்த கடைக் காரங்களுக்கு நல்ல மொத்து மொத்தனும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ

எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
அது தான் உண்மை சகோதரா.

வைகை said...
உணரமுடியுது மதி!! எங்களை நம்ப வைக்கவே இவ்வளவு சிரமப்படும் நீங்கள், இதை அனுபவிக்க எவ்வளவு சிரமப்பட்டுருக்கீர்கள் என்று!!! இதற்காக அனுதாபப்படக்கூட எங்கள் அரசியல்வாதிகள் எங்களை தகுதுயானவர்கலாக வைக்கவில்லை!!!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ

அந்த அன்பு ஒன்றே போதுமானதே..

சி.பி.செந்தில்குமார் said...
sudha super post

>>>>குறிப்பு – கருத்துக்கள் தணிக்கைக்குட்பட்டவையே பிரசுரிக்கப்படும். அத்துடன் இந்த ஆக்கத்தை அனுமதியின்றி பாவிப்பவர்கள் திருடர்களாகவே கருதப்படுவர்.

haaha haa

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ

எல்லாம் நம்மவருக்காகத் தான்...

சி.பி.செந்தில்குமார் said...
kalakkal

ஷஷஷஷஷஷஷஷஷ

நன்றி சகோதரம்....

தேவன் மாயம் said...
விலை கண்டு வருத்தம் கொள்கிறேன்!

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ

கருத்துக்க நன்றி சகோதரம்....

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்//
ஆரம்பமே பயமுறுத்துதே..என்னுடைய போஸ்டும் நிறைய திருட்டு போய் விட்டது...

ஷஷஷஷஷஷஷஷஷ

மற்றவன் சட்டியில் அப்பளம் பொரிப்பதே பலர் வேலையாகிவிட்டது....

ஆர்.கே.சதீஷ்குமார் said...
என்ன கொள்ளை விலை?

ஷஷஷஷஷஷஷஷஷஷஷஷஷ

உண்மையில் உயிர்கள் தான்...

ஆமினா said...
நல்ல தகவல் மதி....

பகிர்வுக்கு மிக்க நன்றி

ஷஷஷஷஷஷஷஷ

நன்றி சகோதரம்...

Jana said...
அந்த இருண்ட காலங்கள்....! பெருமூச்சுமட்டுமே விடமுடிகின்றது.

ஷஷஷஷஷஷஷஷஷஷஷ

நன்றி அண்ணா..

Prabu M said...

//ஷெல் விழுந்து இறந்ததையே குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் பலர் பட்டினியால் இறந்ததை கணக்கிலெடுப்பதில்லை.//

//உடல் சிதறிப் பலியான தன் கணவன் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பொட்டுடன் வாழும் விதவைகளும் இருக்கிறார்கள்//

தாங்க‌முடிய‌வில்லை ந‌ண்பா...
ந‌ம் ந‌ட்பு ஆழ‌மாக‌ப் ப‌ய‌ணிக்க‌ட்டும்....

ஒருபோரின் பொருளாதார‌ வீழ்ச்சி.. த‌லைமேல் விழும் குண்டுக‌ளைவிட‌க் கொடூர‌மான‌து என்ப‌தை என் இன‌ம் அனுப‌வித்தா நான் உண‌ர‌வேண்டும்??? கொடுமை...

சொல்ல‌ வார்த்தைக‌ள் இல்லை ம‌தி.சுதா... உன்னை ந‌ண்ப‌னாக‌ப் பெற்ற‌மைக்குப் பெருமைப் ப‌டுகிறேன்...

உண்மையுட‌ன்,
பிர‌பு எம்

கொடுமைகளை அருகில் இருந்து பார்த்தவன் என்பதால் வெளி உறவுகள் மன கிடக்கைகளை பதியும் வரை காத்திருந்தேன்.....

அனுமன் ஒருமுறை எரித்த நாட்டில் இன்று உயிர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன....(மனதுக்குள்)

karthikkumar said...
மனித உயிர்களுக்கு கூட அங்கு இந்த மதிப்பு இல்லையா. நல்ல கேள்வி

ஸஸஸஸஸஸஸஸஸ

சிந்திக்க வைத்தது.... நன்றிங்க...

dineshkumar said...
இன்னும் மூடி வைக்கப்பட்ட கொடுமைகள் எவ்வளவோ ..........

ஸஸஸஸஸஸஸ

நிறைய தெரிந்தும் அடக்கி வாசிக்கிறார்கள்....

வினோ said...
இன்னும் எவ்வளவு இருக்கோ :(

ஸஸஸஸஸஸஸஸ

நிச்சயமாக....

சங்கவி said...
கொடுமையான விலை...

எத்தனை பேர் பட்டினியால் இறந்தார்களோ....

ஸஸஸஸஸஸஸஸஸ

உண்மையாகத் தான் சகொதரா.. பெரிய கோடுகள் சிறிய கோடுகளை மறைத்த விடும்...

