Sunday, 12 September 2010

சுவர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

                               ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
                               1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
                      1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலப்டுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது.
                        இவர் திருமணம் செய்யாமலேயே இறுதிவரை வாழ்ந்து நுரையிரல் கோளாறால் சென்னை மருத்துவ மனையொன்றில் எமைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

இவர் ரகுமானுக்காக பாடிய சில பாடல்கள்..

எவனோ ஒருவன்    (அலைபாயுதே    2000)
சொல்லாயோ சோலைக்கிளி    (அல்லி அர்ஜினா    2001)
ஒரு நாள் ஒரு பொழுது    (அந்திமந்தரை    1995)
குச்சி குச்சி    (பொம்பெய்    1995)
உசிலம் பட்டி   (9ஜென்டில்மென்    1993)
அக்கடாண்ணு   (இந்தியன்    1996)
மாஜா மச்சின்த    (இந்தியன்    1996)
முன்னேறு தான்   ( இந்திரா    1995)
அஞ்சாதே ஜீவா    (ஜோடி    1999)
அண்ணா உன் தொழில்    (ஜோடி    1999)
சொல்லு அன்பே    (ஜோடி    1999)
எந்தன் வானில்    (காதல் வைரஸ்    2002)
முக்காலா    (காதலன்    1994)
காதல் எனும்    (காதலர் தினம்    1999)
சின்யோரே    (கன்னத்தில் முத்தமிட்டால்    2002)
போறாளே பொன்னுத்தாயி    (கருத்தம்மா    1993)
மெட்ராச    (மே மாதம்    1994)
மெல் இசையே    (மிஸ்டர் ரோமியோ    1996)
உழுந்து விதைக்கயில    (முதல்வன்    1999)
சிட்டக்குருவி    (பரசுராம்    2003)
மொட்டு விட்டதா    (பவித்திரா    1994)
ஹெய் ராமா    (ரங்கிலா    1995)
லக்கி லக்கி   ( ரட்சகன்    1997)
மேக்கூறி பூக்கள்    (ரட்சகன்    1997)
கும்மி அடி   ( சில் என்று ஒரு காதல்    2006)
காதல் யோகி    (தாளம்    1999)
குளிருது    (தாஜ்மகால்    1999)
பூங்காற்றிலே   ( உயிரே    1998)
ராக்கோழி ரெண்டு    (உழவன்    1993)
யே முத்து பாப்பா    (வண்டிச்சோலை சின்ராசு    1994 )

                         இவர் பாடிய பாடலில் என்னை மிகவும் கவர்ந்தது இதுதான். சத்திரியன் திரைப்படத்தில் பாணுப்பிரியாவிற்காக பாடியிருப்பார். மிகவும் அழகான காட்சியமைப்புக் கொண்ட அந்தப் பாடலை கீழே உள்ள

இது தான் பாடல் வரிகள்..

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா


பாடல் பெயரை சொடுக்குவதன் மூலம் ரசிக்கலாம். அதற்கு முன் வாக்குக்குரியா பொத்தானை சொடுக்கி அதனூடு போய் வாக்கிட்டு விட்டு பாட்டை பாருங்கள்

மாலையில் யாரோ மனதோடு பேச

தயவு செய்து இதை ஊர் முழுதும் அறிய சில கணம் செலவழித்து ஒரு ஓட்டுப் போட்டுப் போங்கள்.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

28 comments:

படத்தின் பெயர் "நீதிக்குத் தண்டனை"

@ கானா பிரபா said...
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சகொதரா...

சொர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

@ சே.குமார் said...
நன்றி சகோதாரா...

Chitra said...

She gave us lovely songs.

May her soul rest in peace.

Jana said...

http://devidas.ios.st/IOS/Users/devidas.ios.st/Albom/6206749197.mp3

இவர் பாடிய இந்த பாடலையும் கொஞ்சம் கேட்டுப்பாருங்க சுதா

@ Chitra said...
இந்த மாதம் பல சோகங்களைத் தாங்கிக் கொள்கிறது அக்கா....

