வியாழன், 2 செப்டம்பர், 2010

செத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்கம்.

பிற்பகல் 1:15 - By ம.தி.சுதா 29

ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன். இது இலக்கியத்தை கொச்சைப்படுத்த எழுதப்படவில்லை. எல்லோரும் இலக்கிய கண்ணாடி போட்டுப் பார்த்த ஒரு விடயத்தை என் குருநாதர் சுஜாதா வழியில் நான் விஞ்ஞானக் கண்ணாடி போட்டுப் பார்த்திருக்கிறேன்.

                            அந்தப் புலவனால் இனியும் வறுமையை பொறுக்க முடியவில்லை. அவன் முடிவாக ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டான். சீதாக்காதி மன்னனின் வள்ளல் குணம் பற்றி பிற்பகல் தான் யாரோ சொல்லக் கேட்டிருந்தான். தீர்க்கமான முடிவுக்கு வந்த புலவன் ஒரு அமைதியான இடம் நோக்கிச் சென்றான். அவருக்கு நல்ல ஒரு பாடல் பாட வேண்டும் அவர் மனம் மகிழ்ந்து பொன்னும் பொருளும் அள்ளி அள்ளித் தர வேண்டும். என மனதில் பெரிய மனக் கோட்டை காட்டிக் கொண்டு பாடல் புனைய ஆரம்பித்தான்.
நேரம் நடு நிசியை அண்மிக்கையில் தான் அவன் ஒரு அழகான பாடலுடன் மீண்டான். அதிகாலையே போக வேண்டியிருந்ததால் உடனேயே போய்ப் படுத்தான்.

                          அவனது கிழிந்த பாய் அவன் முதுகை சுரண்டிச் சுரண்டி கேட்டுக் கொண்டிருந்தது. “எனக்கு எப்போது ஓய்வழிப்பாய்” என்று கேட்பது போல் இருந்தது. சரி துண்டைப் போட்டுப் படுப்போம் என்று படுத்துப் பார்த்தார். பாய் விடுவதாயில்லை அதன் ஓட்டைக்குள்ளால் கைகளை நீட்டி திருப்பியும் அவர் மனதை சுரண்டியது.
அவனுக்கு உறக்கமே வரவில்லை நேரமும் அதிகாலையை அண்மித்துக் கொண்டிருந்தது. இனியும் உறங்கி வேலை இல்லை என்பதை உணர்ந்த புலவர் எழுந்து ஆற்றில் நீராடிவிட்டு இருந்த ஒரு வேட்டியையும் வடிவாக அலம்பிக் கட்டிக் கொண்டார்.
                                 காட்டுவழிப்பாதை, சில்லென்று குளிர், ஈர வேட்டி இவையனைத்தும் கிடைக்கப்போகும் பொன் பொருளை நினைக்கையில் அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
                                       இப்போது சூரியன் தன்னை பிடித்து வைத்திருந்த மரங்களுக்குள்ளிருந்து தன்னை மீட்டு எடுத்துக் கொண்டு விட்டான் புலவரும் நகர எல்லைக்குள் நுழைந்து குடிமனைகளுக்குள் வந்த விட்டார். அங்கிருந்த மக்களிடம் ஒரு கவலை காணப்பட்டது. ஆனால் அதை விசாரிக்கும் ஆர்வம் இவரிடம் இருக்கவில்லை. அருகில் நின்ற சிறுவனிடம் அரண்மனைக்கான பாதையைக் கேட்டுவிட்டு வேகமாக நடையைக்கட்டினார்.
                              புலவருக்கு பசிக்களை கண்ணைக் கட்டியது. நடையை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்திக் கொண்டு அரண்மனை வாசலை நெருங்கினார். அங்கு எல்லாமே சோகமயமாக இருந்தது. வாயிலில் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. அது அமங்கலத்தின் அடையாளமாய் தலைகீழாகக் கிடந்தது. புலவர் உள்ளே போய்ப் பார்த்தார். இவரால் அந்தக்காட்சியை கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. ஆம் சீதக் காலி மன்னன் மரணமாகி கட்டில் ஒன்றில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். புலவன் ஓடிப் போய் அவன் முகத்துக்கு நேரே குனிந்து தன் சோகங்களைக் கொட்டித் தீர்த்தான்.
                               என்ன அதிசயம் அவன் கைகள் சற்று நீண்டது. அவன் கைவிரல்களை மறைத்திருந்த வைர மொதிரங்கள் காலை சூரிய ஒளியில் பளிச்சிட்டது. இந்தக் காட்சியை மக்கள் அனைவரும் கண்டார்கள். யாரோ பின்னுக்கிருந்து சொல்வது கேட்டது நம் மன்னனின் கொடைக் குணத்தைப் பார்த்தீர்களா செத்தபின்னும் தானம் செய்கிறார் என்றார்கள். அம் மோதிரங்களைக் கழட்டி புலவரின் கையில் கொடுத்தார்கள். புலவர் மன்னரை தொட்டு வணங்கிக் கொண்டார்.
                                   அனால் அவர் உள் மனது சொல்லிக் கொண்டது மன்னரின் மரணவிறைப்புத்தான் இவ்வளவும் நடைபெற காரணமென்று...

