Friday, 8 October 2010

காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

                       ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
                     சில வேளை அசண்டையீனமாக வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்குக் கதைப்பதற்காக முழிப்போம். நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.
                    முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன் இது ஒரு விஞ்ஞானக் கண்டபிடிப்பல்ல.
                    இதற்கு முக்கிய நிபந்தனை தங்கள் கைப்பேசி மின் போதாதெனச் சொல்லி தன்னைத் தற்கொலை செய்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு தாள் காசை எடுத்துக் கொள்ளுங்கள் (இங்கு இதற்கும் ஒன்று சொல்வார்கள் 10 ரூபாய் தாளில் செய்தால் தான் மின் ஏறுமாம்) பின் அக்காசை படத்திலுள்ளவாறு புனல் போல் சுருட்டிக் கொள்ளுங்கள். பின்னர் தங்கள் கைப்பேசியின் உறையை கழற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மின்கலத்தையும் நீக்கிய பின் அந்த மின் கலத்துடன் தொடபில் இருக்கும் மின் கம்பிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதன் நடுக் கம்பியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
                        இப்போது படத்திலுள்ளவாறு தாங்கள் சுருட்டிய காசை நடுக்கம்பியினுள் சற்று உட் செலுத்தி வையுங்கள் (இழுக்கக் கூடியவாறு). பின்னர் வழமை போல் மின் கலத்தை செருகுங்கள். இப்பொது எல்லாம் தயார் சடுதியாக (ஒரு கணநேரத்திற்குள்) தாளை இழுங்கள். சரி விசயம் முடிந்த விட்டது. இப்பொது தற்கொலை செய்து கொண்ட கைப்பேசிக்கு உயிர் கொடுங்கள். இரண்டு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கும். இதுவே கீரி ரக கைப்பேசியாக இருந்தால் இன்னும் நல்ல விளைவை எதிர் பார்க்கலாம். என்ன குழம்பீட்டிங்களா..??? நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும்.
                                அடுத்த விடயம் என்னவென்றால் இதற்கான காரணமாக நான் கருதுவது. உராய்வால் வரும் இலத்திரன் பாய்ச்சலாகும். ஏனெனில் இலத்திரன் மறை ஏற்றம் (-) கொண்டது. நாங்கள் செருகும் பகுதி நேர் எற்றம் (+) கொண்டது. இரண்டுக்குமிடையேயான தொடர்பு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன் அனால் நண்பர்கள் வெவ்வெறு காரணம் சொல்கிறார்கள். என் வாசகர் வட்டத்தில் பல விசயம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் அவர்களில் யாராவது தமக்குத் தெரிந்ததை என்னுடன் பகிருங்கள்.

முக்கிய குறிப்பு – என் நெருங்கிய நண்பன் ஒருவன் சொன்ன தகவல் அதாவது சாதாரணமாகக் கதைக்கும் கைப்பேசியை விட மின் குறைந்த கைப்பேசியில் 1000 மடங்கு கதிர் வீச்சு அதிகமாம்... சில நாட்களுக்க முன் சித்திராக்கா (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) கைப்பேசியால் சோளப் பொரி (பொப் கொர்ன்) செய்து காட்டியதை மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
                         இனி என்ன சொல்லுவென் என நினைக்கிறிங்க வழமை போல் வாக்குத் தான் ஏனெனில் யாம் பெற்ற இன்பம் வையகம் பெற வேண்டாமா..?
                    முக்கியமாக இன்னமொன்று எனது 50 வது பதிவு தயாராகிவிட்டது. கொஞ்சம் சூடு தேவைப்பட்டதால் ஒரு சிக்கலான விடயத்தை கையில் எடுத்துள்ளேன். வரும் ஞாயிறு யாழ்ப்பாண நேரம் பிற்பகல் 5 மணிக்கு பிரசுரிக்கப்படும். தலைப்பறிய கீழே உள்ள படத்தைப் பாருங்கள்..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

67 comments:

அவசரத்தில் மிக அவசியமாக இம்முறை உதவும் அருமை ...

Riyas said...

தகவல்களுக்கு நன்றி..நணபா..

Bavan said...

