Friday, 10 September 2010

அன்புள்ள சந்தியா அங்கம் - 2

                                       கதைக்குள் நுழைவதற்கு முன் ஒரு அறிவுறுத்தல் இது மென்மையான காதல் கதை விரும்பிகளுக்கப் பொருத்தமற்ற கதையாகும். அத்துடன் காதாபாத்திரங்களின் பெயரையும் அப்படியே தொடர்கிறேன்....
                                  நான் எப்போதோ எழுதிய கதை சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்ட மென்மையான கதைக்களத்துக்குள் இதை நான் அப்போது புகுத்த விரும்பவில்லை அதனால் தான் வெளியே வந்து இரண்டாம் அங்கமாக ஒரு சமூக பிரச்சனையை புகுத்தி வெளியிடுகிறேன்.
                       இக்கதை ஜனா அண்ணாவிடம் இருந்து தொடர்கிறது. இதன் அங்கம் ஒன்றில் அருமையான மென்மை காதல் ஒன்றை பதிவுலகுக்கு தந்தவர்கள் சுபாங்கன் >>லோசன் >>ஜனா >>பவன் >>அனுதினன் (இவர்களின் பெயர்களைச் சொடுக்கி அவர்களின் கதையை படிக்கவும்)

முன் கதைச்சுருக்கம்
சுபாங்கன்
பேருந்தில் பயணித்த சுதா அருகில் காரில் வந்த சந்தியாவை காண்கிறான். மண்சரிவால் அவள் பயணம் தடைப்பட தன் வீட்டுக்க அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி தொலைபேசி இலக்க பரிமாறலுடன் பிரிந்த கொள்கிறார்கள்.
லோசன்
சந்தியாவிடம் இருந்த வரும் அழைப்பொன்றில் திருமண அழைப்பு மடல் அனுப்ப அவன் முகவரி கேட்கிறாள் அவன் உடைந்த போகிறான்.
ஜனா
தனக்கு வந்த உறையை பார்த்தவன் திகைத்தப் போனான் அதில் இவன் சகோதரி பிரியாவிற்கும் சந்தியாவின் அண்ணனுக்கும் திருமணம் என்றிருந்தது. அதைப்பார்த்தவன் மயங்கி விழுகிறான்...
இனி அடியேன்
                                     ”இவனுக்கு சின்ன வயதிலிருந்தே இப்படித்தான். 2-3 வயதில யாராவது தும்மினாலே மயங்கிவிடுவான் வளர வளர சரியாகும் என்றார்கள் ஒன்றுமே மாறல”
                 புறுபுறுத்துக் கொண்டு உள்ளே வந்த தாயார் போத்தலில் இருந்த தண்ணீரில் சிறிதளவை கையிலெடுத்து அவன் முகத்தில் ஒங்கியடித்தார். திடுக்கிட்டு எழும்பியவன் அவர்களை ஒருவாறு சாய்த்துக் கொண்டு போய் வெளியே அனுப்பிவிட்டு முதல் வேலையாக தன் கைப்பேசிக்கு அவள் இலக்கத்தை செதுக்கினான்.
மறுமுனையில் ”ஹலோ நீங்க யார் கதைக்கிறது உங்களைத்தான் எதிர் பார்த்திருந்தேன்” என்றது. ஒருகணத்திற்குள் திகைத்தப் போனவன் எப்படி இவளுக்கு என் இலக்கம் தெரிந்தது ”எப்டீங்க என் இலக்கம் உங்களுக்கு தெரிந்தது” இவன் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் “ஹலோ” என்றொரு குரல் கேட்டது “யார் வேணும் போன் ரிங் பண்ணும் போதே கதைக்க ஆரம்பிச்சிட்டிங்க போலிருக்கு....” அவள் சொல்லி முடிக்கையில் தான் இவனுக்கு உறைத்தது. “அட நாசமாய்ப் போன நெற்வேர்க் காரங்க ரிங்கிங் டொன் என்ற பெயரில் மானத்தை வாங்குறாங்கள்” என மனதிற்குள் திட்டிக் கொண்டு “சந்தியா நிக்கிறாங்களா” என்றான். ”நீங்க யாரென்று சொல்லாமல் சந்தியா நிக்கிறாங்களா என்றால் என்ன அர்த்தம்” அடடா என்ன ஒரு குரல் மிளகாய்த் தூளை தேனில் கலந்து காது வழிவிட்டு நாவிற்கு வந்தது போல் இருந்த்து. “நான் சுதா கதைக்கிறேனுங்க” “ஐயோ நீங்களா நான் புது நம்பர் என்றதால வேற யாரோ என்று நினைச்சிட்டன் மன்னிச்சிடுங்க” என்று புலியாய்ப் பாய்ந்தவள் பூனையாய் காலடியில் குழைந்தாள்.
                         ஏதேதோ கதைத்துக் கொண்டார்கள் அடத்த இரண்டு நாட்களில் சுதா கைப்பேசி மின்னெற்றியுடனேயே அலைந்தான். தொலைத் தொடர்பாளருக்கு வருமானம் போவதை விரும்பாமலோ என்னவோ தெரியல சந்தியா நேரேயே சொன்னாள். “சுதா ஒரு பிரச்சனையும் இல்ல நீங்க எங்க வீட்டுக்கு ஒரு தடவை வரணும்” அதை எதிர்பார்த்திருந்தவன் மறுப்பான அடுத்த கணமே வீடு போக ஆயத்தமானான்.
                     அழைப்பு மணியை அழுத்தியதும் இவனை விட ஓரிரு வயது கூடிய இளைஞன் தான் கதவைத் திறந்தான். “நீங்க சுதா தானே உங்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறோம். எனது பெயர் சாந்தன் நான் தான் இவர்களின் கம்பனியுடைய மார்கேட்டிங் மனேஜர்” லாவகமாக பல ஆங்கில வார்த்தைப் பிரயோகத்துடன் கைலாகு கொடுத்து அவனை உள்ளே அழைத்துச்சென்றான்.
                                   மாடிப்படிகளை கண்டவன் திகைத்துப் போனான் நிலவுக்கு ஏணி வைத்தால் இப்படித்தான் இறங்கி வருமோ என்று எண்ணத் தோன்றும் வகையில் சந்தியா இறங்கி வந்த கொண்டிருந்தாள். 
                   “வாங்க சுதா நீங்க இப்படி உடன வருவீங்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்னை மன்னிக்கணும் அண்ணியின் சாறி டிசைனுக்கு நான் தான் போய் பார்க்க வேண்டியிருக்கு ஒரு அரை மணித்தியாலம் அம்மாகூட கதைத்துக் கொண்டிருங்க... ஆ..ஆ மறந்திட்டன் இது தான் அண்ணியின் சாறி டிசைன் என் பிறின்டரில் தான் எடுத்தேன் அதன் இன்ங் ல் ஏதோ பிரச்சனை நல்லா வரவில்லை நல்லாயிருக்கா பாருங்க” என நீட்டினாள் வாங்கி ரசித்தானோ இல்லையோ “ரொம்ப நல்லாயிருக்கு” என்றான். அவன் பாராட்டை ஏற்றுக் கொண்டு கையிலிருந்த கார் சாவியை சாந்தனிடம் கொடுத்தாள். அவன் பெறுவதற்குள் சாவியை தரை பெற்றுக் கொண்டது. 
                       (சாவியைத்தரைக்கு சாந்தன் கொடுத்தானா? சந்தியா கொடுத்தாளா தெரியவில்லை) இருவரும் ஒன்றாய் குனிந்தார்கள். பின்னர் என்ன வழமையாக சினிமாவில் நடப்பது தான். அவளுக்கு ஏற்பட்ட சடுதியான தாக்குதலால் அவள் ஒரு நிலைக்கு வருவதற்கு முன் அவள் முறுவலித்து சமாளித்துக் கொண்டாள். இவன் மனதுக்குள் காரைக்குடி துறைமுகப் பாலம் திறப்பது போல் ஏதோ சத்தம் கேட்டது.