குறிப்பு – இதை ஆங்கிலத்தில் RIGER MORTIS என்று சொல்வார்கள். இது ஒருவரின் இறப்பின் பின் 4 மணித்தியாலம் தொடக்கம் 12 மணித்தியாலத்திற்குள் நடக்கலாம். இதற்கு தசைகளிலும், தசை நார்களிலுமுள்ள அக்ரின், மயோசின் போன்ற ஒரு வகைப் புரதங்கள் காரணமாக அமைகிறது. இது CADAVARIC SPASM ல் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டது.
ஒருவர் இறந்த பின் கை கால்களை ஒன்றுடன் ஒன்று பிணைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

யாருக்குமே ஆப்பு வைக்காத எனக்கு ஒரு வாக்கு வைத்துப் போங்கோவன்......

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

29 கருத்துகள்:

Subankan சொன்னது…

நல்ல முயற்சி :)

சுதர்ஷன் சொன்னது…

நன்றி மேலும் RIGER MORTIS தகவல்கள் கூறியுள்ளீர்கள் இன்னும் கிண்டி கிளறி பார்க்கலாம் என்று நினைக்கிறேன் .. இப்படியொரு விடயம் இருப்பதை தெரியப்படுத்தியமைக்கு நன்றி .

தொடருங்கள் .... வாழ்த்துக்கள் .:)

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பாராட்டுகள்....அருமையான முயற்சி வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்

Chitra சொன்னது…

இதை ஆங்கிலத்தில் RIGER MORTIS என்று சொல்வார்கள். இது ஒருவரின் இறப்பின் பின் 4 மணித்தியாலம் தொடக்கம் 12 மணித்தியாலத்திற்குள் நடக்கலாம். இதற்கு தசைகளிலும், தசை நார்களிலுமுள்ள அக்ரின், மயோசின் போன்ற ஒரு வகைப் புரதங்கள் காரணமாக அமைகிறது. இது CADAVARIC SPASM ல் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டது.
ஒருவர் இறந்த பின் கை கால்களை ஒன்றுடன் ஒன்று பிணைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.


.... அப்படியா? very interesting!!!!

ம.தி.சுதா சொன்னது…

@ Subankan said...
//...நல்ல முயற்சி :)..//
பாராட்டுக்கு நன்றி சுபா.....

ம.தி.சுதா சொன்னது…

@ S.Sudharshan said...
//...நன்றி மேலும் RIGER MORTIS தகவல்கள் கூறியுள்ளீர்கள் இன்னும் கிண்டி கிளறி பார்க்கலாம் என்று நினைக்கிறேன் ...//
இருக்கு சுதர்சன் எதிர்காலத்தில் அதைப்பற்றி நிறைய எழுத இருக்கிறேன்..