@ Jana said...
நன்றி ஜனா அண்ணா...

Unknown said...

அருமையான வரலாற்றுப் பதிவு சுதா, எந்தன் கண்ணீர் அஞ்சலியும் கூடவே!

பாடகி சுவர்ணலதாவின் குரலையும் இணைத்திருந்தால் இப் பதிவு முழுமையடைந்திருக்கும்.

சொர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

@ ஈழவன் said...
///...பாடகி சுவர்ணலதாவின் குரலையும் இணைத்திருந்தால் இப் பதிவு முழுமையடைந்திருக்கும்...///
மன்னிக்கவும் சகோதரா... காலம் காணாமல் போய்விட்டது..

@ வெறும்பய said...
அஞ்சலியில் கலந்தமைக்கு நன்றி சகோதரா...

மாலையில் யாரோ யாராலையும் மறக்க முடியாத பாடல்..

Jana said...

தங்கள் லிஸ்டில் வராத பாடல்கள்.

முக்காலா முக்காப்புலா லைலா - காதலன்

நீயெங்கே என் அன்பே - சின்னத்தம்பி

ராஜ ராஜ சோழன் போல வந்து நிற்கிறாய் - கூலி

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளதை -ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்

ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ.. அடி திலோத்தம்மா -ஆசை

தீம்தலக்கடி தில்லாலே காற்றடிப்பது யாராலே - வில்லாதி வில்லன்

மடோனா வருவாளா - நேசம்

ரங்கு ரங்கம்மா - பீமா

சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்

கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவதில்லை - உயிரே

காதல் எனும் தேர்வெழுதி - காதலர் தினம்

ஆரிய உதடுகள் உன்னது - செல்லமே

திருமண மலர்கள் தருவாயா - பூவெல்லாம் உன் வாசம்

ஓ நெஞ்சே -முகவரி

முலாம் சந்திப்பில் நான் அறிமகமானேனே - சார்லி சப்ளின்

கட்டை கட்டை நாட்டுக்கட்டை - ஜெமினி

காதலா காதலா கண்களால் - சூர்யவம்சம்

ஒரே ஒரு சூரியன்தான் - பாட்ஷா

ராக்கோழி ரெண்டு தனிச்சிருக்கு - உழவன்

குருவி கொடஞ்ச - அழகி

அடி யாரது யாரது அங்கே - மேட்டுக்குடி

அன்புள்ள ம்னவனே ஆசைக்காதலனே -மேட்டுக்குடி

அடி ராக்கம்மா கையைத்தட்டு - தளபதி

தங்க நிறத்திற்குத்தான் தமிழ்நாட்டை எழுதிவைக்கவா - நெஞ்சினிலே
Cont ...

Jana said...

வெண்ணிலவே வெண்ணிலவே - காலம் எல்லாம் காதல் வாழ்க

உயிரே உயிரே உனைத்தானே அழைக்கிறேனே - இனியவளே

மொட்டு விடாத - பவித்திரா

மலைக்கோவில்வாசலில் கார்த்திகை தீபம் - வீரா

கண்ணுக்குள்ளே காதலா - தமிழ்

துளிதுளியாய் - பார்வை ஒன்றே போதும்

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்பெயருமென்னடி - உன்னை நினைச்சேன் பாட்டு படித்தேன்

நான் ஏரிக்கரை ஓரம் - சின்னதாயி

முத்தே முத்தம்மா முத்தமொன்று தரலாமா? - உல்லாசம்

என்ன தவம் - திருப்பாச்சி

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் - மன்னன்

அந்தியிலே வானம் தந்தனத்தோம் - சின்னவர்

மணமகளே மணமகளே - தேவர் மகன்

மாடத்திலே கன்னி மாடத்திலே - வீரா

வெல்வட்டா வெல்வட்டா மெல்ல மெல்ல -மேட்டுக்குடி

பொட்டுவைத்து பூமுடிக்கும் நிலா - நினைத்தேன் வந்தாய்

வெண்ணிலவு கொதிப்பதென்ன - சின்னமாப்பிளை

இப்படியே விட்டுவடு - அரசாட்சி

அம்மா...அம்மா...எந்தன் ஆருயிரே - உழைப்பாளி

ஹேய்..மீனலோஜினி - வேதம்

ஓ..பெண்ணே தமிழ்ப்பெண்ணே - வானவில்

மனசே -புதியகீதை

தாவணியே என்னை மயக்கிறியே - வானத்தைப்போல
cont..