அட.. இதைக் காசால் ஏதோ செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் செய்து பார்த்ததில்லை.. விளக்கமாகப்பதிவிட்டமைக்கு நன்றி.. செய்து பாப்போம்..:D

புதிய மனிதா.. said...
////அவசரத்தில் மிக அவசியமாக இம்முறை உதவும் அருமை ...////
வருகைக்கு நன்றி சகோதரா முயற்சியுங்கள் கட்டாயம் வெற்றி கிட்டும்.

Riyas said...
ஃஃஃஃதகவல்களுக்கு நன்றி..நணபா..ஃஃஃ
வருகைக்கு நன்றி சகோதரா

Bavan said...
ஃஃஃஃஅட.. இதைக் காசால் ஏதோ செய்யலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் செய்து பார்த்ததில்லை.. விளக்கமாகப்பதிவிட்டமைக்கு நன்றி.. செய்து பாப்போம்..:Dஃஃஃஃ
வருகைக்கு நன்றி சகோதரா.. கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

இது விபரீத முயற்சி. பணம் தீப்பிடிக்காமல் இருந்தால் சரிதான். அதிலும் குறிப்பாக கிழிந்துவிடாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது நலம். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

s said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

V.Radhakrishnan said...
/////இது விபரீத முயற்சி. பணம் தீப்பிடிக்காமல் இருந்தால் சரிதான். அதிலும் குறிப்பாக கிழிந்துவிடாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது நலம். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.////
சகோதரா ஒரு பயமும் வேண்டாம்.. துணிந்த செய்யுங்கள்.. பணத்திற்கு ஒரு சின்னச் சேதம் கூட வராது...

s said...
ஃஃஃஃஃஇன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்ஃஃஃஃ
என் பதிவையும் இணைத்தக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

anuthinan said...

ரொம்பவும் தேவையான விசயம்தான்!!! உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!!!

Anuthinan S said...
////ரொம்பவும் தேவையான விசயம்தான்!!! உங்களுக்கு தெரிந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!!!////
வருகைக்கு நன்றி சகோதரா.. கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்..

நான் இந்த வழிமுறையை ஒரு

வருடத்திற்க்கு முன்பே

உபயோகப்படுத்தியுள்ளேன்..

ஆனால் நண்பரெ

இது ஒரு நிமிடம் கூட வர வாய்ப்பு

இல்லை உடனே low battery

கான்பித்துவிடும்.

next shutdown தான்.

நான் ஏற்கனவே ட்ரை பண்ணியிருக்கேன்! நோக்கியா தவிர மற்ற போனுக்கு ஒர்க் ஆகலை!

Rajasurian said...

அவசியமான தகவல்தான். முயற்சித்து பார்க்கிறேன்.
தகவலுக்கு நன்றி

அவசியமான தகவல்...வாழ்த்துகள் சுதா

மிகவும் பயனுள்ள விடயம் நன்றி

பயணம் செய்யும்போது பாடல் கேட்கும் என் போன்றவர்களுக்கு இது நிச்சயம் உதவும்,நன்றி தோழரே.

அறியாத தகவல்தான் . இதை பற்றி இன்னும் விரிவான தகவலை இன்று ஒரு தகவலில் விரைவில் தர இருக்கிறேன் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

Chitra said...

நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும். ... interesting.

ஆச்சர்யமான தகவல்கள்.

.....செல் போன் கதிர் வீச்சு பாதிப்பின் முழு வீரியத்தை இன்னும் முழுமையாக பலர் புரிந்து கொள்ளவில்லை. :-(

எஸ்.முத்துவேல் said...
//////நான் இந்த வழிமுறையை ஒரு
வருடத்திற்க்கு முன்பே
உபயோகப்படுத்தியுள்ளேன்..
ஆனால் நண்பரெ
இது ஒரு நிமிடம் கூட வர வாய்ப்பு
இல்லை உடனே low battery
கான்பித்துவிடும்.
next shutdown தான்.////
வருகைக்கு நன்றி சகோதரா.
எனக்கென்னவோ பரவாயில்லை 5 நிமிடமாவது கதைக்க முடிகிறது.. செய்முறையில் கொஞ்சம் மாற்றம் செய்து பாருங்கள்...

