Wednesday, 15 September 2010

வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!

                         என்ன இவன் புதுப் புது கதைவிடுகிறான் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவை நானும் என்னைச் சுழ இருந்தவர்களும் மேற்கொண்டவை தான்..
                      இனி மழை காலம் வந்துவிட்டது இப்பிரச்சனை எல்லோருக்கம் சிரமத்தைக் கொடுக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதற்கான ஒரு சின்னத் தீர்வைத் தான் இந்தச் சின்ன ஆக்கத்தில் பதிவிடுகிறேன். வழமையாக நண்பர்கள் கேட்கும் ஒரு வேண்டுகை ஏன் சின்னச் சின்ன ஆக்கங்களாய் எழுதுகிறாய் என்று. என்ன செய்வது பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும்.
                   சிலருக்கு இதில் சாத்தியப்படாமலும் நாட்டமில்லாமலும் இருக்கலாம். ஆனால் அவசியப்படுபவர்கள் பிரயோகித்துப் பார்க்கவும்.
முதலில் வாகனத்தின் உள் கண்ணாடியை வடிவாகத் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நறுக்கிவிட்டு அந்தத் துண்டால் கண்ணாடியில் தேயுங்கள். அவ்வளவும் தான். கண்ணாடியின் ஊடுபுகவிடும் தன்மையில் எந்தவித மாற்றமும் இருக்காது. அத்துடன் நீண்ட நேரத்திற்கு நீராவி படியாமல் இருக்கம். அதற்காக முதல் நாள் வெட்டி வைத்த உருளைக் கிழங்கை எடுத்துப் பூசக் கூடாது. அப்படியானால் அதை ஒரு முறை சீவி விட்டு எடுத்துப் பூசுங்கள்.
                     இதற்கு விஞ்ஞான ரீதியில் சரியான காரணத்தைச் சொல்ல முடியாவிட்டாலும் சிறு வயதுகளில் பரவல், பிரசாரணம், அகத்துறிஞ்சல் போன்ற பரிசோதனைகளுக்கு உருளைக்கிழங்கைத் தான் பாவிப்போம். ஏனெனில் அதற்கு அகத்துறிஞ்சும் இயல்பிருக்கிறது. ஆனால் அதன் சாற்றில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதை நான் அணித்தரமாக உறுதிபடக் கூறுவேன்.
அட அதன் பின் அந்த உருளைக் கிழங்கை என்ன செய்வது என்ற கேட்கிறீர்கள்.. வேறு என்ன வடிவாகக் கழுவிவிட்டு கறியில் போடுங்க. சிலர் இப்படித் தான் சுத்தம சுகம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளுவார்கள். எனது கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு கட்டுரையில் எவ்வளவு ஆலோசனை பாருங்கள். எனக்கு என் விடுதியில் உள்ள பட்டப் பெயர் என்ன தெரியுமா..? OLD FOOD பார்க்க நல்ல அங்கிலப் பெயர் போல இருக்கிறதா..? ஒரு ரொட்டியை 2 நாள் வைத்துக் கூடச் சாப்பிடுவேன். (சாப்பாட்டு கரைச்சலில் இல்லீங்க எனக்கு இடியப்பம் பிடிக்காது ஒன்று விட்ட ஒரு நாள் தான் ரொட்டி தருவார்கள்). 
                        நாங்கள் என்ன செத்தா போயிட்டம். உண்மையில் எனக்க வருத்தம் வருவதே அரிது சில வேளை அந்தப் பழசுகளால் நோயெதிர்ப்பு சக்தி கூடியிருக்கலாம். ஏதொ உங்களுக்கு ஏற்ற மாதிரி செய்யுங்கள்.

கதையோட கதையா மூட்டையைக் கட்டாமல் ஓட்டைக் குத்திக் கொண்டு போங்க என் அன்புக்கினியவர்களே...

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

30 comments:

இம்போட்டன் உருளைக்கிழங்காலையா? அல்லது நுவரெலியா கிழங்காலையா துடைக்கணும் என்று சொல்லவில்லையே சுதா மாமா!

@ ஜாவா கணேஷ் said...
வருகைக்க நன்றி மாப்பு... ஏதொ மாட்டுப்பர்றதை பாவியுங்க.... லொள்ளு மாப்பு..

என்னவோ சொல்லறிங்க.. சரி பக்கத்துவீட்டுக்காரரோட கார் கண்ணாடில டெஸ்ட் பண்ணி பாத்துட வேண்டியதுதான்:P

என்னவோ சொல்லறிங்க.. சரி பக்கத்துவீட்டுக்காரரோட கார் கண்ணாடில டெஸ்ட் பண்ணி பாத்துட வேண்டியதுதான்:P

Chitra said...

Potato........ wow! simple and very useful tip. Thank you.