Jana said...

இன்னும் வரும் சிறிது நேரத்தின் பின்

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி சகோதரா...

@ Jana said...
நன்றி ஜனா அண்ணா... ஆனால் ஓரிடத்தில் தப்பு நடந்திட்டுது நான் நேரப்பிரச்சனையால் ரகுமான் பாடல்களை மட்டும் தான் பட்டியல் படுத்தியுள்ளேன்... எனக்கு என்றால் தவற விட்டதாக தெரியவில்லை... வேறு ஏதாவது இருந்தால் கட்டாயம் காட்டித் தாருங்கள்...

மனதைத் தொட்ட பாடகி.. மனதைத் தொடும் பதிவு.... சாரிப்பா, இன்ட்லியில் தெரியாம மைனஸ் ஓட்டு குத்திட்டேன்.. எப்படி சரி பன்றதுன்னு தெரியல...

ஸ்வர்ணலதா ஈடு கட்ட முடியாத இழப்பு தான்.. வானுலகிலும் புகழோடே வாழ்வார்...

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
///...இன்ட்லியில் தெரியாம மைனஸ் ஓட்டு குத்திட்டேன்.. எப்படி சரி பன்றதுன்னு தெரியல...///
அப்பிடி ஒண்ணு இருக்கா... இருந்தாலும் பரவாயில்லை சகோதரம் ஒரு ஓட்டை விட ஒருவரின் தவறை உணரும் திறன் எவ்வளவு மேலானது...
வருகைக்கு நன்றிகள்...

Riyas said...

ஸ்வர்னலாதா பற்றிய சிறப்பான பதிவு சுதா.. அவருக்கு எமது அஞ்சலிகள்

Anonymous said...

மாலையில் யாரோ மனதோடு பேச/////
மாலை,காலை என்றில்லாமல் அவர் பாடல்கள் எப்போதும் நம்மோடு பேசிக்கொண்டே இருக்கும்..
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்..

@ Riyas said...
அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி சகோதரா..

@ padaipali said...
அஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி சகோதரா..
அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்த்திப்போம்..

அவருடைய பாடல்களை கேட்டு இருக்கிறேன். இங்கே பட்டியலிட்ட பாடல்கள் எல்லாம் அவருடை குரல் தானா... !!!எவ்வளவு இனிமையான குரல்...!!!
சொர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைச்சுகிறேன்.

இந்த பதிவை தந்த சகோதரிக்கு நன்றி..

இம்பார் கான்
சவுதி அரேபியா

அவருடைய பாடல்களை கேட்டு இருக்கிறேன். இங்கே பட்டியலிட்ட பாடல்கள் எல்லாம் அவருடை குரல் தானா... !!!எவ்வளவு இனிமையான குரல்...!!!
சொர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைச்சுகிறேன்.

இந்த பதிவை தந்த சகோதரிக்கு நன்றி..

இம்பார் கான்
சவுதி அரேபியா

////அவருடைய பாடல்களை கேட்டு இருக்கிறேன். இங்கே பட்டியலிட்ட பாடல்கள் எல்லாம் அவருடை குரல் தானா... !!!எவ்வளவு இனிமையான குரல்...!!!
சொர்ணலதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைச்சுகிறேன்./////
நன்றி சகோதரா அத்தனையும் அவர் படித்தது தான்...

Unknown said...

சுவர்ணலதாட குரல் காந்தம் மாதிரி. அப்படியே அந்த பாட்டுக்குள்ள இழுத்திடும். மாலையில் யாரோ, ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் ரெண்டுமே கேட்க சலிக்காத பாட்டுக்கள்.

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top