எஸ்.கே said...
ஃஃஃஃநான் ஏற்கனவே ட்ரை பண்ணியிருக்கேன்! நோக்கியா தவிர மற்ற போனுக்கு ஒர்க் ஆகலை!ஃஃஃஃ
வருகைக்கு நன்றி சகோதரா.
நொக்கியா அளவிற்கு இல்லாவிட்டாலும் மற்ற கைப்பேசிகளுக்கும் ஒரளவு இது பதிலளிக்கிறது...

Rajasurian said...
ஃஃஃஃஃஅவசியமான தகவல்தான். முயற்சித்து பார்க்கிறேன்.
தகவலுக்கு நன்றிஃஃஃஃ
வருகைக்கு நன்றி சகோதரா.. கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

rk guru said...
வருகைக்கு நன்றி சகோதரா

Dr.எம்.கே.முருகானந்தன் said...
வருகைக்கு நன்றி ஐயா. கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

அருண் said...
ஃஃஃஃபயணம் செய்யும்போது பாடல் கேட்கும் என் போன்றவர்களுக்கு இது நிச்சயம் உதவும்,நன்றி தோழரே.ஃஃஃஃ
சகோதரா அந்தளவுக்கு சாத்தியப்படுமோ தெரியல... அவசரத்திற்கு மட்டும் தான் இது உதவும்...

Jana said...

ஜெஸ்..கேள்வி பட்டிருக்கின்றேன். பழுத்த ஆலம் இலையாலும் இது சாத்தியம் என்று சொல்லுகின்றார்கள் அதையும் ஒருக்கா ட்ரை பண்ணுங்கோ சுதா!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஃஃஃஃஅறியாத தகவல்தான் . இதை பற்றி இன்னும் விரிவான தகவலை இன்று ஒரு தகவலில் விரைவில் தர இருக்கிறேன் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்ஃஃஃஃ
சகோதரா தங்கள் மீள் வருகைக்கும்...
தங்களின் கைப்பெசிப் பதிவிற்கும் காத்திருக்கிறேன்...

Chitra said...
ஃஃஃஃஃஃஃநொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும். ... interesting.

ஆச்சர்யமான தகவல்கள்.

.....செல் போன் கதிர் வீச்சு பாதிப்பின் முழு வீரியத்தை இன்னும் முழுமையாக பலர் புரிந்து கொள்ளவில்லை. :-(ஃஃஃஃஃ
அக்கா தங்களின் ஊட்டமில்லாத எனத பதிவு எப்பொதும் முழுமை பெறுவதில்லை... நன்றி அக்கா...

Jana said...
/////ஜெஸ்..கேள்வி பட்டிருக்கின்றேன். பழுத்த ஆலம் இலையாலும் இது சாத்தியம் என்று சொல்லுகின்றார்கள் அதையும் ஒருக்கா ட்ரை பண்ணுங்கோ சுதா!////
நன்றி ஜனா அண்ணா செய்து பார்த்துவிட்டால் போச்சு.. நாளை சொல்கிறேன்.. ஆனா ஒன்று அவசரத்திற்கு இது ஒரளவு பரவாயில்லை..

Unknown said...

நல்ல தகவல்

Kiruthigan said...

பெருநிலப்பரப்பு கற்றுதந்த பல அனுபவங்களை பகிர்கிறீர்கள் நன்றி சுதா..
ஏரோப்பிளேன் தொழிநுட்பத்தயும் பதிவிட வாழ்த்துக்கள்...

Unknown said...

அட..இது நல்லாருக்கே.

karthikkumar said...

இந்த முறை சில தடவை தோற்றுவிடுகிறது நண்பா

Unknown said...

ஆகா அருமையான கண்டுபிடிப்பு
வாழ்த்துக்கள் நண்பன்

Unknown said...

//ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும்//


சிரித்துவிட்டேன்

thanks for sharing. pl write the rays which come form cell and how they affected the cell users. vaalththukkal.

Anonymous said...

//நொக்கியா என்ற சொல்லின் அர்த்தம் தான் கீரி ஆகும்//புதிய தகவல் நண்பரே!