ம.தி.சுதா சொன்னது…

@ rk guru said...
//..அருமையான முயற்சி வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்..//
நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

@ Chitra said...
//.... அப்படியா? very interesting!!!!..//
இன்னம் நிறைய இருக்கு அக்கா... காத்திருங்கள்... வருகைக்கு நன்றி..

Jey சொன்னது…

very nice...:)

ம.தி.சுதா சொன்னது…

@ Jey said...
நன்றி சகோதரா...

பிலீஸியா சொன்னது…

நல்ல கதை.

ம.தி.சுதா சொன்னது…

@ பிலீஸியா said...
வருகைக்கும் வாழ்த்தக்கும் நன்றி சகோதரி.....

பெயரில்லா சொன்னது…

அருமை நண்பரே

ம.தி.சுதா சொன்னது…

@ padaipali said...
வருகைக்கு நன்றி..

சுந்தரா சொன்னது…

கதையும் அதற்கான விஞ்ஞான விளக்கமும் நல்லாருக்கு ம.தி.சுதா.

ஆனா அந்த வள்ளலோட பெயர் சீதாக்காலி இல்லை, சீதக்காதி வள்ளல் என்பதாகும். அவரது இயற்பெயர்
செய்கு அப்துல் காதர் என்றும் சொல்லுவார்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ சுந்தரா said...
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரா... திருத்திக் கொள்கிறேன்...

Jana சொன்னது…

என்ன சுதா...டாப் கியரில போறியள் போல! கதை சுப்பர். நம்ம குருநாதர்போல கதையோடு தகவலையும் வைத்தது இன்னும் டாப்பு.

ம.தி.சுதா சொன்னது…

@ Jana said...
//...என்ன சுதா...டாப் கியரில போறியள் போல! கதை சுப்பர். நம்ம குருநாதர்போல கதையோடு தகவலையும் வைத்தது இன்னும் டாப்பு...//
வாழ்த்துக்கு நன்றி ஜனா அண்ணா...

எஸ்.கே சொன்னது…

rigor mortis பற்றி தாங்கள் கூறியது உண்மைதான். அதை தாங்கள் கதையுடன் பொருத்திய விதம் நன்றாக உள்ளது.

ம.தி.சுதா சொன்னது…

@ எஸ்.கே said...
//..rigor mortis பற்றி தாங்கள் கூறியது உண்மைதான். அதை தாங்கள் கதையுடன் பொருத்திய விதம் நன்றாக உள்ளது...//
வருகைக்கும் வாழ்த்தக்கும் நன்றி சகோதரா.....

Unknown சொன்னது…

சூப்பர்

Robin சொன்னது…

அருமையாக எழுதியுள்ளீர்கள்.

ம.தி.சுதா சொன்னது…

@ மகாதேவன்-V.K said...
மிக்க நன்றி சகோதரா...

ம.தி.சுதா சொன்னது…

@ Robin said...
வருகைக்கு நன்றி.. சகோதரா..

மோகன்ஜி சொன்னது…

சுதா, சுவாரஸ்யமான நடையில்,ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்தில் உறுத்தாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
மிகவும் ரசித்தேன் என் தங்கையே!

ம.தி.சுதா சொன்னது…

@ மோகன்ஜி said...
//...சுதா, சுவாரஸ்யமான நடையில்,ஒரு விஞ்ஞான கண்ணோட்டத்தில் உறுத்தாமல் சொல்லியிருக்கிறீர்கள்.
மிகவும் ரசித்தேன் என் தங்கையே!..//
மிகவும் நன்றி அண்ணா...

சுபத்ரா சொன்னது…

Very Interesting. Keep posting such articles.. Thank You.

காட்டான் சொன்னது…

ஹா ஹா ஹா!
பார் தம்பி இண்டைக்கு சம்பத் லிங் குடுத்திருக்கிறார் உங்களுக்கு என்னன்னு வந்து பார்த்தா அது நீங்கள்.!!!!!. ஒரு வருசத்துக்கு பின்னும் வந்து கொமொன்ஸ் போடுறேன்னா.. ?????)))

Unknown சொன்னது…

நல்ல விளக்கம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top