எஸ்.கே said...
மிக நல்ல பதிவு!

ஸஸஸஸஸஸஸஸ

நன்றியுங்கோ...

ஆனந்தி.. said...
படிக்கும்போதே கஷ்டமா தான் இருந்தது விலைபட்டியல்..ம்ம்...

ஸஸஸஸஸஸஸஸ

நன்றி அக்கா...

ஆனந்தி.. said...
இந்த விலைபட்டியல் போர்கால சுவடுகளை இன்னும் புரியவைக்குது..

ஸஸஸஸஸஸஸஸஸ

இதே இன்னும் பலருக்கு புரியலியே....

எப்பூடி.. said...
தேவையான பதிவு, புகையிலை விலையையும் சேர்த்துக்கோங்க.

ஸஸஸஸஸஸஸஸஸஸ

ஆமாம் சகோதரா... ஒரு கிள்ளுப் புகையிலை 150 ரூபாவிலிருந்து இருந்தது...

அன்பரசன் said...
இவ்வளவு விலையா?
புதுசா இருக்கே!

ஸஸஸஸஸஸஸஸஸஸஸ

அது தான் சகோதரா போர் என்பது...

பிரஷா said...
இன்னும் வெளிவராதவை ஏராளம் உண்டு சுதா.... உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்....

ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி அக்கா...

Gopi Ramamoorthy said...
\\இது போர் என்பது எவ்வளவு கொடுரமானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.\\

இந்த சிறிய உதாரணமே ரத்தத்தை உறையச் செய்கிறது.

ஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி சகோதரா...

mainthan said...
சுதா!!!
சுதா சகல சுகபோகங்களையும் அனுபவித்துக்கொண்டு கணினியின் முன்னால் இருந்துகொண்டு விசைப்பலகையை தட்டும் எங்களுக்கு உவை கதையாய் அல்லது சம்பவமாகத்தான் தெரியுமே ஒழிய அவலமாகத் தெரிய சந்தர்ப்பமேயில்லை.

அன்று எங்களுக்காக அர்ப்பணிப்புக்கள் செய்தவர்களை இன்று விமர்சிக்கும் நாங்கள் ஒரு மானிட ஜாதியா???
என்ன செய்வது இது எமதினத்திற்கு ஒரு சாபக்கேடாகவே கருத முடிகிறது.

உங்களது இந்த அற்புதமான முயற்சிக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

ஸஸஸஸஸஸஸஸஸஸஸ

நன்றி அண்ணா....

Chitra said...
உங்கள் இடுகையை வாசித்து விட்டு, இன்னும் மீளவில்லை. எப்படி சமாளிக்க முடியும்?

ஸஸஸஸஸஸஸஸஸஸஸஸ

ஆமாம் அக்கா இவை போரின் சில வடுக்களே...

மோகன்ஜி said...
மணம் சொல்லவோணா வேதனை படுகிறது சுதா!

நன்றி சகோதரா....

நிதர்சனமான நிஜத்தை கண் முன் கொண்டு வந்த பதிவு!

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Anonymous said...

பொய்யும் புரட்டுமாக கண்டதையும் எழுதும் நீ எல்லாம் ஒரு மனுசனா. முக்கியமான வேலையா பிரபுதேவா எத்தனை பெண்களுடன் குடும்பம் நடத்தினான் என்று எழுதிற உனக்கு ஹிட் தேவைக்கு வன்னி ஒரு கருவி son of a bitch

////அனாமிகா துவாரகன் said...
பொய்யும் புரட்டுமாக கண்டதையும் எழுதும் நீ எல்லாம் ஒரு மனுசனா. முக்கியமான வேலையா பிரபுதேவா எத்தனை பெண்களுடன் குடும்பம் நடத்தினான் என்று எழுதிற உனக்கு ஹிட் தேவைக்கு வன்னி ஒரு கருவி son of a bitch

21 April 2011 12:52/////

hello உமக்கு என்னை ஏசுவதற்கு மட்டும் தான் முழு அனுமதியுமளிக்கப்பட்டிருக்கிறது என் தாயை ஏச எந்த அதிகாரமுமில்லை தேவையின்றி வருத்தப்பட வேண்டியிருக்கும்...

ஐயர் வீட்டில் கோழி முட்டை விற்கக் கூடாதென உங்களுக்கு யார் சொன்னது...

அனாமிகா துவாரகன் ,

என்ன நீர் ஒரு தமிழ் உணர்வாளர் என்று மாலை போட வேண்டுமா? உம்முடைய குருட்டு தனமான அரசியல் புரசல் இந்த ஓடையை அசைக்க முடியாது. மரியாதையை தெரியாத பதிவர்க்களுக்கு தள வசதி தேவை தானா? முதலில் நல்ல மன நோய் வைத்தியரை அணுகவும்......

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top