சிநேகிதி said...
வருகைக்கு நன்றி சகோதரி..

Cool Boy கிருத்திகன். said...
ஃஃஃஃஃஃபெருநிலப்பரப்பு கற்றுதந்த பல அனுபவங்களை பகிர்கிறீர்கள் நன்றி சுதா..
ஏரோப்பிளேன் தொழிநுட்பத்தயும் பதிவிட வாழ்த்துக்கள்...ஃஃஃஃஃ
நன்றி கிருத்தி முயற்சிக்கிறேன்...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
வருகைக்கு நன்றி சகோதரா.கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

karthikkumar said...
ஃஃஃஃஃஃஇந்த முறை சில தடவை தோற்றுவிடுகிறது நண்பாஃஃஃஃ
சாத்தியமில்லை சகோதரா தாங்கள் செய்யும் முறையில் சில மாற்றம் செய்து பாருங்கள்...

மகாதேவன்-V.K said...
ஃஃஃஃஃஆகா அருமையான கண்டுபிடிப்பு
வாழ்த்துக்கள் நண்பன்ஃஃஃஃ
ஃஃஃஃஃஃ//ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும்//
சிரித்துவிட்டேன்ஃஃஃஃஃ
வருகைக்கு நன்றி சகோதரா.கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

மதுரை சரவணன் said...
ஃஃஃஃஃthanks for sharing. pl write the rays which come form cell and how they affected the cell users. vaalththukkal.ஃஃஃஃஃ
கட்டாயம் சகோதரா விரைவில் எழுத முயற்சிக்கிறேன்...
வருகைக்கு நன்றி சகோதரா.

சூப்பர இருக்கு

நல்ல வித்தியாசமான தெளிவான விளக்கம்

பகிர்வு அருமை....
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
50.... 50000000 ஆகட்டும்....

மா.தி.சுதா! புதுமையான தகவல்.
ஆனாலும் ரூபாய் நோட்டுக்களை மடித்தும் குறுக்கியும் அதன் ஆயுள் காலத்தை குறைத்து விடுவோம்..
ரூபாய்த் தாள்களில் கிறுக்குவது,அதிகமாய் மடிப்பது போன்றவை செய்ய வேண்டாம் என் வங்கிகள் அரசாங்கத்தின் சார்பில் சொல்கின்றனவே!
உங்கள் ஐம்பதாம் பதிவிற்கு வாழ்த்துக்கள் சுதா!

Unknown said...

பயனுள்ள பதிவு

ஹேமா said...

அவசரத்துக்கு உதவுற யோசனை சுதா.நன்றி.

புது கண்டுபிடிப்புகள் அபாரமாக இருக்கு.
நாங்கெல்லாம் ரொம்ப பளய காலத்து ஆட்கள். செல்போன் உபயோகப்படுத்தறதே ரொம்ப பெரிய விசயம். எங்களுக்கு பணம்னா லக்ஷ்மின்னு எண்ணம். பணத்தை அப்படியெல்லாம் பண்ண மனசு வராதுங்க. ஆனாலும் நல்ல தகவல்.

Anonymous said...

நல்ல டெக்னிக் நண்பா..பணம் இருந்தா எதுவும் பண்ணலாம் போல!!

KANA VARO said...

கேள்வி பட்டிருக்கின்றேன்.

அந்தக்கை???? உங்கடை தானே!

யாதவன் said...
வருகைக்கு நன்றி சகோதரா.. கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்...

சே.குமார் said...
/////பகிர்வு அருமை....
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
50.... 50000000 ஆகட்டும்....////
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா.

மோகன்ஜி said...
ஃஃஃஃஃஃஃஃமா.தி.சுதா! புதுமையான தகவல்.
ஆனாலும் ரூபாய் நோட்டுக்களை மடித்தும் குறுக்கியும் அதன் ஆயுள் காலத்தை குறைத்து விடுவோம்..
ரூபாய்த் தாள்களில் கிறுக்குவது,அதிகமாய் மடிப்பது போன்றவை செய்ய வேண்டாம் என் வங்கிகள் அரசாங்கத்தின் சார்பில் சொல்கின்றனவே!
உங்கள் ஐம்பதாம் பதிவிற்கு வாழ்த்துக்கள் சுதா!ஃஃஃஃஃஃஃ
நாங்க சொல்வதெல்லாம் அரசாங்கம் கேட்கிறதில்லை. அவங்க சொல்லுறதை எல்லாம் ஏன் நாங்க கேட்கணும்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா.