@ ரசிகன் said...
சகோதரா... நம்பிச் செய்யுங்க பழுதானால் நான் காசு தாறன்...

@ Chitra said...
ஃஃஃ...Potato........ wow! simple and very useful tip. Thank you...ஃஃஃ
நன்றி அக்கா முயற்சித்துப் பாருங்கள்...

நாங்க நுவர எலிய காரங்க எங்களுக்கு வருஷம் முழுக்க மழை தான், இப்படி வாகனங்களில் நீராவி படியாமல் இருக்க நாங்கள் பாவிப்பது ஷாம்பூ கொஞ்சம் கண்ணாடியில் பூசி கொள்வது, இதை ட்ரை பண்ணி பாருங்கள்

@ யோ வொய்ஸ் (யோகா) said...
தகவலுக்கு நன்றி சகோதரா... நானும் பக்கத்து வீட்டில் தான் பரிசோதிக்கணும்.

தகவலுக்கு நன்றி.

Unknown said...

தகவலுக்கு நன்றி சுதா.

//சகோதரா... நம்பிச் செய்யுங்க பழுதானால் நான் காசு தாறன்...//
காருக்கா, கார் கண்டாடிக்கா?

Kiruthigan said...

அருமையான கண்டுபிடிப்பு...
உள்ழூர் நியுட்டன் வாழ்க..!!

Unknown said...

ஆகா அருமையான அறிவுறுத்தல் வாழ்த்துக்கள் சகோதரன்

Anonymous said...

நல்ல தகவல்

கார் wipers இரண்டும் கெட்டு மழையில் வேலை செய்யா விட்டால புகையிலையை தண்ணீரில் நனைத்து கண்ணாடியின் வெளிப்ப்புரத்தில் நன்றாக் தேய்த்தால் மழைத் தண்ணீர் ஒட்டாது. வழிந்து விடும். சுமாரக வழி தெரியும்...

ஆனால், மழையில் wipers வேலை செய்யாவிட்டால் கார் ஓட்டுவது சட்டப் படி குற்றம் எனபதை நினைவில் கொள்க...

சே.குமார் said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

ஈழவன் said...
///...காருக்கா, கார் கண்டாடிக்கா?...///
கண்ணாடிக்கு தானுங்கோ...

Cool Boy கிருத்திகன். said...
ஃஃஃ...அருமையான கண்டுபிடிப்பு...
உள்ழூர் நியுட்டன் வாழ்க..!!...ஃஃஃ
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..
ஏன் நான் நல்லுர் பக்கம் வருவது பிடிக்கலியா..?

மகாதேவன்-V.K said...
நன்றி சகோதரா...

adhithakarikalan said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

கண் எரிச்சல் இருக்கும்போது இரு துண்டுக்கலை வட்டமாக நருக்கி கண்ணில் சிருத்துணியால் கட்டி (இமைமூடியிறுக்கும் போது)

ஒருமணி நேரம் இருந்தால் கண் எரிச்சல் நீங்கும்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...
நீங்கள் சொல்வது சரி தான் இப்படியும் செய்வார்கள் இதற்கு பதிலாக வாழைக்காயையும் பூசலாம்.... சிலது சர்ச்சையை கிளப்பும் என்பதால் கம்முண்ணு இருந்து விட்டேன்..
வருகைக்கு நன்றி சகோதரா நேரம் கிடைத்தால் அடிக்கடி வாங்க இன்னும் நிறைய வச்சுருக்கேன்..

ராஜவம்சம் said...
வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி... சகோதரா நேரம் கிடைத்தால் அடிக்கடி வாங்க இன்னும் நிறைய வச்சுருக்கேன்..

தேவையான தகவல் பதிவு.....வாழ்த்துகள்

This comment has been removed by the author.

rk guru said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...

தோசைக்கல்லுல வெங்காயத்தை தடவித்தான் பார்த்திருக்கிறேன்.இதென்ன புதுசா கார் கண்ணாடில உருளைக்கிழங்கு?

ஆக உருளைக்கிழங்கு,வெங்காயம்,சாம்புன்னு ஒரு பலசரக்கு கடை காருக்குள்ள இருக்க வேண்டும்:)

ராஜ நடராஜன் said...
வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
இன்னும் எம் கண்டுபிடிப்புகள் வரும் காத்திருங்கள்..

Anonymous said...

பழைய மீன் குழம்பு ருசியாகும் போது ரொட்டி மட்டும் ஆகாதா என்ன..
கலக்குங்க..நல்ல மேட்டர்..

padaipali said...
///...பழைய மீன் குழம்பு ருசியாகும் போது ரொட்டி மட்டும் ஆகாதா என்ன..
கலக்குங்க..நல்ல மேட்டர்...///
ஆமாம் ரொம்ப ருசியாக இருக்கும்... வருகைக்கு நன்றி சகோதரா...

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top