                                 இருவரும் கிளம்ப தாயார் தேனீருடன் வரவும் சரியாக இருந்தது. பரிமாறிவிட்டு முன் இருக்கையில் அமர்ந்தவர் தானே கதையை ஆரம்பித்தார் “தம்பி உங்களைப்பற்றி சந்தியா முதல்லேயே எல்லாம் சொல்லீட்டாள் அதுவும் உறவுக்காரராக வரப் போறிங்கள்” இவன் முறுவலித்துக் கொண்டான். “உங்க இடத்தில சம்பந்தம் எடுக்க நான் தான் விரும்பினான் எனக்கு பணமெல்லாம் முக்கியமில்லை என்ர பிள்ளையள் எப்பவும் சந்தோசமாக இருக்கோணும் அது தான் எனக்கு வேணும்“ இப்போது இவன் ஒன்றும் புரியாதது போல் ஆழமாக புன்முறுவல் ஒன்று செய்து கொண்டான். “தம்பி நான் ஒன்றை ஓப்பிணாவே கேட்கிறேன் உங்களுக்கு சந்தியா பிடிச்சிருக்கா” என்றார். இவனுக்கு மீண்டும் பட்டாம்பூச்சி பறப்பு... இன்னும் இன்னும் ஏதேதோ நடந்தது. ஆனால் தன்னை சமாளித்துக் கொண்டு “இல்லை அன்ரி என்னண்டாலும் அம்மாவிடம் தான் கேட்கணும்“ என்றான். “இதுதான் தம்பி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இஞ்ச நான் தான் முடிவெடுக்கிறது முதல்ல உங்கட அம்மாவின் நம்பரைத் தாங்கோ”.........
                          எல்லாம் கனவு போல் முடிந்துவிட்டது. பிரியாவின் அதே திருமணத் திகதியன்று தான் இவர்களுக்கும் திருமண ஒழுங்க நடந்தது
திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கிறது என்பதை நினைக்க அந்த இரவின் குளுமை இவனுக்கு இன்னும் இதமாய் இருந்த்து. வழமை போல் தன் கொல்லைப் புறத்து மரத்தடியில் ஒரு ஒற்றையுடன் அமர்ந்து கொண்டான். “முத்துக்குமார் மனைவிக்கு எழுதியதை விட அருமையாக வரவேண்டும்” என்று மனதுக்குள் அடிக்கடி சொல்லிக் கொண்டான். ஆனால் மீண்டும் மீண்டும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ” பாடல் தான் முன் வந்து நின்றது.
                  பல காகிதங்களை பேனா தின்றதே தவிர அதற்கு ஜீரணிக்கவில்லை. அப்போது அவன் கைப்பேசி உறக்கம் கலைந்து குழந்தைபோல் தன் வேலையை அரம்பித்தது. எடுத்து உச்சி மோர்ந்து காதக்கருகில் அணைத்துக் கொண்டான் “தம்பி என்னண்டு சொல்லுறதெண்டு தெரியல. தம்பி மன்னிச்சுக் கொள்ளுங்கொ அந்த ஓடுகாலி எல்லாரையும் ஏமாத்திட்டு காவாலி மனேஜரோட ஓடிட்டாள் தம்பி அதோட நகையள் வாங்கக் குடுத்த ஐம்பது லட்சம் ரூபாவையும் கொண்டு போட்டாள்....” அதற்கு மேல் என்ன சொல்கிறார் என கேட்பதற்கு சுதா சுய நினைவில் இருக்கவில்லை.
                                 அடுத்த நாள் அவனுக்கு விடியவே இல்லை காரணம் அவன் அன்று உறங்கவே இல்லை. காலை முதல் வேலையாக மனதைத்திடப்படுத்திக் கொண்டு சந்தியா வீடு போனான் அங்கு தாயார் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார். “சரி அன்ரி நடந்தது நடந்திட்டுது அழுது கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்தை யோசியுங்க இதால பிரியாவின் கலியாணத்திற்கு தடைவருவதை நான் விரும்பல. எப்படி சந்தியா ஓடிவிட்டாள் என்பது உங்களுக்குத் தெரியும்” “இந்தக்கடிதம் தான் தம்பி அவளே டைப் பண்ணி பிரின்ட் எடுத்து வைத்திருக்கிறாள்” என்று ஒரு கடிதத்தை நீட்டினார். வழமையாக எல்லா பொண்ணும் எழுதுவது தான் “நீங்க என்ன துணிவில அந்த பிச்சைக்கார நாயை எனக்கு பொருத்தம் என்று நினைச்சனிங்க” என்ற வசனம் தான் இவனுக்கு சூடேற வைத்தது.
