Wednesday, 22 September 2010

ஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...!!!!


                                 கால் வாருதல் என்ற சொல்லின் தமிழ் அர்த்தத்தை பார்த்தால் துரோகம் தான். ஏனெனில் ஒருவரின் காலை வாரி விட்டு அவரை வீழ்த்துவது எம்மவரில் பலருக்கு கைவந்த கலை. இது ஆண்டாண்டு காலமாக தமிழனின் வரலாற்றுப் பதையில் பரீட்சையமான சொல் ஒன்று ஆனால் அவர்களுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.

                                   மேற்கத்தைய இடங்களில் இச்செயல் செய்பவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அப்படி அங்கு என்னதான் வித்தியாசப்படுகிறது என்று பார்த்தால். இரு இடங்களிலும் நடைபெறும் செயற்பாடுகள் தான் காரணம். இங்கு நடப்பவை பற்றி நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை.

 அங்கு நடப்பது என்னவென்றால். கௌபாய் திரைப்படங்களில் தூக்கில் போடுவதை பார்த்திருப்பிர்கள். இல்லாவிடில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திலாவது பார்த்திருப்பிர்கள். அப்போது தூக்கில் போடப்பட்ட நபர் துடிதுடித்து இறப்பார். மேற்கத்தைய முறையில் துடிதுடிப்பதை பார்க்கமுடியாத தோழன் ஓடி வந்து அவன் காலை இழுத்து வாரிவிட்டு அவன் சிரமமின்றி இறப்பதற்கு உதவுவான். இதற்கு அனுமதியுமுண்டு. இதைத்தான் ஆங்கிலத்தில் காலை வாருதல் என்று சொல்வார்கள். அங்கு இதை ஒரு புனித வசனமாகவே கருதுகிறார்கள்.
                        தற்செயலாக உங்களது மேற்கத்தைய நண்பர் யாரவது ”நான் உனக்கு காலை வாரிவிடக் கூடிய நண்பனாக இருப்பேன்” என்றால் தவறாக எண்ணி விடாதீர்கள். அதற்காக எம் ஊர் நண்பன் வெளிநாட்டில் நின்று சொன்னாலும் கவனமாக இருங்கள்..

                           இப்போது எல்லாம் விளங்கியிருக்குமே. விளங்கினால் அடுத்த்து என்ன ஓட்டுத் தான் குறைந்த பட்சம் சிரமமில்லாமல் தமிழ் மணத்திலாவது சொடுக்கி விட்டப் போங்கள்..
காத்திருங்கள் விரைவில் என் 50 வது பதிவை முன்னிட்டு ஒரு சர்ச்சைக்குரிய பதிவு சகல அதாரத்துடனும்... இலங்கை கதை திருடி படமெடுத்த ஒரு இயக்குனர் பற்றி..

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

33 comments:

புதிய தகவல்! நன்றி சகோதரி!

Jey said...

ம்ம்ம்ம்

Chitra said...

”நான் உனக்கு காலை வாரிவிடக் கூடிய நண்பனாக இருப்பேன்”

..... Could you please include the English phrase for it? I haven't heard about it and would like to know about it. Thank you.

எஸ்.கே said...
நன்றி சகோதரா... நான் சகோதரன் தான்...

Jey said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகொதரா...

Chitra said...
வருகைக்கு நன்றி அக்கா.. இது நான் பல நாட்களின் முன் எழுதியது... காட்டாயம் சரியானதை தேடித் தருகிறேன்.. பொறுத்திருப்பிர்கள் தானே...

Unknown said...

என்ன கொடுமை சுதா இது??இப்பிடி எல்லாமா வாரி விடுவாங்க ??

மைந்தன் சிவா said...
வருகைக்கு நன்றி சிவா... நம்மவர்களோடு ஒப்பிடுகையில் இது எவ்வளேவொ மேலல்லவா..?

Unknown said...

இது ஆண்டாண்டு காலமாக தமிழனின் வரலாற்றுப் பதையில் பரீட்சையமான சொல் ஒன்று //
உண்மை...மோசமான துரோகம்...காலை வாருதல்

காலை வாருதல்....
மோசமான துரோகம்.

அருமையான பதிவு மதி சுதா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...
உண்மை தானே சகோதரா இது யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று... நன்றி..