அஸ்பர்-இ-சீக் said...
வருகைக்கு நன்றி சகோதரா.

ஹேமா said...
ஃஃஃஅவசரத்துக்கு உதவுற யோசனை சுதா.நன்றி.ஃஃஃ
கட்டாயம் தங்களுக்கும் இது உதவும்... நன்றி...

DrPKandaswamyPhD said...
ஃஃஃஃஃபுது கண்டுபிடிப்புகள் அபாரமாக இருக்கு.
நாங்கெல்லாம் ரொம்ப பளய காலத்து ஆட்கள். செல்போன் உபயோகப்படுத்தறதே ரொம்ப பெரிய விசயம். எங்களுக்கு பணம்னா லக்ஷ்மின்னு எண்ணம். பணத்தை அப்படியெல்லாம் பண்ண மனசு வராதுங்க. ஆனாலும் நல்ல தகவல்.ஃஃஃ
ஆத்திர அவசரத்துக்குப் பறவாயில்லை ஐயா.. வருகைக்க மிக்க நன்றி ஐயா..

padaipali said...
ஃஃஃஃநல்ல டெக்னிக் நண்பா..பணம் இருந்தா எதுவும் பண்ணலாம் போல!!ஃஃஃ
ஆம் சகோதரா பணம் பத்தல்ல பதினொன்றும் செய்யும்..
வருகைக்க மிக்க நன்றி

KANA VARO said...
ஃஃஃஃகேள்வி பட்டிருக்கின்றேன்.
அந்தக்கை???? உங்கடை தானே!ஃஃஃஃ
ஆமாம் சகோதரா... பொற்கைப் பாண்டியனின் கையைத் தேடினேன் கிடைக்கல அது தான் இப்புபுபுபுடீடீடீ... வருகைக்க மிக்க நன்றி வரோ..

Unknown said...

செல்லின் கம்பியின் நடுவில் நோட்டைசுருட்டி வைத்தவுடன் சார்ஜ் ஆவதற்கு காரணம்.
அந்த நடுகம்பிதான் செல்பேட்டாரிக்கும் செல்லில் ICE ஏனப்படும் முக்கிய நினைவகத்திற்க்கு பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பதை இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பகுதி , எந்த பேட்டரியிலும் திர்ந்து போகமல் கொஞ்சம் வைத்து கொண்டே இருக்கு.அந்த பகுதியில் நோட்டையோ அல்லது வேறு எதை வைத்து துண்டிக்கும் போது அளவு தெரியாமல் தேங்கியுள்ள மின்சாரம் முழுவதுமாக செல்லுக்குல் வந்து விடுகிறது.

Unknown said...

செல்லின் கம்பியின் நடுவில் நோட்டைசுருட்டி வைத்தவுடன் சார்ஜ் ஆவதற்கு காரணம்.
அந்த நடுகம்பிதான் செல்பேட்டாரிக்கும் செல்லில் ICE ஏனப்படும் முக்கிய நினைவகத்திற்க்கு பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் இருக்கிறது என்பதை இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பகுதி , எந்த பேட்டரியிலும் திர்ந்து போகமல் கொஞ்சம் வைத்து கொண்டே இருக்கு.அந்த பகுதியில் நோட்டையோ அல்லது வேறு எதை வைத்து துண்டிக்கும் போது அளவு தெரியாமல் தேங்கியுள்ள மின்சாரம் முழுவதுமாக செல்லுக்குல் வந்து விடுகிறது.

நன்றி அமல் தங்களின் தகவலுக்கும் வருகைக்கும்..

parattugal nanbare nalla sethi

பகிர்விற்கு நன்றி நண்பா....

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html

Unknown said...

boss this is not true dont post things like this and mislead peoples
by inserting the money in that battery pin you just disturbing the sensor of the battery charge detector thats why you can see that as fully charged but remember you cant use it as fully charged phone it will switched off again

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top