வீடு திரும்பியவன் அன்று முழுவதும் அக்கடிதத்தை கண்களால் தேய்த்து எடுத்து விட்டான். இரவும் அக்கடிதத்தை தேய்த்துக் கொண்டே இருந்தான். வெற்றி எப்.எம் ல் சதீசின் காற்றின் சிறகுகள் போய்க் கொண்டிருந்த்த்து. அதில் அவன் எப்போதோ எழுதிய கவிதை ஒன்று போய்க் கொண்டிரந்தது.
நீயும் நானும்
தண்டவாளம் போல் தான்
அன்றொரு சந்தித்துக்கொண்டோம்
விபத்து என்று சொன்னார்கள்
எமக்கா எம் காதலுக்க
தெரியவில்லை
(எப்போதோ வெற்றி எப்எம் ற்கு எழுதியது இப்போ சுபாங்கனின் களக்காட்சிக்குப் பொருந்திவிட்டது)
                              கண்ணயர்ந்து போனவன் தன் கவிதையைக் கேட்டதும் திடுக்கிட்டு எழும்பினான். இப்போதும் கையில் ஏதோ உறுத்தியது ஆம் அதே கடிதம் இப்போது மீண்டும் உற்றுப்பார்த்தான். அவன் முகத்தில் ஒரு மாறுதல். சந்தியாவிடம் இருந்தது ஒரு INKJET PRINTER ஆகும். ஆனால் இது அச்சிடப்பட்டிருந்த்து LESAR PRINTER ஒன்றிலாகும். உடனே அவளின் தாயாருக்கு அழைப்பு விடுத்தான். “அன்ரி அந்தக் கடிதம் எங்கே இருந்தது” “அதுவா அவளது பிரின்டரில் அப்படியே அச்சிட்டு வெளிவந்தபடி தான் இருந்தது” உடனே சுதாகரித்துக் கொண்டவன் “அன்ரி உடனே பொலிசுக்கு அறிவியுங்க இதை சந்தியா எழுதல”
                      இரவோடு இரவாக முழு முன்னெடுப்பும் நடந்தது. பொலிசிடம் இருந்து குற்றப்புலனாய்விற்கு மாற்றப்பட்டது.
                        விடிந்தால் கல்யாணம் அனால் அவர்களிடம் அதற்கான தெளிவு இல்லை. அதிகாலையில் தான் ஒரு அழைப்பு வந்தது. காவல் துறையினர் தான் எடுத்தார்கள் சந்தியா மீட்கப்பட்டு நிலையத்தில் இருக்கிறாள் என சிங்களத்தில் சொன்னார்கள். உடனே எல்லோரும் வாகனத்தில் பறந்தார்கள்.
                                இவர்களைக்கண்ட சந்தியா பாய்ந்தோடிவந்து தாயைக்கட்டிப்பிடித்து கதறினாள் “அம்மா இவன் இப்பிடிப்பட்டவன் எனத் தெரிஞ்சிருந்தால் நான் அந்த ஹேட்டலுக்கு கோப்பி குடிக்கப் போயிருக்க மாட்டன்” என்றாள். அவள் கன்னத்தில் சிறு கீறல் காயங்கள் இருந்தது. அத்துடன் உதட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இவர்களை ஆசுவாசப்படுத்திய சுதா அதிகாரியிடம் ஏதோ சிங்களத்தில் கதைத்தான் அவரும் அழைத்துப் போக சம்மதித்தார் ஒருவாறு அவளை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வரும்பொது மூலையில் ஒரு குரல் கேட்டது “சொல்லடா அவ்வளவு காசும் எங்கே... சொல்லாட்டி அடி வாங்கியே சாகப்போகிறாய்”.........