சே.குமார் said...
நன்றி சகோதரா... நாமெல்லாம் எப்ப திருந்துவோமோ...

சசிகுமார் said...
ஃஃஃஃ....அருமையான பதிவு மதி சுதா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...ஃஃஃஃ
நன்றி சகோதரா... எம் வளர்ச்சியில் தங்களைப் போன்ற பலரின் துணையிருக்கிறது... உதாரணமாக என் தளத்தில் உள்ள விட்ஜெட் உங்கள் கட்டுரையை வைத்து தான் செய்தேன்..

Anonymous said...

மதி சுதா. நான் எப்போதும் உங்கள் காலை வாரும் உண்மையான நண்பனாய் இருப்பேன். ஹி ஹி

நன்றி சகோதரா .காலம் காலமாக் எம்மவரில் ஊறிஇருக்கும் பழக்கம். அதில் அவர்களுக்கு ஒரு சுகம். உங்கள் தளம் நன்றாக இருக்கிறது.
மேலும் வளர வாழ்த்துக்கள்.

நல்ல கருத்து.

Ilavarasan.R said...
///...மதி சுதா. நான் எப்போதும் உங்கள் காலை வாரும் உண்மையான நண்பனாய் இருப்பேன். ஹி ஹி..//
தெளிவாக சொல்லுங்க மாப்பு...

நிலாமதி said...
இவங்களை திருத்தவே முடியாதா..? சகோதரி..!!!

அன்பரசன் said...
வருகைக்கு நன்றி சகோதரா..?

Jana said...

50ஆவது பதிவுக்கு வெயிட்டிங்.

நல்ல தகவல் வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் வித்தியாசமான படைப்புகளை

//தற்செயலாக உங்களது மேற்கத்தைய நண்பர் யாரவது ”நான் உனக்கு காலை வாரிவிடக் கூடிய நண்பனாக இருப்பேன்” என்றால் தவறாக எண்ணி விடாதீர்கள். அதற்காக எம் ஊர் நண்பன் வெளிநாட்டில் நின்று சொன்னாலும் கவனமாக இருங்கள்..//

ஓ.. இதுல இம்புட்டு விஷயம் இருக்குதோ:)))

நன்றிகள் தோழா.

Unknown said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

This comment has been removed by a blog administrator.

சரியான தகவல் தான் , ஆனால் நிச்சையமாக நண்பன் தான் காலைவாருவான் , தமிழ் அர்த்தத்திலும் கூட

Jana said...
நன்றி அண்ணா காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா..?

யாதவன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா..

ரசிகன் said...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரம்..

sweatha said...
நன்றி ஆனால் உங்க தொடர்பு முகவரியை ஒரு முறை கொடுங்கள்..

மங்குனி அமைசர் said...
ஃஃஃ...சரியான தகவல் தான் , ஆனால் நிச்சையமாக நண்பன் தான் காலைவாருவான் , தமிழ் அர்த்தத்திலும் கூட...ஃஃஃ
உண்மை தான் சகோதரம்..

ஓMG said...

”நான் உனக்கு காலை வாரிவிடக் கூடிய நண்பனாக இருப்பேன்”

ஆதாரமற்ற தகவல். இருந்தாலும் உங்கள் கற்பனை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!

ஓMG said...
/////”நான் உனக்கு காலை வாரிவிடக் கூடிய நண்பனாக இருப்பேன்”

ஆதாரமற்ற தகவல். இருந்தாலும் உங்கள் கற்பனை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!/////
சகோதரா வருகைக்கு நன்றி.. இது கற்பனைப் பதிவல்ல. தங்களுக்கு விரைவில் சரியான ஆதாரம் பெற்றுத் தருகிறேன்...
(என்னை நீங்கள் பத்தோடு பதினொன்றாக மொக்கைப் பதிவராக சேர்த்துக் கொள்ள வேண்டாம் சகோதரா..)
தங்களின் ஆணுறை உருவான கதைக்கான கருத்து கிடப்பில் இருக்கிறது ஒர சில நாளில் வெளியிடுகிறேன் (முக்கியமாக ஒன்று பாலியல் வன்முறை செய்தது ஏனோ உண்மை தான் ஆனால் வன்முறை செய்த அனுபவிப்பவன் ஏன் அதை பாவிக்க வேண்டும் என்றொரு கேள்வி இருக்கிறதே)

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top