(சகோதரர்களே இதற்குப்பிறகும் கதை நீண்டு சென்றாலும் அது முடிவை அண்மித்த்தால் அவற்றை நீக்கிவிட்டேன் ஒரு மென்மையான கதையை திசை திருப்பியதற்கு மன்னிக்கவும் இதற்குள் ஒரு சமூக பிரச்சனையை புகுத்தியுள்ளேன் அவ்வளவும் தான்.....)

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

19 comments:

Chitra said...

வித்தியாசமான கதை நடை.

anuthinan said...

பல இடங்களில் கதையின் போக்கை நன்கே ரசித்தேன். கதையின் வேகம் அபாரம்!

கதையின் திருப்புமுனை இலகுவில் சிந்திக்க கூடியது இல்லை. ரொம்பவே அழகாக எழுதி இருக்கீங்க!!!

@ Chitra said...
ஓடி வந்து பார்த்திட்டுப் போகும் அன்பு அக்காவிற்கு நன்றிகள்....

@ Anuthinan S said...
ஃஃஃஃ...கதையின் திருப்புமுனை இலகுவில் சிந்திக்க கூடியது இல்லை. ரொம்பவே அழகாக எழுதி இருக்கீங்க!!!...ஃஃஃ
என் கதை நடையை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் அனு...

Jana said...

ஒரு பொல்லாப்பும் இல்லை.
எல்லாம் செப்படி வித்தை

இரண்டு சுதாவுக்கும் பொருத்தம்.

Subankan said...

// Jana said...
ஒரு பொல்லாப்பும் இல்லை.
எல்லாம் செப்படி வித்தை

இரண்டு சுதாவுக்கும் பொருத்தம்.//

;))

Unknown said...

பாராட்டுக்கள் தொடருங்கள்

@ Jana said...
//...ஒரு பொல்லாப்பும் இல்லை.
எல்லாம் செப்படி வித்தை
இரண்டு சுதாவுக்கும் பொருத்தம்...//
நன்றி ஜனா அண்ணா...

@ Subankan said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபா...

@ மகாதேவன்-V.K said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம்..

வித்தியாசமான கதை...
வித்தியாசமான நடை...

சே.குமார் said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரம்..

வி்த்தியாசமான திருப்பத்துடன் திரும்பிய கதை நன்றாயிருக்கிறது

@ யோ வொய்ஸ் (யோகா) said.
நான் எதிர் பார்த்தது போல் ஒருவருமே குறை கூறல நன்றி சகோதரா..

ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவல்களில் வரும் திருப்புமுனைகளைப் போல் அமைந்துள்ளது முடிவு.... inject and lazer ... நல்ல திருப்பம்

தொடர்ந்து படைக்க வாழ்த்துக்கள்

@ மன்னார் அமுதன் said...
///...ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவல்களில் வரும் திருப்புமுனைகளைப் போல் அமைந்துள்ளது முடிவு.... inject and lazer ... நல்ல திருப்பம் ...///
நன்றி சகோதரம்...

Kiruthigan said...

அருமை அண்ணா...
உங்களால மட்டுந்தான் இதல்லாம் முடியும்...
அவனவன் பொத்திப்பொத்தி பாத்த அழகிய இப்பிடி கண்ணீரும் கம்பலையுமா குத்தவச்சிட்டீங்களே!!
திடீர் திருப்பம் நல்லாயிருந்துது...
சமூக பிரச்சனைய சொன்ன விதமும் அருமை..

Cool Boy கிருத்திகன். said...
///...உங்களால மட்டுந்தான் இதல்லாம் முடியும்...
அவனவன் பொத்திப்பொத்தி பாத்த அழகிய இப்பிடி கண்ணீரும் கம்பலையுமா குத்தவச்சிட்டீங்களே!!
திடீர் திருப்பம் நல்லாயிருந்துது...
சமூக பிரச்சனைய சொன்ன விதமும் அருமை...///
நன்றி கூகூகூல். கொஞ்சம் வித்தியாசமாகச் செய்ய நினைத்தேன் அவ்வளவும் தான்...

Unknown said...

நல்ல கதை. நான் சுதா-சந்தியா உடைய விசிறி ஆகிட்டன்....

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top